விரைவில் அழுவாய்

Spread the love

விரைவில் அழுவாய் …!

நாள் தோறும் விலையேற்றம்
நா டெங்கும் போராட்டம்
இது தானே விதியாச்சு
இதயத்தை தொலைத் தாச்சு

வீடு தேடி வந்தாங்க
விடுதலை என்று சொன்னாங்க
பட்டினியாய் குடிகளை தான்
பாழ் பட்டார் போட்டாங்க

அரியணை வந்தாலே
அடக்குமுறை விரிந்திடுமோ
அரியணையில் வைத்தாரை
அவர் பாவி மறந்திடுமோ

ஐந்தண்டு ஒரு முறைதான்
ஐயோ மக்கள் பார்ப்பீரா
ஓட்டெடுத்து ஏறிட்டு
ஓலத்தை திணிப்பீரா

கோ மகனே கோ மகனே
கோலமிட்ட வன்முறையே
கொடும் ஆட்சி வீழ்த்திடுமே
கோவணத்தை இழப்பீரே

நாளை ஒரு நாள் வருமே
நன்றே அதை மறந்தீரே
புரட்சி ஒன்று வெடித்திடும்-உம்
புகழ் தனை கிழித்திடும்…..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 08-02-2022

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *