Posted in இலங்கை செய்திகள்

காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன

காட்டுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்பு – நடந்தது என்ன

இலங்கை மாத்தளை பகுதி காடு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் சடலம் மீட்க பட்டுள்ளது ,மேற்படி


சடலங்களை காட்டுக்கு விறகு வெட்ட சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தெரிவித்த

நிலையில் இரு சடலங்களும் மீட்க பட்டுள்ளன


மேற்படி இருவர் மரணத்திற்குரிய காரணம் தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்

    5 பிள்ளைகளை காட்டில் விட்டு காதலனுடன் ஓடிய தாய்

    தனது ஐந்து பிள்ளைகளையும் காட்டில் தவிக்கவிட்டுவிட்டு, முறையற்ற காதலனுடன் தாயொருவர் தலைமறைவான சம்பவம் வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

    காட்டில் ஓரிடத்திலிருந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக, பொலிஸாருக்கு தகவல்

    கிடைத்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்​கொண்ட தேடுதலின் போதே, அந்த ஐந்து பிள்ளைகளும்  மீட்கப்பட்டனர்.

    அந்த பிள்ளைகள் ஐவரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதமான உணவுமின்றி இருந்துள்ளனர்

    என அறியமுடிகின்றது. அந்த பிள்ளைகளில் சிறியவருக்கு 2 வயதெனவும் பெரிய பிள்ளைக்கு 12 வயதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

     பிள்ளைகளின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். அன்றையநாள் மதுபோதையில்

    வந்திருந்த கணவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன்போதே, தன்னுடைய ஐந்து

    பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற 35 வயதான தாய், காட்டில் தவிக்க பிட்டுவிட்டு, முறையற்ற காதலுடன் தப்பியோடிவிட்டார்.

    பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை

    நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின்

    பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தன

      ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
      Posted in இலங்கை செய்திகள்

      நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்

      நால்வர் நீரில் மூழ்கி மரணம் விசாரணைகள் ஆரம்பம்

      இலங்கை குச்சாவெளி மற்றும் ,ஈச்சிலம்பற்று பகுதிகளில் நால்வர் நீரில் மூழ்கி மரணமாகினர்

      ,மேற்படி மரண சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      மேற்படி மரணங்கள் படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள்

      ஆரம்பிக்க பட்டுள்ளன

        Posted in இலங்கை செய்திகள்

        1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை

        1,4 பில்லியன் கடனாக பெறும் இலங்கை

        இந்தியாவிடம் இருந்து இலங்கை 1,4 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது


        இந்தியா சென்றிருந்த நீதியமைச்சர் இந்த கடன் உதவி தொகை தொடர்பில் பேசி இருந்த

        நிலையில் இந்த உதவி தொகை வழங்க படுகிறது

        ஆளும் கொள்ளையர்கள் ஆட்சியில் நாடு பெரும் கடன் சுமையை சுமந்து வருகிறது குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          பிரிட்டனில் நத்தார் தினத்தை அண்மித்து லக்கடவுன் வரும் வாய்ப்பு

          பிரிட்டனில் நத்தார் தினத்தை அண்மித்து லக்கடவுன் வரும் வாய்ப்பு

          பிரிட்டனில் புதிதாக பரவி வரும் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது ,இந்த

          நோயானது 160 பேருக்கு பரவியுள்ளதாக சமீப குறிப்புக்கள் தெரிவிகின்றன ,இதனை அடுத்து

          எதிர்வரும் நத்தார் தினத்தை அண்மித்து மேலும் பிரிட்டனில் லக்கடவுன் ஏற்படும் பேராபத்து நிலவுகிறது

          இதனால் பொருட்களுக்கு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in Uncategorized

            லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு

            லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு

            லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக தொடர்ந்து அகதிகள் நுழைந்த வண்ணம்

            உள்ளனர் ,இவ்விதம் நூறு அகதிகள் கடந்த தினம் வந்தடைந்துள்ளார்

            தொடர் அகதிகள் நுழைவால் பிரிட்டன் பெரும், நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இந்தஅகதிகளை


            பராமரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு பல லட்சணங்களை செலவு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

              ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

              நையீரியாவில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய


              தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர்

              மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் ,தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால்

              இராணுவத்தினர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

                Posted in சினிமா

                சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்

                சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்

                தங்க மீன்கள் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை சாதனாவின் நடனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

                தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்
                சாதனா


                ‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட

                ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார். முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை

                வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

                ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது.

                இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு

                வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத சாதனாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

                சாதனா

                பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை

                நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

                  Posted in சினிமா

                  நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்

                  நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புது திரைப்படம்

                  பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.

                  திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்


                  சந்திரலேகா – மனிஷா – சாய் தன்ஷிகா – சிருஷ்டி டாங்கே


                  எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று

                  போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா

                  ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.

                  பட பூஜை

                  கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

                  இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு

                  விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                    பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்

                    பேரூந்துக்குள் வைத்து 33 மக்களை உயிரோடு எரித்து கொன்ற தீவிரவாதிகள்

                    மாலியில் பேரூந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து

                    தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் ,இதில் அதில் பயணம் செய்த அனைவரையும் தீமூட்டி எரித்து

                    படு கொலை செய்தனர்


                    மேற்படி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
                      Posted in இலங்கை செய்திகள்

                      கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்

                      கடலில் மூழ்கி இரு மாணவர்கள் மரணம்

                      திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்

                      கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும்

                      சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நேற்று (03) இரவு 10.40

                      மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

                      பாடசாலை விட்டுச் சென்ற நான்கு சிறுவர்கள் வாழைத்தோட்டம் கடலில் நீராடியுள்ளனர். இதில்

                      இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது உயிர் தப்பிய

                      மற்றைய இரண்டு சிறுவர்கள் பிரதேச மக்களிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து கடலில்

                      தேடியபோது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்

                        முல்லைதீவில் வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்

                        இலங்கையில் கடந்த நான்கு நாட்களாக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளன


                        மேற்படி சம்வத்தில்க் பல வீடுகள் சேதமாகின

                        இவ்விதம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் வீடொன்றில் சிலிண்டர் வெடித்து சிதறியது


                        எனினும் சேதங்கள் இன்றி குடும்பத்தினர் தப்பித்துள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          போதையில் தாக்குதல் – நால்வர் கைது

                          போதையில் தாக்குதல் – நால்வர் கைது

                          மல்லாவி பகுதியில் போதை அருந்திவிட்டு வீட்டின் முன்பாக நின்ற குடும்பஸ்தர் மீது நால்வர்

                          அடங்கியா குழு தாக்குதல் நடத்தியுள்ளது


                          மேற்படி தாக்குதலை நடத்திய குழுவினர் கைது செய்ய பட்டுள்ளனர் .


                          போதைக்கு அடிமையாகி எமது சமுதாயம் சீரழிந்து செல்வதனை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கின்றன

                            Posted in Uncategorized

                            மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

                            மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

                            கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை 

                            காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14

                            கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்மானித்தது. 

                            இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது,  முன்னாள்

                            கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. 

                            இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்

                            தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி  ஆம் திகதி  விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.  

                            அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான

                            விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது  ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

                              பாகிஸ்தானில் சிங்களவர் உயிரோடு எரித்து கொலை

                              பாகிஸ்தானில் சிங்களவர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரையோ உயிரோடு எரித்து கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              இவரது கொலையுடன் தொடர்புடைய ஐம்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                              இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தணடனை வழங்க படும் என
                              ஆளும் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

                                Posted in உலக செய்திகள்

                                லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி

                                லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி

                                லிபியாவில் முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும் நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24-ந் தேதி மற்றும் ஜனவரி 24-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

                                லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி
                                கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம்
                                திரிபோலி :

                                வடஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிக ஆட்சி புரிந்து வந்தவர் மோமர் அல் கடாபி. கடந்த 2011-ம் ஆண்டு இவர் கிளர்ச்சிப்படையினரால்

                                சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும்

                                நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24-ந் தேதி மற்றும் ஜனவரி 24-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

                                இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி

                                கடந்த மாதம் 14-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் தனது தந்தையின் ஆட்சி

                                காலத்தின் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்திய குற்றசாட்டை

                                சுட்டிக்காட்டி அவரது வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து, சையிப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

                                இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த அந்த நாட்டு கோர்ட்டு, சையிப்பை தகுதி நீக்கம்

                                செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி

                                வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

                                  Posted in உலக செய்திகள்

                                  ஓடுபாதையில் விமானத்தை தள்ளி சென்ற மக்கள் – என்னங்கடா இது

                                  ஓடுபாதையில் விமானத்தை தள்ளி சென்ற மக்கள் – என்னங்கடா இது

                                  பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த விமானத்தை

                                  அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

                                  நடுவழியில் கார், பஸ் நின்று விட்டால் அதில் பயணிக்கிற பயணிகள் இறங்கி வந்து அவற்றை

                                  தள்ளி விடுவதை நம்மில் பலரும் பார்த்து இருக்கிறோம். இதை பலரும் கிண்டலடிப்பது உண்டு.

                                  ஆனால் ஒரு விமானம் இப்படி திடீரென நின்றுபோய் பயணிகள் தள்ளி விட்டு பார்த்திருக்கிறீர்களா?

                                  இப்படி ஒரு வினோத காட்சி நேபாளத்தில் அரங்கேறி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

                                  அங்குள்ள பாஜூரா நகரத்தில் கோல்டி விமான நிலையத்தில் டாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்

                                  விமானம் ஒன்று தரை இறங்கும்போது, ஓடுபாதையில் சென்றபோது திடீரென அதன் பின்புற டயர் வெடித்து நின்று விட்டது.

                                  என்ன செய்வது என அறியாமல் விமானி திகைத்தார்.

                                  இதற்கிடையே மற்றொரு விமானம் அங்கு வந்து தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் சூழல் உருவானது.

                                  ஆனால் அங்கிருந்த பயணிகளும், பாதுகாப்பு படையினரும் ஒடுபாதையில் நின்று விட்ட அந்த

                                  விமானத்தை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போய் அது நிற்க வேண்டிய இடத்துக்கு கொண்டு போய் நிறுத்தினர்.

                                  இதை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட அது கேலி, கிண்டலுக்கு வழிவகுத்து விட்டது..

                                    Posted in சினிமா

                                    வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

                                    வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்


                                    பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை பிடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து வலை வீசி வருகிறாராம்.

                                    வலை வீசும் நடிகை,… கண்டுக்கொள்ளாத நடிகர்

                                    தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க

                                    ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு

                                    கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

                                    இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க

                                    ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை

                                    ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். ஆனால், முன்னணி நடிகர், நடிகையை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்

                                    Posted in Uncategorized

                                    35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்

                                    35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்

                                    இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து

                                    வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.

                                    35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
                                    புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.

                                    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும்

                                    மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.

                                    இவர்களின் காதலுக்கு ஜெயம்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பெற்றோர் ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். சிக்கண்ணாவை

                                    மனதில் நினைத்து கொண்டு கல்நெஞ்சுடன் வேறு வழியின்றி வேறொருவருக்கு ஜெயம்மா கழுத்தை நீட்டினார்.

                                    ஆனால் காதலன் சிக்கண்ணா நினைவிலேயே இருந்ததால் ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.

                                    புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.

                                    ஆனால் ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

                                    இந்த நிலையில், சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் சந்தித்து உள்ளனர். அப்போது தான் சிக்கண்ணா திருமணம் செய்யாமல் இருப்பது ஜெயம்மாவுக்கும்,

                                    ஜெயம்மா கணவரை பிரிந்தது சிக்கண்ணாவுக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் இருவரும் கண்ணீர் சிந்தி பரஸ்பரம் விசாரித்து கொண்டனர்.

                                    இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம்

                                    மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை நண்பர்கள் வாழ்த்தினர்.

                                    இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்

                                    இலங்கை பாராளுமன்ற லிப்டுக்குள் சிக்கிய எம்பிக்கள்

                                    இலங்கையின் பாரளுமனறதுக்குள் பயணித்த எம்பிக்கள் லிப்ட் வழியாக செல்ல முற்பட்டுள்ளனர்


                                    அப்போது அது மின்சாரம் தடை பட்டதால் இசெயல் இழந்துள்ளது ; அதற்குள் இரண்டு எம்பிக்கள் சிக்கினார்

                                    இப்போதாவது மக்கள் படும் அவலத்தை இந்த எம்பிக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்பலாம்