காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

Spread the love

காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள்

வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால்இ உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்.

இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு ஆன்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன்,


அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட
வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *