கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மாரணம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

கொழும்பு கொள்ளு பிட்டி பகுதியில் நிர்மாணிக்க பட்டு வரும் ,மாடி வீட்டில் இருந்து நபர் ஒருவர் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .

மரணமானவர் சடலம் மீட்க பட்டு வைத்தியசாலையில் வைக்க பட்டுள்ளது .

கட்டட தொழிலாளர்கள் பாதுகாப்பு முறைமை இங்கு முறையாக பின்பற்ற வில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

மேற்படி நபரது மரணம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

    வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

    மலையகத்தில் இருந்து இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்க ப் பட்டுளளார்.

    கம்பாக பகுதியில் வேலைக்குச சென்ற வீட்டில் அமைக்க பட்டிருந்த நீச்சல் குளத்தில் 17 வயது சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் .

    இந்த சிறுமி சடலம் மீட்க பட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.


    இது கொலையா அல்லது விபத்து மரணமா ,என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர் .

      இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா

      இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா

      இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை அவுஸ்ரேலியா அரசு இலவசமாக வழங்கியுள்ளது .


      இந்த மருத்துவ பொருட்களில் 27 முக்கிய மருந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன.

      இலங்கையில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் ,உதியக பூர்வமாக இந்த, மருத்துவ பொருட்களை வழங்கினார் .

      அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக அகதிகள் , செல்வதை இலங்கை அரசு தடுத்து வருகிறது .

      அதற்கு நன்றி விசுவாசமாக இந்த உதவிகளை அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது எனப்படுகிறது.

        இலங்கை யப்பான் இராணுவ தரப்பினர் விசேட சந்திப்பு
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை யப்பான் இராணுவ தரப்பினர் விசேட சந்திப்பு

        இலங்கை யப்பான் இராணுவ தரப்பினர் விசேட சந்திப்பு

        இலங்கைக்கான ஜப்பான் பாதுப்பு , ஆலோசகர் மற்றும் இலங்கை இராணுவ தளபதிக்கு இடையில் ,விசேட சநதிப்பு இடம்பெற்றுள்ளது.

        ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் ,கெப்டன் யுயுகி மற்றும் இராணுவ தளபதி விக்கும் லியனகே இடையில் ,இடம்பெற்ற இந்த சந்திப்பு, தற்கால இலங்கை நிலை தொடர்பாக ,ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

        சீன கப்பல் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் ,ஜப்பான் பாதுகாப்பு ஆலசோகர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது, முக்கியமான ஒன்றாக பார்க்க படுகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் முட்டை விலை குறைப்பு

          இலங்கையில் முட்டை விலை குறைப்பு

          இலங்கையில் முட்டை ஒன்றில் விலை ஐந்து ரூபாவினால் குறைக்க பட்டுள்ளது.

          தற்போது இந்த விலை குறைப்பின் வாயிலாக 43 ரூபாவாக அறிவிக்க பட்டுள்ளது .

          ஐந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப் பட்ட முட்டை ,திடீரென 3 ரூபாவாக அதிகரிக்க பட்ட நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.

          நாள் தோறும் இலங்கையின் பொருளாதாரம் ,வீழ்ச்சியடைந்துசெல்லும் நிலையில், பொருட்களின் விலைகளும் அதிகரிக்க பட்டுள்ளது.

          இதனால் நாளந்த கூலிகள் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா

            இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா

            வீட்டில் இருந்தபடியே பணம் உழைப்பது எப்படி என்றா எண்ணுகிண்றீர்கள், இதோ பேபால் உங்களுக்கு அதிரடி விலைகளில் சலுகைகள் வழங்குகிறது .

            இந்த இணைப்பில் அழுத்தி இணைந்தால் ,உங்களுக்கு 10 பவுண்டுகள் இலவசமாக கிடைக்கும் ,பேபால் வழங்கும் அதிரடி சலுகை ,மேலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் பெற்றிட 1200 பவுண்டுகள் கடனாக வழங்க ப.டுகிறது .

            முந்துங்கள் பயன் பெறுங்கள் .இதில் இணைந்து ஐந்து பவுண்டுக்கு பொருட்கள் வாங்கினால், உங்களுக்கு 10 பவுண்டு கிடைக்கும் ,தவிர நாங்கள் உங்களுக்கு 2 பவுண்டுகள் வழங்குவோம் .4200 இலங்கை ரூபா .( வாட்சாப் ,வைபர் ,00447536707793)

            ஆக மொத்தம் நீங்கள் செலவு செய்வது ஐந்து ,மொத்தம் உங்களுக்கு 12 பவுண்டுகள் கிடைக்கும் .அவ்வாறு செய்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள் அந்த இரண்டு பவுண்டுகளை உங்களுக்கு செலுத்தி விடுகிறோம் .

            Hi, we can both earn £10 when you accept my invite to PayPal and spend £5. Use my link

            இதில் அழுத்தி பதிவு செய்து பணத்தை அள்ளுங்கள்

            https://py.pl/993JD9YqK9o

            விசேட பொருட்கள் மலிவு விற்பனை

            பேபால் ஊடாக நீங்கள் விரும்பும் பொருட்களை கொள்வனவு செய்கின்ற பொழுது ,உங்களுக்கு பத்து வீதம் முதல், ஐம்பது வீதம் வரை விலைக்கழிவுகள் உள்ளன .

            இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா

            அங்கே குறிப்பிட படும் ,பிரபல நிறுவனம் ,கடைகளில் அந்த பொருட்களை வாங்கினால் இந்த சலுகை கிடைக்கிறது .

            பேபால் ஊடக பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது எப்படி தெரியுமா ..?#

            இந்த பேபால் ஊடக நீங்கள் விரும்பும் பொருட்களை கொள்வனவு செய்தால் , பேபால் மூலமே பணத்தினை செலுத்தினால் , பெற்று கொண்ட பொருட்களில் ஏதாவது தவற விட பட்ட நிலையில் ,

            பொருட்கள் வந்தடைந்தாலோ, இவர்களிடம் முறையிட்டால் , நீங்கள் செலுத்திய முழு பணத்தினையும் 180 நாட்களுக்குள் மீள் பெற்று கொள்ள முடியும் .

            முந்துங்கள் பயன் பெறுங்கள் ,சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .

              இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்
              Posted in இலங்கை செய்திகள்

              இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்

              இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன் பற்றிய சிறு பார்வை

              பைஷல் இஸ்மாயில் –

              திருகோணமலை மாவட்ட – தம்பலகமம் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை அரியநாயகம் மற்றும் பத்மலோஜினி அரியநாயகம் ஆகியோருக்கு 02 வது பிள்ளையாகப் பிறந்த அரியநாயகம்

              சரண்யா, திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்ற இவர், உயர்தரப்

              பரீட்சையில் மாவட்டத்தில் 16வது நிலையைப் பெற்ற மாணவியாகத் தெரிவாகி இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

              இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்

              தனது 4 வருட பல்கலைக்கழக காலப்பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு வியாபார நிருவாகமாணிப் பட்டம் மற்றும் சந்தைப்படுத்தல் சிறப்பு பட்டங்களைப் பெற்று முதல்நிலை மாணவியாகத் திகழ்ந்த இவருக்கு,

              சிறந்த மாணருக்கான விருது மற்றும் அனைத்து வருடங்களின் மிகச் சிறந்த மாணவர் விருதினையும் தனதாக்கிக் கொண்ட பெருமையும் இவருக்குண்டு.

              அவரது கல்விப் பருவத்தில் கற்றல் செயற்பாடுகளில் மட்டும் நின்றுவிடாமல் விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்ச்சிகள், தொழிநுட்ப அறிவுப்

              போட்டிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெற்ற ஒரு முன்னணி மாணவியாகவும் திகழ்ந்துள்ளார்.

              இலங்கை நிருவாக சேவை அல்லது கணக்காளர் சேவையில் தனது மகள் உள்நுழையவேண்டுமென, தனது தந்தையின் கனவாக இருந்தது.

              அவரின் கனவே தனது கனவாக நினைத்துக்கொண்டு அந்த இலக்கை முன்வைத்து அவரது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இலக்கையும் அடைந்தார்.

              இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் பதவியில் பயிலுநராக இருந்தபோது, பட்டபின் படிப்பு பொது நிருவாகப் பரீட்சையில் மிகச் சிறந்த

              தேர்ச்சி சித்தி பெற்றதனால், அவருக்கு தங்க விருது கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

              அதற்கமைவாக, அரியநாயகம் சரண்யா 2014 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர், அதேயாண்டில் முகாமைத்துவ பயிலுனராக இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்தார்.

              2015 ஆம் ஆண்டு இலங்கை அவிருத்தி நிருவாக நிறுவனத்தில் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் பயிலுனராக இணைக்கப்பட்டார்.

              2015 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி

              ஆணையாளராக நியமிக்கப்பட்டு, 7 வருடங்கள் கடமையாற்றி வந்த இந்நிலைமையில், 2022 ஆம் ஆண்டு சிறிது காலப்பகுதியில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

              அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் திணைக்களத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன், அதன் முன்னேற்றப்

              பாதைக்கு வழிவகுத்து பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு பாரிய பங்களிப்பைச் செய்துவந்தார்.

              இந்நிலைமையிலேயே, கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

              திருகோணமலை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர்
              இராஜயோகம் சுதர்ஸன் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து 1

              ஆண் மற்றும் 1 பெண் பிள்ளைக்கு தாயாகவும்,
              சிறந்த குடும்பத் தலைவியாகவும் இருந்து வருகிறார்.

                Posted in இலங்கை செய்திகள்

                கோட்டபாய வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

                கோட்டபாய வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

                இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ்வின், மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டுக்கு ,இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

                தாய்லாந்தில் தங்கியுள்ள ,கோட்டபாய ராஜபக்ச ,இலங்கைக்கு விரைவில் வரவுள்ள நிலையில் ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

                கோட்டபாய ராஜபக்ச வீட்டுக்கு, திடீர் இராணுவ பாதுகாப்பு ,அதிகரிக்க பட்ட நிலையில் ,அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது .

                கோட்டபாய இலங்கைக்கு வந்தால் , மீளவும் மக்கள் போராட்டம் வெடிக்கும் ,என்பது நிலவரமாகிறது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

                  வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

                  வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் ,இயங்கி வந்த ,இரகசிய விபச்சார நிலையம் ஒன்று ,காவல்துறையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

                  இந்த சுற்றிவளைப்பில் , இளம் பெண்கள் உள்ளிட்ட ,நான்கு பேர் கைது செ ய்ய பட்டுள்ளனர்.

                  குறித்த விபச்சார நிலையத்தை, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நடத்தி வந்துள்ளமை, கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                  வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

                  இந்த விபச்சார நிலையத்தில் ,இயங்கு நிலையில் இருந்த, டீ 56 ரக துப்பாக்கி ,மற்றும் 30 தோட்டாக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது .

                  குறித்த விபச்சார நிலையத்தில் ,காவல்துறையினர் வந்தால் , பெண்கள் தப்பி ஓடும் வகையில் சுவர் ஒன்றினுள் இரகசிய பாதை ஒன்றும் அமைக்க பட்டிருந்தது , சோதனையில் தெரிய வந்துள்ளது.

                  கைதான இளம் பெண்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                  காவல்துறை விசாரணைகளின் பின்னர்
                  பெண்கள் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

                  பொலிசாருக்கு கிடைக்க பெற்ற, இராசிய தகவலின் அடிப்படையில் ,இந்த விபச்சார நிலையம் ,சுற்றி வளைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

                    மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

                    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, மைத்திரி பால சிறிசேனவிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                    முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய காலப் பகுதியில் ,மைத்திரியினால் , பொது மன்னிப்பு வழங்க பட்டு ,ஜூட் ஜயமஹா என்பவர் விடுதலை செய்ய பட்டுள்ளார்.

                    அது தொடர்பிலேயே. ஐந்து மணி நேரம் கடும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .


                    இது ஆளும் ரணில் விக்கிரமசிங்காவினால் வழங்க பட்ட உத்தரவுக்கு அமைய ,மைத்திரியை மிரட்டும் , செயல் பாட்டு விசாரணையாக பார்க்க படுகிறது .

                      சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
                      Posted in இலங்கை செய்திகள்

                      சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு

                      சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு

                      இலங்கையில் எதிர்கட்சி தலைவர், சஜித் பிரேமதாசாவுடன் ,இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் யூலி சங் சந்தித்து பேசியுள்ளார் .

                      அமெரிக்கா தூதுவர், சஜித் பிரேமதசாவுக்கு இடையிலான ,சந்திப்பின் பொழுது,நாட்டில் இடம் பெறும் கைதுகள் ,கடத்தல்கள் ,மற்றும் அடக்குமுறை தொடர்பில் பேச பட்டுள்ளது .

                      மேலும் ஆளும் அரசு ,போராட்ட காரர்களை ,கைது செய்திடும் நடவடிக்கை தொடர்பிலும் ,சஜித் பிரேமதாசா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளாக தெரிவிக்க பட்டுள்ளது.

                      எனினும் இது தவிர வேறுஉள்ளக அரசிய ,நிலைப் பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள், அதன்பொழுது ,தமது ஆதரவு நிலை ,என்பது தொடர்பாகவும் சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பில் பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

                        இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

                        இலங்கைக்கு உதவுன் முகமாக ,மேலும் கடன் வழங்கும் திட்டத்துடன் ,இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரவுள்ளனர் .

                        இந்த விசேட குழுவினருடன் ,இலங்கை அரச பிரதி நிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்,

                        இந்த பேச்சுவார்த்தையின் பொழுது, இலங்கைக்கு கடனுதவி வழங்கும் திட்டம் தொடர்பில் பேச படும்,

                        சர்வதேச நாணய நிதியம் ,இலங்கைக்கு விதித்த சில நிபந்தனைகளை ,இலங்கை அரசு ஏற்று நிறைவேற்றிய நிலையில் இந்த கடனுதவி வழங்க படவுள்ளது.

                          குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
                          Posted in இலங்கை செய்திகள்

                          குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து

                          குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து

                          மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                          திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.

                          குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                          இவர்கள் பயணித்த அதி சொகுசு கார் மெகொட கஜுகஹயத்தெனிய பிரதேசத்தில்
                          வீதியை விட்டு விலகி வீடொன்றின் சுவரை கவிழ்த்து வீட்டின் முன்பகுதியில் மோதி நின்றுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

                            காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

                            ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள்

                            வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

                            சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

                            காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால்இ உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்.

                            இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு ஆன்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம்.

                            மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன்,


                            அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட
                            வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

                              ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு
                              Posted in இலங்கை செய்திகள்

                              ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு

                              ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் ரணில் சந்திப்பு

                              ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

                              ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக்

                              அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின்

                              வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.

                              ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி
                              விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை

                                பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை

                                பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய

                                பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

                                இச்சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து 710 மில்லிகிராம் கேரளா கஞ்சாஇ இலத்திரனியல் தராசு மற்றும் 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

                                சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்

                                  இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்

                                  இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலில் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி இன்று (18) ஆரம்பிக்கப்பட உள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

                                  100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெ அடங்கிய குறித்த கப்பல் கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தது.

                                  அதன் ஆய்வக பரிசோதனையின் பின்னர், இன்று முதல் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

                                  இதன்படி, தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் இந்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

                                  அத்துடன் மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 23 மற்றும் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடைய உள்ளது.

                                  இந்த கப்பலில் 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்ய நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

                                    இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்

                                    இராணுவ முகம் அருகில் கவிழ்ந்த வாகனம்

                                    இலங்கை திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்திற்கு அருகில் ,வான் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

                                    சீனக்குடா விமானப்படை இராணுவ முகாம் பகுதியில், உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில் ,வேகமாக பயணித்த வாகனம் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது .


                                    வாகனம் கவிழ்ந்த பொழுதும் ,அதனை செலுத்திய சாரதி காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டார் .

                                    சாரதியின் அலட்சிய போக்கே ,மேற்படி வாகன விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

                                    இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி, நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                                      தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

                                      தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

                                      திருகோணமலை – புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் ஆண்டாங்குள விவசாயிகளுக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பசளைகளை பிரிதொரு பிரதேசத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த செயற்பாட்டை குச்சவெளி

                                      பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்தி பசளைகளை ஆண்டாங்குள விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

                                      புல்மோட்டை கமநல சேவை நிலையத்தினால் இந்த விடயம் முன்னெடுக்கப்படுவதை அறிந்து கொண்ட ஆண்டாங்குள விவசாயிகள்

                                      தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு
                                      தவிசாளரின் விடாமுயற்சியால் விவசாயிகளுக்கு பசளை வழங்கி வைப்பு

                                      குறித்த விடயத்தை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                                      இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கமநல திணைக்கள ஆணையாளரை தொடர்பு கொண்டு

                                      ஆண்டங்குள விவசாயிகளின் நிலமையை தெளிவுபடுத்திய பின்னர் மாவட்ட கமநல உதவி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக ஆண்டாங்குள

                                      விவசாயிகளுக்கு உரிய பசளைகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

                                      இதனை முன்னெடுத்த தவிசாளருக்கு ஆண்டாங்குள விவசாயிகள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

                                      பைஷல் இஸ்மாயில் –

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

                                        புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

                                        யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்தி சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

                                        அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

                                        சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                                        இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

                                        அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

                                        புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

                                        நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

                                        அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

                                        அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

                                        வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

                                        மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

                                        சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

                                        சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

                                        வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.