Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்
லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்
பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்
இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது
தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
புயலில் சிக்கிய அவுஸ்ரேலியா – மின்சாரம் இன்றி தவிப்பு
புயலில் சிக்கிய அவுஸ்ரேலியா – மின்சாரம் இன்றி தவிப்பு
அவுஸ்ரேலியா குயின் லாண்ட் பகுதியில் திடீரென வீசிய புயல் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மின்சாரம் துண்டிக்க பட்டு தவித்து வருகின்றனர்
இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பலன் தரும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன ,மேலும் மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன
இதனால பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகளை காண முடிகிறது ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா ,லெபனான் எல்லையில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரலிய இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது
மேற்படி ஏவுகணையை இடையில் வான் எதிர்ப்பு ஏவுகணை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
கமாஸ் வழங்கிய ஏவுகணை தாக்குதலில் சிதைவடைந்த இஸ்ரேலிய இராணுவம் மீள இப்பொழுது வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
கூகிள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் 189 மில்லியன் யூரோ தண்டம்
கூகிள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் 189 மில்லியன் யூரோ தண்டம்
பிரான்ஸ் நாட்டின் French competition authority, அமைப்பின் விதிகளை மீறி கூகிள் நிறுவனம் ,வாங்கி
,விற்றல் விளம்பரங்களை வெளியிட்ட காரணத்தினால் 189 மில்லியன் அபராதம் விதிக்க பட்டுள்ளது
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் முடிவில் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது
உலக இணைய யாம்பவனாக உள்ள கூகிள் இந்த அத்துமீறலை புரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கரி மோகனுக்கு பெண் குழந்தை பிறந்தது
கரி மோகனுக்கு பெண் குழந்தை பிறந்தது
பிரிட்டன் பட்டத்து இளவரசர் கரி மோகனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
பிறந்த குழந்தைக்கு பாட்டி குயின் மற்றும் தாய் டயானா ஆகியோர் பெயரை இணைத்து வைத்துள்ளனர்
அரண்மனை வாழ்வை துறந்து சென்றாலும் பாட்டியின் பெயரை மகளுக்கு வைத்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை
தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை
வடமேற்கு நையீரியா பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 88 அப்பாவி மக்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்
அரச இராணுவத்தினரை இலக்கு வைத்தது ,கிளர்ச்சி படைகள் தாக்குதல்கள் வேகம் பெற்று வரும் நிலையில் எதிராணியை சேர்ந்த மக்களை கிளர்ச்சி படைகள் கொன்று குவித்து வருகின்றனர்
இவர்கள் அனைவரும் அரசுக்கு தகவல் வழங்கிய கிராமத்தவர்கள் என கிளர்ச்சி படை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
கண்ணிவெடியில் சிதறிய வண்டி -11 பேர் மரணம்
கண்ணிவெடியில் சிதறிய வண்டி -11 பேர் மரணம்
ஆப்ஜானிஸ்தான் வடக்கு பகுதியில் வீதியில் பணித்து கொண்டிருந்தால் பயணிகள் வான் ஒன்று
மிதி வெடியில் சிக்கியதில் அதில் பயணித்த 11 பேர் உடல் சிதறி பலியாகினர்
தலிபான்கள் இந்த கண்ணி வெடியினை புதைத்திருக்கலாம் என அரச இராணுவம் குற்ற சுமத்தியுள்ளது
இந்த வருடத்தின் முதல் மாதத்தில் மட்டும் 1800 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
பலஸ்தீனத்தில் மோதல் – 300 பேர் காயம்
பலஸ்தீனத்தில் மோதல் – 300 பேர் காயம்
பாலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் மக்களுக்கு இடையில் நடந்த மோதலில் 300 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேல் பலஸ்தீன நகர்கள் மீது தாக்குதல் நடத்தி சமரச , நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வரும்
இவ்வேளை இந்த அத்துமீறல் தாக்குதலை இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது
காதலன் வீட்டுக்கு முன் காதலி போராட்டம்
காதலன் வீட்டுக்கு முன் காதலி போராட்டம்
மத்திய பிரதேசத்தில் உள்ள கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அத்தைப் பெண், ஊருக்கு வந்தபோது இருவருக்கும் காதல்
மலர்ந்துள்ளது. பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து சிறுமியுடன், மார்யா பாலியல் உறவு வைத்து கொண்டதாகக் கூறப்படுகிறது
பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க சந்தீப் மவுர்யாவின் வீட்டினர் மறுத்துள்ளனர். மேலும் வேறு ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்கவும் குடும்பத்தினர் முயற்சி செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை அழைத்துக்கொண்டு, பேண்ட் வாத்தியக்
குழுவுடன் உறவினர் வீட்டிற்கு சென்று, மகளை திருமணம் செய்து கொள்ளக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஊரே திரண்டது. அப்போது, மவுர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக சிறுமி மிரட்டல் விடுத்தார்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சமாதான பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தால், சிறுமியின் வீட்டார் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த வடக்கு கோரக்பூர் போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்
குமார், சந்தீப் மவுர்யா ராணுவ வீரர் என்பதால், ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு
அவுஸ்ரேலியாவில் வீட்டுக்குள் புகுந்த கார் -இடிந்த வீடு
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி பகுதியில் கடந்த தினம் இரவு 11 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது
இதன்பொழுது அந்த வீடு பலத்த சேதமடைந்த்துள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அந்த காரை மீட்டு சென்றனர்
தமிழகத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை
அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
நடிகை சாந்தினியுடன் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும், கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் அவர் தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க
வேண்டும் என்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்
இதையும் படியுங்கள்…முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு- நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகிற 9-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்
ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்திய நீச்சல் வீரர்
ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும்
உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு
மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.
இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரரான அரவிந்த்
கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டினார். இதற்காக பழைய மாமல்லபுரம் காரப்பாக்கம் கடல் பகுதியில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி அசத்தினார்.
தினமும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மிதிவண்டி தினத்தில் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இவர், ஆழ்கடலில் சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஆழ்கடலில் மீன்களுடன் பழகி நீச்சல் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?
ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?
பாலஸ்தீனம் மீதான காமாஸ் ,ஜிகாத் போராளிகள் திடீர் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவுடன் திடீர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்
இவர்களது இந்த பேச்சு ஈரானின் அணு உலை தொடர்பானது ,ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு விட கூடாது என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது ,எனது வீதம் அணு செறிவாக்கம்
இடம்பெற்றுள்ளது என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த முக்கிய பேச்சுக்கள் இடம்பெறுகிறது
இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு சதியில் ஈரான் அழிக்க படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி
பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி
பிரான்சில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து 12 முதல் 18 சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி
செலுத்துவதற்கு ,பிரான்ஸ் அரசு அனுமதி வழங்க பட்டுள்ளது ,
இம்மாதம் முதல் இந்த ஊசி செலுத்த படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது ,குறித்த வயதுடைய அனைவரும் இந்த ஊசியை செலுத்த வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
பதுங்கி இருந்த ஐ எஸ் தீவிரவாதிகள் கைது
ஈராக்கில் பதுங்கி இருந்த ஐ எஸ் மறைவிடம் ஒன்றை இராணுவத்தினர் திடீரென சுற்றி
வளைத்தனர் ,இதன் பொழுது அங்கு பதுங்கி இருந்த சுமார் நான்கு தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
தீவிரவாதிகள் என்ற போர்வையில் அப்பாவி மக்களையும் கைது செய்து வருவதாக மனித உரிமை மையம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்
கடல் கடந்த மனித நேயம். கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த முஸ்லீம்கள்
மலேசியா : திருநெல்வேலி மாவட்டம் புளியரையை சேர்ந்த இம்மானுவேல் மகன் ஜான்சன் என்பவர் மலேசியாவில் தொழிலாளியாக பணி புரிந்து வந்துள்ளார்.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கிய நிலையில் தாயகம் திரும்ப முடியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 26 ஏப்ரல் அன்று மலேசியாவில் மரணம் அடைந்துள்ளார். இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய்,
மனைவி உள்ளிட்ட உறவினர்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியை தொடர்பு கொண்டு அவரை மலேசியாவில் அடக்கம் செய்ய உதவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனடிப்படையில் தமிழகத்தை சார்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மலேசியாவில் செயல்படும் ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் தலைவர் சபருதீன் மற்றும் அன்சர் அலி ஆகியோரை தொடர்பு
கொண்டு தகவல் தெரிவித்தனர். ஐ.எம்.ஐ.எம் (IMIM) அமைப்பின் முயற்சியால் ஜான்சன் உடல் கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.
இச்செய்தி அறிந்த ஜான்சன் குடும்பத்தினர் எஸ்.டிபி.ஐ கட்சியினருக்கும், ஐ.எம்.ஐ.எம் அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்..
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.
இவர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் பள்ளி மாணவ மாணவிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதேபோல் போகோஹரம் தவிர நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகள் மாணவ மாணவிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அரசிடம் இருந்து பணம் மற்றும் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்கின்றன.
அந்த வகையில் நைஜீரியாவில் அண்மை காலமாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து மாணவ மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தின் தெகினா நகரில் இஸ்லாமிய பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் வகுப்பறைகளுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
எனினும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பின்னர் 200 மாணவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த பயங்கரவாதிகள் லாரியை கொண்டு வந்து, அதில் மாணவர்களை ஏற்றி கடத்தி சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து 300 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதும், பின்னர் பயங்கரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை மீட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஹெலிகாப்டர் விபத்தில் 5 போலீசார் பலி
ஹெலிகாப்டர் விபத்தில் 5 போலீசார் பலி
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பொலிவர். இங்குள்ள காண்டாகல்லோ என்கிற நகரில் போதைப்பொருள் புழக்கம்
அதிகமாக உள்ளதால் அங்கு போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 5 போலீசார் காண்டாகல்லோ நகரில் ஹெலிகாப்டரில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத
வகையில் அவர்களது ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 போலீசாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கொலம்பியா அதிபர் இவான் டியூக், விபத்தில் உயிரிழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அந்த 5 போலீசாரும் கொலம்பியாவின் கதாநாயகர்கள் எனக்கூறி புகழாரம் சூட்டினார்.
அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து
அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து
தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக, தெலுங்கானா அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும்
நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.
இந்நிலையில், அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய கொரோனா
நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் புதிதாக எந்த கொரோனா நோயாளியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் மேலும், 79 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.







