ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !

Spread the love

ஈழத்தமிழர்களின் உற்ற தோழர் – அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு !

அமெரிக்காவின் முன்னாள் தலைமைச் சட்டத்தரணியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினருமாகிய ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய ராம்சி கிளர்க்கின் மறைவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை ‘வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு’ என்று அமெரிக்க அரசு அறிவித்த போது, சட்டத்தரணி என்ற முறையில் ராம்சி கிளர்க் அவர்கள,; அதனை எதிர்த்து விடுதலைப் புலிகள் சார்பில் வழக்காடியிருந்தவர்.

அன்னாரின் இழப்பு தனது ஈழத்தமிழர் தேசத்தின் இரங்கலைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதியும், சுதந்திர அரசியல் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை நிறுவிக்

கொள்வதற்குமான ஈழத்தமிழர் போரட்டத்தின் அயரா ஆதரவாளரான விளங்கிய அமரர் ரம்சி கிளர்க், ஈழத்தமிழர்களின் மதிப்புக்குரிய கூட்டளியாகத் திகழ்ந்தார் என தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கொலம்பியா மாநில அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிநாட்டு அமைப்பு அல்லவென்றும், அது ஒரு மெய்ந்நிலை அரசாங்கம் என்றும், தமிழீழ

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பன்னாட்டுச் சட்டக் கொள்கைகளின் படி நடப்பது’ என்றும் தனது வாதுரையின் போது குரல் கொடுத்திருந்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும், ஈழத்தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் ஆகும் அமரர் கிளர்க் உறுதியாக நம்பினார்.

பொதுவெளிகளிலோ அல்லது சகசட்டத் தரணிகளுடனும் கல்வியாளர்களுடனும் தனிப்பட்ட உரையாடல்களிலோ இதைச் சொல்ல அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் சட்ட அறிவுரையினை அமரர் கிளர்க் அவர்கள் வழங்கி வந்தார்.

இறுதி போரின் போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாவதற்கு எதிராகக் கிளர்க் குரல் கொடுத்தார். அமெரிக்காவில் தமிழர்கள் ஒழுங்கு செய்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். குறிப்பாக நியு யோர்க்கில் 5 ஈழத் தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தவர்.

2009ம் ஆண்டு பெரும் இனஅழிப்பு போரின் மூலம் தமிழர் தேசம் ஆக்கிரமிப்பு உள்ளான பின்னர், ஈழத்தமிழ் மக்களிள் அரசியல் பெருவிருப்பின் ஜனநாய வடிவமாக இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற துணையாக விளங்கிய வளப்பெருமக்களில் அமரர்

கிளர்க் அவர்களும் ஒருவர். 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவைத் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியு யோர்க் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.

தேர்தல் ஆணையர் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினார் என்பதற்கு சான்றாக, வாக்குப்பெட்டிகள் தனது வீட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமரர் வலியுறுத்தினார் என ரம்பி கிளார்க்கை நினைவுகூரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருத்திரகுமாரன்,

இத்தகைய நேர்மை கொண்டு தமது கடமையை அணுகியதன் வாயிலாக அவர் தமது சீரிய பண்பைக் காட்டியது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள்பால் பெருமதிப்பையும், பன்னாட்டுலகின் செயலின்மைக்கு நடுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேவை பற்றிய ஆழ்ந்த புரிதலையும் வெளிப்படுத்தினார் என குறிப்பிடுகின்றார்.


பிலடெல்பியாவில் உள்ள அமெரிக்காவின் அரசமைப்புக் கூடத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக் அமர்வில் கலந்து கொண்டடதோடு, கடந்த பத்தாண்டு காலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினராகவும் அங்கம் வகித்துள்ளார்.

‘ராம்சே உயர்ந்த கொள்கைப் பற்றுறுதியும் பெருந்தன்மையும் மிக்கவர். எமது இலட்சியத்தில் முழுமனதாக நம்பிக்கை கொண்டிருந்தவர். எமது முதல் கூட்டத்தில் எம்மோடிருக்க வேண்டி நியு

யோர்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்குத் தொடருந்தில் வந்தவர் என்பது மட்டுமல்லாது பயணக் கட்டணத்தை நாம் கொடுக்க முன்வந்த போதும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார்’ என மேலும் ரம்சி பற்றிய நினைவுகளை பிரதமர் உருத்திரகுமாரன் கூர்ந்தார்.

2013ம் ஆண்டு தமிழீழ சுதந்தர சாசனம் முரசறையப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு
சட்டத்தரணி ரம்சி கிளர்க் மறைவு

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், ‘முள்ளிவாய்க்கால் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்வின் முதலுரையினை அமரர் ரம்சி கிளார்க் அவர்கள் 2015ம் ஆண்டு அவர்கள் வழங்கினார்.

என சமகாலத்தில் கருத்துவாக்கம் பெற்றுள்ள ‘சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என்ற நிலைப்பாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

முன்கையெடுத்திருந்த ‘மில்லியன் கையெழுத்து போhரட்டத்தின்’ முதல் கையெழுத்தினை அமரர் அவர்களே இட்டார் என்பது வரலாற்று பதிவாகவுள்ளது. முதல் மூன்று மாதக் காலத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கையொப்பங்களை இவ்வியக்கம் திரட்டியிருந்தது.

இதேவேளை கருத்துரையினையும், அரசியல் வெளிப்பாட்டு உரிமையினையும் பறிக்கின்ற சிறிலங்காவின் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தை எதிர்த்து ஐ.நா மனித உரிமைக்குழுவுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் அமரர் கிளர்க்கும் ஒருவர்.

‘கடந்த 25 ஆண்டுக் காலம் ராம்சியுடன் பழகவும் சேர்ந்து உழைக்கவுமான பெரும்பேறு பெற்றேன், எனக்கு தோழராக மட்டுமின்றி எனக்குத் தந்தைபோலவும் விளங்கினார் என குறிப்பிடும் பிரதமர்

வி.உருத்திரகுமாரன். நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது விடுதலைப் போராட்டத்துக்கு அவரது நினைவு என்பது, ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    Leave a Reply