இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்

Spread the love

இலங்கை வந்தடைந்த மசகு எண்ணெய் கப்பல்

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலில் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி இன்று (18) ஆரம்பிக்கப்பட உள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெ அடங்கிய குறித்த கப்பல் கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தது.

அதன் ஆய்வக பரிசோதனையின் பின்னர், இன்று முதல் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன்படி, தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் இந்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல் எதிர்வரும் 23 மற்றும் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடைய உள்ளது.

இந்த கப்பலில் 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்ய நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

    Leave a Reply