யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது

மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது

வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து நடத்திய பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸார் குறித்த கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

பழைய கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பாடசாலை மாணவிகளை பொலிஸார் கைது செய்தனர்.

அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவை இந்த மாணவர்கள் அருந்தியதாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணையில், அவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கைவிடப்பட்ட கட்டிடத்தில் கூடி மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் பூட்டை உடைத்து கட்டிடத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தொடர்பில் பெண் ஒருவர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.

குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியும், திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்கள் தான். இந்நிலையில் தான் ஆர்டிஐயில் அண்ணாமலை பெற்ற தகவல்களின் முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தபோது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. தற்போது கச்சத்தீவு பிரச்சனையால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கச்சத்தீவு பற்றி பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் ‛‛கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால செயல்திறனாக உள்ளது. காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான தகவல்களை பெற்றிருப்பது தான் காரணம். அண்ணாமலை பெற்றுள்ள தகவலில், ‛‛முன்னாள் பிரதமர் நேரு1961 மே 10ம் தேதி கச்சத்தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான உரிமையை விட்டு தயங்கமாட்டேன் என பேசியுள்ளார். கச்சத்தீவுக்கு இந்தியா உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளதாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960ல் கூறியிருந்தாலும் கூட நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது.

மேலும் 1973ல் இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவிற்கு கச்சத்தீவு உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது” என்ற விபரங்கள் உள்ளன.

இந்த தகவல் தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை சாடியுள்ளார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன், ‛‛தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை. கச்சத்தீவு கைமாறியது காங்கிரஸ் ஆட்சியில் 1976ல். இதை பற்றிய முழு விபரம் 1974ஜுன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு” என கூறியுள்ளார்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகும். அந்த வகையில் தான் தற்போதும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ
Posted in இலங்கை செய்திகள்

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ

குவைட் முதலாளியுடன் மனைவி ஆத்திரத்தில் கணவன் வீட்டுக்கு தீ

குவைட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தனது முதலாளி மற்றும் சாரதியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவ்விருவரும் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியும் உள்ளனர்.

இதனால், மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. கடும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த கணவன், மனைவியை தாக்கியுள்ளார். சனிக்கிழமை (30) வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குவைட் முதலாளி, அவருடைய சாரதி கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான கணவரின் தந்தையின் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி, வெலிபோதாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 வயதுடைய இந்தப் பெண், குவைத்தில் பணிபுரிந்து வந்த தனது முதலாளியான 80 வயதான அப்துல் சைட் ஆலபல்லாயன் மற்றும் அவரது சாரதி கே.கே.நாமல் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதற்கு முன் பலமுறை அவ்விருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார்.இதுகுறித்து கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (30) கடும் கோபமடைந்த கணவன், மனைவியை தாக்கி அவருடன் வந்த குவைத் நாட்டவர் மற்றும் டிரைவரை தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

குவைத் நாட்டைச் சேர்ந்தவர், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கிருந்த 70 வயது சுகயீமடைந்திருந்த கணவரின் தந்தையான திஸ்ஸ ஹெட்டியாராச்சி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை பிபில பதில் நீதவான் திரு.சரத் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) நடைபெறவிருந்தது.

கணவன்தான் வீட்டுக்கு தீ வைத்தாரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவைட் நாட்டைச் சேர்ந்தவரை விசாரிப்பதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி பெறப்பட உள்ளது.

பூங்காவில் பதுங்கிய முதலை மடக்கி பிடிப்பு|உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி பலி

நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி பலி

கலங்குட்டிவ ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார் என மெகலேவ பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

லிகொலவெவ, சியம்பலங்காமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ஆற்றில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டெங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

விடயம் தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில்

வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் (31) ஏற்பட்ட தீயினால் சமையலறை பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு கசிவு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்


ரன்மினிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம, ரன்மினிதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை ரன்மினிதென்ன பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, ​​பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியம்.

அத்தோடு தற்போது உள்ள, மக்கள் ஆணையில்லாத பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடத்த வேண்டிய தேர்தல்களை கூட நடத்தாமல் இருக்கிற இந்த ஜனாதிபதி இனியும் தாதமிக்காது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்றார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,

தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார்.

மேலும் பொது வேட்பாளரோ தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கிற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகிற உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார் யார் வேட்பாளர்கள் என தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ள விடயம் குறித்து கேட்ட போது,

அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்கு தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் இங்குள்ள தமிழ்க் கட்சிகளை சந்தித்து ஆதரவை கோர உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போது,

அடுத்தவாரம் அவர்கள் சந்திக்க உள்ளதாக கூறினார்.

மேலும் அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் தேர்தல் என்று வருகிற பொழுது அதில் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகிற பொழுது நாங்கள் உறுதியான சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவை தீர்மானிப்போம். இவ்வாறான நிலைமையில் தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மை சந்திக்க போவதாக சொல்லியுள்ளனர். எனவே எம்மை சந்திக்க வருகிற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம் என்றார்.

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கூறியுள்ளது.

இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

நாடலாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்

விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்

மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை அனைவராலும் பேசப்படுகின்றது.

காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனை அமுல்படுத்தப்பட்டது.

மஹியங்கனை மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 தொழிற்பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் “யுக்திய” நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக போக்குவரத்தையும் பொதுமக்களையும் சோதனை செய்ய இவ்வாறு ஒன்றிணைந்தனர்.

ரிதிமாலியத்த, எகிரியன் கும்புர, லொக்கலோயா, தம்பான 51 மைல்கல், வெரகந்தோட்டை பாலத்திற்கு அருகில், சொரபொர சந்தி ஆகிய 06 இடங்களில் இந்த சோதனைகள் இடம்பெற்றன.

பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு ஆய்வுகளின் நடைமுறை அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டமாக அமைந்திருந்தது.

அதாவது நேற்று (29) மாலை குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

இப் போராட்டம் வழமைக்கு மாறாக தீச்சுடர் ஏந்திய ஓர் போராட்டமாக மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்

அக்கரைப்பற்று கொழும்பு பஸ் விபத்து பலர் காயம்

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அதிசொகுசு பஸ் இன்று (30) அதிகாலை, மட்டக்களப்பு ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் சிக்கி, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, சில வர்த்தக நிலையங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4 ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்

மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ள நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க (54வயது) என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனுராதபுரம் – கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது எதிர்க்கட்சித் தலைவர்

இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது எதிர்க்கட்சித் தலைவர்

இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி இந்நாடு அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. இந்நாடு எந்தத் தலைவருக்கும் எழுதிக் கொடுப்படவில்லை. அரசியல்வாதிகள் இந்நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முழு நாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் சொந்தம் என்பது போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக இந்நாட்டின் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே என்று நினைப்பது தவறு. இந்நாடு ஒரு குடும்பத்திற்கோ அல்லது உறவினர்களுக்கோ சொந்தமானது அல்ல, இந்நாடு அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த 220 இலட்சம் சிங்கள தமிழ் முஸ்லிம் பர்கர் பிரஜைகளுக்கு சொந்தமானது எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கட்சிகளின் உரிமைகள் தந்தையிடமிருந்து மகனுக்கும் பின்னர் பேரனுக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளன. சில அரசியல் கட்சிகளால் இவ்வாறு நடந்து கொள்ள முடியுமாக இருந்தாலும், 220 இலட்சம் மக்களுக்கே இந்நாடு உரித்துடையது. இது எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தினருக்கும் சொந்தமானது. இனங்கள் மதங்கள் இடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையே வேறுபாடுகளை பிரிவினைகளை உருவாக்கி எம்மால் முன்னேற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 136 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வவுனியா,நெடுங்கேணி ஒலுமடு தமிழ் வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 28 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

நாட்டின் உரிமை எந்தக் குடும்பத்துக்கும் தனித்து சொந்தமானதல்ல. 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து தற்காலிக பாதுகாவலர்களாக பணியாற்ற வேண்டும்.

ஸ்மார்ட் கல்வியின் மூலம் ஸ்மார்ட் இலங்கை உலகில் முதல் ஸ்தானத்திற்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்த பல நாடுகளின் அரச தலைவர்கள் சர்வதேச ஒத்துழைப்பு மாநாடுகளை நடத்திய போதிலும், இந்நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை இன்னும் நம் நாட்டு தலைவர்களால் நடத்த முடியாது போயுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இத்தகைய ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த எதிர்பார்க்கிறோம். அழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளையும் மக்களின் வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் முறைமையில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த முறைமையில் மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியே ஆரம்பித்து வைத்துள்ளது. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக எந்த எதிர்க்கட்சியும் ஆற்றாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆற்றிவருகிறது. அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முன்னைடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு நிலவும் இந்த வங்குரோத்து நாட்டில் கல்வி, சுகாதாரத்துறைக்கு தற்போதுள்ள அரசால் கூட செய்ய முடியாத சேவையை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி, அந்தஸ்து என பிளவுபட்டு வாழும் இலங்கை மக்கள், ஒரே தாய் தந்தையரின் பிள்ளைகளாக ஒன்படும் யுகத்தை ஆரம்பிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன
Posted in இலங்கை செய்திகள்

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும் உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது – எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை.

இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும் பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்