Tag: அமைச்சர் மணிகண்டனை
Posted in உலக செய்திகள்
அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
Author: நிருபர் காவலன் Published Date: 03/06/2021 Leave a Comment on அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை
நடிகை சாந்தினியுடன் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும், கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் அவர் தன் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க
வேண்டும் என்று நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்
இதையும் படியுங்கள்…முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு- நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகிற 9-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.






