Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

முடிந்தால் அடக்கு

முடிந்தால் அடக்கு …!

அடக்கு முறை இங்கு வெடிக்குதடா
அடக்க என்னை துடிக்குதுடா
மிதித்தால் எழுத்து அடங்குமோ ..?
மிதவாத கால் பணியுமோ ..?

பெண்ணுடன் ஒரு சிங்கமாம்
புனைந்ததால் ஒரு வம்சமாம்
ஆளுது அங்கொரு நாடடா
அதனால் தினம் தொல்லைடா

அஞ்சி பாதம் வீழ்வதோ
அடிமையாய் யான் மாய்வதோ
கெஞ்சி விழும் நிலையிலே
கேடு கெட்டு வாழ்வதோ

கொஞ்சி தமிழ் பேசிடும்
கொள்கை மண்ணில் வீழுமோ ..?
அஞ்சிடாத புலியவன்
ஆண்ட மண் பரம்பரை

செய்தவன் கொலை காலிலே
செந்தமிழ் இன்று வீழ்வதோ ..?
உண்மை மறைத்து உலகிலே
ஊடகத்தை ஆள்வதோ ..?

செவந்து குருதி ஓடலாம் – மண்ணில்
செத்தே இன்று வீழலாம்
கொத்து கொத்தாய் கொன்றவன்
கொலை காலிலே வீழ்ந்திடேன்

முகநூலை முடக்க துடிக்கிறாய்
,முடக்கு முடக்கு போகிறேன்
நேரம் கொஞ்சம் மிஞ்சிடும்
நேர்த்தி பொங்கி எழுந்திடும்

ஏதும் இல்லா காலத்தில்
எழுந்து நாம் நடந்தவர்
ஏது இங்கு வேணுமோ
எழுதினேன் இழுத்து முடக்கு

எதிரி எனக்கு இருக்கு
எதிரி யான் உனக்கு
எரியும் இனி விளக்கு
எழுதுறேன் இனி உழக்கு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 19-02-2021
முகநூலை நிரந்தரமாக முடக்குவதாக இப்போது செய்தி வந்த போது –

Home » poem
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அறியா பருவத்தில் புரியாதவை ….!

அறியா பருவத்தில் புரியாதவை ….!

உருகி உருகி அழுதேனே
உன்னால் தானே துடித்தேன
காளை உந்தன் இரசனை எல்லாம்
காமத்தின் முடிவிலா ..?

கண்டதும் நீர் பாய்ச்சும்
கால் வாயின் கோலமா ..?
வெட்டாத ஆற்றுக்குள்
வெள்ளம் தேடி வரலாமா ..?

சத்தான காய் கறிகள்
சந்தைக்கு விடலாமா ..? ..?
பட்டணத்து விலைவாசி
பட்டாடை கட்டிடவோ …?

எது சொன்னேன் புரியலையோ
என் மனசே தெரியலையோ ..?
விதி போடும் விளையாட்டில்
விவரங்கள் தாமதமே

நாள் கடந்து விழித்தெழுந்து
நமக்கேதும் பயனில்லை
முற் போக்கை முன் வைத்து
முன்னேறு கை வைத்து

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 20-06-2020

அறியா பருவத்தில்
அறியா பருவத்தில்
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

      பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார் .

      ஊரடங்கை போட்டு வைத்து
      ஊரெல்லாம் அடக்கி வைத்து
      ஏழைகளை வதைக்குது பார்
      ஏறெடுத்தும் பார்கலை பார் …..

      நாடாளும் மன்னர் என்று
      நா கிழிய கத்துகிறார் …
      ஒத்த வேளை உணவின்றி
      ஓலை குடில் அழுகுது பார் ….

      கத்துகிற இவர் சேதி
      காதோரம் கேட்கலையோ ..?
      சொத்தெழுதி கொடுக்க வேண்டாம்
      சோறு போட முடியலையையோ ..?

      வந்த கொரனோ அடக்கிடத்தான்
      வழியேதும் தெரியலையோ …?
      திண்ணையில அழுகிறவர் – குரல்
      தெருவேதும் கேட்கலையோ …?

      ஏ மனிதா உன் மனதை
      எங்கு கொண்டு சிறை வைத்தாய் ..?
      பாலகர்கள் பசிபோக்க
      பைந்தமிழே முடியலையோ …?

      பட்டினியின் கதறல் – பசி போக்காக யார் வருவார்

      பட்டினியால் ஊர் கதற
      பாரதமும் காணலையோ ..?
      கொட்டுகிற கண்ணீரில்
      கொடுங்கோலும் கரையலையோ …?

      ஒட்டு வாங்க ஓடி வந்தார்
      ஒரு வரையும் காணலையே …
      நம்பி நின்ற மக்களையே
      நாடி வந்தும் பார்க்கலையே ….

      தேம்பி தேம்பி அழும் பிள்ளாய்
      தேவைகளை போக்கிடுவாய் …
      தேவடியா பயலுகளா
      தேர்தல் வந்தால் வருவீரா ….!

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே

        உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே …!

        ஓடி வந்தெங்கள் உயிர் தின்ற கடலே
        ஒரு பதில் சொல்லாமல் உள் வந்த தென்ன ..?
        தேடி பொருள் தேட மடி தந்த கடலே
        தேய் கூலி இழக்கத்தான் சேதங்கள் தந்தாயோ …?

        பேரலை உருட்டி எம் பெரு வீடு உடைத்தாயே
        ஆழ்ந்து உறங்கியார் அவர் வந்து தின்றாயே ….
        உயிர் தின்ற கடலே உன் கோபம் என்ன …?
        உடைந்து உடல் வாழ துயர் தந்ததென்ன …?

        ஆடி பாடிய அழகான ஊருக்குள்
        ஆழி பேரலையே அவை வந்ததென்ன …?
        நேற்றெந்தன் பிள்ளைக்கு நான் செய்த பண்டங்கள்
        இன்று படைக்கத்தான் எமனாக வந்தாயோ …?

        கத்தி வாய் குழற கை தட்டும் கடலே
        கடும் கோபம் உன் மேலே என் செய்வான் நானோ ..?
        உன்னை தாய் என்றார் உதடுகள் சாகட்டும்
        உன்னரு வாழ நான் வர மாட்டேனே ….!

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -24/12/2019
        23-12-2018 இந்தோனேசிய சுனாமி பேரழிவை 281 பேர் பலி தாக்கத்தை எண்ணி
        கலங்கிய போது

        Home » poem
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        கதறி அழும் காதல் ….!

        கதறி அழும் காதல் ….!

        மடி வைத்து தலை தூங்க
        மணி விரல்கள் தலை கோத …
        முன்பகல் இரவாகி
        முழுமையாய் நனைந்த நாட்கள் …

        எண்ணி இன்று பார்க்கையிலே
        ஏங்குதடி என் மனது ….
        காற்று வந்து உடல் புகா
        கட்டி அணைத்து நின்றவளே ….

        நீ இட்ட முத்தங்களை
        நினைவுகள் தேடுதடி …
        உன் புருஷன் நான் என்று
        உறவாடிய காலங்கள் …..

        வீணாகி போகும் என்று
        விரும்பியது யார் இன்று ..?
        ஏகாந்த பெரு வெளிக்குள்
        எறிந்தது யார் இன்று …?

        ஊர் வந்த வேளையில -கால்
        ஊன்றிய சாலையிலே …
        தேம்பியது உன் நினைவுகளே
        தேவைதையே என் செய்வேன் …?

        அழுதபடி நான் நடக்க
        அகம் எல்லாம் நீர் துடிக்க
        பாத்திருந்த கதிரவனோ
        பாய்ந்து வந்து காய வைக்க …

        நான் நடந்து போனேண்டி
        நடை பிணம் ஆனேண்டி …
        ஏதறிவாய் என் மனதை
        எவர் சொல்வார் என் நிலையை …?

        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
        ஆக்கம் -21/01/2018