Posted in Uncategorized

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரிடம் விசாரணையில்

ஈடுபட்ட போது குறித்த நபரால் பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வெடித்த குண்டு – சிதறிய இராணுவ உடல்கள்

வெடித்த குண்டு – சிதறிய இராணுவ உடல்கள்

கிழக்கு சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவத்தினரை இலக்கு வைத்த

நடத்த பட்ட தாக்குதலில் பல இராணுவத்தின் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

எனினும் முழுமையான சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை

    Posted in Uncategorized

    தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

    தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு

    கடற்படையினரால் கம்பஹா, வெரௌவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை

    அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

    நாட்டில் வியாபித்துள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் இயங்கு

    நிலையில் இல்லாத தொழிற்சாலையினை இடைநிலை சிகிச்சை நிலையமாக கடற்படை மாற்றி அமைந்துள்ளது.

    சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படை வீரர்களின் உடல் உழைப்பினை கொண்டு முதற்கட்ட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர்

    கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

    கடற்படையின் உத்தேச திட்டத்திற்கு அமைய இந்த தொழிற்சாலை, எதிர்காலத்தில் சுமார் 2000

    படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

      Posted in Uncategorized

      முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

      முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு

      கடந்த திங்கள் கிழமை Diyamailagaswewa, Kahatagasdigiliya அருவிக்குள் குளித்து கொண்டிருந்த

      எழுபது வயது முதியவர் ஒருவரை நீரடியால் பதுங்கி வந்த முதலை இழுத்து சென்றுள்ளது

      இதனை கண்ணுற்ற முப்பது வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீருக்குள் பாய்ந்து அந்த முதியவரை

      காப்பாற்றியுள்ளார் ,இவரது இந்த துணிவும் ,அறம் சார்ந்த செயலும் தற்போது சமூக வலைத்தளத்தில்
      வைரலாகி வருவதுடன் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

        Posted in Uncategorized

        பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்

        பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்

        அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இனவாதியுமான டிரம்ப் ஆட்சியில் ,அமெரிக்காவிற்குள்

        நுழைந்த அகதிகள் ,குடியேற்ற வாசிகளின் பிள்ளைகளை ,பெற்றோர்களுடன் பிரித்து மகிழ்ந்து வந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        இவ்விதம் பெற்றோர்களை விட்டு சுமார் 2,127 பேர் பிரித்து வைக்க பட்ட செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

          இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்

          இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


          கடந்த தினம் ஒரே நாளில் ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர்

          இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,844 பேர் பலியாகியுள்ளனர் ,நோயினை கட்டு படுத்த

          முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

            படகை அடித்து உடைத்த திமிங்கலம் – வாலிபன் காயம்

            அவுஸ்ரேலியா NSW தெற்கு கடல் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்தனர் ,.அப்பொழுது திடீரென

            அந்த கடல் பகுதியில் தோன்றிய இராட்ஷத திமிங்கலம் ஒன்று அந்த படகை அடித்து நொறுக்கியது

            ,இதில் அந்த படகு பலத்த சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த 18 வயது வாலிபன் படுகாயமடைந்துள்ளார்

            காயங்களுக்கு உள்ளான வாலிபன் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

              Posted in Uncategorized

              கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

              கொலம்பியாவில் 58 மக்களை சுட்டு கொன்ற பொலிஸ் – இராணுவம்

              கொலம்பியாவில் அரச இராணுவம் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின்

              பொழுது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 58 மக்கள் பலியாகியுள்ளனர்

              அரசின் இந்த வன்முறை ,படுகொலை தாக்குதலுக்கு மனித உரிமை மையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

              தமது ஆட்சியை தக்க வைத்து கொள்ள ,அரச மேற்கொள்ளும் இராணுவ ,வன்முறை தாக்குதலினால் அங்கு இயல்பு வாழ்வு சீர்குலைத்துள்ளது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்

                கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்

                இலங்கையில் தமிழின படுகொலையாளியும் ஆளும் ஜனாதிபதியாக விளங்கும் கோட்டபாய
                ,கொழும்பில் இயங்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு கடடடத்தில் ,பயங்கரவாத தடை

                சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனுமதி வழங்க பட்டுள்ளது

                கோட்டாவின் இந்த அவசர நடவடிக்கை ஏன் என்ற சந்தேகம் ஏழுந்துள்ளதுடன் ,தமிழாக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை

                  பலஸ்தீனத்தில் 4000 பேர் காயம் – 34 பேர் சுட்டுக்கொலை

                  பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அகோர தாக்குதலில் சிக்கி ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் ,

                  மேலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் வெறி தன துப்பாக்கி சூட்டு தாக்குதலில் மட்டும் 34 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                  நெதன்யாகுவின் இந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில்

                  விசாரணையை துரித படுத்த நடவடிகை மேற்கொள்ள படவுள்ளதாக பலஸ்தீன தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

                    மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது

                    கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த

                    குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                    இதன்போது, சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக

                    பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

                      Posted in Uncategorized

                      முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

                      முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்

                      பயணக்கட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வீதிகளில் இராணுவத்தினர்

                      பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

                      இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.

                      கடந்த 17ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி

                      உருவாகியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

                      இந்நிலையில் இன்று (07) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

                      அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்

                      பிரிவில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன

                        Posted in Uncategorized

                        2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

                        இலங்கை

                        2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்

                        கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

                        நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                        குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்

                        பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

                        இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

                        இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                        Posted in Uncategorized

                        பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

                        பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

                        பாகிஸ்தானில் இரு பயணிகள் ரயில் நேரெதிர் மோதி சிதறியதில் ,அதில் பயணித்த நாற்பது பேர்

                        மரணமாகினர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                        இந்த விபத்து தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          Posted in Uncategorized

                          இலங்கை இராணுவ விமானம் அவசரமாக தரை இறக்கம் – தப்பிய விமானிகள்

                          இலங்கை இராணுவ விமானம் அவசரமாக தரை இறக்கம் – தப்பிய விமானிகள்

                          இலங்கை அரச இராணுவத்தினர் பயன் படுத்தி வரும் புலிகள் பயன்படுத்திய இலகு ரக விமானம் போன்ற ஒன்று அவசரமாக தரை இறக்க பட்டுள்ளது

                          இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விமானம் திருகோணமலை ,நிலாவெளி

                          விமான படைத்தளத்தில் தரை இறக்க பட்டுள்ளது ,எனினும் விமானிகள் எதுவித காயங்களும் இன்றி தப்பித்துள்ளனர்

                            Posted in Uncategorized

                            யாழில் சுடலைக்குள் பிணங்களில் நகை கொள்ளையடித்த திருடர்கள்

                            யாழில் சுடலைக்குள் பிணங்களில் நகை கொள்ளையடித்த திருடர்கள்

                            யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உள்ள சுடலைக்குள் புகுந்த இரண்டு திருடர்கள்

                            அங்கு புதைக்க பட்ட கல்லறைகளை உடைத்து ,அதற்குள் புதைக்க பட்ட சடலங்களில் உள்ள நகைகளை திருட முயன்று வந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            இரவு வேளைகளில் சுடலைக்குள் புகும் இவர்கள் அங்கு பிணங்களுக்கு அணிவிக்க பட்ட தங்க

                            நகைகளை திருட முயன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                            காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்

                            இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற

                            சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்

                            அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்

                            மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              Posted in Uncategorized

                              நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                              நடமாடும் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தின – தனிமை படுத்த படுவார் எச்சரிக்கை

                              இலங்கையில் நடமாடும் தனிமை படுத்தல் விதிகளை மீறி வாகனங்கள் செலுத்தி சென்றால்

                              அவர்கள் தனிமை படுத்தி வைக்க படுவார்கள் என போலீசார் எச்சரிக்கி விடுத்துள்ளனர்

                              மக்கள் முகக்கவசம் இன்றியும் ,மாகாண எல்லைகளை தாண்டியும் பயணித்து வருகின்றனர்

                              இதனை அடுத்தே மேற்படி அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

                                இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

                                ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

                                மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

                                ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்

                                குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                                  அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                                  பலஸ்தீன சர்ச்சைக்குரிய மேற்குக் கரை பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அல்யஸீரா ஊடக நபர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் அடித்து இழுத்து சென்றுள்ளனர்

                                  இராணுவ ,போலீசாரின் , இந்த அடாவடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல்

                                  மேற்கொண்டு வந்த தாக்குதல்களை அல்யஸீரா ஒளிபரப்பி வந்தது ,அதனால் சீற்றம் உற்ற இஸ்ரேலிய இராணுவம் அதன் ஊடக கட்டிடத்தை குண்டு வீசி அழித்தது .

                                  அதனை அடுத்து இஸ்ரேலுக்கும்.அல்யசீராவுக்கும் இடையில் முறுகல் முற்றியது ,அதனை அடுத்து இந்த ஊடக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  இது ஒரு பகிரங்க மிரட்டலாக பார்க்க படுகிறது ,இவ்வாறு கைது செய்வதன் ஊடக அதன்

                                  செய்தியாளர்கள் பயந்து அதன் செய்தி பகுதியில் இருந்து தப்பி ஓடி விடுவார்கள் என இஸ்ரேல் மொசாட் விளையாடி பார்க்கறது என்பதே கள நிலவரமாக உள்ளது