முற்று பெற்ற காதல் ..!

Spread the love

முற்று பெற்ற காதல் ..!

உன்னை தினம் பாட
உள்ளம் தினம் ஏங்கும்
உன்னை கண்டு விட்டால் – விழி
ஊரில் ஏறி ஆடும்

கன்னம் இரண்டில் நுள்ள
காதல் விரல்கள் துடிக்கும்
கன்னம் இரண்டும் சிவக்க – உன்
கைகள் அடிக்க பிடிக்கும்

மெல்ல வந்து பேச
மெல்ல உதடு துடிக்கும்
மெலிந்து மேனி துடிக்க
மெல்ல தானே பிடிக்கும்

சின்ன உதடு ஆடி
சிரித்து பேச இரசிக்கும்
சீலை கூந்தல் ஆடி
சீண்ட உடலும் சிலிர்க்கும்

வட்டம் போட்டு ஆடும்
வண்டு விழி பிடிக்கும்
வளைந்து நெளிந்து குழையும்
வலது கையும் பிடிக்கும்

பக்கம் வந்து அமர்ந்தால் -ஆசை
பற்றி தீயாய் எரியும்
படித்து பார்க்க முனைந்தால்
பக்கம் பலது திறக்கும்

முற்று பெற்ற மோகம்
முடிந்து போனால் வெட்கும்
முள்ளாய் முளைத்த கீறல்
முறைத்து பார்த்து பேசும்

திட்டம் போட்டு நடித்த
திட்ட வரைபு பிடித்தது
தீண்டி பார்த்த காதல்
தின்ன தின்ன இனித்தது …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-02-2022

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *