Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்
உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்
உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ,உள்ளே வெடித்த உச்ச சண்டைகள் .
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கட்சிக்கு உள்ளேயே பாரிய நெருக்கடியை கொடுத்து அந்த கட்சியின் வளர்ச்சியை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .
சங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென சஜித்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சுமந்திரன் ஆதரவாளர்கள் நடத்திய வாக்கெடுப்பு நடவடிக்கையும் ,உள்வீட்டு சதிகளும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
பெட்டியை வாங்கிவிட்டு சுமந்திரன் இவ்விதம் செய்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது .
சுமந்திரன் திட்டமிட்டு கட்சியை உடைத்து ,தமிழ் தேசிய கனவை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.
3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குத்துகரணம் அடித்த மாவை
குத்துகரணம் அடித்த மாவை
குத்துகரணம் அடித்த மாவை ,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்தார்.
எனினும் தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.
அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.
மாவை சேனாதிராஜாவிற்கு அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.
உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.
மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.
மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவிற்கு அதரவு வழங்குவது என்பது.
அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.
மூத்த துணைத்தலைவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜாவுடன் கதைப்பார் என்றார்.
லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு
லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு, தமிழ் டெஹஸ்ய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் சிறிதரன் அவர்கள் லண்டனில் மக்களை சந்தித்து பேச்சுக்களில் .
வட்டக்கச்சி மக்களை சந்தித்த அவர் ,தனது மக்கள் நலன் சம்பந்தமாக பல விடயங்கள் தொடர்பாக பேசினார் .
அப்பொழுது பொது வேட்பாளர் ஏன் நிறுத்த [பட்டுள்ளார் ,அதன் அவசியம் என்ன என்பதை மிக தெளிவாக எடுத்து ,விளக்கியத்துடன் ஐந்து லட்சம் வாக்குகள் கிடைக்க பெறும் என்றால் ,
அது தமிழருக்கு கிடைக்க பெட்ரா மிக பெரும் வெற்றியாக இருக்கும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .
தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ள அரியேந்திரன் அவர்களை தாங்கள் வரவேற்றுள்ளது தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .
வட்டக்கச்சி மக்கள் ,அதன் சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக அதிகம்பேச பட்டுள்ளதாக வெளியான காணொளிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிவதுடன் ,அதில் மக்கள் அரசியலும் பேச பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது .
பொறி தட்டும் சொற்கள் பொங்கி வெடித்து எழுச்சியை அங்கு காண்பித்தார் .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞானமுத்து
உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞானமுத்து
உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞானமுத்து ,கடந்த தினம் வன்னி மைந்தன் எனும் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐயா ஸ்ரீநேசன் ஞானமுத்து சிறப்பித்தார் .
இதன் பொழுது பொது வேட்பாளர் ஏன் வரவேண்டும் அதனால் எமக்கு கிடைக்க பெறும் நன்மைகள் என்ன என்பதை அவரே மிக தெளிவாக எடுத்து விளக்கினார் .
தமிழன் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நின்று பயணிக்கின்றார் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது என்கின்ற விடயத்தை எடுத்து விளம்பினார் .
தற்காலத்தில் தமிழன் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் ,தமிழன் பலத்தையும் காண்பிக்கின்ற நேரம் இது என்பதை அவர் எடுத்து விளக்கியதுடன் ,பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு, வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் மற்றும் பொது வேட்பாளர் பா ,அரியேந்திரன் ஆகியோர் எமது டிக் டாக் நேரலையில் கடந்த தினம் இரவு சந்தித்து பேசினர் .
இதன் பொழுது எதிர்கால நடவடிக்கை ,மற்றும் அர்ச்சுனா ஆதரவு தொடர்பாக பேச பட்டது .
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதம் தாங்கள் பணியாற்ற போகிறோம் என்பது தொடர்பாக பொது கட்டமைப்பு அதனை வழிகாட்டும் எனவும் அதன் அடிப்படையில் எமது பரப்புரைகள் ,மக்கள் சநதிப்புக்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .
முதன் முதலாக பொது வேட்பாளர் பா, அரியேந்திரன் மற்றும் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முதன் முதலாக மக்கள் நேரலையில் இவர்கள் சநதிப்பு இடம்பெற்றுள்ளது கண்டு மக்கள் பெரும் மகிழ்வடைந்தனர் .
வன்னி மைந்தன் அழைப்பை ஏற்று கொண்டு வன்னி மைந்தன் tiktok நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கு, எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
இவ்வேளை இவர்களை இணைய பேருதவி புரிந்த ஏற்பாட்டு குழுவிற்கும் இவ்வேளை எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்
ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்
ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும் ,ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.
சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் முழு நாடும் தோல்வியடையும்.
மீண்டும் வரிசை யுகம் உருவாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
எனவே, மலையக மக்கள் உட்பட ஒட்டு மொத்த நாட்டு மக்களும், நாட்டின் நலன்கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நேற்று (31) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் முன்னளா் தவிசாளர் ராஜமணி பிரசாத்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“எமது மக்களின் அமோக ஆதரவுடன் நானும், எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். அவ்வாறு தெரிவானதன்மூலம் நெருக்கடியான காலகட்டத்தில்கூட எமது மக்களுக்கு சேவையாற்ற முடிந்தது.
எமது பொதுச்செயலாளர் அமைச்சரான பின்னர் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கும், முழு நாட்டுக்கும் பல சேவைகளை செய்யக்கூடியதாக இருந்தது.கொட்டகலை உட்பட பல பகுதிகளில் வீதிகள் புனரமைக்கப்பட்டன.
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்தகாலங்களில் முழுமைப்படுத்தப்படாதிருந்த வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்டுன. புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பமாகின.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பிறகு வரிசை யுகத்துக்கு முடிவுகட்டினார். பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுத்தார்.
இன்று ரூபாவின் பெறுமதி வலுவடைந்துவருகின்றது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.
சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது .
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டை ஆள வேண்டியது கட்டாய தேவையாகும். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவரின் தலைமைத்துவம்
இருந்தால் இந்நாடு நிச்சயம் முன்னேறும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்க தோற்றால் அது தனிமனிதனுக்குரிய தோல்வி அல்ல, நாட்டின் தோல்வியாகும். அதுமட்டுமல்ல மீண்டும் வரிசை யுகம் உருவாகும்.
இது தேர்தல் காலம் என்பதால் சில ஜனாதிபதி வேட்பாளர்கள் அதை வழங்குவேன், இதை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை . நடைமுறைக்கு சாத்தியமான
உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். எனவே, அவர் எமது மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.” என்றார்.
இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்
இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம்
இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம் ,கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினை எழுந்த போது மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத கலாச்சார,
மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தை தூண்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இனவாதத்தினால் முழு நாடும் சீரழிந்து போனது. இனவாதத்தையும் மதவாதத்தையும், இனமத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வோம்.
அனைத்து இன மக்களும் இந்த மோசமான அரசாங்கத்தினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற, வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு
இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் துன்பத்தைத் துறந்து கண்ணீரைத் துடைத்து சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு 29 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செப்டம்பர் 21 ஆம் திகதி உருவாக்கப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக ஒரு பக்கத்திலிருந்து இன்னும் ஒரு பக்கத்திற்கு கட்சி மாறுகின்ற இந்த முறையை தடை செய்வோம்.
அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு முடிவெடுக்கக் கூடிய வகையில் சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வரப்பிரசாதங்களை வழங்கி நிபந்தனைகளுக்காக உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதில்லை. கொள்கையின் அடிப்படையிலே இணைத்துக் கொள்வோம்.
கிராமத்தையும் பின்னர் நகரத்தையும் பின்னர் நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்யும் கொள்கை திட்டத்துடனே நாம் செல்கின்றோம்.
காணியில்லாத வீடில்லாத மக்களுக்கு காணிகளை வழங்கி, வீடுகளை அமைத்துக் கொடுத்து கம்உதாவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு மலைநாட்டு தோட்டங்கள், கீழ்நாட்டு தோட்டங்கள், கிராமிய, நகர, நடுத்தர
வகுப்பு மக்கள், மற்றும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களையும் உள்ளடக்கி, தேசிய வீடமைப்புக் கொள்கை ஒன்றை
உருவாக்கி, தமது சொந்த வீடுகளிலே வாழ்கின்ற உரிமையை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதோடு, 24 மாதங்களுக்கு ரூபா 20 ஆயிரம் விதம் வழங்கி 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கின்ற வேலை திட்டத்தை முன்னெடுக்கின்றோம். தொடர்ந்தும்
நிவாரணங்களைப் பெற்று அதிலேயே தங்கி வாழாத ஒரு பரம்பரையை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாக்கு வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வது மாத்திரம் அல்லாமல் QR முறையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை
போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருள்களை
வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களையும் முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
நல்லூர் தேர்த்திருவிழா
நல்லூர் தேர்த்திருவிழா
நல்லூர் தேர்த்திருவிழா ,இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது இன்று (01) மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதன்படி கடந்த 09 ஆம் திகதி நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நாளை (02) தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும்.
பல இடங்களில் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மனைவியை கொலை செய்த கணவன்
மனைவியை கொலை செய்த கணவன்
மனைவியை கொலை செய்த கணவன் ,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை.
விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.
விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்.
அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா
அசிங்கப்படுத்துகிறார் கஜேந்திரன் பொது வேட்பாளரை அர்ச்சுனா ,கஜேந்திரன் பொது வேட்பாளரை அசிங்கப்படுத்துகிறார் அர்ச்சுனா ,எமது இலங்கையின் வரலாற்றை 2024 ஆம் ஆண்டு தேர்தல் புரட்டிப்போட போகிறது.
தமிழரின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் தனி சிங்கள வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க வெல்லப் போவது நிச்சயம்.
அனுரா சிறைபிடிக்கப்படுவார் கொல்லப்படுவர் என்பது முட்டாள்தனமான எதிர்கூறல் அல்ல.
இந்த வேளையிலே தமிழர் நாம் பேரின வாத கட்சிகளுக்கு அடிபணிந்து போகாமல் வாக்கு பலத்தை ஒற்றுமையை எப்போது பொது வேட்பாளருக்காக காட்டுகிறோமோ அப்போதுதான் சர்வதேச தலையீடின் போது தமிழருக்கான நியாயம் கிடைக்கும்.
இதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து எந்த ஒரு சிங்கள ஜனாதிபதிக்கும் விலை போக வேண்டாம்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது அரியனேந்திரன் அவர்கள் காசுக்கு விலை போய் சஜித்துடன் நிக்க மாட்டார் என்று.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது வாய் மூலம் சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராக இருந்தால் தமிழனாக அடையாளப்படுத்தி அவரை நாங்கள் வைத்திருக்கும் போது விலை போவாராக இருந்தால் எந்த தமிழனும் செல்லுபடியாக கூடிய வாக்குகளை இடுவதில் அர்த்தமில்லை.
அரியனேந்திரன் அவர்களை தெரிவது செய்தவர்களில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இருக்கிறது.
குதிரை கஜேந்திரன் இப்போது பொது வேட்பாளரை அசிங்கப்படுத்த அங்கேயும் இங்கேயும் ஓடுகிறது.
பொது வேட்பாளருடன் நிற்பவர்கள் குதிரை கஜேந்திரனை அவதானித்து வைத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் எதிர்கூறல் பிழையாக இருக்கும் என்றால் தங்களின் மதிப்பிற்குரிய கருத்தினை கீழே பதிவிடலாம்.
கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
தயவுசெய்து பகிருங்கள். என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி
அங்கஜனின் பார் லைசன்ஸ் கிளிநொச்சி நிறுவப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது .
தமிழ் அரசியல்வாதிகளின் முக்கிய எம்பியாக யாழ்பாணத்தில் விளங்கி வரும் அங்கயன் அவர்களினால் கிளிநொச்சியில் திறந்து நடத்த பட்டு வரும் விடயம் வெளியாகியுள்ளது .
கிளிநொச்சியில் இதுவரை 15 பார்கள் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவை யாவும் தமிழ் அரசியல் வாதிகளின் பெயரில் இயங்கி வருவதாக குற்றம் சுமத்த பட்டுளள்து .
இவ்வாறு சாட்ட பட்டுள்ள குற்றங்கள் இந்த கடிதம் மூலம் தெரிய வந்துள்ளதக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது .

இதற்கு பாராளுமன்ற அங்கயன் என்ன தெரிவிக்க போகிறார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை
துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை
துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை ,தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள் மற்றும் காட்சிப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் காலத்தில் அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றை
அரசு அல்லது அரசு நிறுவனங்களின் செலவில் வெளியிடக்கூடாது எனவும் அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற எந்த ஒரு
நிறுவனத்திலும் வாக்கு கேட்கவோ, துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவோ, விளம்பர பலகைகளையோ அல்லது விளம்பரங்களையோ காட்டவோ கூடாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குண்டு வீட்டிலிருந்து மீட்பு
குண்டு வீட்டிலிருந்து மீட்பு
குண்டு வீட்டிலிருந்து மீட்பு ,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள
உலகக்குழு உறுப்பினரின் வீட்டிற்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி டுபாயில் இருந்து இந்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால்
பொலிசார் மரணம் யாழ்ப்பாணத்தில் சுகவீனத்தால் ,யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.<
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனத்தால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் நேற்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜாவின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும்
உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாளை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிடம் நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;
எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்
மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.
அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி
பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல
ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.
போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும். போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த
மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது. எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது
மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.
கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும், சாதாரண
பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.
மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும், எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால், மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து, தமிழ்த்தேசிய
உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை, அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இலக்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில்
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும், பிரதேசக் கிளைகளும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து, கள யதார்த்தத்தின் அடிப்படையில்
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும், தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் – என்றுள்ளது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் ஐக்கிய அரபு அமீரகம் பறந்தார்

- பழ விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த சர்ச்சை

- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்
அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல்
அடித்து நொறுக்கும் கிஸ்புல்லா அலறும் இஸ்ரேல் ,லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் படையினர் இஸ்ரேல் ராணுவத்தின் கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் இஸ்திரேலிய தளம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆயுத பகுதிகளை இலக்கு வைத்து போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தின .
தற்கொலை வெட்டி குண்டு விமானங்கள் ஊடாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில், இஸ்திரேலிய ஆக்கிரமிப்பு வல்லாதிக்க படை முகாம்கள் பலத்தை சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான ஆயுத தளபாடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகள் தெரிவு செய்து இந்த விமானங்கள் நடத்தியதாகவும் ,
இதனால் இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு அதனுடைய ஆளனி ஆயுதங்களுக்கும் பலத்தை சேதங்களை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக லெபனான் போர்படைகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு இஸ்ரேலை இடைவிடாது தொடராக லெபனான் போர் படைகள் நடத்தி வருகின்றன.
இவர்களது இந்த தாக்குதினால் இழப்பையும் துயரையும் இஸ்ரேலிய படைகள் சந்தித்த வண்ணமுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
எனினும் போர்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை இஸ்ரேலிய இராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா ,இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிக வருகின்ற நிலையில் ,
கூட்டமைப்பின் சார்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள புது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு வாக்கினை அளிக்குமாறு, மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
ஒன்றுபட்டு தமிழ் மக்கள் ஒன்று கூடி நிற்பதை நாங்கள் இந்த தேர்தலில் காட்ட வேண்டும் எனவும் ,
ஆதலால் அவருக்கு பாரிய அளவிலான மக்கள் திரண்டு வந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என ,அவர் பேரன்புடன் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
என்னை நேசிக்கின்ற மக்களது அன்பு உண்மையாக இருந்தால் அரியேந்திரன் அவர்களுக்கு நேரடியாக வந்து லட்சக்கணக்கான மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும்,
அதுவே தான் தங்களுடைய இறையாண்மையுடன் கூடிய அரசியலை பெற்றுவிடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளுக்கு எதிரானவர் என அர்ச்சனா ராமநாதன் காணப்பட்ட பொழுதும் ,
அவ்வாறான பரப்புரைகள் அவருக்கு எதிராக செய்யப்பட்டு வந்த பொழுதும் அதை உடைத்து எறிந்து நான் தமிழன், தமிழனாக தமிழனுக்கு உதவுவோம் என அவர் தெரிவித்துள்ளது வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இருண்ட காலத்தில் இருந்து எம்மிடம் அடக்கு முறையின் உச்சத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் ,எம்மவர்கள் எம்மோடு என்றும் இணைந்து இருப்பார்கள் என்கின்ற ஒற்றுமையை ,எடுத்துக்காட்டு விதமாக அர்ச்சுனாவின் இந்த குரல் காணப்படுகின்றது.
தடைகளை உடைத்து படைகளை நகர்த்தி வெற்றி கொடியை நாட்ட வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பதால் ,
நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை அர்ஜுனார் இராமநாதனின் இந்த பொது வேட்பாளருக்கான ஆதரவு எடுத்துக்காட்டுகிறது.
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம் ,அர்ச்சுனா ராமநாதன் பெயரில் புதிதாக இளையதளமுண்டு உருவாக்கப்பட்டுள்ளது அதன் ஊடாக அவரது செய்திகள் எது பெரும் காலங்களில் எடுத்து வர பணம் அவரது அணுகினர் தெரிவித்திருக்கின்றனர்.
அர்ச்சுனா நியூஸ் என்கின்ற இந்த இணையதளமே தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது இதன் ஊடாக அவரது செய்திகள் மற்றும் அவர் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அர்ச்சனாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மக்களினால் இந்த இணையதளம் உடனடியாக வேகமாக உருவாக்கப்பட்டு, அவரது படைப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மனிதர்களை ஒன்று திரட்டி அவர்கள் ஊடாக மேற்படி பணியினை மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
விழுந்து கிடக்கின்ற ஒரு தமிழினத்தினுடைய எழுச்சிக்காக போராட வந்திருக்கும் பறையாக அர்ச்சனா ராமநாதன் காணப்படுகின்றார் .
காலத்தின் தேவைகள் தமிழ் மக்கள் அவரிடம் கையளித்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
அதனால் தான் அர்ச்சனா நியூஸ் டாட் காம் archchunanews . com மற்றும் அர்ச்சனா யூடூப் archchunanews என்கின்ற பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர் .
இந்த இரண்டின் ஊடாகவும் இந்த செய்திகள் எடுத்துப் பரப்படும் எனவும் மக்களை தம்மோடு இணைந்திருக்கும் படி அவர்கள் சார்பாக மக்கள் இடம் வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது .
அதற்கான இணைப்பு இந்த பகுதியில் மேலே வழங்கப்படுகிறது.
















































