சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சீமானை ஒன்னும் பன்ன முடியாது|இனி இந்த பக்கமே வரமாட்டேன் தெறித்து ஓடிய விஜயலட்சுமி
Posted in இலங்கை செய்திகள்

சீமானை ஒன்னும் பன்ன முடியாது|இனி இந்த பக்கமே வரமாட்டேன் தெறித்து ஓடிய விஜயலட்சுமி

சீமானை ஒன்னும் பன்ன முடியாது|இனி இந்த பக்கமே வரமாட்டேன் தெறித்து ஓடிய விஜயலட்சுமி

G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை
Posted in இலங்கை செய்திகள்

G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை

G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான “G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸ் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியதுடன், மாநாடு தொடங்கும் முன், இதில் பங்கேற்ற அனைத்து அரச தலைவர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த மாநாட்டை கூட்டியது குறித்து கியூபா ஜனாதிபதி மிகெல் டியெஸ் கெனெல் பெர்மியுடெஸை (Miguel Diaz-Canel Bermudez) பாராட்டி தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, பல்வேறு பலதரப்பு அமைப்புகளில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் நோக்கங்கள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கியூபா ஆற்றியுள்ள வரலாற்றுப் பங்கை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடிகள் போன்றவை, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று, அந்த நிலைமையை, உலகளாவிய கடன் நெருக்கடி மேலும், அதிகரிக்கச்செய்வதுடன், அதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் நிலை, உலகளாவிய ரீதியில் தெற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

15 ஆம் நூற்றாண்டில் துப்பாக்கி குண்டுகள், பீரங்கிகள் மற்றும் கடல் பயணக் கப்பல்கள் போன்ற துறைகள் மூலம் ஐரோப்பா அடைந்த முன்னேற்றங்கள் காரணமாக, அவற்றுக்கு உலகின் பிற நாடுகளைக் கைப்பற்ற முடிந்தது. அதன் விளைவாக, உலகில் இன்று தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன.

அதிக செலவு காரணமாக, சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள் மற்றும் நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது என்பதே எமது நம்பிக்கையாகும்.

21ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது. அந்த இடைவெளியைக் நிரப்புவதற்காக, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Big Data, Internet of Things (IoT), செயற்கை நுண்ணறிவு (AI), Blockchain, உயிரியல் தொழில்நுட்பவியல் (Biotechnology) மற்றும் மரபணு வரிசைமுறை (Genome Sequencing) போன்ற புதிய தொழில்நுட்பங்களை நோக்கி நாம் விரைவாக செல்ல வேண்டியது அவசியமாகும்.

அபிவிருத்திப் பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான செயல்முறையை இலகுபடுத்துவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும், அந்தச் செயல்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, அதற்குத் தேவையான அறிவு மற்றும் முழுமையான தொழில்நுட்பத்துடன், கற்ற தொழிற்படையும் இருக்க வேண்டும்.

தற்போது குறைந்த செயற்திறனுள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மதிப்பீடுகளைச் செய்வதற்கும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையொன்றையும், டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனமொன்றையும் நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளது.

மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பிரதிபலனாக, புதிய தொழில்நுட்பவியலுக்காகவே விசேடமான நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் இலங்கை திட்டமிட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றம் குறித்த உத்தேச சர்வதேச பல்கலைக்கழகத்தை அதில் ஐந்தாவதாக ஸ்தாபிப்பதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதியின் உரை

“G77 + சீனா” குழுவில் செயற்திறன் மிக்க ஒத்துழைப்பு பொறிமுறை ஒன்றும் தேவை. உலகளாவிய தெற்கிற்கான விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுக்கான ஒன்றிணைவு (COSTIS) புத்துயிர் பெறச்செய்வதற்கு அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஒரு தசாப்தமாக அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஒதுக்குவதன் மூலம், உறுப்பு நாடுகள் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்க விரும்புகின்றேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையைப் பின்பற்றி, டிஜிட்டல் மயமாக்கல், சுகாதாரம், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில், தொழில்நுட்பத் தளங்களை உருவாக்குவதற்கு அரச துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டும் ஒத்துழைப்புடன் செயற்படுவது மிகவும் முக்கியமாகும்.

உலகளாவிய ரீதியில் தெற்கிலிருந்து வடக்கிற்கு இடம்பெறும் நுண்ணறிவு ஓட்டத்தின் பிரதிபலனாக கல்வி கற்ற தொழிற்படை இழப்பு, தெற்கின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளின் வளர்ச்சிக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் அவர்களின் தொழிற்படைப் பலத்தை மேம்படுத்தி, அதன் மூலம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் முன்னேற்றியுள்ளது. அதன் காரணமாக உலகில் தெற்கு என்ற ரீதியில் நமது கற்ற தொழிற் படை இழப்புக்காக, உலகின் வடக்கில் இருந்த இழப்பீடு கோரப்பட வேண்டும்.

உலகளாவிய ரீதியில், தெற்கு நாடுகளுக்கு இடையில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஒத்துழைப்பை மேம்படுத்தல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், மற்றும் விஞ்ஞானம், தொழிநுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றின் ஆற்றல்களைப் பயன்படுத்தக் கூடிய கொள்கைகளை மேம்படுத்துவதற்கு கொழும்புத் திட்டத்தைப் போன்ற ஒரு திட்டத்தை உருவாக்குவது குறித்தும் நான் இங்கு பரிந்துரைக்கின்றேன்.

புதிய ஹவானா பிரகடனத்தை ஆதரிப்பதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்த வேண்டும். “G77 + சீனா” அரச தலைவர்களின் உச்சிமாநாட்டின் கூட்டுக் குரல், சர்வதேச ரீதியில் ஒலிக்கச் செய்ய ஒன்றிணையுமாறும் நான் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
Posted in இலங்கை செய்திகள்

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இலங்கையில் நடந்த பயங்கரம்

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இலங்கையில் நடந்த பயங்கரம்

நேற்று பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சடலம் நீல நிற பயணப்பொதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (15) மாலை சீதுவை பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தில், தன்டுகங் ஓயாவின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இலங்கையில் நடந்த பயங்கரம்

அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..

நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

யாழில் காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் காதலியின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலன்

உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி 26 வயது இளைஞன் பலி

ரயில் மோதி 26 வயது இளைஞன் பலி

அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (15) இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உயிரிழந்தவர் மஹவ மடபொகுன பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம்

செல்லாததால் , வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார் , அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் அதிரடியாக கைது

இதன் போது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு , பொலிஸர்ரை தாக்கியும் உள்ளார். அதனை அடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , அச்சுவேலியில் இருந்து மேலதிக பொலிஸார்

அங்கு விரைந்து , பருத்தித்துறை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்

தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிசாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் என பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் சம்பவ இடத்தில் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ். வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.

குறிப்பாக சின்னவளை, பொலிகண்டி, நிலவன், கே.கே.எஸ் மற்றும் ஆனைப்பந்தி ஆகிய ஐந்து இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த முகாம்களில் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்கள் தொடர்ந்தும் மனிதநேய அமைப்புக்களின் உதவியுடன் தொடர்ந்தும் பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுத்து வந்த நிலையில் சுமார் 33 வருடங்களின் பிற்பாடு பலாலி வடக்கு (J/254) கிராம அலுவலர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட அரச காணியில் அவர்களுக்கு என காணி அளவீடு செய்யப்பட்டு, மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்

எனினும் அந்த மக்களின் சொந்த பூர்வீக காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அந்த மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளதோடு அக்காணிகள் படையினர் வசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 33 வருடங்கள் முகாம்களில் இருந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்த தாங்கள் முகாம்களில் இருந்து முதலில் வெளியே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்காணிகளை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

5 முகாம்களை சேர்ந்த 49 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் 45 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய 4 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

45 குடும்பங்களுக்கும் 13 1/2 ஏக்கப் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இந்து கோவிலுக்கு 10 பரப்பு காணியும், பாடசாலைக்கு என 2 ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு ஒரு குடும்பத்திற்கு தலா 2 பரப்பளவு காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

மெசிடோ நிறுவனத்தின் உதவியுடனும் ஒத்துழைப்போடும் தாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டங்களின் பலனாகவே தமக்கு இக்காணி கிடைத்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

தற்போது தமது மீள் குடியேற்றத்துக்கு என வழங்கப்பட்டுள்ள குறித்த காணியானது மேய்ச்சல் தரைக் கூறிய காணியாக உள்ளது. குறித்த காணியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்க கூடிய நிலை காணப்படுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காணியானது மக்கள் வசிப்பதற்கு உகந்தது இல்லை எனவும்,இந்த காணியில் தாங்கள் இதற்கு முன்னர் வசிக்கவில்லை என்றும் மக்கள் வசிக்காத காணியையே தமக்கு வழங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த காணியில் மக்கள் வசிப்பதாக இருந்தால் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குறித்த காணிகளுக்கு சுற்று வேலி அமைத்தல் வேண்டும்,தற்காலிக கொட்டகைகள் அமைக்க வேண்டும், குடிநீர் வசதி, மலசல கூட வசதி மற்றும் மின்சார வசதிகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்

குறித்த மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களினால் உடனடியாக குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும், அதற்கான உதவிகளை அரசாங்கத்திடம் இருந்தும் அரச சார்பற்ற அமைப்புகளிடம் இருந்தும் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும் எதிர் காலத்தில் தமது பூர்வீக காணிகளையே மீட்டெடுப்பதே தமது இலக்காக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் எங்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற மெசிடோ அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, குறித்த அமைப்பின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் எங்களுக்கு எந்த நேரத்திலும் பக்க பலமாக செயல்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி

எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சாத்தோட்டம் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்

கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்

கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

இலங்கையில் விமானிகள் பற்றாக்குறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் விமானிகள் பற்றாக்குறை

இலங்கையில் விமானிகள் பற்றாக்குறை

விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, புதிய வெளிநாட்டு விமானிகளை நியமிக்க அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

3 மாத காலப்பகுதிக்குள் 6000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

3 மாத காலப்பகுதிக்குள் 6000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து 6000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என இந்திய துணைத் தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.

ஜூன் 16, 2023 அன்று அதன் தொடக்க வருகையிலிருந்து, 9 அடுத்தடுத்த பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர், அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சார பிணைப்புகளையும் அனுபவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் கோவில்களின் அற்புதமான அனுபவத்தை சுற்றுலாப் பயணி பெற்றுள்ளார்.

வட மாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் உதவியுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகமும் வலி வடக்கு பிரதேச சபையும் ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் வடமாகாண ஆளுநர் முயற்சிகளை ஒருங்கிணைத்தார்.

இந்த மேம்படுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகத்திற்கும் உதவியது மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வழிகளை வழங்கியுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் தடயப்பொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் தடயப்பொருட்கள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் தடயப்பொருட்கள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் ​நேற்று (14) இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி சன்னம் ஒன்றும், அத்தோடு அவர்களுடைய நீளகாற்சட்டையில் இ – 1124 இலக்கமும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டன.

இந்நிலையில் எட்டு நாட்கள் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ. பிரணவன், சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல், சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன், றணித்தா ஞானராசா, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று (14) அகழ்வு நடவடிக்கையின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அகழ்வுபணியானது இன்று (15) தொடரும் என சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

மதகின் கீழ் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது.

நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

நல்லூரில் ஒருவர் பலி

நல்லூரில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (14) மாலை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாட்சாப் பயன்படுத்து வோருக்கு வருகிறது ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய WhatsApp இலக்கம்

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய WhatsApp இலக்கம்

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு WhatsApp இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய WhatsApp இலக்கம்

076 54 53 454 எனும் WhatsApp இலக்கத்துக்கு தகவல்கள், முறைப்பாடுகள், காணொளிகள் அல்லது படங்களை அனுப்ப முடியும் என அவர் கூறினார்.

மேலும், 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்துக்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் மேலும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

கிளிநொச்சி இளைஞர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (13) இரவு அலங்கார பணிகளில் ஈடுப்பட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மூவர் இன்றைய தினம்(14) அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இனந்தெரியாதோர் குழுவினர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் என பி​ரதேசமக்கள் தெரிவித்துள்ள ​நிலையில் பொலிஸார் மேலதிக விசார​ணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

19 இந்திய மீனவர்கள் கைது

19 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் உட்பட அவர்களது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இன்றையதினம்(14) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு
Posted in இலங்கை செய்திகள்

IMF உறுப்பினர் குழு இன்று வருகை

IMF உறுப்பினர் குழு இன்று வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழுவொன்று இன்று (14) இலங்கை வரவுள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்காக வரவுள்ள குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மீளாய்வு நடவடிக்கைகள் இடம்பெறும்.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்தது.