திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா
திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, வெளியாக இருக்கும் ஒரு படத்தை பார்த்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.
திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா
பாரதிராஜா
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.
சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும்
என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
ஆன்டி இண்டியன் வரும் டிச-1௦ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சிறப்புக் காட்சித்
திரையிடலில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த புளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே..
இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்.
பாரதிராஜா
மாறனை பாராட்டும் பாரதிராஜா
ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை
நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த புளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான்’’ என்றார்.
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கமல்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
கமல்
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா
விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்
இடிந்து வீழ்த்த சலூன் – மூவர் காயம்
இடிந்து வீழ்த்த சலூன் – மூவர் காயம்
அமெரிக்கா Bronx பகுதியில் உள்ள சலூன் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது
இதன்பொழுது மூவர் படுகாயமடைந்தனர்
நூறு வருட பழமை வாய்ந்த மேற்படி கட்டடம் உரிய முறை பாதுகாப்பு ,மற்றும் சீரமைப்பு
பேணப்படாத நிலையில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூற படுகிறது
கள்ளக் காதலியை மண்வெட்டியால் வெட்டி கொன்ற காதலன்
கள்ளக் காதலியை மண்வெட்டியால் வெட்டி கொன்ற காதலன்
இலங்கை குமாரகம பகுதியில் கள்ள காதலிக்கும் ,காதலன் ஒருவருக்கும் இடையில் தகராறு
ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை ஆத்திரமுற்ற காதலன் ,கள்ள காதலனை மண்வெட்டியால் வெட்டி
கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு, மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது
கொலை குற்ற சாட்டில் காதலனை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்டவர் சடலம் இலங்கை வருகை
பாகிஸ்தானில் எரித்துக்கொலை செய்யப்பட்டவர் சடலம் இலங்கை வருகை
பாகிஸ்தானில் நிறுவனம் ஒன்றில் மனேஜராக பணிபுரிந்த நபர் ஒருவர் 120 க்கு மேற்பட்ட நபர்கள்
ஒன்று கூடி எரித்து கொன்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,
இவ்வாறு எரித்து கொன்றவரது சடலம் இன்று இலங்கைக்கு எடுத்து செல்ல படுகிறது ,இலங்கை
எயார் லங்கா விமானத்தின் ஊடக இந்த் சடலம் எடுத்து செல்ல படுவதாக தெரிவிக்க படுகிறது
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
இலங்கை பாசறை பகுதியில் தந்தது மற்றும் உறவினருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரின் தங்க சங்கிலி அறுத்து செல்ல பட்டுள்ளது
இவர்களை வழிமறித்த மர்ம திருடர்கள் கண்களுக்கு மிளகாய் தூளை வீசிவிட்டு இந்த் சங்கிலியை
திருடி சென்றுள்ள செயல்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சியில் வீடொன்றில் காணப்பட்ட எறிகணை ஒன்றை இரு சகோதரர்கள் இணைந்து
வெட்டியுள்ளனர் ,அப்பொழுது அந்த குண்டு வெடித்து சிதறியதில்
சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
3வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
3 வவுனியா வாலிபர்கள் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்பு
வவுனியாவில் இருந்து முல்லைதீவிவு கடலில் குளிக்க சென்ற மூன்று வாலிபர்கள் நீரில் அடித்து
செல்ல பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்க பட்டுள்ளனர்
காணமல் போயிருந்த இவர்களை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டனர் ,தற்போது சடலமாக
மீட்க பட்டுள்ள நிலையில் உறவுகள் கண்ணீரில் உறைந்துள்ளனர்
விழிப்புணர்வு அற்று நமது மக்கள் இவ்விதம் செல்வதும் ,இறந்த நிலையில் கடலில் மிதப்பதும்
தொடர் துயர நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது
கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு
கொரனோ தொற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரிப்பு
இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 746 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பதிவான இந்தத்
தொற்றாளர்களுடன் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின்
எண்ணிக்கை ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.Covid TOTALஇதேவேளை,
கொவிட் வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த மேலும் 316 பேர் முழுமையாகக்
குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, முழுமையாகக் குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை ஐந்து லட்சத்து 42 ஆயிரத்து 326 ஆகும். மேலும் 21 கொவிட் மரணங்களை சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 461 ஆகும்.
இதுவரை உலகம் முழுவதிலும் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 கோடி
61 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 70 ஆயிரத்திற்கும்
அதிகமாகும். நேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து
பத்தாயிரத்திற்கும் அதிகமாகும். இவர்களில் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, 13 லட்சத்து 43 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு
லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு
லண்டன் Thanet மாவடடத்தில் உள்ள பிட்சா கடை ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது ,அந்த
கடைக்குள் திடீரென புகுந்த சுகாதார சோதனையாளர்கள் நடத்திய சோதனையில் அங்கிருந்த
dirty oven,ஊத்தை ஓவன் fridge குளிரூட்டி , fryer அடுப்பு என்பன மிக அசுத்தம் நிறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது ,அவற்றுடன் வைத்தே பிட்ஸா தயாரித்து மக்களுக்கு வழங்க பட்டுள்ளது
இதனால் அந்த கடைக்கு ஒரு புள்ளி மட்டும் வழங்க பட்டுள்ளது ,இவ்வாறு பிரிட்டனில் வழங்க பட்டால் அந்த கடை மிக மோசன நிலையில் உள்ளது என்பதாகும் ,
லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை
லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை
தற்போது அந்த கடை தொடர்ப்பன செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி நிலையில் தற்போது
அந்த கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி உற்றுள்ளனர் ,இதனால் அந்த கடையின் வியாபாரம் பலத்த வீழ்கை அடைந்துள்ளது
பழைய உணவுகள் ,மற்றும் இவ்வாறான சுகதர முறைமையற்ற முறையில் ,உணவகங்கள் நடத்தா பட்டால் இதே நிலை ஏற்படும் என்பதை நம்ம தெமில் உணவகங்கள் கருத்தில் எடுத்து கொண்டால் சிறப்பானது
லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு
ஏன் எனில் உங்கள் கடைகளுக்கு இவர்கள் வந்து சென்றால் புள்ளி இரண்டு அல்லது ஒன்றை
பெற்று விட்டுப் தங்கள் ஐந்து ,அல்லது நான்கு என புலுடா விடுபவர்களே ,உள்ளூர் ஊடகங்களில் உங்கள் கடைகள் நாறடிக்க படும் என்பதற்கு இது ஒரு சான்று
அலட்சியத்திலும் ,மமதையிலும் உலாவது உரிய முறையில் கடைகளை நடத்தி மக்களின்
நன்மதிப்பை பெற்று கொள்வதே வியாபாரத்தின் வெற்றியாகும் – நம்ம கடைகள் எல்லாமே நம்பர்
வன் என பீற்றி திரிபவர்கள் இதை கொஞ்சம் காதில் போட்டால் நல்லது .இன்று இவர்களுக்கு நாளை உங்களுக்கு .
உங்கள் கடைகளுக்குள் நுழைய முன்பு இரகசிய கண்காணிப்பை மேற்கொன்டு அதன் பின்னர் கடைகளுக்குள் இவர்கள் செல்வதான கருத்தியல் உள்ளது குறிப்பிட தக்கது
லண்டனில் நாற்றத்துடன் பிட்ஸா விற்ற கடை அடித்து பூட்டு
The owner of a pizza takeaway has voiced his frustration after it was slapped with a one-star food hygiene rating.
Iraj Noori’s business in Ramsgate, STB Pizza, was found to have a dirty oven, fridge, fryer and chopping boards when visited by an inspector.
It now has the unwanted accolade of being among the worst-rated eateries in the Thanet district, and customers have started falling by the wayside.
But its owner says the low score is not a true reflection of his business, and says it must be reinspected as the issues were quickly resolved.
As well as noting how the “general cleanliness was poor throughout”, the Food Standards Agency (FSA) discovered a water leak in the walk-in chiller and a number of broken tiles in a preparation room.
A large amount of unclean cardboard – harbouring bacteria – was also found placed on the floor around the West Dumpton Lane premises.
As a result of the discoveries, STB was given a one-star rating
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு
13 மக்களை சுட்டு கொன்ற இந்திய இராணுவம் – வாகனங்கள் எரிப்பு
இந்தியா நாகலாந்தில் போராட்டக்காரர்களை இலக்கு வைத்து இந்தியாஇராணுவம் சூட்டு தாக்குதலை நடத்தியது
இதன் பொழுது 13 அப்பாவி மக்கள் பலியாகினர் , மேலும் பலர் காயமடைந்துள்ளனர் ,அரச
மற்றும் இராணுவ வாகனங்கள் என்பனவும் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன
தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது
இந்தியா இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது
வெடித்து சிதறிய எரிமலை – 18 பேர் மரணம் -98 பேரை காணவில்லை
வெடித்து சிதறிய எரிமலை – 18 பேர் மரணம் -98 பேரை காணவில்லை
இந்தோனேசிய மலை பகுதியில் அமைந்துள்ள எரிமலை அதிக வெப்பம் காரணமாக வெடித்து
சிதறியது, இதன் பொழுது அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பலத்த சேதமடைந்துள்ளன ,வீடுகள் உடைந்து தரை மட்டமாகியுள்ளன
இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 98 பேர் காணாமல்
போயுள்ளனர் ,காணாமல் போனவர்களை தேடும் பணி ஆரம்பிக்க பட்டுள்ளது
அமெரிக்கா இராணுவம் முகாம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை
அமெரிக்கா இராணுவம் முகாம் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Koniko
முகாம் மீது மூன்று ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது
இதன் போது அந்த முகாமிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ,அங்கிருந்த உலங்கு
வானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்க படுகிறது
வளமை போன்று தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் மூடி மறைத்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது
வீழ்ந்து நொறுங்கிய ஈரான் விமனம் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?
வீழ்ந்து நொறுங்கிய ஈரான் விமனம் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?
மத்திய ஈரான் மேலாக கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த மிக முக்கிய முதல்தர உளவு
விமான ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,ஆள் இல்லா இந்த விமானம் திசை மாற்றி செல்ல
வல்லது ,அவ்வாறன இந்த விமானம் எவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது என்பது ஈரான் இராணுவ தலைமையகத்தை உலுப்பியுள்ளது
வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் எடுத்து செல்ல பட்டு ஆய்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஆழ ஊடுருவும் இஸ்ரேல் தாக்குதல் பிரிவால் ஈரானுக்குள் வைத்து இந்த உயர் ரக விமானம் சுட்டுவீழ்த்த பட்டிருக்க கூடும் என்ற ஐயம் நிலவுகிறது
கடந்த இரு நாட்களில் லாரிகள் மற்றும் கப்பல்கள் மூலம் கடத்தி வரப்பட்ட இஸ்ரேல்
தயாரிப்பிலான ஆயுதங்கள் மீட்க பட்டதன் பின்னர் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது
பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை
பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை
பெண்கள் வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.
வியர்வை நாற்றத்தால் மிகுந்த அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் தன்னை பார்த்து முகம்சுளித்துவிடுவார்களோ என்று நினைத்து கவலைப்படவும் செய்வார்கள்.
அது அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடக்கூடும்.
நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ எனப்படும் சாதாரண வியர்வை சுரப்பிகள், உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன.
‘அப்போகிரைன்’ எனப்படும் இன்னொரு வகை வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி செயல்படத் தொடங்குகின்றன.
எல்லாவகை வியர்வை சுரப்பிகளுமே லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. அது மணமற்றது. இயற்கையானது. அது நமது உடல் இயக்கத்தின் வெளிப்பாடுதான்.
ஆனால் அந்த திரவத்தில் நமது சருமத்தில் இருக்கும் சில வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து செயல்படும்போது, அது ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அத்துடன் சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து நாற்றமடிக்கும் நிலைக்கு செல்கிறது.
இந்த வாடையை நீக்கி, உடலை மணக்கச் செய்வது எப்படி?
வியர்வைத் துளிகள் அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து வெளிப்பட்டு சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து ரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வேதிவினை
மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடை வீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்த வேண்டும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் இருவகைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை, அதில் முதல் வகை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது
. அது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை போக்கும். உடலில் மணத்தை வீசச்செய்யும் நறுமணப் பொருட்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது
பெண்கள் நாற்றத்தால் மிகுந்த அவஸ்தை
வகையாக குறிப்பிடப்படுபவை, ஆன்டி பெர்ஸ்பிரண்ட் எனப்படுகிறது. இதில் மருந்துப்பொருட்கள் அடங்கி யிருக்கின்றன. அவை வியர்வை சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, வியர்வை அதிகமாக வெளியேறுவதை தடுக்கிறது.
வெயிலில் அலைவது, பயணம் செய்வது போன்றவைகளை அவர்களால் தவிர்க்க முடிவதில்லை. அதனால்
வியர்வை பிரச்சினையை தவிர்க்க டியோடரண்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் அவை கிடைக்கின்றன. ஸ்டிக், பவுடர்
போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை ஏற்படாது. அவை ‘டிரை டியோடரண்ட்’ என்று அழைக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
உடலில் பூசும் விதத்தில் ‘கிரீம் டியோடரண்டு’கள் உள்ளன. கை விரலால் எடுத்து இதனை பயன்படுத்தவேண்டும்.
காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவம் சருமத்தில் பரவும். ஸ்பிரே டியோடரண்டை சருமத்தில் மிக நெருக்கமாக பயன்படுத்தக்கூடாது. சருமத்தில் நெருக்கமாகவைத்து ஸ்பிரே
செய்தால் சருமத்தின் இயல்புத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொப்பளங்கள் போன்று தோன்றக்கூடும்.
அந்த கதையில் சரத்குமார்- சுஹாசினி
அந்த கதையில் சரத்குமார்- சுஹாசினி
குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் உள்ள ஒரு படத்தில் சரத்குமார்- சுஹாசினி இருவரும் மண் சார்ந்த முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்- சுஹாசினி
சரத்குமார், சுஹாசினி
ரோஷ்குமார் தயாரிக்க, பாலுச்சாமி டைரக்டு செய்கிறார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது,
“இந்த காலத்துக்கு தேவையான கதையம்சம் கொண்ட படம் இது. இந்த கதையை சரத்குமார் கேட்டதும் உடனடியாக நடிக்க சம்மதித்தார். இது எனக்கான கதை என்றார்.
மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.
இன்னொரு முக்கிய வேடத்தில் அஷ்வதி நடிக்கிறார். இவர்களுடன் நந்தா, சிங்கம் புலி, சித்திக்,
கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள். இது அனைத்து தரப்பினரையும் கவரும் சிறந்த திரைப்படமாக இருக்கும்” என்றார்.
விமான நிலையத்தில் நடிகைதடுத்து நிறுத்தம்
விமான நிலையத்தில் நடிகைதடுத்து நிறுத்தம்
குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து அவர், நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேற தடை… மும்பை விமான நிலையத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தடுத்து நிறுத்தம்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய்
மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.
இந்நிலையில், நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்காக இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.
ஆனால், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பவுள்ளது.
விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்
விலங்குகள் ஊடாக புதிய கொரனோ பரவல்
உலகில் மனிதர்கள் ஊடக விலங்குகளுக்கு கொரனோ நோயானது பரவி வருகிறது ,மேற்படி
நோயினால் பாதிக்க பட்ட விலங்குகளிடம் இருந்து புதியவகை கொரனோ நோயானது பரவி வரும்
அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கையில் சிங்கம் ,பூனை ,நாய்களுக்கு இந்த நோயானது பரவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்
சிலிண்டர் வெடித்து எரிந்த உணவகம் – ஓடிய மக்கள்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பயன்படுத்த பட்டு வந்த
காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த உணவகம் முற்றாக எரிந்து அளித்துள்ளது
இலங்கையில் தொடராக சிலிண்டர்கள் வெடித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்







