Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!

இளமையில உன் ஏக்கம்
இன்றே தனித்து விடு
முதுமையில முதலிரவு
முழு ஏக்கம் தனிக்காது

வெறுமையில நீ இருந்து
வெளியேற்றி விட்டவைகள்
முதுமையில தேறாது
முதுகெலும்பு தாங்காது

வறுமை என்ற கூட்டுக்குள்ளே
நீ தொலைத்த வாழ்விருக்கே
மீள் எழுச்சி கொள்ளாது
மீள உன்னை கெஞ்சாது

வாலிபத்து அகவையில
வாழ்க்கை பட வேணுமடி
வரப்புயரும் நீர் போல
வாழ்வு அமைய வேணுமடி

கோடி பணம் சேர்த்து வைத்து
கோட்டையிலே நீ இருந்தும்
காணப்போவது ஏதுமில்லை
கண் மலர்ச்சி ஏதுமில்லை

இளமையில இல்லறத்தை
இனிதே நீ கலந்து விடு
இல்லையது தப்பி விடின்
இறந்தே நீ மாண்டு விடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-03-2022

வன்னி மைந்தன் கவிதைங்கள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

    கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

    அழுகுரல் ஓசை வானை கிழிக்க
    அவலம் நடக்கிறது
    ஆடி வரும் குண்டு துளைத்து
    அரை உடல் கிழிகிறது

    போரும் விரட்ட போக்கிடம் கலைய
    பொழுதும் விடிகிறது
    போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
    பெரும் நகர் வீழ்கிறது

    தேடி சேர்த்த பொருளில் பாதி
    தெருவில் மிதக்கிறது
    தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
    தேம்பி அழுகிறது

    குஞ்சும் கதற பிஞ்சும் பதற
    குரல் வளை அறுகிறது
    கூவி திரிந்தவர் கூடுபிரிய
    குறட்டை விடுகிறது

    உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
    உனக்கு கவலையில்லை
    ஊரைநம்பி ஊதி திரிந்தால்
    உனக்கு இழி நிலையே …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 05-03-2022

    உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!

      இன்றைய பொழுதின் என் நிகழ்வு …!

      சின்ன சின்ன ஆசை
      சிரித்து பேச ஆசை
      சின்ன அலை மோத
      சிரித்து இரசிக்க ஆசை

      மெல்ல வந்து காற்று
      மேனி தழுவ பிடிக்கும்
      மெலிந்த உடல் நாளும்
      மேனி தாங்க பிடிக்கும்

      அந்தி வானம் மெல்ல
      அருகில் வந்தால் பிடிக்கும்
      அந்த வேளை மஞ்சம்
      அதில் உறங்க பிடிக்கும்

      கண்கள் மூடி உறங்க
      கனவு வந்தால் பிடிக்கும்
      கண்ட கனவு நினைவில்
      கலையா இருந்தால் பிடிக்கும்

      போர்வைக் குள்ளே உடலை
      புதைத்து உறங்க பிடிக்கும்
      மோகம் ஏறி வந்தால்
      மோதி உறங்க பிடிக்கும்

      எட்டு மணி உறக்கம்
      எட்டி முடிந்தால் பிடிக்கும்
      எழுவான் காலை விடிந்தால் – விழி
      எழுந்து திறக்க பிடிக்கும் …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 05-03-2022

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

      எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

      கண்டாவளை திருவையாறு
      கனக ராயன் குளமும்
      முட்டி மோதி ஓடி வரும்
      முல்லைத்தீவு தேடி வரும்

      வட்டக்கச்சி கொம்படியும்
      வளைந்து செல்லும் ஊரியானும்
      தட்டி மறிக்கும் தட்டுவன் கொட்டியும்
      தண்ணீர் ஊற்றும் வழிமறிக்கும்

      முரசுமோட்டை சேற்றுக்கண்டி
      மூன்றாம் கட்டை நான்காம் கட்டை
      வெலிகண்டன் சந்தியில
      வேகம் பிடிக்கும் வேலி பிரிக்கும்

      இரணை மடுவும் இன்று வரவும்
      இளைப்பாறும் இளம் வாய்க்காலும்
      ஊர் சுற்றி பார்க்கும்
      ஊர்ந்து வரும் நீரும்

      இயற்கை வாழும் ஊரு வன்னி மண்ணு
      இளைப்பாற நீயும் வா கண்ணு
      எங்க ஊரை போல எந்த ஊரு வருமோ
      எங்கள் வாழ்வு எங்கு கூடுமோ

      கட்டி வைத்த குளமும்
      கட்டு டைத்து பாயும்
      வந்து பார்த்து ஆடு
      வயல் இறங்கி ஓடு

      கிரவல் வீதியெல்லாம்
      கிழிந்து போச்சுது
      தாரு போட்ட வீதியில
      தவழ்ந்து பார்த்து ஓடுது

      வளர்ச்சி இங்கே நல்லாய் இருக்கு
      வாழும் மனிதர் வறண்டிருக்கு
      அறியாமை ஓட அறிந்த கொள்ளா வாடா
      ஏற்றம் இங்கு ஏறவில்லை
      ஏழ்மை இன்னும் ஓடவில்லை

      வீட்டுக்குள்ள உழைப்பை வைத்து
      வீதியில ஏங்கி நிற்கு
      புத்தி கெட்ட மனிதராலே – தேசம்
      நித்திரையாய் கிடக்கு

      தன்னில் தான் தங்கி வாழும்
      தன்னிறைவு வருமா
      வெள்ளையர் நாடு போல – வாழும்
      வெற்றி முளைக்குமா

      அகதி தமிழன் பணத்தில் வாழும்
      அழிதல் ஒழியுமா
      தன் உழைப்பில் தான் வாழும்
      தலை நிமிர்வு ஓங்குமா

      உனக்குள் இன்று உன்னை தேடு
      உலகை இன்று புரட்டி போடு
      புரட்சி வெடிக்கும் புழுதி உழவடிக்கும்
      எழடா சாதிக்க நீ தான் அமெரிக்கா …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 04-03-2022

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு

        ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு

        உடையாத சுவர் மேலே
        உடல் உரசி முறைக்கிறாய்
        உதடை விரித்தேன்
        உள்ளத்தை அழைக்கிறாய்

        இமை வெட்டா விழியாலே
        இதயத்தை அளக்கிறாய்
        இடை காட்டி இன்றேனோ
        இரவொன்றை கேட்கிறாய்

        ஐந்து விரல் பூச்சடித்து
        ஐம்புலனை தூக்கிறாய்
        ஐந்தடி கூந்தலிலே
        ஐஸ் ஆக யொழிக்கிறாய்

        தேங்காய் மார்பொன்றை
        திறந்தேனோ காட்டுறாய்
        தேக்குமர உடல் கட்டை
        தெருவெங்கும் காட்டுறாய்

        மஞ்சள் பல் அழகும்
        மணிமேகலை உடல் அழகும்
        எனை கட்டி போடுதடி
        ஏக்கத்தில மனம் வாடுதடி

        சிரிக்கும் பூவழகே – எனை
        சிறை வைத்த பேரழகே
        உனை தந்து போகாயா – எனை
        உயிர் வாழா வைக்காயா ….!

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் 02-03-2022

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உன்னை பிடித்த காதல் எனக்குள் …!

          உன்னை பிடித்த காதல் எனக்குள் …!

          உன்னை எனக்கு பிடிக்கும் -தினம்
          உன்னை பாட பிடிக்கும்
          உன்னை தேடி ஓட – தென்றல்
          உன்னை உரசி போக பிடிக்கும்

          பிடித்த பொழுது பிடிக்கும் -நீ
          பிடித்த பக்கம் பிடிக்கும் – நீ
          பிடித்த போது வெட்கம்
          பிடித்த திசை பிடிக்கும்

          காதல் அரும்பி முளைக்கும் -அகவை
          காதல் இது பிடிக்கும்
          காதல் கடிதம் எழுதும் – விழி
          காதல் மொழி பிடிக்கும்

          எனக்குள் உன்னை புதைத்தேன்
          எனக்குள் ஏக்கம் வைத்தாய்
          எனக்குள் கோயில் கட்டி -ஏனோ
          எனக்குள் உன்னை வரைந்தாய் …!

          வன்னி மைந்தன் ( ஜெகன் )
          ஆக்கம் 22-02-2022 ( இன்றைய நாள் திகதி ஆண்டு 22222 என்று முடிகிறது )
          இந்த பாவின் முதலாவது பந்தியின் வரிகளின் , முதல் சொல்
          இந்த தலைப்பில் உள்ளதாக அமையும் ,அதனை உரத்து கூறி பாருங்கள் ஒருவித ஓசை ஒலிக்கும் ,நீங்களே சிரிப்பீர்கள் ,சிறு முயற்சி ,

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            முற்று பெற்ற காதல் ..!

            முற்று பெற்ற காதல் ..!

            உன்னை தினம் பாட
            உள்ளம் தினம் ஏங்கும்
            உன்னை கண்டு விட்டால் – விழி
            ஊரில் ஏறி ஆடும்

            கன்னம் இரண்டில் நுள்ள
            காதல் விரல்கள் துடிக்கும்
            கன்னம் இரண்டும் சிவக்க – உன்
            கைகள் அடிக்க பிடிக்கும்

            மெல்ல வந்து பேச
            மெல்ல உதடு துடிக்கும்
            மெலிந்து மேனி துடிக்க
            மெல்ல தானே பிடிக்கும்

            சின்ன உதடு ஆடி
            சிரித்து பேச இரசிக்கும்
            சீலை கூந்தல் ஆடி
            சீண்ட உடலும் சிலிர்க்கும்

            வட்டம் போட்டு ஆடும்
            வண்டு விழி பிடிக்கும்
            வளைந்து நெளிந்து குழையும்
            வலது கையும் பிடிக்கும்

            பக்கம் வந்து அமர்ந்தால் -ஆசை
            பற்றி தீயாய் எரியும்
            படித்து பார்க்க முனைந்தால்
            பக்கம் பலது திறக்கும்

            முற்று பெற்ற மோகம்
            முடிந்து போனால் வெட்கும்
            முள்ளாய் முளைத்த கீறல்
            முறைத்து பார்த்து பேசும்

            திட்டம் போட்டு நடித்த
            திட்ட வரைபு பிடித்தது
            தீண்டி பார்த்த காதல்
            தின்ன தின்ன இனித்தது …!

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் 21-02-2022

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              இதயமதை தந்து விடு..!

              இதயமதை தந்து விடு..!

              உன் நினைவை எடை போட்டு
              ஒரு போதும் விற்கேண்டி
              என் அன்பை நீ பறித்து
              எறிந்து போக வேணாண்டி

              சுற்று மதில் கட்டி வைத்து
              சுற்றம் வீடு காப்பது போல்
              ஆடையில் உனை மறைத்து
              அழகு மயில் போவதெங்கே

              புத்தகத்துள் மயிலிறகை
              பூட்டி வைத்து காத்தது போல்
              பூவே நெஞ்சுக்குள்ளே
              பூட்டி வைத்து பார்கிறேண்டி

              காகிதத்தில் கப்பல் செய்து
              கடல் அலையில் விட்டேண்டி
              கரை வந்து சேரலையோ
              கண்மணிக்கு கிடைக்கலையா

              ஐந்து விரல் பந்தியிலே – உனை
              அப்படியே பதிந்தது
              அதையெடுத்து அதையெடுத்து
              அப்படியே ஒத்தி விடு

              இமை மூடா இன்றுவரை
              இளங் குயிலே உறங்குகிறேன்
              இன்றாவது வந்தெனக்கு
              இதயமதை தந்து விடு

              தத்தளித்து தத்தளித்து
              தண்ணீரில் தவிக்கின்ற
              கப்பலாக ஆகிவிட்டேன்
              கரையேற்றி விட்டு விடு

              வாடகைக்கு வீடெடுத்து
              வாசலிலே காத்திருக்கேன்
              வாடாமல் எனை மணக்க
              வாசலுக்கு வந்து விடு ..!

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் 20-02-2022

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                உயிர் வாழும் உண்மை ….!

                உயிர் வாழும் உண்மை ….!

                ஒன்றும் ஒன்றும் ஒன்றானால்
                ஓர் ஆயிரம் இன்பங்கள்
                இரண்டும் இரண்டும் இரண்டானால்
                இதயத்தில் வேதனைகள்

                கூட்டி வைத்து கூடி படைத்தான்
                கூவும் குயிலாய் பாட வைத்தான்
                ஆடும் வரை ஆட வைத்தான்
                ஆட்டம் முடிந்ததும் நோக வைத்தான்

                இது தான் விதியாச்சோ
                இது இன்று முறையாச்சோ
                படைப்பை அறிந்தே படைத்தானோ
                பகலும் இரவும் தந்தானோ

                எதுகை மோனை ஏற்ற இறக்கம்
                ஏறி பாடும் தாள சந்தம்
                அறிந்து இங்கு பாட்டு தந்தான்
                அறிந்தார் மட்டும் பாட வைத்தான்

                புரிதல் கொண்டால் எளிதில் விளங்கும்
                புரியா நின்றால் வாழ்வு சிரிக்கும்
                இதுவும் ஒரு படிப்பு தானே
                இன்ப துன்பம் சகிப்பு தானே

                பொருள் கொண்டான் உலகில் நிமிர்ந்தான்
                பொருள் இல்லான் வாழ்வில் வீழ்ந்தான்
                திறமை தானே இங்கு முதன்மை – இந்த
                திறனை அறிந்தால் வாழ்வு உண்மை ..!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் 14-02-2022

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  இனிய அகவை வாழ்த்துக்கள் ..!

                  இனிய அகவை வாழ்த்துக்கள் ..!

                  நெஞ்சுக்கு நேர் நின்ற பேரழகன் – இவன்
                  நேசத்தில் எனை குழைத்த பெரும் முதல்வன்
                  அன்புக்குள் அறம் வைத்த அவையழகன்
                  ஆண்டுகள் பல்லாண்டு தொடர்கின்றவன்

                  இல்லத்தில் எனை யழைத்து உணவழித்தவன்
                  இதயத்தில் எனக்கோர் இடம் வைத்தவன்
                  பழகிய நட்பில் முதலானவன்
                  பகை வந்த போதிலும் விலகாதவன்

                  உயிரிலும் மேலான உறவானவன்
                  உறவுக்குள் உறவாகி உலர்கின்றவன்
                  இள வேனில் காலத்தில் தொடரானவன்
                  இன்றென்ன வியப்பு நெஞ்சில் இருக்கின்றவன்

                  முருக தாசு முனை யானவன்
                  முன் அள்ளி உதவிடும் திறனானவன்
                  மூப்பிலும் நீ இன்று அழகானவன்
                  முன் விழி வீச்சு ஒளியானவன்

                  இன்றுந்தன் அகவையில் வாழ்த்துகிறேன்
                  இன்று போல் வாழ்ந்திட போற்றுகிறேன்
                  உன் போல உறவொன்றை காணவில்லை
                  உயிராகி வாழ்கிறாய் பேதமில்லை …!

                  வன்னி மைந்தன் ( ஜெகன் )
                  ஆக்கம் 13-02-2022

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    உன்னால் தவித்தேன் …!

                    உன்னால் தவித்தேன் …!

                    ஊர் உறங்கும் வேளையில
                    உன் மடி நானுறங்க
                    என்னை நானும் மறந்தேனே
                    என் உயிரில் மிதந்தேனே

                    அந்தி வந்து தாலாட்ட
                    அத்தை மகள் பேச்சிழக்க
                    உச்சி வானம் வெட்கப்பட்டே
                    உச்ச இருளை கொட்டிவிடும்

                    இந்த ஒரு நாளிற்காய்
                    இத்தனை நாள் தவமிருந்தேன்
                    இன்றிந்த பொழுதினிலே
                    இவ் வையம் மறந்திருந்தேன்

                    எட்டு கால் நண்டாக
                    என் மேனி கீறலிட
                    தொட்டு உன்னை மகிழ்ந்தனே
                    தொட்டா சிணுங்கி ஆனேனே

                    மூச்சு முட்டி நீ பேச
                    மூச்சடக்கி நான் கேட்க
                    வீழ்ந்துடைந்த மொழி எல்லாம்
                    வீரத்தின் சோடனையோ

                    உடல் முழுதும் நீர் விழவே
                    உன் நிக கீறல் வலியெடுக்க
                    தாங்கி சிரித்தேனே
                    தாராளம் உன்னை இரசித்தேனே

                    இது தானே வாழ்வாச்சு
                    இன்றெங்கும் கலந்தாச்சு
                    கலையாத இருள் ஒன்றை
                    கை கூப்பி தொழுதேனே

                    ஆனாலும் ஏமாற்றம்
                    ஆதவன் விடியலிட்டான்
                    அடுத்து வரும் நாளிற்காய்
                    அடி உன்னாலே அவதியுற்றேன் …!

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 11-02-2022

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      வெல்ல போறேன் பார்த்து போ …!

                      வெல்ல போறேன் பார்த்து போ …!

                      இரவும் இனி அகலும்
                      இந்த இதயம் இனி மகிழும்
                      வரும் காலம் ஆளும்
                      வாழ்வு தேறி பாடும்

                      பட்ட துயர் எல்லாம்
                      பாதியிலே போகும்
                      பகல் இரவு தூங்கா
                      பல சாதனைகள் பதிக்கும்

                      இழிந்தார் நா வெல்லம்
                      இன்று இனி கிழியும்
                      இந்த வாழ்வை எண்ணி
                      இவர் இதயம் வியக்கும்

                      எனக்கான சாலையை
                      ஏய் நானும் போடவா
                      ஏறி நாளும் போகவே
                      எழுந்து நீ பார்க்க வா

                      நான்ங்காண்டு கடும் பயிற்சி
                      நாள் ஒன்றை தந்தது
                      நான் ஆள நாள் ஒன்று
                      நலமோடு பிறந்தது

                      பெருக்கெடுத்த கண்ணீரும்
                      பெரும் துயர் வலியும்
                      இங்கு இனி கலையும்
                      இதயம் தினம் மகிழும்

                      என்னை போல வாழ்ந்தாரை
                      ஏற்றி நானும் வைப்பேனே
                      எழுதி விதி வைத்து
                      என்னை போல மகிழ்வாரே ..!

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 10-02-2022

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        விரைவில் அழுவாய்

                        விரைவில் அழுவாய் …!

                        நாள் தோறும் விலையேற்றம்
                        நா டெங்கும் போராட்டம்
                        இது தானே விதியாச்சு
                        இதயத்தை தொலைத் தாச்சு

                        வீடு தேடி வந்தாங்க
                        விடுதலை என்று சொன்னாங்க
                        பட்டினியாய் குடிகளை தான்
                        பாழ் பட்டார் போட்டாங்க

                        அரியணை வந்தாலே
                        அடக்குமுறை விரிந்திடுமோ
                        அரியணையில் வைத்தாரை
                        அவர் பாவி மறந்திடுமோ

                        ஐந்தண்டு ஒரு முறைதான்
                        ஐயோ மக்கள் பார்ப்பீரா
                        ஓட்டெடுத்து ஏறிட்டு
                        ஓலத்தை திணிப்பீரா

                        கோ மகனே கோ மகனே
                        கோலமிட்ட வன்முறையே
                        கொடும் ஆட்சி வீழ்த்திடுமே
                        கோவணத்தை இழப்பீரே

                        நாளை ஒரு நாள் வருமே
                        நன்றே அதை மறந்தீரே
                        புரட்சி ஒன்று வெடித்திடும்-உம்
                        புகழ் தனை கிழித்திடும்…..!

                        வன்னி மைந்தன்
                        ஆக்கம் 08-02-2022

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          உன்னால் தவிக்கிறேன் ..!

                          உன்னால் தவிக்கிறேன் ..!

                          கறுப்பு தார் வீதியிலே
                          கட்டழகு நடக்குது
                          கன்னிப்பூ அது ஒன்றை
                          கால் இரண்டு துரத்துது

                          பூ வாசம் அது வீச
                          புது மனது வாடுது
                          பூகம்ப நில அதிர்வாய்
                          பூ மனது அதிருது

                          இடை காட்டும் உன்னழகு
                          இதயத்தை வருடுது
                          இளம் நெஞ்சே உனைதழுவ
                          இரு விரல்கள் துடிக்குது

                          கால் பிடித்த நடை பிடித்தே
                          கால் இரண்டு நோகுது
                          கட்டழகு உன் கூந்தல்
                          கண் இமையை மறைக்குது

                          உனை பார்த்த நாள் முதலாய்
                          உறங்க விழி மறுக்குது
                          உன் உதட்டு மொழி கேட்க
                          உள் மனது துடிக்குது

                          என் மனதை தொலைத்து விட்டேன்
                          ஏ நெஞ்சே பேசயா
                          என் ஏக்கம் தனித்துவிட
                          என் அருகில் கூடாயா !

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 06-02-2022

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            நானுறங்க என்னை தாலாட்டு ….!

                            நானுறங்க என்னை தாலாட்டு ….!

                            கரை தேடும் அலையாக கரைகிறேன் – உந்தன்
                            கால் தடம் தேடி அலைகிறேன்
                            எங் கோடி நீ மறைந்தாய்
                            என் முன்னே உன்னை காட்டாய்

                            இதய சிறையிலே இன்று கைதியாய்
                            என்னை அடைத்தாய் ஏன் வதைத்தாய்
                            உருளும் உலகில் உன்னிழலில் வாழ்கிறேன்
                            உயிரே உயிரே உயிர் உறவாகிறேன்

                            ஓடி வரும் காற்றாய் உரசாய்
                            ஓர் ஆயிரம் கதைகள் பேசாய்
                            நிதம் தோறும் நான் மகிழ
                            நீ வந்து தழுவாய் தொழுவாய்

                            நூறாண்டு நாம் வாழ வேண்டும்
                            நூலகமாய் நாம் மாற வேண்டும்
                            உன்னை படிக்க பக்கம் திறப்பாய்
                            உன்னை எழுத வெட்கம் கலைவாய்

                            நீளும் எந்தன் இரவில்
                            நீயே என் வெண் நிலவு
                            ஆழ்ந்து நானும் உறங்க
                            ஆராரோ நீ பாடு நீ பாடு …!

                            வன்னி மைந்தன்
                            ஆக்கம் 17-01-2022

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!

                              உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!

                              வா வா நீயெந்தன் கனவுக்குள்
                              வாழ வழி காட்டு செயலுக்குள்
                              உன்னை நானும் நம்புகிறேன்
                              உயிர்வாழ தென்பு தா வாழ்கிறேன்

                              கடலாட்டும் அலையாக ஆடவா – நான்
                              கரை தேடும் படகாய் ஓடவா
                              உயர்ந்திட வாழ்விலே என்ன வழி
                              உயிரே நீ சொல்லு புதுவழி

                              எனக்கான சாலையை நான் அமைக்க
                              ஏறியே நாளும் பயணிக்க
                              வா வா நீயெந்தன் அருகிலே
                              வாழ வழி காட்டு முடிவிலே

                              அல்லும் பகல் துடித்து விட்டேன்
                              அழுது அழுது களைத்து விட்டேன்
                              இது வென்ன வாழ்வேன்றே
                              இன்று வெறுத்து விட்டேன்

                              நீயே எந்தன் பேரழகு
                              நீயே தா எனக்கழகு
                              உன்னை நானும் நம்புகிறேன்
                              உயிரே உயிர் தா வாழ்கிறேன் ..!

                              வன்னி மைந்தன்
                              ஆக்கம் 01-02-2022

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                உன்னை நீ நம்பு …!

                                உன்னை நீ நம்பு …!

                                நீ அழுது பூமி குளிப்பதா – இந்த
                                நிலையிலே நீயும் தவிப்பதா
                                உனக்குள் ஏனோ உன்னை புதைத்தாய்
                                உலகில் ஏனோ உன்னை மறைத்தாய்

                                எழுந்தின்று பொங்கி விடு
                                ஏரி மலையாய் கொதித்துவிடு
                                தடை கண்டு தளராதே
                                தளர்நது மனம் சோராதே

                                வெடி குண்டாய் மாறிவிடு
                                வெடித்தே பகை வென்றுவிடு
                                உலகேறி நீதி தனை
                                உயிராய் உயிரே நாட்டிவிடு

                                வழி வந்த துயர் எல்லாம்
                                வழி விழுந்தே மறைந்து விடும்
                                உயிர் வழங்கும் தாயவளாய்
                                உலகுன்னை போற்றி விடும்

                                வர லாறை நீ எழுது
                                வழி காட்டி நீ செல்லு
                                புத்தகமாய் உன்னை படிக்க
                                புது விதி செய்து விடு

                                இறந்தும் நீ வாழ்ந்திருப்பாய்
                                இதயத்தில் உறைந்திருப்பாய்
                                அழியா புகழ் ஒன்றை
                                அகிலத்தில் வைத்திருப்பாய் ….!

                                வன்னி மைந்தன்
                                ஆக்கம் 30-01-2022

                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  ஏன் பேச மறந்தாய் ..?

                                  ஏன் பேச மறந்தாய் ..?

                                  உன் கொலீசு காதுக்குள்ளே
                                  ஊளையிட்டு மகிழுதடி
                                  உன் கொண்டை மல்லிகை
                                  ஊர் வாசம் வீசுதடி

                                  தேர் ஓடும் வீதியிலே
                                  தேவதை நீ நடக்கையிலே
                                  தெறித்தோடும் காளை எல்லாம் -உன்
                                  தோகை கூந்தல் தொடருமடி

                                  பாலை வன புல்வெளியில்
                                  பா வினங்கள் மேய்ந்திடுமோ
                                  பாவை உந்தன் பூவிதழில்
                                  படரா வண்டு உறங்கிடுமோ

                                  நீர் தேடும் வேர்கள் எல்லாம்
                                  நிழல் தர மறந்திடுமோ
                                  நிலவே உன் பேரழகை
                                  நிழல் தழுவ அஞ்சிடுமோ

                                  தொலை தூர நடை பிடித்து
                                  தொலையாம வீதி வந்து
                                  கண் முன்னே நிற்பவரே
                                  கதை பேசா நிற்பதென்ன

                                  காளை உந்தன் நெஞ்சுக்குள்ளே
                                  காதலாகி நான் இருக்க
                                  என் அருகில் வந்து நின்று
                                  ஏன் பேச நீ மறந்தாய் ..?

                                  வன்னி மைந்தன்
                                  ஆக்கம் 25-01-2022

                                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                    இன்றே நீ செத்து விடு …!

                                    இன்றே நீ செத்து விடு …!

                                    கடவுள் ஒருவன் இருக்கிறான் – அவன்
                                    கண்ணீர் தர மறுக்கிறான்
                                    வாழ வழி காட்டுறான் – அவன்
                                    வாழ்விற்க் ஒளி வீசிறான்

                                    ஊரில் உள்ள மனிதர் எல்லாம்
                                    உன் உறவு என்று எண்ணிவிடு
                                    உலகை ஆளும் கடவுள் போல
                                    உளம் மகிழ சிரிப்பு கொடு

                                    நீயும் நானும் மனிதர் என்றால்
                                    நின் மதியாய் வாழ விடு
                                    நித்தம் இடும் இழிவுகளை
                                    நீயும் இன்று நிறுத்தி விடு

                                    ஏழை இன்று நாளை உலகை
                                    ஏறி நன்றே ஆள்வான் – நீ
                                    எறிந்த சொல் லடியில்
                                    ஏறி நின்றே ஆடுவான்

                                    உன் பணத்தில் மேலானால்
                                    உன்னை அவன் மதிப்பானா
                                    உந்தன் தலை கனத்தை
                                    உருட்டி அவன் அடிக்காணா

                                    விந்தை பூரி உலகினிலே
                                    விடயங்கள் நிறைந் திருக்கு
                                    வினை விதைத்தார் வினையறுக்கும்
                                    விடயங்கள் நிகழ்ந் திருக்கு

                                    சிந்தை உளார் மனிதரெல்லாம்
                                    சிகரத்தில் நிறைந் திருக்கு
                                    விந்தை உளார் தாமெனே
                                    விதைத் தவர் நடந்திருக்கு

                                    முந்தை உரை நாவெல்லாம்
                                    முன் செயலில் தவித்திருக்கு
                                    பிந்தை நிலை அறியாநிலை -விழி
                                    பிரளயத்தில் மூழ்கிருக்கு

                                    முந்தை வினை விதைக்கும் முன்
                                    முளை வேர் நன்றே அறிந்துவிடு
                                    பிந்தை விதை வான் எழுந்தால்
                                    பிடரி இழந்து மாண்டு விடு …!

                                    வன்னி மைந்தன்
                                    ஆக்கம் 12-01-2022

                                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                      கண்ணீர் துடை …!

                                      கண்ணீர் துடை …!

                                      வாடாத பூ வொன்று
                                      வாடிய தேனின்று
                                      வறண்டு நிலமும் காய்ந்ததோ -ஆறு
                                      வற்றி இன்று மாண்டதோ

                                      சோலைக் குள்ளே ஆடினாய்
                                      சோராமலே பாடினாய்
                                      யாரு கண்ணு பட்டதோ
                                      யாகம் நின்று போனதோ

                                      நீரின்றி வேருமோ
                                      நிலமும் இனி வாடுமே
                                      உயிரு நீயும் வாடவே
                                      உள்ளம் இங்கு உறங்குமோ

                                      தேராவில் ஆறும்
                                      தேறி இன்று ஓடாதோ
                                      இரணைமடு குளமும்
                                      இதய கதவு திறக்காதோ

                                      நேற்றடித்த காற்றினிலே
                                      நேசக்கிளை உடைந்ததோ
                                      வேதனையில் நீ தவிக்க
                                      வேண்டினார் பார்க்கலையோ

                                      நான் வணங்கும் ஆண்டவரை
                                      நான் உனக்காய் வேண்டுகிறேன்
                                      வேர் பிடித்து எழுந்திடுவாய்
                                      வேகும் விழி துடைத்திடுவாய் ..!

                                      வன்னி மைந்தன்
                                      ஆக்கம் 11-01-2022