லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி

Spread the love

லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி

லிபியாவில் முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும் நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24-ந் தேதி மற்றும் ஜனவரி 24-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

லிபியா அதிபர் தேர்தல் கடாபியின் மகன் போட்டியிட கோர்ட்டு அனுமதி
கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம்
திரிபோலி :

வடஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிக ஆட்சி புரிந்து வந்தவர் மோமர் அல் கடாபி. கடந்த 2011-ம் ஆண்டு இவர் கிளர்ச்சிப்படையினரால்

சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும்

நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24-ந் தேதி மற்றும் ஜனவரி 24-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி

கடந்த மாதம் 14-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்தார். ஆனால் அவர் தனது தந்தையின் ஆட்சி

காலத்தின் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்திய குற்றசாட்டை

சுட்டிக்காட்டி அவரது வேட்பு மனுவை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து, சையிப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த அந்த நாட்டு கோர்ட்டு, சையிப்பை தகுதி நீக்கம்

செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி

வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    Leave a Reply