Posted in சினிமா

சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு

சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரனின் தற்போது வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

சிம்ரன் வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு
நடிகை சிம்ரன்


தமிழில் ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில்

    கால்பதித்தவர் சிம்ரன். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்த பெருமை இவரை சேரும்.

    நேருக்குநேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.

    ஊரடங்கு என்பதால் பிரபலங்கள் தங்கள் டிக்டாக், போட்டோக்கள், வீடியோக்கள் என பலவற்றை பதிவிட்டு வருகின்றனர்.

    தற்போது சிம்ரன் டிக்டாக் வீடியோ ஒன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் அழகான ரியாக்சனுடன் சாப்பிடுவதை பதிவிட்டுள்ளார்.

    இதைப்பார்த்த ரசிகர்கள் சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா என்று ரசித்து பகிர்ந்து வருகின்றனர்

    சிம்ரன் வீடியோவுக்கு
    சிம்ரன் வீடியோவுக்கு
    Posted in மருத்துவம்

    தூக்கத்தினை பாதிக்கும் காரணங்கள்

    தூக்கத்தினை பாதிக்கும் காரணங்கள்

    நமக்கு தூக்கம் நல்ல ஆழ்தூக்கமாக இல்லாது இருந்தால் காலையில் 8 மணி வரை தூங்கிய பிறகும் நான் சோர்வாகவே இருக்கின்றேன்

    என்று சொல்லுவோம் ஆக நம் ஆழ் தூக்கத்தினை பாதிக்கும் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்து கொள்வோம்.


    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம்

    என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப் பற்றி நீ சத்தமாக குறட்டை விடுகிறாய், ரொம்பவும் பிரண்டு பிரண்டு படுக்கின்றாய்

    என சொன்னால் மட்டுமே தெரியும். நமக்கு தூக்கம் நல்ல ஆழ்தூக்கமாக இல்லாது இருந்தால் காலையில் 8 மணி வரை

    தூங்கிய பிறகும் நான் சோர்வாகவே இருக்கின்றேன் என்று சொல்லுவோம் ஆக நம் ஆழ் தூக்கத்தினை பாதிக்கும் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்து கொள்வோம்.

    • தூங்கி எழுந்த பிறகு தலை வலி (அ) வறண்ட தொண்டை ஆகிய தொந்தரவு இருக்கின்றதா? 4.5 சதவீதம் ஆண்களும், 2.8
    • சதவீதம் பெண்களும் 30-60 வயதில் இரவில் தூங்கும் பொ-ழுது மவுனமாகவோ சத்தமாகவோ குறட்டை விடுகின்றனர்.
    • மூக்கின் பாதை குறுகியதாலும் அடைபாட்டினாலும் இது ஏற்படுகின்றது. இவ்வாறு இருப்பவர்கள் இரவு படுக்கப் போகும்
    • முன் வெது வெதுப்பான நீரில் குளித்தால் இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    மேலும் இவர்கள் நிமிர்ந்து படுக்காமல் பக்கவாட்டில் படுத்தால் நன்கு உறங்க முடியும். அதிக எடை கூடியவர்கள் எடையினை

    குறைத்து கொள்வது நல்லது. ஹார்மோன் மாறுதல்கள், மது இவையும் தசைகளை தளர்த்தி மூக்கு வழிபாதை தடுப்பினை

      ஏற்படுத்தும், ஆகவே ஹார்மோன் சிகிச்சை மதுவினைத் தவிர்த்தல் ஆகியவைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

      • பகலில் ஏதோ ஒரு படபடத்த விதமாகவே இருக்கின்றதால் இதற்கும் இரவு சரியான தூக்கமின்மை ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கம், லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு
      • என 90 நிமிடங்கள் ஒரு சுற்றாக வருகின்றது. கெட்ட கனவுகள் ஒருவரின் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. யாரிடமும்
      • எதையும் சொல்லாது மனதிலேயே புழுங்கும் பொழுதும், பகலில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வினை காணாத
      • பொழுதும் அவை கெட்ட கனவாக இரவில் வெளிப்படுவதாக மனநல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

      நமக்கு நல்ல கனவுகள் வந்தாலும் கெட்ட கனவுகளே மனதில் நின்று அச்சுறுத்துகின்றன. ஆகவே, மனஉளைச்சல், பிரச்சினைகளை

      நம்பகமானவர்களோடு பகிர்ந்து கொள்வது இரவில் நல்ல தூக்கத்தினை தரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

      • சிலருக்கு திடீரென தூக்கத்தில் விழிக்கும் பொழுது கை, கால் அசைக்க முடியாதது போன்ற ஓர் உணர்வு சில நொடிகள் இருக்கும். 40 சதவீதம் மக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது
      • இதை அனுபவிக்கின்றார்கள். மனஉளைச்சல், படபடப்பு, விபத்துக்குள்ளான அதிர்ச்சி இப்படி பல காரணங்களை இதற்கு கூறலாம். பொதுவில் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு அதிக
      • உணவு, காபி, மது இவைகளை கண்டிப்பாக தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றனர். மன நல மருத்துவர் உதவியும் சிலருக்கு தேவைப்படுகின்றது.
      • சிலருக்கு தூக்கத்தில் ஆடைகள் நனையும் அளவு வியர்த்துக் கொட்டும். பொதுவில் தூங்கும் பொழுது நமது உடலின் உஷ்ண நிலை ஒரிரு டிகிரி இறங்குவது இயல்பு.உங்கள் உடலில் உள்
      • உஷ்ணம் கூடுதலாக இருந்தால்.
      • காற்றோட்டமான அறை, மெல்லிய பருத்தி ஆடைகள், பருத்தி போர்வை போன்றவை உதவும். மேலும் இரவில் மசாலா
      • உணவுகள் விருந்து போன்றவற்றினை தவிர்த்துவிட வேண்டும்.
      • பல் கடித்தல்
      • தூக்கத்தில் நடத்தல்
      • தூக்கத்தில் பேசுதல்

      இவை அனைத்திற்குமே மருத்துவ உதவி பெறுதல் நல்லது.

        உங்கள் உடல் உங்களைப் பற்றி சொல்பவை என்ன?

        • முறையான நிலையில் நிற்காமல் கோணல், மானலாக நிற்பதும், தறையை பார்த்தபடியே நிற்பதும் ஒருவர் சோர்வாக கவலையாக இருப்பதனைக் குறிக்கும்.
        • தலைவலி என்றால் முதலில் உடலில் நீர் சத்து குறைந்துள்ளதா, கண்ணுக்கு அதிக ஸ்ட்ரெயின் அல்லது கோணல் மாணலாக
        • அமர்வது நிற்பது, படுப்பது போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.
        • சோர்ந்து தொய்வாக நடந்தால் நீங்கள் சக்தியற்று இருப்பதனையும் மனம் ஈடுபடாமல் இருப்பதனையும்
        • சொல்கின்றது. வயிறு சரியின்மை, மன உளைச்சல் முதலில் வயிறு சரியின்மையில்தான் காண்பிக்கும். படபடப்பு
        • இருந்தால் வயிற்றுப் போக்கு கூட இருக்கும். வயிறு சரியின்மைக்கு ஜீரணக் கோளாறு உள்பட மற்ற மருத்துவ காரணங்களும் உள்ளது.
        • உள்ளங்கையில் வியர்வை அதிக சூடு, மன உளைச்சல் போன்றவை காரணமாக இருக்கலாம்.
        • இரு கைகளையும் விரல்களை மடித்து பந்து போல் இருப்பது குழப்பம், படபடப்பு இருப்பதனை உணர்த்துகின்றது.

        முறையான உறக்கம், யோகா, உடற்பயிற்சிக்கு இவைகள் தரும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. ஆகவே அவைகளை விடாது

        செய்யுங்கள். எல்லா வேலைகளும் உங்கள் தலையில் என்றால் ஸ்ட்ரெஸ்தான். ஆகவே மென்மையாக உறுதியாக நோ சொல்ல

        கற்றுக் கொள்ளுங்கள். சிறு சிறு மாற்றங்கள் நல்ல பலனைத் தரும். எனவே முறையாய் அதனை கடை பிடிக்க வேண்டும்.

        தூக்கத்தினை பாதிக்கும்
        தூக்கத்தினை பாதிக்கும்
            Posted in சினிமா

            பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பாடகர் மனோ

            பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பாடகர் மனோ

            சினிமா பின்னணி பாடகரான மனோ, பழங்குடியின மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

            பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பாடகர் மனோ


            பாடகர் மனோ மக்களுக்கு பொருட்கள் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்


            திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய்கண்டிகை கிராமத்தில் உள்ள பழங்குடியின

            மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா

            பின்னணி பாடகர் மனோ நிவாரண உதவி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

            அப்பகுதியில் தெலுங்கு பேசுபவர்களும் உள்ளனர் என்பதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய

              இரண்டு மொழிகளில் பாடகர் மனோ எடுத்து கூறினார். அப்போது அவர், சினிமா பாடல்களை பாடி அங்குள்ளவர்களை

              உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

              பழங்குடியின மக்களுக்கு
              பழங்குடியின மக்களுக்கு
                  Posted in சினிமா

                  கத்திமுனையில் மீரா சோப்ரா தந்தையிடம் கொள்ளை

                  கத்திமுனையில் மீரா சோப்ரா தந்தையிடம் கொள்ளை

                  எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா.

                  பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். மீரா சோப்ரா தந்தையிடம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.

                  இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறும்போது, போலீஸ் காலனியில்

                  என் தந்தை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது இரண்டு பேர் ஸ்கூட்டரில்

                  வந்து கத்தியை காட்டி மிரட்டி அவரின் செல்போனை பறித்துச் சென்றனர் என்றார்.

                  மீராவின் ட்வீட்

                  மீரா அளித்த புகாரின்பேரில் போலீசார் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தார்கள்.

                  இதை பார்த்த மீரா டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டார். முதியவர்களை பாதுகாப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

                      Posted in சினிமா

                      நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை

                      நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை

                      மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

                      மூத்த நகைச்சுவை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் – நடிகை பிரகதி பரபரப்பு புகார்
                      பிரகதி


                        பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரகதி

                        . விஜயகாந்துடன் பெரிய மருது, பாண்டியராஜனின் சும்மா இருங்க மச்சான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது

                        குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சசிகுமாரின் தாரை தப்பட்டை, சந்தானத்தின் இனிமே இப்படித்தான், கெத்து உள்ளிட்ட சில படங்களில் அம்மாவாக நடித்து இருந்தார்.

                        இந்த நிலையில் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான

                        அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “மூத்த காமெடி நடிகர் என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த

                        சம்பவத்தை எதிர்கொண்டேன். அந்த நடிகர் நன்றாகவே பழகினார். ஒரு படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டு

                        இருந்தபோது அவரது பேச்சும் செயலும் தவறான முறையில் இருந்தன.

                        பிரகதி

                        பாலியல் ரீதியாக மோசமாக அவர் நடந்து கொள்வதை உணர்ந்தேன். ஒரு அளவுக்கு மேல் அவர் தொந்தரவை தாங்க

                        முடியவில்லை. இதனால் அவரை எனது கேரவனுக்குள் அழைத்து உங்கள் நடவடிக்கை கேவலமாக இருந்தது. தவறான முறையில் என்னை அணுகும்படி சிக்னல் கொடுத்தேனா அல்லது எனது

                        உடல்மொழி உங்களை அழைப்பதுபோல் இருந்ததா? படப்பிடிப்பிலேயே உங்களை திட்டி இருப்பேன். உங்களுக்கு

                        இருக்கும் மரியாதையை கருத்தில் கொண்டு தனியாக அழைத்து சொல்கிறேன் என்றேன். அதன்பிறகு அவர் என்னிடம் மோசமாக நடக்கவில்லை

                        நடிகை பிரகதி
                        நடிகை பிரகதி
                            Posted in சினிமா

                            விவசாயியாக மாறிய நடிகை…. சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ

                            விவசாயியாக மாறிய நடிகை…. சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ

                            கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.

                            லாக்டவுனில் விவசாயியாக மாறிய நடிகை…. சேற்றில் இறங்கி நாத்து நடும் வீடியோ வைரல்
                            கீர்த்தி பாண்டியன்


                            பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில்

                              அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில்

                              நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும்

                              இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

                              கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நடிகை கீர்த்தி பாண்டியன் தனக்கு

                              சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் டிராக்டர் மூலம் தானே விவசாய நிலத்தை

                              உழும் வீடியோவை வெளியிட்ட அவர், தற்போது அந்த நிலத்தில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், என் வாழ்வில்

                              மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

                                  Posted in சினிமா

                                  200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் – ஸ்ரேயா

                                  200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் – ஸ்ரேயா

                                  200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் நடனம் ஆடலாம் என்று பிரபல நடிகை ஸ்ரேயா சரண் கூறியுள்ளார்.

                                  200 ரூபாய் அனுப்பினால் என்னுடன் ஆடலாம் – ஸ்ரேயா
                                  நடிகை ஸ்ரேயா


                                  சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி

                                    திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில்

                                    இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தன்னுடன் நடனமாட வாய்ப்பு

                                    கிடைக்கும் என்று ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

                                    நடிகை ஸ்ரேயா

                                    கொரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில்

                                    இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-

                                      மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான்

                                      நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார்.

                                      இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

                                      200 ரூபாய் அனுப்பினால்
                                      200 ரூபாய் அனுப்பினால்
                                        Posted in சினிமா

                                        கார் விபத்தில் நடிகர் பலி

                                        கார் விபத்தில் நடிகர் பலி

                                        எர்ணாகுளம் அருகே பள்ளி சுவரில் கார் மோதிய விபத்தில் மலையாள நடிகர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                        கார் விபத்தில் நடிகர் உள்பட 3 பேர் பலி
                                        விபத்துக்குள்ளான கார்- உயிரிழந்த பேசில் ஜார்ஜ் .


                                        கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டம் முபாட்டு புழாவை சேர்ந்தவர் பேசில் ஜார்ஜ் (வயது30).

                                          இவர் மலையாள படமான உவல்லி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

                                          இவரது நண்பர்கள் சதீஷ்(30), அஷ்வின்(20), ராகவ்(19), சமர்(30), எமோன்(30).

                                          இவர்கள் 6 பேரும் நேற்று காரில் முபாட்டு புழாவில் இருந்து வளாகம் நோக்கி சென்றனர்.

                                          இவர்களது கார் வளாகம் அருகே உள்ள அரசு பள்ளி அருகே சென்ற போது கட்டுப்

                                          பாட்டை இழந்து தறி கெட்டு ஓடி அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது.

                                            பின்னர் அங்கிருந்த பள்ளி சுவரின் மீது வேகமாக மோதி நின்றது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதால் காரில் இருந்த 6 பேரும்

                                            பலத்த காயத்துடன் வெளியில் வர முடியாமல் சிக்கி கொண்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முபாட்டு புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

                                            தகவல் அறிந்த முபாட்டு புழா போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி

                                            இருந்தவர்களை மீட்டு கோலன்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

                                            அங்கு சிகிச்சை பலனின்றி நடிகர் பேசில் ஜார்ஜ், சதீஷ், அஷ்வின் ஆகிய 3 பேர்

                                              பரிதாபமாக உயிரிழந்தனர். ராகவ், அமர், எமோன் ஆகியோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                              கார் விபத்தில் நடிகர்
                                              கார் விபத்தில் நடிகர்
                                                  Posted in சினிமா

                                                  என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா

                                                  என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா

                                                  என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் என்று இயக்குனரிடம் நடிகை பற்றி சமந்தா கூறியுள்ளார்.

                                                  என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் – சமந்தா
                                                  நடிகை சமந்தா


                                                  2015-ல் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான

                                                    பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த ‘கரு, மாரி 2, என்ஜிகே’ ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.

                                                    அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல

                                                    பெயரையே பெற்றுத் தந்துள்ளன. ‘பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர்

                                                    கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.

                                                    சாய் பல்லவி, சமந்தா

                                                    இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள்

                                                    படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா.

                                                    இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார்.

                                                    அதைப் பார்த்த நடிகை சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய்

                                                    பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்

                                                    என் கணவரை விட அவர் சூப்பர்
                                                    என் கணவரை விட அவர் சூப்பர்
                                                        Posted in கிசு கிசு

                                                        ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்

                                                        ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்

                                                        ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்

                                                        Posted in சினிமா

                                                        ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்

                                                        ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்

                                                        பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார்.

                                                        500 கி.மீ. பைக் டிரிப்…. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
                                                        ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்


                                                        நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள்

                                                          என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல்

                                                          சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

                                                          கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர்.

                                                          அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.

                                                            அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித்

                                                            அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல்

                                                            தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                            ஏழை ரசிகரின்
                                                            ஏழை ரசிகரின்
                                                                Posted in சினிமா

                                                                விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை

                                                                விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை

                                                                மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

                                                                மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
                                                                விஜய்


                                                                விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவுள்ள இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின் ரிலீசாக உள்ளது. இப்படத்தையடுத்து விஜய்யின் 65-

                                                                வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகம் என சொல்லப்படுகிறது.

                                                                  மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

                                                                  காஜல் அகர்வால்

                                                                  இந்நிலையில், காஜல் தமிழ் படம் ஒன்றிற்காக அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

                                                                  அது விஜய்யின் 65-வது படத்திற்காக தான் என கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா ஊரடங்குக்கு பின் இதுகுறித்த

                                                                  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                                                  விஜய்க்கு ஜோடியாகும்
                                                                  விஜய்க்கு ஜோடியாகும்
                                                                      Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                      பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

                                                                      பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

                                                                      ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி

                                                                      சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

                                                                      ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்

                                                                      தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                                                                        ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,

                                                                        விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது

                                                                        போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை

                                                                        தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு

                                                                        சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .

                                                                        ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து

                                                                        செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                                                                        பிரிட்டனுக்குள் நுழைந்து
                                                                        பிரிட்டனுக்குள் நுழைந்து
                                                                            Posted in சினிமா

                                                                            தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு

                                                                            தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு

                                                                            தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                                                                            தமன்னாவை திருமணம் செய்ய ஆசைப்படும் யோகி பாபு
                                                                            யோகி பாபு, தமன்னா


                                                                            ‘கோல மாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை, யோகி பாபு ஒரு தலையாக காதலிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

                                                                              இதையே யோகி பாபு கதாநாயகனாக நடித்து வரும் ‘பேய் மாமா’ படத்தில், டைரக்டர் சக்தி சிதம்பரம் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

                                                                              “யோகி பாபு பிரபல கதாநாயகிகளை காதலிப்பது போல், ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

                                                                              அவர் நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரையும் ஒரு தலையாக காதலித்து தோல்வி அடைவது போலவும், அதனால் அவருடைய

                                                                              காதல் தமன்னா பக்கம் திரும்புவது போலவும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

                                                                              திருட்டையே தொழிலாக கொண்ட அவர், அதன் மூலம் ரூ.100 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார். தமன்னாவை எப்படியாவது திருமணம்

                                                                              செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், “ஓம் தமன்னாய நமஹ” என்று ஆயிரம் முறை மந்திரங்களை ஓதுவது போலவும், தன்

                                                                              படுக்கை அறை முழுவதும் தமன்னாவின் படங்களை ஒட்டி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறுகின்றன” என்றார்.

                                                                              தமன்னாவை திருமணம்
                                                                              தமன்னாவை திருமணம்
                                                                                  Posted in சினிமா

                                                                                  சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

                                                                                  சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

                                                                                  ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

                                                                                  சந்திரமுகி 2 படத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை
                                                                                  வாசு – லாரன்ஸ்

                                                                                  ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார்.

                                                                                  தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக வரும் ரஜினிகாந்த்

                                                                                  , பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி,

                                                                                  ஜோதிகா உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை அமைத்து இருந்தனர். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது.

                                                                                  இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா

                                                                                  லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

                                                                                  ஜோதிகா

                                                                                  அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார் என்று பேசப்படுகிறது. எனவே அவரை இரட்டை வேடத்தில்

                                                                                  உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி, அதில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்

                                                                                  வெளியாகி உள்ளது. ஆனால் இதில் ஜோதிகா நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.

                                                                                  சந்திரமுகி 2 படத்தில்
                                                                                  சந்திரமுகி 2 படத்தில்
                                                                                      Posted in சினிமா

                                                                                      அதில் உள்ளது நான் அல்ல – அலறும் நடிகை

                                                                                      அதில் உள்ளது நான் அல்ல – அலறும் நடிகை

                                                                                      தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப் அது போலி அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

                                                                                      அது போலி…. அதை நம்பாதீர்கள்… வித்யா பிரதீப்
                                                                                      வித்யா பிரதீப்


                                                                                      அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர் வித்யா பிரதீப். சின்னத்திரையில் நாயகி

                                                                                      என்கிற சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சீரியல்களில் அதுவும் ஒன்று.

                                                                                        மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

                                                                                        போலி கணக்கு
                                                                                        இந்நிலையில் என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி

                                                                                        பதிவு செய்து வருகிறார்கள். அது போலி கணக்கு, அது என்னுடைய ட்விட்டர்

                                                                                        கணக்கு அல்ல. நான் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை. இதை ரிப்போர்ட் செய்த நண்பர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.

                                                                                        அதில் உள்ளது நான் அல்ல
                                                                                        அதில் உள்ளது நான் அல்ல
                                                                                            Posted in சினிமா

                                                                                            100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்

                                                                                            100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்

                                                                                            நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டவுடன் நூறு மூட்டை அரிசி வழங்கி உதவி செய்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

                                                                                            100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி – மற்ற நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்த ராகவா லாரன்ஸ்
                                                                                            ரஜினி- ராகவா லாரன்ஸ்


                                                                                            கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல், பலர் உணவுக்கே கஷ்டப்படும் நிலை

                                                                                            ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவியை முடியாதவர்களுக்கு செய்து வருகின்றனர்.

                                                                                              இதில் நடிகர் லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அளித்த அவர், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவில் அளித்து வருகிறார்.

                                                                                              இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னை தொடர்பு

                                                                                              கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும்

                                                                                              உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கு உதவி செய்திட முடியாது.

                                                                                              இதுகுறித்து என் தம்பியிடம் பேசிய போது, இந்த முயற்சியில் இன்னும் பலரை சேர அழைக்கலாம் என கூறினார். இதை பற்றி

                                                                                              நடிகர் ரஜினியிடம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கை கோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன்.

                                                                                              நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ

                                                                                              விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

                                                                                              100 மூட்டை அரிசி
                                                                                              100 மூட்டை அரிசி
                                                                                                  Posted in உளவு செய்திகள்

                                                                                                  சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு

                                                                                                  சிரியாவுக்குள் நுழைந்த ஈரான் எண்ணெய் கப்பல் – மூழ்கடிக்க இஸ்ரேல் துடிப்பு

                                                                                                  ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவுக்குள் நுழைந்துள்ளது ,

                                                                                                  இந்த கப்பலில் சுமார் 6.8 மில்லியன் பரல் எண்ணெய்கள் ஏற்ற பட்ட நிலையில் குறித்த கப்பல் சிரியாவுக்குள் நுழைந்துள்ளது

                                                                                                  அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய படும் நாடுகளில் சிரியா மற்றும் சீனா முதன்மை படுகின்றன .

                                                                                                    இரு நாடுகளுக்கும் ஈரானில் இருந்தே எண்ணெய் ஏற்றுமதி செய்ய படுகிறது ,

                                                                                                    இவ்வாறான விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஈரான் கப்பல் மூழ்கடிக்கும்

                                                                                                    திட்டத்துடன் இஸ்ரேல் உள்ளதாகவும் ,இதன் மீது தாக்குதல் நடத்த படலம் என எதிர் பார்க்க படுகிறது

                                                                                                    துருக்கிய ஆயுத கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு அந்த கப்பல் மூழ்கடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

                                                                                                    சிரியாவுக்குள் நுழைந்த
                                                                                                    சிரியாவுக்குள் நுழைந்த
                                                                                                      Posted in உளவு செய்திகள்

                                                                                                      பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

                                                                                                      பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

                                                                                                      சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகள் கடந்து பாரிய மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன .

                                                                                                      மூன்றுக்கு மேற்பட்ட வல்லரசு நாடுகள் இந்த களத்தில் அகல கால் பதித்துள்ளனர்


                                                                                                      சிரியா படைகளுக்கு ஆதரவாக ரசியா,ஈரான் களத்தில் நிற்கின்றனர் ,
                                                                                                      துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா,இஸ்ரேல் என்பன உள்ளன

                                                                                                          இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளின் ஆயுத உற்பத்தி சோதனைகள் இந்த களத்தில் கொடி கட்டி பறக்கின்றன

                                                                                                          இவ் வேளையில் தற்போது இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கியின் முப்பதாயிரம் படைகள் குவிக்க பட்டு மோதல்கள் வெடித்து பறக்கின்றன

                                                                                                          இரு பகுதியில் கடும் சமர் அவ்வப்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                                                                          துருக்கிய படைகள் அதிகம் பாவனைக்கு உட்படுத்தியுள்ள பல்குழல் ரொக்கட்டுக்கள் ஆகும் .
                                                                                                          இவை பெரும் தாக்கத்தை சிரியா படைகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளன

                                                                                                          அவர்களை முறியடிக்க தற்பொழுது ரசியாவின் தயாரிப்பிலான பல்குழல் எறிகணைகளை உடனடியாக தருவிக்கும் படி சிரியா வேண்டியுள்ளது

                                                                                                          குறித்த ஆயுதங்கள் விரைவில் சிரியாவுக்கு அனுப்பி வைக்க படவுள்ளன ,


                                                                                                          ஆதரவு வழங்குவது போல் களத்தில் நிற்கும் ரசியா படைகள் இப்பொழுது அதே நாட்டுக்கு உதவும் அதே வேளையில் ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகிறது

                                                                                                          இதைத்தான் சொல்வது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது என்பதாகும்

                                                                                                          பல்குழல் எறிகணைகளை
                                                                                                          பல்குழல் எறிகணைகளை
                                                                                                            Posted in சினிமா

                                                                                                            போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்

                                                                                                            போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்

                                                                                                            கொரோனா ஊரடங்கில் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் போலீசாருக்காக நடிகர் அக்‌ஷய்குமார் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

                                                                                                            போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய
                                                                                                            கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும்

                                                                                                                மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை

                                                                                                                கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார், பிரதமரின்

                                                                                                                நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.

                                                                                                                தற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’

                                                                                                                பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்‌ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது

                                                                                                                . நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு

                                                                                                                நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.

                                                                                                                அக்‌ஷய்குமார்

                                                                                                                இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்‌ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

                                                                                                                போலீசாருக்கு நிவாரண
                                                                                                                போலீசாருக்கு நிவாரண