Posted in Uncategorized

அதிக விலைக்கு அரிசி விற்றால் – ஒரு லட்சம் தண்டம்

அதிக விலைக்கு அரிசி விற்றால் – ஒரு லட்சம் தண்டம்

இலங்கையில் அதிக விலைக்கு கட்டுப் பாட்டு விலையை மீறி அரிசி விற்றால் ஒருலட்சம் ரூபா தண்டம் விதிக்க படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தனிமை படுத்தல் காலத்தில் மக்கள் மீது கட்டுப்பட்டு விலையை மீறி பொருட்கள் அதிக

விலையில் விற்று வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் இந்த அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது

    Posted in Uncategorized

    இலங்கையில் துரத்தும் கொரனோ – பல கிராமங்கள் அடித்து பூட்டு

    இலங்கையில் துரத்தும் கொரனோ – பல கிராமங்கள் அடித்து பூட்டு

    இலங்கையில் இரண்டாவது அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக

    நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தனிமை படுத்த பட்டு இராணுவம் போலீசார் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

    இந்த திடீர் முடக்கத்தால் மக்கள் பெரிதும் இன்னலை சந்தித்து வருகின்றனர்

      Posted in Uncategorized

      பெண் வெட்டிப் படுகொலை

      பெண் வெட்டிப் படுகொலை

      பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில் தனிப்பட்ட குரோதம் காரணமாக. பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

      இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளாரென பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

      இக்கொலைச் சம்பவம் தொடர்பில், கொலையுண்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 25

      வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ள பொலிஸார், கொலையுண்ட பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

      வேட்டியொன்றில் முகத்தைக் கட்டி, சரமாரியாக கத்தியால் வெட்டி இக்கெலையை

      செய்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசொதனைக்காக நுவெரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

        Posted in Uncategorized

        புலிகளை கேவல படுத்திய சமந்தா Family Man-2-= லண்டனில் அமோசன் முன்பாக ஆர்ப்பாட்டம் 20 photo

        புலிகளை கேவல படுத்திய சமந்தா Family Man-2-= லண்டனில் அமோசன் முன்பாக ஆர்ப்பாட்டம்

        தென் இந்திய திரைப்பட நடிகை சமந்தா நடிப்பில் உருவான Family Man-2தொடர் ஒன்றில் தமிழீழ, விடுதலை புலிகளை கேவல படுத்தி சமந்தா நடித்துள்ளார் ,இது ஒட்டு மொத்த தமிழ் மக்களை கேவல படுத்திய ஒன்றாக அமைந்தது

        அதனை அடுத்து இன்று மதியம் அளவில் லண்டனில் உள்ள அமோசான் நிறுவனம் முன்பாக குறித்த தொடருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தமிழர்கள் அறவழி போராடட்ம ஒன்றை நடத்தின

        தமிழருக்கான சுந்தந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பும் ,நாடு கடந்த அரசாங்கமும் இணைந்து இந்த
        அறவழி போராட்டத்தை நடத்தின

        வீழ்ந்து போனது தேசியத்தின் உரிமை மட்டும் அல்ல ,தமிழரின் இன மானமும் தான் என்பதை உறைக்க உரைத்த நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது

        இலங்கை அரச பயங்கரவாதததால் சிறுபான்மை தமிழர்கள் ஒடுக்க பட்டு ,அடக்க பட்டு ,திறந்த வெளி சிறை சாலைக்குள் சிறை வைக்க பட்டுள்ள இவ் வேளையில் இந்த போராட்டம்

        இடம்பெற்றுள்ளது தமிழர்களின் எழுச்சியின் வடிவமாக ,அவர்கள் தன்மான கோபத்தின் உச்சமாக பார்க்க படுகிறது

        ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்கள் இறுதி போரில் படுகொலை செய்ய பட்டும், ஒருலட்சம் பேருக்கு மேல் காணாமல் போயும் உள்ளனர்

        தொடர்ந்து சிங்கள அரச இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் சிக்குண்டு ,நாள் தோறும் மக்கள் துன்பன்பங்களை சந்தித்த வண்ணம் உள்ளதும் ,இலங்கையில் தற்போது தமிழர்களை அழித்த மகிந்த ,கோட்டா சகோதர்கள் ஆண்டு வருகின்றமை தமிழருக்கு பெரும் சொல்லென்ன இன்னலை ஏற்படுத்தியுள்ள

        இவ்வேளையில் சமந்தா நடித்தவுள்ள இந்த தொடர் தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளது
        ஆறா துயரை ஏற்படுத்தியுள்ளது

        குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        யாழில் பெண் மயங்கி வீழ்ந்து வீதியில் மரணம்

        யாழில் பெண் மயங்கி வீழ்ந்து வீதியில் மரணம்

        யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

        யாழ்ப்பாணம் – வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

        சுன்னாகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு, தனது கணவனுடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, , திடீரென மயக்கமுற்றுள்ளார்.

        இதையடுத்த, அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

        சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

        Posted in Uncategorized

        கொரனோ மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளர்களை கடித்து குதறிய விசர் நாய்

        கொரனோ மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளர்களை கடித்து குதறிய விசர் நாய்

        பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.

        மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த, பைத்தியம் பிடித்த நாய், மூன்று பெண்களே கடித்துள்ளது.

        நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.

        அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிப்பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.

        அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.

        எனினும், அங்கு கடமை​யிலிருந்த வைத்தியசாலை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.

        அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்தே கொன்றுள்ளனர்.

        பைத்தியம் பிடித்த அந்த நாள், வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

          Posted in Uncategorized

          5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை

          5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை

          கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஐந்து நாடுகளிலிருந்து பயணிகள் தரையிறங்குவதற்கு

          தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி 00.01க்கு ஆரம்பமாகும் இத்தடை, மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

          கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைட் ஆகிய

          நாடுகளைச் சேர்ந்த பயணிகளே இலங்கையில், எந்தவொரு விமான நிலையங்களிலும் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

            Posted in Uncategorized

            புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு

            புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு

            பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.

            குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை

            அளிக்கும் வகையில் குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் இராணுவத்தினரால் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

            இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 100 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

            மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக 12வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிர்மாண பணிகளில் 23

            ஆவது கஜபா படைப்பிரிவு, மூன்றாவது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் 17வது பொறியியலாளர் சேவைகள் படையணி ஆகியவற்றின் படைவீரர்கள் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

            இந்த நிகழ்வில் தென்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர். சீஎல் குருகே, சுகாதார ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

              Posted in Uncategorized

              இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி

              இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி

              இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4

              இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

              இதுதொடர்பாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ. கே ரணவக்க தெரிவிக்கையில் நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

              இதற்கமைய பயன்படுத்தப்படாத காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு

              காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

              Posted in Uncategorized

              நாறிய சாப்பாட்டை விற்ற உணவகம் -முதல்ல இதை பாருங்க வீடியோ

              நாறிய சாப்பாட்டை விற்ற உணவகம் -முதல்ல இதை பாருங்க வீடியோ

              பிரபல சமையல் கலை நிபுணர் ஒருவர் திடீரென அமெரிக்காவில் உள்ள மெஸ்சிக்கன் உணவகம்

              ஒன்றுக்குள் புகுந்தார் ,அங்கு வழங்க பட்ட உணவில் கலர்படம் உள்ளதையும் அந்த உணவு பழுதானதை அவர் கண்டு கொண்டார்

              அதனை அடுத்து திடீரென அந்த உணவகத்திற்குள் அவர் புகுந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு மாத காலமாக நாறிய உணவுகள் சேமிக்க பட்டு மக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது அம்பலமானது

              அதன் பின்னர் நடக்கின்ற சம்பவத்தில் 25 ஆயிரம் கார்கள் நாள் ஒன்றுக்கு இந்த உணவகத்திற்கு வருகை தருவதையும் ,அந்த பகுதி மேயர் அந்கு வந்துள்ளதையும் காணலாம்

              பழையதை விற்று வியாபாரத்தை கெடுத்து ,தள்ளாடும் நம்ம தெமிழ் சோத்து கடை ,உள்ளிட்ட உணவகம் நடத்தும் பெருச்சாளிகள் இதை பார்க்கணும் ,குறிப்பாக , கனடா பிரான்ஸ்,லண்டன்

              நாடுகளில் உள்ள சோத்து கடைகளிற்குள் இவர் புகுந்து தடலடி காட்டவேண்டும் அப்பொழுது பல நாற்றம் அம்பலமாகும்

              இந்த காணொளியை முழுமையா பாருங்கள்

              clcik here video

              Posted in Uncategorized

              பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை

              பிரிட்டன் இராணுவ இரகசியம்-பஸ் தரிப்பிடத்தில் மீட்பு – வெடித்தது சர்ச்சை

              ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் இராணுவம் எஎவ்வகையான நகர்வுகளை மேற்கொண்டது என்பது

              தொடர்பிலான அனைத்து விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று கென்ட் பகுதியில் உள்ள பேரூந்து நிலையம் ஒன்றிலிருந்து மீட்க பட்டுள்ளது

              அந்த ஆவண குறிப்பில் மேற்படி பரம ரகசியம் அடங்கி இருந்தது

              அவ்வகையான இந்த ஆவணம் தற்பொழுது கசிந்துள்ளதால் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு திகைத்து போயுள்ளது ,கடந்த இரு வாரத்திற்கு முன்னர் மிக முக்கிய ஆவணம் ஒன்று காணாமல்

              போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது ,மேற்படி ஆவணம் முக்கிய ஊடகம் ஒன்றில் சிக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது

              இது திட்டமிடப்பட்டு தொலைக்க பட்டதா , அல்லது தவறுதலாக தொலைக்க பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in Uncategorized

                சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்

                சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்

                ஆட்சி அமைத்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படும் என திமுக தெரிவித்திருந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

                சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம்
                சீமான்
                நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் பக்கத்தில் ‘‘திமுகதான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து;

                தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள்.

                50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

                என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!

                மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?’’ எனத் தெரிவித்துள்ளார்.

                Posted in Uncategorized

                மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்

                மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்

                அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் மனைவியை தீ வைத்து எரித்த 39 வயதுடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார்

                பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் மீட்க பட்ட பெண் அ மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்

                இவ்வேளை இவர் ஒரு கால் ,மற்றும் கையை இழந்த நிலையில் மீட்க பட்டுள்ளார் ,மேற்படி கொலைவெறி குற்ற செயலில் ஈடுபட்ட அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                தொடர்ந்து மனைவி ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்

                  4 அமெரிக்கா இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல்

                  ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியை அண்மித்த நகர் பகுதிகள் ஊடக பயணித்து கொண்டிருந்த

                  அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடர் அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                  இதில் அமெரிக்கா படைகளுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது

                  மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை தாக்குதல் நடத்த படும் என தெரிவிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    மின்சார கம்பியில் சிக்கிய பரசூட் – ஐவர் மரணம்

                    மின்சார கம்பியில் சிக்கிய பரசூட் – ஐவர் மரணம்

                    புதிய மெஸ்சிக்கோ பகுதியில் பறந்து கொண்டிருந்த பரசூட் பலூன்களில் ஒன்று அதி உயர்

                    மின்சார கம்பியில் சிக்கி வெடித்து சிதறியதில் அதில் பயணித்த ஐவர் பலியாகியுள்ளனர்

                    மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக

                    தெரிவிக்க படுகிறது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in Uncategorized

                      இருவரை சிலுவையில் அறைந்து ஆணி அடித்த நபர் – நடந்த கொடூரம்

                      இருவரை சிலுவையில் அறைந்து ஆணி அடித்த நபர் – நடந்த கொடூரம்

                      கண்டி பகுதியில் முகநூலில் அவதூறு பிரச்சாரம் செய்தனர் என்ற குற்ற சாட்டில் கொதிப்படைந்த நபர் ஒருவர் தனது இரு நண்பர்களை கடத்தி சென்று சிலுவையில் ஆணியால் அறைந்து கொடூர சித்திர வதைகளிற்கு உட்படுத்தியுள்ள சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      குறித்த இருவரும் பலமான சித்திர வதைகளிற்கு உள்ளன நிலையில் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                      தலைமறைவான பிரதான சந்தேக நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                        Posted in Uncategorized

                        வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

                        வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

                        இலங்கை இரத்தினபுரி மற்றும் கல்முகவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் ,மாற்று வெடிகுண்டுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

                        கைதான அனைவரும் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                          Posted in Uncategorized

                          13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

                          13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

                          இலங்கை கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடிய திருடர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவ்வாறு கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                          மேலும் அவர்கள் திருடிய நகைகளும் மீட்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

                            தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

                            இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்

                            இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது

                            கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்

                              Posted in Uncategorized

                              இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

                              இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்

                              இலங்கை இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி பயணித்து கொண்டிருந்த

                              கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் திடீரென தீ பிடித்து கொண்டது ,இந்த தீ பரவலினால் அந்த கப்பல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது

                              இலங்கை கடற்பரப்பில் மூன்றாவது கப்பல் இவ்வாறு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,இது

                              சதிகளின் நவடிக்கையாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது