நானுறங்க என்னை தாலாட்டு ….!

Spread the love

நானுறங்க என்னை தாலாட்டு ….!

கரை தேடும் அலையாக கரைகிறேன் – உந்தன்
கால் தடம் தேடி அலைகிறேன்
எங் கோடி நீ மறைந்தாய்
என் முன்னே உன்னை காட்டாய்

இதய சிறையிலே இன்று கைதியாய்
என்னை அடைத்தாய் ஏன் வதைத்தாய்
உருளும் உலகில் உன்னிழலில் வாழ்கிறேன்
உயிரே உயிரே உயிர் உறவாகிறேன்

ஓடி வரும் காற்றாய் உரசாய்
ஓர் ஆயிரம் கதைகள் பேசாய்
நிதம் தோறும் நான் மகிழ
நீ வந்து தழுவாய் தொழுவாய்

நூறாண்டு நாம் வாழ வேண்டும்
நூலகமாய் நாம் மாற வேண்டும்
உன்னை படிக்க பக்கம் திறப்பாய்
உன்னை எழுத வெட்கம் கலைவாய்

நீளும் எந்தன் இரவில்
நீயே என் வெண் நிலவு
ஆழ்ந்து நானும் உறங்க
ஆராரோ நீ பாடு நீ பாடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 17-01-2022

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *