Tag: வவுனியா
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .
வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .
நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .
அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .
குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,
அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .
மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .
எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,
சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .
Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .
ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை

- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி

- சுரேஷ் சல்லே வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது

- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு. ,தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை ,மக்கள் நாயகன் அர்ச்சுனா வவுனியா வைத்தியசாலியா நோக்கி வருகிறார் |மக்கள் முற்றுகை போராட்டம்| தவறான சிகிச்சை வழங்கிய பீதியில் மருத்துவர்கள் பீதியில் ,வடக்கு மாகாணத்தில் மருத்துவ மாபியாக்கள் ஊசல் ,வெடிக்கும் மக்கள் எழுச்சி
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
நால்வர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு ,வவுனியா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
முகமூடி அணிந்த நிலையில் வாள்களுடன் சென்று நபர்கள் அங்கிருந்த ஐயர் உள்ளிட்ட கணவன் மனைவி மற்றும் இருவர் மீது கடும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
மர்ம நபர்கள் நடத்திய திடீர் வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இது திட்டமிடப்பட்டு கூலி குழுக்களினால் வரவழைக்கப்பட்டஅந்த நபர்களூடாக இந்த தாக்குதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது ..
தாக்குதலை நடத்தியவர்கள் தமது பால் பட்டு தாக்குதல் வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு தப்பி சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது குற்றத்தை தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
வவுனியா பகுதியில் இடம்பெற்ற இந்த வாள் வெட்டுச் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த பகுதி மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை

- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி

- சுரேஷ் சல்லே வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது

- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம் .வவுனியாவில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
பாடசாலைக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற இளம் தாய் ஒருவர் தற்பொழுது பிள்ளைகளுடன் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய இளம் தாயும் அவரது 11 மற்றும் 8 வயது உடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர்கள் குடும்பத்தினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
கோவிலா புதுக்குளம் பகுதி குடும்பம் மாயம்
கோவிலா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்ப உறவுகளே காணாமல் போயிருந்தார் .
இவர்கள் கடத்தப்பட்டார்களா, அல்லது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்களா ,அல்லது வேறு இடங்களுக்கு ஏதும் சென்றார்களா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இலங்கையில் காணாமல் போகின்ற இவ்வாறான பல நபர்கள் இறுதியில் சடலங்கலாக மீட்க கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கடத்திச் செயல்படுவது மற்றும் ,வாகனங்கள் ஊடாக அவர்களை அடித்து விபத்தில் இறந்ததாக தோற்றப்பட்ட ஏற்படுத்தி, படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.
அவ்வாறன நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தாயும் காணாமல் போயுள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களையம் வவுனியாவில் காணவில்லை
32 வயதுடைய இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களுமே காணாமல் போய் உள்ளனர்.
காணாமல் போன இவர்கள் சம்பவம் அந்த பாவனையா பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவியது .
அடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் காணப்படுகின்றது .
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் போலீசார் மற்றும்குற்றவியல் தடுப்பு பிரிவு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இவர்கள் பாடசாலை சென்று வந்த பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்யப்பட்டு அதிலிருந்து தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் தொடராக இவ்வாறு காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்து வருவதும்,
வீதி ஓரங்களில் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவர்களில் இருந்து நாள்தோறும் சடலங்களும் எடுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இலங்கை செல்லும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன இவர்கள் பத்திரமாக கண்டுபிடிப்பார்களா ,அல்லது அவர்கள் சுடலங்களாக மீட்கப்படுவார்களா என்பது மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக காணப்படுகின்றது.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை

- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி

- சுரேஷ் சல்லே வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது

- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி
வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி
வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி நாய்களின் சரணாலயம் என்று அமைப்பதற்காக நோர்வையிலிருந்து வருகை தந்திருந்த ராஜி அவர்களுக்கு வவுனியாவில் இடம் பெற்ற துயர சம்பவம் .
இது தொடர்பாக எம்முடன் அவர்கள் தனது மன குமுறலை கொட்டி தீர்க்கின்றார் .
நோர்வையில் இருந்து தனது தாயகமான தனது இலங்கை வவுனியாவை நோக்கி சென்று அங்கு ,கட்டாகாளிகளாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற நாய்களை எடுத்து.
கதறும் விலங்கு பாதுகாவலர் ராஜி
சரணாலயம் என்று அமைத்து ,அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு நாய்கள் சரணாலயம் ஒன்றை நிறுவி வந்தார் .
விலங்கு பிரியராக காணப்படும் ராஜீ தனது சொந்தக்காணியில் ,இந்த நாய்களினுடைய சரணாலயத்தை அமைத்து ,அவர்களை பேணி பாதுகாக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையிலும், விலங்குகள் ஆர்வலராக காணப்பட்டார் .
அவ்வாறு காணப்பட்ட நோர்வே ராஜி அவர்கள் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கு , திடீரென இலங்கையுடைய அரசு அதிகாரிகளின் தலையீட்டினால் ,அவை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன .
அனுமதி பெறாமல் இந்த விடயங்கள் நகர்த்தப்பட்டதாகவும், அனுமதி பெற்ற பொழுதும் சில அதிகாரிகளினால் வேண்டப்படாத முறையில் ,சில நகர்வுகள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .
நோர்வே ராஜி அமைக்கும் நாய்கள் சரணாலயம்
தனது மனிதநேய விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் பணியினை ,முற்று முழுதாக முடக்குகின்ற ,அபாயத்தில் காணப்படுவதாக, தனது வருத்தத்தையும் கவலையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

எமக்கு இன்று வழங்கிய நேர்காணலில் பொழுது பல்வேறுப்பட்ட விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதில் மகாநாராசபை தமக்கு எதிர்வித சிக்கல்களையும் நெருக்கடியும் தரப்படவில்லை என்கிறார் .
ஆனால் சுகாதார அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என ,அங்கு வருகின்றவர்களே தமக்கு ,ஒருவருக்கு ஒருவர் ,மாறி மாறி ,வேறு விதமான கதைகளை சொல்வதாகவும் .
அதனால் இந்த நாய்கள் சரணாலயத்தை ,முற்று முழுதாக மூடிவிடும் நெருக்கடி ஒன்றை ,அவர்கள் தருவதற்கு முயல்வதாக கவலை வெளியிட்டுள்ளார் .
அவருடைய முழுமையான பதிவுகள், இந்த காணொளியில் கீழே இணைக்கப்படுகிறது ,அதில் அழுத்தி நீங்கள் பார்வையிட முடியும்.
- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை

- அனைத்து மாகாணங்களிலும் கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- அனோஜன் சிவரசாவின் மரண தண்டனையை ரத்து செய்த சவூதி

- சுரேஷ் சல்லே வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குறுக்கீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது

- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல் ,இன்று இரவு 10 00 மணியளவில் கிரு மற்றும் தந்தை மீது மர்ம குழு தாக்குதல்
வவுனியா பகுதியில் வைத்து குழாய் கிணறு உதவி திட்டம் நடைமுறை படுத்த பட்டு வரும் கிரு மற்றும் அவரது தந்தை மீது மர்ம குழு திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
போத்தல்கள் சகிதம் வருகை தந்த ஐந்து முதல் பத்து பேர் கொண்ட மர்ம ரவுடி கூலி குழுக்கள் கிருமீது திடீர் தாக்குதலை நடத்தினர் .
மகன் மீது தாக்குதல்
மகன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டு அதிர்ந்த தந்தை அதனை தட்டி கேட்க சென்ற பொழுது ,அவர் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சம்பவத்தை அறிந்து களத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரித்து பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
டிக் டாக் நிகழ்வு நேரலையில்,தோழர் கிரு தனது கணக்கின் ஊடாக தனது உதவி திட்டம் தொடர்பிலான உதவி கோரல் கருத்தை முன்வைத்தார் .
பிரான்ஸ் குழாய் கிணறு நிறுவும் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் பிரான்ஸ் ராசன் என்பவரால் தனக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்
,.அதே பிரான்ஸ் ராசன் எனக்கும் today காலையில் கொலை மிரட்டல் விடுத்தது இருந்தார் .அத்துடன் நாம வசித்த இலங்கை நமது வீட்டையும் எமது அனுமதி இன்றி டிஃடாக்கில் வெளியிட்டு இருந்தார் .
அதன் பின்னர் கிருமீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அதன் பின்னர் ஈழன் நிசான் என்ற குழுவும் இவர் மீது அவர்களது டீடாக் லைவிலும் இவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் .
இதனை அடுத்து தற்போது .ஈழன் நிசான் ,வேட்டை என்ற நபர்கள் அதன் குழு மீதும் எமக்குபலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
எனவே இந்த இரு குழுக்களையும் சர்வதேச போலீசார் உதவியுடன் ,இலங்கை காவல்துறையினர் கண்காணித்து
விசாரணைகளை நடத்த வேண்டும் ,அப்பொழுது தான் இந்த தாக்குதளை நடத்தியது யார் என்பது தெரியவரும் .
Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல்
மக்கள் ஆதரவை பெற்று மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கொள்ளும் இந்த Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல் மற்றும் பழிவாங்கும் சமூக விரோத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதை காண கூடியதாக உள்ளது .
கிரு மற்றும் அவரது தந்தையின் தாக்குதல் பின்புலத்தில் ஈழம் நிசான் மற்றும் பிரான்ஸ் ராசன் என்பவர் இருக்க கூடும் எனப்தாக நாம் பலமாக சந்தேகிக்கிறோம் .
அதேவேளை எமது கைபேசி வாட்ஸாப் உரையாடல் ஒட்டு கேட்க பட்டு வந்துள்ளது ,மேலும் கணணியும் கைக்கிங் செய்யப்பட்டுள்ளது ,இந்த ஒட்டு
கேட்பின் பின்புலத்தில் இந்த குழுக்கள் இருக்கலாம் என்பதாக நாம சந்தேகிக்கிறோம் .
இந்த குழுக்களின் கைபேசி ,சமூக வலைதள உரையாடல்கள் யாவும் கண்காணித்தல் தடயங்கள் ஏதும் கிடைக்க பெறலாம்
இந்த இரு குழுக்கள் தொடர்பாக மக்களே விழிப்பாக இருக்கும் படி இவ்வேளை வேண்டுதல் விடுகின்றோம்
-வன்னி மைந்தன் –
நில நடுக்கம் வவுனியாவில்
நில நடுக்கம் வவுனியாவில்
வவுனியாவில் நில நடுக்கம் மக்கள் அதிர்ச்சியில் ,இலங்கை வவுனியாவிலிருந்து 25 கிலோ தொலைவில் உள்ள அனுராதாபுரம் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் இன்று தெரிவித்திருக்கின்றன.
இந்த பகுதியில் நில நடுக்கம் பதிவானதாகவும் அவ்வேளை மக்கள் பீதிக்கு உள்ளானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் வரலாறு காணாத நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்படுவதால் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது .
அதிக மக்கள் தொகை
அனுராதபுரம் என்பது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது .
அதேபோல தனிப்பெரும் சிங்கள மக்கள் அதிகமாக வாழ்கின்ற ஒரு பகுதியாகும் காணப்படுகின்றது.
அவ்வாறான பகுதியாலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதவிப்பரண்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை .
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை அடுத்து மக்கள் மத்தியில் தொடர்ந்து ஒரு வித பீதியும் பதட்டமும் காணப்படுகிறது .
எதிர்ப்பு வரும் காலங்களில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பதிந்துள்ளதால் ,மக்கள் தற்பொழுது பெரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்
போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை ,தமது வறுமையை நீர்த்திட கோரி போராளி குடும்பம் கண்ணீர் கோரிக்கை .
தமிழீழ விடுதலை புலிகளின் படையில் இணைந்து மக்களுக்காக போராடி காயமடைந்த முன்னாள் போராளி ஒருவர் ,தனது வாழ்வாதாரத்தை உயர்த்திட கோரி உலக தமிழ் மக்களிடம் உதவி வேண்டி இருக்கின்றார் .
தேசத்தையும் ,தேச மக்களையும் காப்பற்றிட தன்னை அர்ப்பணித்து அந்த ஈழ விடுதலை போராளி ,காலில் காயமடைந்த நிலையில் ,தனது குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில் தவித்து வருகிறார் .
அவ்வாறன அந்த குடும்பத்தை காப்பற்றிட வேண்டிய பொறுப்பு உலக தமிழ் மக்களிற்கு உள்ளது .
வவுனியா பாவற்குளம்
எனவே அன்பார்ந்த தாய் தமிழ் உறவுகளே, வவுனியா பாவற்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த போராளி குடும்பத்தை காப்பற்ற வேண்டியது நமது பொறுப்பாகும் .
இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் இந்த வவுனியா பாவற்குளம் போராளி குடும்பத்திற்கு ,குழாய் கிண்று ஒன்றை நிறுவிட மக்களே உதவிடுங்கள் .
உதவிட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் இதோ –0044 7536707793
வாட்ஸ்சாப்பில் இணைந்து பயன் பெறுக
Featured
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா இடம்பெற்றுள்ளது .வவுனியா மருக்காரம்பளை அ , த ,க, பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி ஓய்வு பெறும் பணி சிறப்புற இடம்பெற்றுள்ளது .
55 தாவது வயதில் சுய விருப்ப ஓய்வு பெறும் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அவர்களது சேவையை பாராட்டி ,மருக்காரம்பளை பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கௌரவித்தனர். .
அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி
அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி 1990 ஆம் ஆண்டு முதல் ,பாடசாலை அதிபராக பணி புரிந்து வருகிறார் .
அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அதிபராக விளங்கிய பாடசாலைகள் யாவும் ,அதன் கல்வித்தரம் மற்றும் ,மாணவர்கள் கல்வியல் உயர்வு நிலையில் மிக பெரும் பங்காற்றினார் .
அவ்விதமான சிறந்த சேவை பண்பை கொண்ட அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடை வைபவம், கடந்த தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது .
சுயவிருப்ப ஓய்வு
தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதாக ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி தெரிவித்துள்ளார் .
தமது பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரிவை எண்ணி, ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணீரில் தவழ்ந்தனர் .
சக ஆசிரியர்களை தனது சகோதர ,சகோரிகளாக கருதி அவர்கள் மீது அன்பு செலுத்தி ,பிரியமுடன் நடந்து கொள்வார் என அங்கு பணியாற்றிய சில ஆசிரியர்கள் நமக்கு தெரிவித்தனர் .
அன்பும் அறமும் ஓங்கும் நிலை கொண்ட மிக நேர்த்தியான சேவையை செய்து ,தமது பாடசாலையை முதன்மை நிலைக்கு எடுத்து செல்ல ,முக்கிய தூணாக விளங்கியவர் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்துள்ளனர் .
நாட்டுக்கு ஒரு தலைவன் போல தமது பாடசாலையின் முழு வளர்ச்சியிலும், பெரும் பங்காற்றியவர் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்து நெகிழ்ந்தனர் .
வறுமையின் கீழ் தவிக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான தனிமனித உதவிகளை புரிந்து ,அவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்திய அதிபர் ,திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடையை ,மகிழ்வோடும் ,துயரத்தோடும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஏற்று கொண்டனர் .
கனமான துயரோடு கண்ணீரால் மலர் தூவி ,விடை பெற்ற வேளையதை விழிகள் இன்னும் மறக்கவில்லை எனவும் ,காலத்தால் அழியாத சாதனையின் நாயகியாய் ,எமது பாடசாலையில் தடம் பதித்து கடக்கிறார் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் .






Featured
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம் , இடம்பெற்றுள்ளது .டிக்டாக் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரான்ஸை சேர்ந்த ராசன் என்பவரையே கைது செய்யக்கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்கி அப்பாவி மக்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்க பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
எப்படி பிரச்னை ஆரம்பித்தது ..?
டிக்டாக் ஊடக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராசன் .பாதிக்க பட்ட மக்களுக்கு குடி நீர் கிணறுகள் அமைத்து கொடுத்து ,அதன் ஊடாக மக்களுக்கு அளப்பெரும் உதவி புரிந்து வருகிறார் பிரான்ஸ் டிக்டாக் ராசன் .
இவரது காணொளிகளை டிக்டாக் ஊடாக பார்வையிடும் மக்கள் ,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருகின்றனர் .

அவ்வாறு மக்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,மக்களுக்கு அளப்பரிய உதவிகளை செய்து வருகிறார் .
100 குழாய் கிணறுகளை பிரான்ஸ் டிக்டாக் ராசன் நிறுவி கொடுத்துள்ளார் .
இவ்வாறன கால பகுதியில் நூறாவது குழாய் கிணறு நிறுவ பட்ட நிகழ்வு பெரும் கோலாகலமாக நடத்த பட்டது .
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஓன்றில் சிறப்பு விருந்தினராக இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டு இருந்தார் .
அந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் டிக்டாக் ராசன் எவ்வாறு அழைக்க படுவார் என்ற கேள்வியை சமுக நல ஆர்வளர்கள் எழுப்பினர் .
மதுபோதை அருந்தி காணொளி
தமிழர் கலாச்சார பொது பண்பியலுக்கு எதிராக ,மதுபோதை அருந்தி காணொளி பகிரும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,பொதுவெளியில் மக்கள் நலன் விரும்பி ,சீர்திருத்தவாதி என எவ்வாறு கூற முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர் .
அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் கோபம் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ,அந்த தாக்குதலானது ,புளியம் குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,அதே காவல்துறை முன்பாக நடத்த பதட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதல் ராசன் மற்றும் ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் பெண் ஒருவரும் இணைந்தே கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனை உடனே கைது செய்
அதனை அடுத்தே தற்போது பிரான்ஸ் டிக்டாக் ராசன் உடனே கைது செய்யப்பட வேண்டும் என வவுனியாவில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது .
மூன்று நாட்களுக்குள் ராசான் கைது செய்யப்படுவார் என போலீசாரால் தெரிவிக்க பட்டதை அடுத்து ,போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர் .
யார் இந்த லண்டன் கடைக்கார பெண் ..?
லண்டனில் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் .அந்த கடையினை லண்டனில் விற்று விட்டு, வவுனியாவில் தங்கியுளளாரம் .வவுனியால் டிக்டாக் பிரான்ஸ் ராசனுடன் ஒன்று பட்டு நீள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வவுனியாவில் கோடி ரூபாயில் காணிகளை வாங்கி விட்டுள்ளாராம் இந்த லண்டன் பெண் .இவருக்கு கோடி பணம் எவ்வாறு கிடைத்தது .? என்கிற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
லண்டனில் கடை வைத்து நடத்தி இருந்தால் கம்பெனி கவுசில் இவரது வருமான விடயம் யாரும் பார்க்க முடியும் .அப்படி என்றால் இவர் அதிக இலாபத்தில் கடையை நடத்தி ,அதன் பின்னர் விற்று இருப்பார் .
பல கோடி பணம்
அதனால் பல கோடி பணம் இவர் இலாபமாகவே சேமித்து இருப்பார் .எனவே பிரிட்டன் வருமானவரி திணைக்களம் இவருக்கு எவ்வாறு இவ்விதமான பெரும்
பணம் கிடைக்க பெற்றது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குற்ற சாட்டை பாதிக்க பட்டவர்கள் முன் வைக்கின்றனர் .
மேலும் இலங்கை இலண்டன் தூதரகத்தில் இந்த லண்டன் பெண்ணுக்கு எதிராக பெட்டிசம் வழங்குவதுடன் ,இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தில்
ராசன் தொடர்பான இந்த குற்ற சாட்டு மனு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனராம் .
இலங்கை போலீசாரை வைத்து ,அப்பாவி மக்களை தாக்கியமைக்காக ,லண்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
பச்சை மிளகாய் தாக்குகளின் பின்னர் சிக்கிய ராசன்
பச்சை மிளகாய் என்ற டிக்டாக் வாலிபன் ஒருவரை காரில் வைத்து , இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார் .
அந்த விடயம் வரவேற்பையும் ,எதிர்ப்பையும் பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு எதிராக ஏற்படுத்தியது .
குற்றம் புரிந்த பச்சை மிளகாயை கைது செய்த ராசன் ,அவரை காவல்துறையில் ஒப்படைத்து தண்டித்து இருந்தால் ,அவர் மீதான நன்மதிப்பு ,மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கும் .
சட்டத்தை தன் கையிலெடுத்து, பச்சை மிளகாய் என்ற டிக் டாக் பெயர் கொண்ட நபர் மீது, பிரான்ஸ் டிக்டாக் ராசன் வன்முறை தாக்குதல் நடத்தியது மிக பெரும் தவறு என்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து
அதனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார், என்ற கீழ் நிலை பார்வை ராசன் மேல் வீழ ஆரம்பித்தது .
அதன் பின்னர் வவுனியா பகுதி பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக ராசன் அழைத்து கவுரவிக்க பட்ட செயலும் கண்டனங்களுக்கு உள்ளாகின .
இப்பொழுது புளியங்குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,ராசன் ,மற்றும் லண்டன் பெண் ஆகியோர் தாக்குதல் நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்க பட்டுள்ளது .
மக்கள் சேவை ஆற்றிட மகத்துவம் தேடி சென்ற பிரான்ஸ் டிக்டாக் ராசனின் , சில சிந்திக்காத செயல்கள் ,தொலைதூர முற்போக்கு பார்வை அற்ற நிலையால் ,இன்று இவ்வாறு அவர் மீதான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துள்ளது .
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது எச்சரிக்கை
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது ,இவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பும் ,அதனை முன்கூட்டி அனுமானித்து அவற்றை தவிர்த்து சென்றிருந்தால் இந்த நிலை பிரான்ஸ் டிக் டாக் ராசனுக்கு ஏற்பட்டு இருக்காது .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மிக சிறந்த அன்பான மனிதர் எனவும் ,அவரை தவறான வழியில் அவரை சிக்க வைத்து ,சிக்கலில் மாட்டி விட்டது ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள கடை நடத்திய பெண் என்ற குற்ற சாட்டு பாரதூரமாக முன் வைக்க படுகிறது .
ஆதலால் அந்த லண்டன் பெண்ணுக்கு பெரும் தொகையில் பணம் கிடைத்தது எப்படி என்பதை, பிரிட்டன் வருமான துறை விசாரணைகளை மேற்கொண்டால் ,விடயம் தெரியவரும் என மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றம் சுமத்த பட்டுள்ள ராசன் லண்டன் பெண் ஆகியோர் எம்மோடு உங்கள் பக்க விடயங்கள் தெரிவிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன்
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன் மீது இவ்விதமான எதிர்ப்பு கிளம்பிட காரணம் என்ன என்பதை ,அவரது உற்ற நெருங்கிய விசிறிகள் ,விசிறி விடயத்தை கண்டறிக .
பொறிக்குள் ராசனை சிக்கவைத்து ,இன்று இந்த தலைகுனிவை அவருக்கு ஏற்படுத்தியது யார் என்பதை ,ராசனுடன் பயணிக்கும் ,விசிறிகள் ஆராய வேண்டும் என்பதே நமது அவா .
Featured
வவுனியா பொலிஸார் அதிரடி
வவுனியா பொலிஸார் அதிரடி
வவுனியா பொலிஸார் அதிரடி வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு
செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் விசாரணை
கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும்
மோசடிகள் இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பராட்டுக்களை தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Featured
சிறுமி கொலை மக்கள் போராட்டம்
சிறுமி கொலை மக்கள் போராட்டம்
சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சிறுமியின் கொலையில் மர்மம்
இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை
வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .
காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .
இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .
சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .
இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .
அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .
Featured
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13) 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக் கைதிகள் இன்று (13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
Featured
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (17) மாலை கிணற்று மோட்டார் சுவிச்சை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதிக்கு சென்றவர்களால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை.
அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது
வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (24) தெரிவித்தனர்.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.
வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் முதியவரிடம் இருந்து பறித்து சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து விட்டு மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த கைத்தொலைபேசியை பெற்றுக் கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .
மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .






















































