Tag: தனிமைப்படுத்தல்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்கிறது
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்கிறது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் பொலிசாரினால் இதுவரையில் 51 ஆயிரத்து 859 பேர் கைது செய்யப்பட்டு;ளளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் 13 இடங்களில் 3இ673 வாகனங்கள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றுள் 235 வாகனங்களில் வந்த 584 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் அறிவிப்பு

11 கிராமங்கள் தனிமைப்படுத்தல் – மக்கள் அவதி
11 கிராமங்கள் தனிமைப்படுத்தல் – மக்கள் அவதி
இன்று (23) காலை 6 மணி முதல் 2 மாவட்டங்களில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
மேலும் சில பிரதேசங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்
தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!
தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பிரதேசங்கள்!
கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், கொழும்பு, களுத்துறை மற்றும்
கம்பஹாமாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளது.
இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில்
இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம்
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்
• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)
• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)
• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு ( மாளிகாவத்தை பொலிஸ் வலயம்)
• சிறிசர உயன (பொரள்ளை பொலிஸ் வலயம்)
- தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்
• மோதர (முகத்துவாரம் பொலிஸ் பிரிவு)
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• டேம் வீதி பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்த பொலிஸ் பிரிவு
• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு
• மருதானை பொலிஸ் பிரிவு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு
• மட்டக்குளி பொலிஸ் பிரிவில் பர்கசன் வீதி தெற்கு
• கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம்
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்
• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் மயுரா பிளேஸ்
கம்பஹா மாவட்டம்
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்
வத்தளை பொலிஸ் பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
• எவரிவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
பேலியகொட பொலிஸ் பிரிவு
• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்
பேலியகொட பொலிஸ் பிரிவு
• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
• வெலேகொட வடக்கு
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி வெயங்கொட பொலிஸ் பிரிவு • ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்
வத்தளை பொலிஸ் பிரிவு
• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம் • வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்
பேலியகொட பொலிஸ் பிரிவில்
• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெடிகந்த பிரதேசம்
நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்
• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹிஜ்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்
களுத்துறை மாவட்டம்
- இன்று (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தலாக பெயரிடப்படும் பிரதேசம்.
• புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவில் வேகன்கல்ல கிழக்கு மற்றும் வேகன்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு • குடா ஹீனிட்டியன்கல கிராம உத்தியோகத்தர் பிரிவில் மரிக்கார் வீதி
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசம் என்ற ரீதியில் இருப்பதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்
64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,878 பேர்
முப்படையினரால் நடத்தப்படு 64 தனிமைப்படுத்தல்
நிலையங்களில் 6,878 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் மேலும் 7,634 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் இதுவரை 17 396 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.







