Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை
கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை
இலங்கை அரசு இவ்வாறு சடைந்து வெளியிட்டுள்ளது ,அதாவது தங்கள் இன படுகொலை புரியவில்லை புலிகளே செய்தார்கள் ள் என்பது தான் அது
காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413
என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவரான பிரதிநிதி கிரெகரி மீக்ஸ் (ஜனநாயகக் கட்சி / நியூயோர்க்) மற்றும் தரவரிசை உறுப்பினரான பிரதிநிதி மைக்கேல்
மெக்கவுல் (குடியரசுக் கட்சி / டெக்சாஸ்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடலில், தவறான, பக்கச்சார்பான மற்றும் ஆதாரமற்ற வகையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களைக்
கொண்டுள்ளதும், தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதுமான இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது’ என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தீர்மானத்தின் பாரபட்சமற்ற தன்மையை ஒவ்வொரு பந்தியிலும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் இந்தத் தொடர்பாடல் அமைந்திருந்தது.
1997ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் 2008ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ யால் ‘உலகின் மிக ஆபத்தான மற்றும் கொடிய தீவிரவாதிகளின் மத்தியிலான’ ஒரு ‘சுதந்திர ஆயுத அமைப்பாக’ பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை சமப்படுத்தும்
வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, அதன் தோற்றம் மற்றும் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது, ‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புக்களின் மூலமாக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அதே வேளை,
இலங்கையின் அரசுக்கான தன்மையையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றது. இது நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பதுடன்
மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் இறுதி இலக்கான இலங்கையை சிதைக்கும் நோக்கத்தை ஆதரிப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக் கவலைகள் பற்றிய தீர்மானத்தின் அறியாமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள அதன் பல முன்னணி அமைப்புக்களின் கூர்மையான கூறுகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் உட்பட இலங்கையின் நிலையானதொரு பாதுகாப்புப் பங்காளியாக’ அமெரிக்கா விளங்குவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ‘ஜனநாயக
மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் முழுவதும், குறித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைக்கு மாறுபட்டதாக உள்ள இந்தத் தீர்மானம், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக ஆயுதமேந்திய செயல்களை சபை ஆதரிக்கின்றது என்ற தவறான முடிவுக்கு வழிவகுக்கும். இது
ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றியிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் சொந்த வெளியுறவுக் கொள்கையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளை, இலங்கைக்கும்
அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை எதிர்மறையாகப் பாதிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடிய இலங்கை அரசாங்கம், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, விடுவிப்பதற்காக இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம்
ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மே 2009 இல் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,
மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, அபிவிருத்தி செய்யவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மறுவாழ்வு
அளிக்கப்பட்டு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட 596 சிறுவர் படையினரைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட பலருக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புக்களையும் இந்தத் தொடர்பாடல் கோடிட்டுக் காட்டியது.
மோதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மக்களின் உரிமைகளையும், ஜனநாயக சுதந்திரங்களையும் உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. 2017 முதல், ஒருபோதும் நிறைவேற்றப்படாத
மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு தீர்ப்பின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தல்களை ஒத்திவைப்பதை ஆதரித்தன.
ஏறக்குறைய 3 ஆண்டுகளாக, மனித உரிமைகள் சபை அல்லது மேற்கத்தேய நாடுகள், வட மாகாணம் உட்பட மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடைவது குறித்த பிரச்சினையை எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில்
பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றக் குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வரும் ஒரு நேரத்தில், இது ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் புலனாய்வு ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை உட்பட இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கைகள், ‘மேசையளவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட’ தகவல்கள், நிகழ்வுகள் பற்றிய
வெறும் வெளிப்படை நிலையான விவரிப்பாகவே அமைவதுடன், இந்த ஆவணங்கள் ஆதாரங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. மாறாக, ஏனையவற்றுக்கு இடையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ‘பரணகம ஆணைக்குழு’, ஐ.நா.
மற்றும் யு.என்.டி.பி, யுனிசெப் மற்றும் ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபு நேஸ்பி வழங்கிய தகவல்கள் ஆகிய சரிபார்க்கப்பட்ட பல சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சட்டவியலாளர்கள்
உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்கள், மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் இராணுவ
இணைப்பாளரான கேர்னல் அன்டன் காஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்னல் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோரின் அறிக்கைகள் இந்த விவரிப்புக்கு சவால் விடுக்கின்றன.
அக்டோபர் 2015 இல் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி, அரசியலமைப்பிற்கு முரணான வகையிலான வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை ஆரம்பிக்கும் என்ற
உறுதிப்பாட்டை முந்தைய அரசாங்கம் வழங்கியிருந்த போதும், 5 ஆண்டுகளாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தத் தீர்மானத்தின் ஏனைய ஆதரவாளர்கள் அந்த வாக்குறுதிகளை முந்தைய அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை எந்த வகையிலும் கொடுக்கவில்லை.
எழுப்பப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் நம்பகமான, வெளிப்படையான உள்நாட்டு செயன்முறையை வழங்கும் வகையில், ஜனவரி 2021 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, அதன் மூலம் 2021 மார்ச் 04ஆந் திகதி ‘விசாரணை
செய்வதற்காக எழுதப்பட்ட பிரதிநிதித்துவங்கள் அல்லது தகவல்கள் அல்லது மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு பொருளையும் சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு நபர், நபர்கள்
அல்லது அமைப்புக்களும் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதற்காக அழைப்பு விடுக்கப்பட் டுள்ள’ இந்த நேரத்தில் ஒரு ‘சர்வதேசப் பொறிமுறையை’ கோருவது மிகவும் மோசமானது. ஆணைக்குழு
ஏப்ரல் முதல் விசாரணைகளை நடாத்தி வருவதுடன், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
10 லட்சம் சீனாவின் Sinopharm ஊசிகள் இலங்கை வந்தன
10 லட்சம் சீனாவின் Sinopharm ஊசிகள் இலங்கை வந்தன
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக சீனாவில் இருந்து
இலங்கைக்கு சுமார் பத்து லட்சம் Sinopharm vaccines ஊசிகள் வந்தடைந்துள்ளன
இவ்வாறு வந்தடைந்த ஊசிகள் விரைவில் மக்களுக்கு செலுத்த படும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு
வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு
களனி கங்கை களுகங்கை, ஜின் கங்கை, மகா ஓயா மற்றும் அத்தனகல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததினால் தாழ்நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை கடற்படையினர் வள்ளங்கள் மூலம் மீட்டுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.
கடற்படையின் 23 வள்ளங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது விசேடமாக களனி கங்கையை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் 10 மாவட்டங்களில் 84 பிரதேச செயலக பிரிவுகளில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 45ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் ,புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும்,கொழும்பு மாவட்டத்தில் ஒருவரும் ,கம்பாஹா மாவட்டத்தில் இருவரும்
,களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் ,காலி மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்
உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்திருப்பதுடன் இருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவாயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் தற்காலிக பாதகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
14 வீடுகள் முழுமையாகவும் 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்
சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்
சீனாவின் கிழக்கு பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி குத்து தாக்குதலை
நடத்தியுள்ளார் .இதில் ஐவர் பலியாகியுள்ளனர்
மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள்
கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள்
அசாமில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசு வட்டியில்லா கடனுதவி வழங்குகிறது.
கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள் – குவியும் பாராட்டு
மாமனாரை தோளில் சுமந்து சென்ற மருமகள்
அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ் (75). இவரது மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாமனாரை, நிகாரிகா கவனித்து வந்தார்.
இதற்கிடையே துலேஷ்வர் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று நிகாரிகா யோசித்தார்.
தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர் சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை தோளில் சுமந்து, கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த
மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில், மாமனாரை தோளில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் பட நடிகைகள் கைது
தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்
தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி
வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது.
முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது
செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்
நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்
இந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
அதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின்
ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு
அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி பகுதியில் கடந்த தினம் இரவு 11 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது
இதன்பொழுது அந்த வீடு பலத்த சேதமடைந்த்துள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த காரை மீட்டு சென்றனர்
டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரு வருடங்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு
டிரம்ப் பேஸ்புக் கணக்கு இரு வருடங்களுக்கு தடை – அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை இரண்டு வருடங்களுக்கு தடை செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
டிரம்ப் தொடர்நது பொய்யான ,செய்திகளை பரப்பி வருவதனால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளதாம்
டிரம்புக்கே இந்த நிலை எனின் சாதாரண மக்களின் நிலையை எண்ணி பாருங்கள்
தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்
தீக்குளித்து இளம் பெண் தற்கொலை – கண்ணீரில் குடும்பம்
இலங்கை கல்கிஸ்ஸை பகுதியில் கடந்த தினம் இருபத்தி நான்கு வயதுடைய இளம் பெண் ஒருவர்
மண் எண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்
இவரது இந்த தற்கொலைக்குரிய கரணம் உடனடியாக தெரியவில்லை போலீசார்
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை
உணவு களங்சியப்படுத்தலைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இரசாயன உர இறக்குமதியை முறையற்ற விதத்தில் நிறுத்தியுள்ளதென தெரிவித்த ஐக்கிய
மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம், இதனால் இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றார்.
கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த
போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உரத்தை நிறுத்தி உணவு களஞ்சியப்படுத்தலை இந்த அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது என்றார்.
“உணவு மாத்திரமல்ல இதுவரை எரிபொருள் களஞ்சியப்படுத்தலை எரிபொருள் கூட்டுதாபனமே முகாமைத்துவம் செய்து வந்தது. ஆனால், இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு
வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து எரிபொருள் களுங்சியப்படுத்தலிலும் நெருக்கடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. மறுபுறம் நிதி முகாமைத்துவமும் சீரழிந்து இறுதியில் பங்களாதேஷிடம் கடன் வாங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின்
மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் பதவி விலகுவதே சிறந்தது என்றார்.
பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்
பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்
ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு
பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவிருந்தது.
உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்துடன் சென்ற உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன், வட்டவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்
கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்
கொரானாவுக்கு முல்லைத்தீவில் ஒருவர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி முல்லைத்தீவில் ஒருவர்
பலியாகியுள்ளார் .பலியானவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1656 பேர் பலியாகியுள்ளனர்
கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை
கிளர்ச்சி படைகள் வெறியாட்டம் – 57 மக்கள் படு கொலை
கொங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மகக்ள் பலியாகியுள்ளனர் .
அரச இராணுவத்திற்கும் ,போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் சிக்கி அப்பாவி மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
57 மக்கள் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
,இவ்வாறு இறந்தவர்கள் அனைவரும் காணாமல் போனதாக அவ்வேளை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –
ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரனோ –
இலங்கை தலவாக்கலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ தாக்குதலில் நாள் தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
நோயினை கட்டுப்படுத்த முடியாது அரசு திணறி வருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
கோட்டாவுடன் பிரிட்டன் திடீர் பேச்சு – உள்ளே பேசியது என்ன ..?
கோட்டாவுடன் பிரிட்டன் திடீர் பேச்சு – உள்ளே பேசியது என்ன ..?
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு
வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார்.
2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு
அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும், சாரா ஹல்டன் அவர்கள், இணக்கம் தெரிவித்தார்.
சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்தத் தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8சத வீதமான “வன
ஒதுக்கீட்டை” 30சத வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, உயர்ஸ்தானிகர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.
“எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
ஜெனிவா முன்மொழிவு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், காணிப்
பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்தினார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew
Price), ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
எரிந்த கப்பல் -கடலில் மிதந்த கொண்டெனருக்குள் இருந்தது என்ன தெரியுமா ..?
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று
கரையிலிருந்து அகற்றப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பந்துகள் போன்ற இந்த பொருட்கள் இப்போது பாதுகாப்பாக எடுத்து சேமித்து
ilவைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்படையினரால் தொடர்ந்தும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?
செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?
southern NSW பகுதியில் பறவைகள் உட் கொண்ட உணவில் விஷம் கலக்க பட்டு இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
அதனை உட்கொண்ட அனைத்து பறவைகளும் இறந்துள்ளன
உணவில் விஷம் கலந்தது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு
சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை
கொழும்பில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கை
அத்தியசிய சேவைகளுக்காக இன்றைய தினம் வருகை தருபவர்கள் உண்மையாக சேவை நிலையங்களில் இருக்கின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட வேலைத்திட்டம்
ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்குள் நுழையும் இடங்களில் பெற்றுக் கொள்ளும் தகவலின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அத்தியவசிய தேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு – மூவரைக்காணவில்லை
மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த்தினால் இரத்தினபுரி மாவட்டத்தில் மூவர் காணமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணிக்கு இதுதொடர்பான தகவல் பதிவானதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி எல்லே விகாரைக்கு அருகாமையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதினால் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்கள்
அவதானத்துடன் செயல்பட வேணடும் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.












