Posted in Uncategorized

வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

இலங்கை இரத்தினபுரி மற்றும் கல்முகவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் ,மாற்று வெடிகுண்டுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

கைதான அனைவரும் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Posted in Uncategorized

    13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

    13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

    இலங்கை கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடிய திருடர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவ்வாறு கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    மேலும் அவர்கள் திருடிய நகைகளும் மீட்க பட்டுள்ளன

      Posted in Uncategorized

      தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

      தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

      இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்

      இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது

      கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்

        Posted in Uncategorized

        இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

        இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

        இலங்கை இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி பயணித்து கொண்டிருந்த

        கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் திடீரென தீ பிடித்து கொண்டது ,இந்த தீ பரவலினால் அந்த கப்பல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது

        இலங்கை கடற்பரப்பில் மூன்றாவது கப்பல் இவ்வாறு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,இது

        சதிகளின் நவடிக்கையாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          கவிழ்ந்த இராணுவ வண்டி -இருவர் மரணம்

          கவிழ்ந்த இராணுவ வண்டி -இருவர் மரணம்

          மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பயணித்து கொண்டிருந்த இராணுவத்தினரின் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் பலியாகினர்

          இராணுவத்தினரின் வண்டிகள் இவ்விதம் தொடராக விபத்துக்களில் சிக்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்

            நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்

            இலங்கை அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணித்துள்ளார்


            இவருக்கு கொரானா நோயானது ஏற்பட்டுள்ளதும் எனவும் அதானல் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

            மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த 12 மாடி -159 பேரை காணவில்லை

              அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த 12 மாடி -159 பேரை காணவில்லை

              அமெரிக்கா மியாமி – புளோரிடா பகுதியில் அமைந்திருந்த 12 மாடி கட்டடம் ஒன்று திடீரென

              இடிந்து வீழ்ந்தது ,இதன் பொழுது அந்த கட்டடத்துக்குள்,வசித்து வந்த மக்களில் 159 பேர் காணாமல் போயுள்ளனர்

              இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அனைவரும் பலியாகி இருக்க

              கூடும் என அஞ்ச படுகிறது ,இதுவரை நான்கு பேர் மட்டும் இறந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

                ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

                ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்

                இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்

                மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
                இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

                தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in Uncategorized

                  ஆப்காணில் பாரிய நில நடுக்கம் – பலரை காணவில்லை

                  ஆப்காணில் பாரிய நில நடுக்கம் – பலரை காணவில்லை

                  ஆப்கானில் இன்று அதி காலை இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி பல வீடுகள் தரை மட்டமாகின ,இதன் பொழுது அந்த வீடுகளுக்குள் இருந்த மக்கள்பலியாகி உள்ளனர்

                  எனினும் இதுவரை ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                  இந்த நில நடுக்கம் 5,1 ஆக பதிவாகியுள்ளது

                    Posted in Uncategorized

                    140,000 ஆண்டுகளுக்கு முன்னரான எலும்பு கூடு கண்டு பிடிப்பு

                    140,000 ஆண்டுகளுக்கு முன்னரான எலும்பு கூடு கண்டு பிடிப்பு

                    இஸ்ரேலிய நாட்டில் ஒருலட்சத்து நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான எலும்பு கூடு கண்டு பிடிக்க பட்டுள்ளது


                    இந்த எலும்பு கூடு இஸ்ரேலில் குகையடிவாரத்தில் நடத்த பட்ட அகல்வராய்ச்சியின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                    இவை உலகில் கண்டு பிடிக்க பட்ட புதைகுழி அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்க பட்ட

                    பண்டைய காலத்து மனிதர்களின் உடல் எச்சங்களுடன் ஒத்து போகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

                      Posted in Uncategorized

                      கனடாவில் பாடசாலைக்குள் மேலும் ஒரு புதைகுழி – கொதிக்கும் மக்கள்

                      கனடாவில் பாடசாலைக்குள் மேலும் ஒரு புதைகுழி – கொதிக்கும் மக்கள்

                      கனடா அரசின் ஆட்சியில் பாடசாலை ஒன்றுக்குள் தங்க வைக்க பட்ட சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டும் ,கொடுமை படுத்த பட்டும் படுகொலை செய்ய பட்டனர்

                      அவ்விதமான புதைகுழி ஒன்று தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      கடந்த முறை 215 சிறார்கள் சடலங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இம்முறை இந்த புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      மேற்படி புதைகுழி கண்டுபிடிப்பு செய்தி பரவிய நிலையில் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

                        Posted in Uncategorized

                        அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த 12 மாடி – 100 பேரை காணவில்லை video

                        அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த 12 மாடி – 100 பேரை காணவில்லை video

                        அமெரிக்கா அபுளோரிடா பகுதியில் உள்ள 12 அடுக்குமாடி கட்டம் ஒன்று திடீரென உடைந்து

                        வீழ்ந்துள்ளது ,இதன் பொழுது அந்த கட்டடத்துக்குள் வசித்து வந்த சுமார் நூறு பேர் காணாமல்,போயுள்ளனர்

                        இவர்கள் அனைவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                        தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        click here video

                          Posted in Uncategorized

                          முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய வாலிபன் – கண்ணீரில் குடும்பம்

                          முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய வாலிபன் – கண்ணீரில் குடும்பம்

                          முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று (24) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                          வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபரின் சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

                          அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                          குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து நேற்று இரவு முதல் கணவனை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

                          உடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                          சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                            Posted in Uncategorized

                            சசிகலாவுடன் பேசியதற்காக -அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம் –

                            சசிகலாவுடன் பேசியதற்காக -அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம் –

                            அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

                            அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் நீக்கம் – சசிகலாவுடன் பேசியதற்காக நடவடிக்கை
                            சசிகலா

                            அ.தி.மு.க. தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ. பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த

                            கூட்டத்தில் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

                            இதனையடுத்து மேலும் 5 பேரை அ.தி.மு.க. தலைமை, கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவர்கள் 5 பேரின் பெயர்களையும் வெளியிட்டு கட்சியினர் அவர்களோடு எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

                            இதன்படி, சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன், (போடிநாயக்கன்பட்டி)

                            சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் சரவணன்

                            சண்முகபிரியா, (மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர்)

                            திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணை செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால்

                            திரு. டி. சுந்தர்ராஜ். (தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணை செயலாளர்) ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

                            Posted in Uncategorized

                            சீதன கொடுமை – 3 இளம் பெண்கள் மரணம்

                            சீதன கொடுமை – 3 இளம் பெண்கள் மரணம்

                            விஸ்மயா தற்கொலை வழக்கு கேரளாவை உலுக்கி வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் 24 வயதான இளம் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகியுள்ளார்.

                            ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் மரணம் – கேரளாவில் அடுத்தடுத்து நிகழும் வரதட்சணைக் கொடுமை சம்பவங்கள்


                            ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் மரணம்
                            திருவனந்தபுரம்:

                            கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

                            கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை

                            கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம் சமூக ஊடகங்களில்

                            விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார்.

                            விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

                            மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர்

                            விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

                              Posted in Uncategorized

                              யாழில் இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

                              யாழில் இரு கிராமங்கள் தனிமை படுத்தல்

                              இலக்கை யாழ்பாணத்தில் குருநகர் உள்ளிட்ட இரு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளது

                              இந்த பகுதியில் நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுவதால் இந்த முடக்க நிலை ஏற்படுத்த

                              பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                              Posted in Uncategorized

                              தாலிபான்களிடம் வீழ்ந்த இரண்டாவது நகரம் – திணறும் அரசு

                              தாலிபான்களிடம் வீழ்ந்த இரண்டாவது நகரம் – திணறும் அரசு

                              ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் தலிபான் போராளிகள் தமது தாக்குதலை வேக படுத்தி வருகின்றனர்

                              இதனை அடுத்து மூன்றாவது நாளில் மிக்க முக்கிய நகரம் இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது

                              தொடர்ந்து அரசுக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              அமெரிக்கா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்


                                Posted in Uncategorized

                                ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனில் வசிப்பவரா ..? இந்த விசா உடனே விண்ணப்பியுங்கள் – 7 நாள் உள்ளது

                                ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனில் வசிப்பவரா ..? இந்த விசா உடனே விண்ணப்பியுங்கள் – 7 நாள் உள்ளது

                                ஐரோப்பாவில் இருந்து நீங்கள் பிரிட்டனில் வசித்து வருகிண்றீர்களா ..? அப்படி என்றால் ஐரோப்பிய ஸ்கீம் கீழ் விசா விண்ணப்பம் செய்துள்ளீர்களா ..?

                                பெர்மனண்ட் ரிசிடண்ட் இருப்பினும் இந்த விசா விசா விண்ணம்பம் செய்து இருக்க வேண்டும்

                                இம்மாதம் முப்பதாம் திகதி அது காலாவதியாகிறது ,அதனால் உடனே செய்திடுங்கள் . அரச

                                இணையத்தில் சென்று செய்து கொள்ள முடியும் ,அல்லது உங்கள் சட்டத்தரணியை தொடர்பு கொள்ளுங்கள்

                                இவை செய்து கொள்ளாவிடில் பிரிட்டனில்நீங்கள் வசிக்க பெரும் சிக்கல் ஏற்படும் ,மீள ஐரோப்பா செல்ல நேரடிடலாம்

                                சட்ட ஆலசோணையை உங்கள் சட்டத்தரணியுடன் தொடர்பு கொள்ளுங்கள்,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கும் தெரிய படுத்துங்கள் ,முந்துங்கள் ,நாடு கடத்தலில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

                                  Posted in Uncategorized

                                  வெடித்து சிதறிய குண்டு 3 பேர் மரணம் -13 பேர் காயம்

                                  வெடித்து சிதறிய குண்டு 3 பேர் மரணம் -13 பேர் காயம்

                                  பாகிஸ்தான் லாகூர் பகுதியில் நடத்த பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் பதின்மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                  கட்டடம் முற்றாக அழிந்துள்ளது ,தற்போது இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

                                    Posted in Uncategorized

                                    இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

                                    இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

                                    இலங்கை மொரட்டுவ பகுதியில் கடல் கரையில் மர்ம உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
                                    டொல்பின் வகையை சேர்ந்த உயிரினமாக உள்ள பொழுதும் ,இது எவ்வகையான உயிரினம் என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                                    கடல் சார் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்து வருகின்றனர்