Posted in சினிமா

விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜனி ரசிகன்

விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜனி ரசிகன்

இந்திய தமிழகம் விழிப்புரம் பகுதியில் அயல் வீட்டு நபர்கள் இருவருக்கு இடையில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது

விஜயா ,ரஜனி உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்துள்ளது .

அப்பொழுது மாறி மாறி வாய்தர்க்கத்தில் ஈடுபட்ட பொழுது ,.கோபத்தின்

உச்சத்திற்கு சென்ற ரஜனி ரசிகர் ,விஜய் ரசிகரை அகோரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார்

26 வயதுடைய ரஜனி ரசிகர் கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
நாடு போற போக்கிலே இவனுகளுக்கு இந்த சண்டை .

மராட்டிய ராஜனிக்கு சண்டை போட்டு இவர் இப்போது ஆயூள் முழுவதும்

சிறையில் ,தண்டனை பெற்று சாக வேண்டியது தான் ,ரஜனி வந்த இவரை காப்பாற்றவா போகிறார் என்ன ..?

Posted in சினிமா

இந்தியாவை விட்டு வெளியேறிய சன்னி லியோன்

இந்தியாவை விட்டு வெளியேறிய சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்.

இந்தியாவை விட்டு வெளியேறிய சன்னி லியோன்
சன்னி லியோன்


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நடிகை சன்னி லியோன் தனது கணவர்

குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இதை சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது கார்டனில் உள்ள வீட்டில் தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக

இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது

தாயார் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சன்னி லியோன் குழந்தைகளுடன்

இந்த நிலையில் உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னி லியோன் எப்படி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார்

என்ற கேள்விக்கு பதிலளித்து சன்னி லியோனின் கணவர், ‘அரசின் KLN விமானத்தில்தான் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.

      Posted in சினிமா

      ரஜினியை முந்திய கமல்… ஆனால், தனுஷே முதலிடம்

      ரஜினியை முந்திய கமல்… ஆனால், தனுஷே முதலிடம்

      தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியை நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல் முந்தி இருக்கிறார்.

      ரஜினியை முந்திய கமல்… ஆனால், தனுஷே முதலிடம்
      ரஜினி, கமல்


      ரஜினிகாந்த் 2013ம் ஆண்டு டுவிட்டருக்குள் வந்தார். அவர் வந்தபின் சுமார் மூன்று வருடங்கள் கழித்து 2016 இல் தான் கமல்ஹாசன்

      டுவிட்டருக்குள் வந்தார். ஆனால் அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.

      டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்றுகூட கமல்ஹாசன் மீது அடிக்கடி அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் களத்தில்

      இறங்கி தேர்தலில்போட்டியிட்டு கணிசமான வாக்குகளும் பெற்றார்.

      இந்நிலையில் டுவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது.

      ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள்.

      கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார். நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும்

      கமல்ஹாசன் அடிக்கடி டுவீட்டுகள் போட்டாலும், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் 90 லட்சம் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

      தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

      சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் வாய் போர் தீவிரம் பெற்று வரும்

      நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனா மஞ்சள் கால்வாய் நோக்கி

      அமெரிக்கா மேலதிக விசேட போர் கப்பல் அணி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது .

      இந்த கப்பல்களில் விமான இறங்குதள வசதிகள் கொண்டவையாகவும்,

      அணுகுண்டுகளை காவி செல்ல கூடிய வசதி கொண்ட கப்பல்களாக உள்ளன ,

      விரைந்து செல்லும் இந்த கப்பல்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால்

      தாக்குவோம் என சீனா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது

      இவ்வாறான வெளிப்படையான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாது

      இந்த அமெரிக்கா கப்பல்கள் அணிவகுத்து செல்வது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

      தென் சீனா கடல் நோக்கி
      தென் சீனா கடல் நோக்கி
      Posted in சினிமா

      தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா

      தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா

      தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமாக இருக்கும் தமன்னா தாய் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதால் அதை கற்று வருகிறார்.

      தாய்மொழி தெரியாமல் கஷ்டப்படும் தமன்னா
      நடிகை தமன்னா


      ‘கேடி’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா.


      இதைத் தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. தனுஷின் படிக்காதவன்,

      சூர்யாவின் அயன், கார்த்தியின் பையா, விஜயின் சுறா, அஜித்தின் வீரம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

      தமிழ் வெப்சீரிசில்லும் நடித்து அவரே டப்பிங்கும் பேசி வருகிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

      இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடித்தார்.

      தமன்னாவின் தாய் மொழி சிந்தி. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில்

      பேசும் நடிகை தமன்னாவுக்கு தனது தாய்மொழியில் பேசத் தெரியாது.

      சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால்,

      இந்த ஊரடங்கில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்கிறார்.

      மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய் மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

      Posted in சினிமா

      1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்

      1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்

      பின்னணி பாடகர் வேல்முருகன், அன்னையர் தினத்தை முன்னிட்டு1500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.

      1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்
      பின்னணி

      பாடகர் வேல் முருகன் உணவு வழங்கிய காட்சி
      தமிழில்

      பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். பாடகராக ரசிகர்களை

      கவர்ந்த இவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு அயனாவரத்தில் இருக்கும் மக்கள் 1,500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.

      இவருடன் டெப்டி செகரெட்டரி பிரகாஷ் IAS, ஐகோர்ட் செகரட்டரி மோகன்,

      அடிஷனல் செகரிடி நாகப்பன் ஆகியோர் இணைந்து 1500 பேருக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்.

      வேல் முருகன் உணவு வழங்கிய காட்சி

      அம்மா என்று சொல்லி பாருங்க… அந்த வார்த்தை கூட தெய்வமாகுங்க…

      கடவுளிடம் கேட்டு பாருங்க… தாயின் கருவறையே கோயில்தானங்க…

      என்ற பாடலையும் உருவாகி வெளியிட்டிருக்கிறார்.

      1500 பேருக்கு உணவு
      1500 பேருக்கு உணவு
      Posted in சினிமா

      2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்

      2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்

      தெலுங்கு படவுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

      ஊரடங்கு நேரத்தில் 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்


      தில் ராஜு மற்றும் அவரது மனைவி
      தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த

      திரைப்படங்களை தயாரித்தவர் தில் ராஜு. இவர் நேற்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்

      49 வயதான தில் ராஜு முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம்

      ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து

      அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.

      தில் ராஜு மற்றும் அவரது மனைவி

      இந்த நிலையில் மகளின் வற்புறுத்தல் காரணமாக நேற்று நிஜாமாபாத்

      பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

      ஊரடங்கு நேரத்தில் இந்தத் திருமணம் நடந்ததால் இருவீட்டாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்

      2-வது திருமணம்
      2-வது திருமணம்
      Posted in சினிமா

      நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்

      நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்

      47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை சித்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

      47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகை சித்தாரா விளக்கம் சித்தாரா


      கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்த படம் வெற்றி பெற்றதால், வாய்ப்புகள் குவிந்தன.

      இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன்,

      ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

      இப்போது வயதாகிவிட்டதால் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும்

      தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், தான் இன்னும்

      திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .

      சித்தாரா

      இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன்.

      அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

      47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு

      எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

      நான் திருமணம் செய்யாதது
      நான் திருமணம் செய்யாதது
      Posted in சினிமா

      ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் – ஆடம் பிடிக்கும் நடிகை

      ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் – ஆடம் பிடிக்கும் நடிகை

      தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தான் ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

      எனக்கு அது செட் ஆகாது…. ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் –
      ‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக

      அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய

      படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.

      அடுத்து, விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக

      மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.

      பிரியா பவானி சங்கர்

      “தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால்தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும்

      என்று பேசப்படுகிறதே… நீங்கள் எப்படி?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர்

      கூறியதாவது: “என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க

      மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்”.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ஒருபோதும் அப்படி
      ஒருபோதும் அப்படி
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      சொல்லாமல் வந்த காதல் .!

      சொல்லாமல் வந்த காதல் .!

      பெற்றவரை நீ இழந்து
      பேரழகே வாடையில…..
      நெஞ்சமெலாம் வேகுதடி
      நினைவிழந்து சாகுதடி……

      ஒற்றையிலே நீ இருந்து
      ஓரமா அழுகிறியே ….
      சாத்தியமா உனை காக்க
      சம்பந்தம் செய்யலேயே …..

      தேடி வந்த வேளையிலே – என்
      தேதியில நீ இல்ல …
      வேரறுத்து போகையில- நீ
      வேறாகி போனாயே …

      தங்கிட தான் துடித்தேண்டி
      தவமாய் தவித்தேண்டி …
      விதி வந்து விளையாட
      விலகி நீ போனாயே …

      இன்ரழுது துடித்தேண்டி
      ஈர் விழியால் உடல் நனைத்தேண்டி …
      என்னழகே உனை தேற்றிடவே
      என்ன யான் செய்திடுவேன் …?

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -11/05/2019

      Posted in சினிமா

      மீனாவை கிண்டலடித்த ரஜினி

      மீனாவை கிண்டலடித்த ரஜினி

      அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்தது குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

      கிண்டலடித்த ரஜினி…. புன்னகையுடன் பகிர்ந்த மீனா
      மீனா, ரஜினிகாந்த்


      ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோசி என்ற

      கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதில் தான் அவர் அறிமுகம். 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தை

      நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

      இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த மீனா, இந்த படத்தின் போது

      தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

      அந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும்

      தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார்.

      மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

      உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை பகிர்ந்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு

      சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் பகிர்ந்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான்

      நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான காட்சி, ஏனெனில் எனக்கு சாக்லேட்,இனிப்புகள் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.

      தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும்

      கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

      Posted in சினிமா

      விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்

      விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்

      மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின் கோரிக்கையை ஏற்ற விஜய்

      மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்க, ஒரே போன் காலில் விஜய் – அனிருத்திடம் லாரன்ஸ் சம்மதம் வாங்கி உள்ளார்.

      மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின் கோரிக்கையை ஏற்ற விஜய்
      லாரன்ஸ், விஜய்


      மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி

      இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அவரை வாழ்த்தி இருந்தார்.

      இதனிடையே லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளிகள் குழுவில்

      இருப்பவர். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே

      அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்திருந்தார்.

      விஜய், அனிருத், தான்சேன்

      இந்நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யும், அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி

      தெரிவித்து லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நேற்றிரவு நண்பன் விஜயிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும்

      அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார்.

      அதே போல அனிருத்தும் அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

      அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி” என தெரிவித்துள்ளார்.

      விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்
      விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

      காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி

      இலங்கையில் இறுதி போர் உக்கிரம் பெற்று ,அந்த போரானது முடிவுற்ற நிலையில் அங்கிருந்து தப்பித்து


      வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் விடுதலை புலிகளின் முக்கிய படைத்துறை தளபதிகள்

      அவ்வாறு இங்கு வந்திருந்த தளபதிகளில் சிலர் இலங்கை சென்று ,அவர் தம் காட்டி கொடுப்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,

      மேலும் விடுதலை போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ,போரால் பாதிக்க பட்ட போராளிகள் ,மற்றும் மக்களுக்கு

      உதவிகளை செய்திட வேண்டும் என கூறிய படி வெளி நாட்டு மக்களிடம் பணத்தை பெற்று உதவிகள் இடம்பெற்று வருகின்றன

      இதற்கு அனைத்துலக எனப்படும் விடுதலை புலிகளின் அமைப்பு மக்களிடம் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது

      அவ்வாறான பணத்தில் கஞ்சா அருள் எனப்படும் புத்தூரை சேந்த நபர் ஊடக உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்

      இவ்வாறு மக்களுக்கு உதவுவதாக தெரிவித்து அவர்களுக்கு வழங்க படும் நிதியில் அரைவாசி பகுதியினை இவர் சுருட்டி கொள்வதுடன்

      ,அவ்விதம் உதவி பெற்றவர்களை சில வாரங்கள் கழிய சென்று மிரட்டி வழங்கிய பணத்தையும் சுருட்டி விடும் செயலில் ஈடுபட்டுள்ளார் .


      இவர் இலங்கை அரசபுலானய்வு துறையின் நேரடி முகவராக செயலாற்றி வருகின்றார்

      கஞ்சா அருள் என்றால் யாழ்பாணம் அதிர்கிறது ,அது மட்டுமல்ல வேறு பல விடயங்களையும் இவர் நடத்திய வண்ணம் உள்ளார்

      இவரை பகைத்திட முடியாத நிலையில் அப்பாவி மக்கள் வாய்களை மூடி மவுனமாக உள்ளனர் ,

      விடுதலையின் எழுச்சிக்கு திறம்பட செயலாற்றிய அணைத்துலக கட்டமைப்பு ,மக்கள் நலன் கருதி வழங்கிய இந்த நிதியினை

      தவறான முறையில் கையாடல்புரிந்து வருகிறது,
      சுவிஸில் உள்ள ரகுபதி ஊடக வழங்க படும் இந்த நிதியே இவ்விதம் சுரண்ட படுகிறது

      சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது வெள்ளி பணத்தை அள்ளி வழங்கி வரும் இவ்வேளையில் இந்த முறைகேடான செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது

      நேரிய சிந்தையில் ,தியாகங்களை புரிந்து செயல் பட்டு வந்த அனைத்துலகம் , இதனை கவனத்தில் எடுத்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்

      இவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான கயவர்களை இனம் கண்டு ,தமது அமைப்புக்கு வீச படும்

      கறையினை கழுவ வேண்டும் என்பதே ஈழ தேசிய மக்கள் அவாவாக உள்ளது

      சமூகத்தை காப்பதாக கூறிய வண்ணம் ,அதே சமூகத்திற்கு கஞ்சா ,மற்றும் போதைவஸ்துக்ளைவழங்கி ,போரிடும் சிந்தையை

      சிதைத்து ,குற்றவியல் சமூகமாக மாற்றி வரும் இந்த கஞ்சா அருள் துடைத்து அழிக்க
      பட வேண்டிய ஒருவராகும் ,

      மேற்படி குற்றவியல் விடயத்தினை கவனத்தில் எடுத்து செயலாற்றுமா ..?சுவிஸ் ரகுபதி தலைமையிலான குழுவினர் ..?

      காட்டி கொடுப்பில் ஈடு
      காட்டி கொடுப்பில் ஈடு
      Posted in சினிமா

      நடிகை மீது வழக்கு – அதிர்ச்சியில் அம்மணி

      நடிகை மீது வழக்கு – அதிர்ச்சியில் அம்மணி

      பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் இரண்டு

      ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது தற்போது சர்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

      2 ஆண்டுகளுக்கு முன் பேசியதற்கு இப்போது வழக்கா? – அதிர்ச்சியில் பிக்பாஸ் பிரபலம்
      ஸ்ரீமுகி


      தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி.

      தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

      தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

      ஸ்ரீமுகி 2 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது

      குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்தை கூறியதாக தற்போது எதிர்ப்பு

      கிளம்பி உள்ளது. ஸ்ரீமுகி மீது வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

      குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது

      நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார்.

      இதையடுத்து ஸ்ரீமுகி மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

      அவர் பேசிய வீடியோவை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

      ஸ்ரீமுகி

        இதுகுறித்து ஸ்ரீமுகி கூறும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான

        நிகழ்ச்சிக்கு இப்போது ஏன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று புரியவில்லை.

        நான் யார் மனதையோ அல்லது எந்தவொரு சமுதாயத்தையோ காயப்படுத்துவதுபோல் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

        பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீமுகி
        பிக்பாஸ் பிரபலம் ஸ்ரீமுகி
            Posted in சினிமா

            ரசிகர் மன்ற நிர்வாகிக்கு கொரோனா – நலம் விசாரித்த சிம்பு

            ரசிகர் மன்ற நிர்வாகிக்கு கொரோனா – நலம் விசாரித்த சிம்பு

            கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கடலூர் மாவட்ட ரசிகர் மன்ற மாவட்ட தலைவரிடம் சிலம்பரசன் போனில் பேசி நலம் விசாரித்துள்ளார்.

            ரசிகர் மன்ற நிர்வாகிக்கு கொரோனா – நலம் விசாரித்த சிம்பு
            சிலம்பரசன், ஆனந்தன்


            தமிழகத்தில் தற்போது சென்னைக்கு அடுத்தபடிய அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மாவட்டமாக கடலூர் இருந்து

            வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பியதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

            இதுவரை 356 பேர் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆனந்தன் என்பவருக்கு கொரோனா

            பாதிப்பு உறுதியாகி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

              இவர் கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.

              இந்நிலையில் இந்த செய்தியை கேட்ட சிலம்பரசன் ஆனந்தனை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

              மேலும் ஆனந்தன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

              ரசிகர் மன்ற நிர்வாகிக்கு
              ரசிகர் மன்ற நிர்வாகிக்கு
                    Posted in சினிமா

                    விஜய்யின் தீவிரமான ரசிகை நான் -ஐஸ்வர்யா மேனன்

                    விஜய்யின் தீவிரமான ரசிகை நான் -ஐஸ்வர்யா மேனன்


                    நான் விஜய்யின் தீவிரமான ரசிகை என்று நடிகை ஐஸ்வர்யா மேனன்

                    சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களிடையே கூறியிருக்கிறார்.

                    நான் விஜய்யின் தீவிரமான ரசிகை – ஐஸ்வர்யா மேனன்
                    தமிழ் படம் 2, வீரா போன்ற சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா

                    மேனன், நான் சிரித்தால் படத்தின் மூலம் அனைவராலும் பேசப்பட்டார்.

                    தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய ஐஸ்வர்யா மேனன் பல வி‌ஷயங்களை பகிர்ந்துள்ளார்.

                    நீங்கள் நன்றாக யோகா செய்கிறீர்கள், தினமும் செய்வீர்களா? என ரசிகர் ஒருவர்

                    கேட்டதற்கு, கண்டிப்பாக தினமும் யோகா செய்வேன். நீங்களும் தினமும் யோகா செய்யுங்கள் என்றார்.

                    பின்னர் தன் முதல் காதல் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.

                    சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பொறியியல் படித்தேன், என்னுடைய

                    முதல் க்ரஷ் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது இன்று நினைத்தாலும்

                      பசுமையான நினைவாக இருக்கிறது என்றார். உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றதற்கு நான் தீவிரமான விஜய் ரசிகை

                      என்றார்.மேலும், ரசிகர்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்புடனும்

                      நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்

                      .

                      விஜய்யின் தீவிரமான
                      விஜய்யின் தீவிரமான
                            Posted in சினிமா

                            என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – கதறிய நடிகை

                            என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – ஷெர்லின் புகார்

                            ரகசிய மொழி மூலம் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று பாலிவுட் நடிகை ஷெர்லின் புகார் கூறியுள்ளார்.

                            ரகசிய மொழி மூலம் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – ஷெர்லின் புகார்
                            ஷெர்லின் சோப்ரா


                            தமிழில், யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பல இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ்

                            நிகழ்ச்சியும் அவரை பிரபலப்படுத்தியது. பட உலகில் படுக்கைக்கு அழைக்க ரகசிய (கோட்) வார்த்தையை பயன்படுத்துகின்றனர்

                            என்று ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

                            நான் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பத்தில் எனது புகைப்படங்களுடன் பல பட நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது என்னிடம் நள்ளிரவில் டின்னரில்

                            சந்திப்போமா என்று கேட்பார்கள். நள்ளிரவிலா? எப்போது வரச்சொன்னீர்கள்? என்று புரியாமல் கேட்பேன். அதற்கு இரவு 11

                            அல்லது 12 மணிக்கு வரவேண்டும் என்பார்கள். அந்த நேரத்தில் என்னால் வர இயலாது என்று மறுத்து விட்டேன். அதன் அர்த்தம் தாமதமாகத்தான் புரிந்தது.

                            இப்படி பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்தபோது இதே மாதிரி நள்ளிரவு டின்னருக்கு அழைத்தனர். அதன்பிறகு நள்ளிரவு

                            டின்னர் என்பது படுக்கைக்கு அழைக்கும் ரகசிய மொழி என்பது புரிந்தது. உண்மை தெரிந்தபிறகு இதே ‘கோட்’ வார்த்தையை

                            பயன்படுத்துகிறவர்களிடம், ‘உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன், காலை

                            அல்லது மதிய உணவுக்கு வேண்டுமானால் வருகிறேன்’ என்பேன். அதன்பிறகு அவர்கள் அழைப்பது இல்லை.

                            இவ்வாறு கூறினார்.

                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

                                  பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் .

                                  ஊரடங்கை போட்டு வைத்து
                                  ஊரெல்லாம் அடக்கி வைத்து
                                  ஏழைகளை வதைக்குது பார்
                                  ஏறெடுத்தும் பார்கலை பார் …..

                                  நாடாளும் மன்னர் என்று
                                  நா கிழிய கத்துகிறார் …
                                  ஒத்த வேளை உணவின்றி
                                  ஓலை குடில் அழுகுது பார் ….

                                  கத்துகிற இவர் சேதி
                                  காதோரம் கேட்கலையோ ..?
                                  சொத்தெழுதி கொடுக்க வேண்டாம்
                                  சோறு போட முடியலையையோ ..?

                                  வந்த கொரனோ அடக்கிடத்தான்
                                  வழியேதும் தெரியலையோ …?
                                  திண்ணையில அழுகிறவர் – குரல்
                                  தெருவேதும் கேட்கலையோ …?

                                  ஏ மனிதா உன் மனதை
                                  எங்கு கொண்டு சிறை வைத்தாய் ..?
                                  பாலகர்கள் பசிபோக்க
                                  பைந்தமிழே முடியலையோ …?

                                  பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

                                  பட்டினியால் ஊர் கதற
                                  பாரதமும் காணலையோ ..?
                                  கொட்டுகிற கண்ணீரில்
                                  கொடுங்கோலும் கரையலையோ …?

                                  ஒட்டு வாங்க ஓடி வந்தார்
                                  ஒரு வரையும் காணலையே …
                                  நம்பி நின்ற மக்களையே
                                  நாடி வந்தும் பார்க்கலையே ….

                                  தேம்பி தேம்பி அழும் பிள்ளாய்
                                  தேவைகளை போக்கிடுவாய் …
                                  தேவடியா பயலுகளா
                                  தேர்தல் வந்தால் வருவீரா ….!

                                    Posted in மருத்துவம்

                                    கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

                                    கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

                                    கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

                                    கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் ?
                                    கர்ப்பிணி


                                    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும்

                                      மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

                                      தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை

                                      பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

                                      500 பேருக்கு பரிசோதனை

                                      மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள்

                                      அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான

                                      பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

                                        கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள

                                        59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை

                                        போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும்

                                        500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

                                        கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும்

                                        கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

                                        ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

                                        அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து

                                          கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

                                          கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும்

                                          பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம்

                                          பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து

                                          நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

                                          தனிமைப்படுத்தவும்

                                          கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

                                          அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு

                                          இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

                                          ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                                          கொரோனா
                                          கொரோனா
                                              Posted in சினிமா

                                              கொரோனா வேளையில் -நோயால் பாதிக்கப்பட்ட நடிகை

                                              கொரோனா வேளையில் -நோயால் பாதிக்கப்பட்ட நடிகை

                                              தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த நடிகை மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறியுள்ளார்.

                                              கொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை
                                              நடிகை பாயல் கோஷ்


                                                தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை பாயல் கோஷ், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

                                                இந்த லாக்டவுன் நேரத்தில் மலேரியாவால் பாதிக்கப்பட்ட பாயல் கோஷ், அதன் பாதிப்புகளால் மனதளவில் உடைந்து போனதாகவும்,

                                                தற்போது முழுவதுமாக அதில் இருந்து மீண்டுள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு

                                                தெரிவித்துள்ளார். நல்ல வேளை கொரோனா பாதிப்பு இல்லை என்பது பெரிய நிவாரணமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

                                                ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், ரொம்பவே அச்சப்பட்டேன். பின்னர், தனக்கு மலேரியா என்று தெரிந்ததும்,

                                                  கவலை இல்லாமல், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இந்த ஊரடங்கால் கிடைத்துள்ள இந்த நேரத்தை உலக சினிமா

                                                  பார்ப்பதிலும், புத்தகங்கள் வாசிப்பதிலும் செலவிட்டு வருகிறேன் என பயல் கோஷ் கூறியுள்ளார்

                                                  Payal Ghosh
                                                  Payal Ghosh