Tag: flood
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 115 பேர் மரணம்
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 115 பேர் மரணம்
இந்தியா மகாராஸ்திரா பகுதியில் இடம் பெற்ற பாரிய வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 115 பேர்
மரணித்துள்ளனர் ,மேலும் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வெள்ள மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
ஜெர்மனி வெள்ளத்தில் மீசாலை வாலிபர் மரணம்
ஜெர்மனியில் இடம்,பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இலங்கை மீசாலையை சேர்ந்த 37 வயதுடைய லக்கு என்ற தமிழ் வாலிபர் மரணமாகியுள்ளார்
இவரது மரண அறிவித்தல் துண்டு பிரசுரத்தில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது ,குறித்த
வாலிபரை இழந்து அவர் தம் குடும்ப உறவுகள் கண்ணீரில் தவித்து வருகின்றனர்
வரலாறு காணாத வெள்ளம் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்டது இதில் 120-க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இவரது ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது
நீர் குடித்து மூச்சடக்கி
நீ இறந்தாய்
நீங்காத வலி தந்து
நீ ஏன் மறைந்தாய்
நிருபர் – வன்னி மைந்தன் –

வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு
வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் மரணம் – தொடரும் மீட்பு
களனி கங்கை களுகங்கை, ஜின் கங்கை, மகா ஓயா மற்றும் அத்தனகல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததினால் தாழ்நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை கடற்படையினர் வள்ளங்கள் மூலம் மீட்டுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்தார்.
கடற்படையின் 23 வள்ளங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஆறுகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்கும் படி நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது விசேடமாக களனி கங்கையை அண்டி வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என திணைக்களம் கேட்டுள்ளது.
சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் 10 மாவட்டங்களில் 84 பிரதேச செயலக பிரிவுகளில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 45ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் ,புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும்,கொழும்பு மாவட்டத்தில் ஒருவரும் ,கம்பாஹா மாவட்டத்தில் இருவரும்
,களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் ,காலி மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்
உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்திருப்பதுடன் இருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவாயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் தற்காலிக பாதகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
14 வீடுகள் முழுமையாகவும் 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்
அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்
சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் எட்டு மாவட்டங்களில் 71 பிரதேச செயலக பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் அடங்கலாக பத்துப் பேர்
உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவாயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நேற்று அரநாயக்க தெவனகல – அல்கம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு இடிந்து வீழ்ந்ததை அடுத்து காணாமல்; போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த
இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். தந்தைக்கு 57 வயது, தாய்க்கு 56 வயது. பிள்ளைகளில் ஒருவருக்கு 23 வயது.
அதேவேளை, டயகம – நட்போன் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். டயகமவில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;. இந்த
வெள்ளப்பெருக்கிற்குக் காரணமான ஆற்றின் கரைகளை செப்பனிட்டு, அவற்றை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,
நீரேந்துப் பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு நிலையம்
அறிவித்துள்ளது. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அடுத்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுள்ளார்.
முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
முள்ளி வாய்க்கால் நினைவு மாதத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த வைகாசி மாதத்தில் சிங்கள பகுதிகள் எங்கும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன
அவ்விதம் தற்போது களனி கங்கை நீர்மட்டம் அதிகரித்த நிலையில் வான்கதவுகள் திறக்க
பட்டுள்ளதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,தமிழர் கண்ணீர் இதே மாதத்தில்
சிங்களவர்களை துரத்தி வருகினறமை குறிப்பிட தக்கது






