ரொக்கட் தாக்குதல்
Posted in Uncategorized

ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்

ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்

மேற்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டு படைகளின் US Ain al-Assad airbase


இராணுவ தளம் மீது புதின் கிழமை 12 ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

அணைத்து ரொக்கட்டுக்களும் துல்லியமாக வீழ்ந்த்து வெடித்துள்ளன


இதில் ஏற்பட்ட சேத விபரங்களை அமெரிக்கா இராணுவ தலைமையகம் இதுவரை வெளியிடவில்லை

ஒரே நாளில் இரு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் தளங்கள் தாக்குதலுக்கு

உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

    ரொக்கட் தாக்குதல்
    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

    அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

    கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் Al-Omar oil இராணுவ நிலைகள் மீது எதிரி

    படைகள் திடீர் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

    இந்த தாக்குதலில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    தொடர்ந்து இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்

      11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்

      மருத்துவமனைக்கு சென்று 12வது முறையாக கொரோனா தடுப்பூசி போட முயன்றபோது மாட்டிக் கொண்டார்.

      10 மாதங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்
      11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரம்மாதேவ் மண்டல்

      பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

      மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுரை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த 10 மாதங்களில் பல்வேறு இடங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

      என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே 11 முறை தடுப்பூசியைப் பெற்றதாக பிரம்மாதேவ் கூறுகிறார்.

      தடுப்பூசி போட்டதில் இருந்து முழங்கால் வலி பிரச்சனை குறைந்துள்ளது என்கிறார். அதனால்தான் பல தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டுள்ளார்.

      தபால்துறை ஊழியராக நீண்ட காலம் பணியாற்றிய பிரம்மாதேவ், 12 வது முறையை கொரோனா

      தடுப்பூசி போட சென்றபோது, ​​ சுகாதாரத்துறை பணியாளர்களால் அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அவர் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது அம்பலமானது.

      தொலைபேசி எண்களை மாற்றி மாற்றிக் கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக

      கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

      தமது அடையாள அட்டையை மாற்றி தடுப்பூசியை பலமுறை போட்டுக் கொள்வது சட்டத்திற்கு

      எதிரானது என மருத்துவமனை தலைமை மருத்துவர் அமரேந்திர நாராயண் ஷாஹி கூறியுள்ளார். பிரம்மதேவ் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

        விமான குண்டு தாக்குதல்
        Posted in Uncategorized

        மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்

        மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்

        சவூதி நட்டு அரச போர் விமானங்கள் ஏமான் நாட்டின் Shabwah மாகாணம் மீது ஐம்பது தடவை

        குண்டு தாக்குதலை மேற்கொண்டது ,இதில் பல வீடுகள் உடைந்து நொறுங்கியதுடன் அங்கு

        வசித்து வந்த
        மக்களும் பலியாகியுள்ளனர்

        இதற்கு பதிலடி ஏவுகணை தாக்குதல் சவூதி மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

          சிங்கத்தை
          Posted in Uncategorized

          வீதியால் சிங்கத்தை இழுத்து சென்ற பெண்

          வீதியால் சிங்கத்தை இழுத்து சென்ற பெண்

          குவைத் நாட்டில் பெண் ஒருவர் சிங்கம் வளர்த்து வருகிறார் ,இவர் வளர்த்த சிங்க குட்டி ஒன்று

          வீட்டில் இருந்து தப்பி வீதிக்கு சென்றுள்ளது

          மேற்படி விடயத்தை பொலிசாருக்கு தெரிவித்த அவர் ,அவர்களின் உதவியுடன் சிங்கத்தை மீள

          வீட்டுக்கு தூக்கி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

            கடித்து குதறிய நாய்
            Posted in Uncategorized

            சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்

            சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்

            தமிழகத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்து சென்ற சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று உருட்டி

            உருட்டி விரட்டி கடித்துள்ளது ,இந்த நாயின் கடியில் இருந்து சிறுமி மீட்க பட்டு காப்பாற்ற பட்டார்

            ,எனினும் 16 கடி காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார்

            தற்போது நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விடுவிக்க பட்டுள்ளார்

              வீழ்ந்த மாடி கட்டடம்
              Posted in Uncategorized

              இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்

              இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்

              இந்தியா தமிழக பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்த சாம்பவம் பெரும்

              அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


              முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு அறிவிக்க பட்டதால் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர்

              இந்த கட்டட இடி பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!

                நம்புகிறேன் நாளை கிடைக்கும் ..!

                நாளை ஒரு நாள் மீள வருவோம்
                நம்பும் தமிழர் ஈழம் தருவோம்
                நாடு பிடித்தே நாமும் ஆள்வோம்
                நம்பு தமிழா நாங்கள் வெல்வோம்

                எங்கும் செல்வோம் எதிலும் வெடிப்போம்
                எங்கள் இலக்கு எதுவோ அடைவோம்
                தூரம் எமக்கு துயரே இல்லை
                துணிந்து விட்டால் துளி அச்சமில்லை

                ஆண்டு நூறு கடந்து போகும்
                அதிலே துன்பம் மறைந்து போகும்
                எழுந்து விட்டால் எழுச்சி பொங்கும்
                எழுந்தே உலகு எம்மை வணங்கும்

                நீதி நேர்மை இங்கு இல்ல
                நீர்த்து போனால் ஏதும் இல்ல
                அழுகை நிறுத்தி எழ வேண்டும்
                அரண்கள் அமைத்தே பறக்க வேண்டும்

                உன்னில் உனக்கு இறக்கை கட்டு
                உயர ஏறி வானில் முட்டு
                வையம் வந்து வாசல் தட்டும்
                வாழ ஈழம் தந்து போகும் …!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 04-01-2022

                  இஸ்ரேல் ஆயுதங்கள்
                  Posted in Uncategorized

                  கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்

                  கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்

                  ஈரான் எல்லை வழியாக ஈரானுக்கும் கடத்திவரப் பட்ட அதி நவீன ஆயுதங்களை ஈரானிய

                  இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் ,உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை

                  அடுத்து நடத்த பட்ட வேட்டையில் இந்த ஆயுதங்கள் சிக்கின ,83 அதி நவீன ஆயுதங்கள் ,இவையாவும் இஸ்ரேல் தயாரிப்பு என தெரிவிக்க பட்டுள்ளது

                  கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கடத்தலில்

                  சிக்கிய வர்களுக்கு அங்கு மரண தண்டனை வழங்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                    ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்
                    Posted in Uncategorized

                    ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்

                    ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்

                    ஏமன் நட்டு சவுதியை ஆதரவு படைகளுக்கு செங்கடல் வழியாக சவுதியின் ஆயுத கப்பல் ஒன்று

                    நுழைந்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் காட்சி ஒன்று வெளியிட பட்டுள்ளது

                    ஆதரங்களுடன் காணொளியை வெளியிட்ட நிலையில் அது தமது கப்பல் இல்லை என்றே சவூதி

                    கூறி வருகிறது குறிப்பிட தக்கது

                      அமெரிக்கா இராணுவம்
                      Posted in Uncategorized உலக செய்திகள்

                      சிரியாவில் 128 வண்டிகளில் ஒயில் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                      .சிரியாவில் 128 வண்டிகளில் ஒயில் திருடி செல்லும் அமெரிக்கா
                      இராணுவம்

                      சிரியா காசாக்க பகுதியில் எண்ணெய்களை திருடிய வண்ணம் பலத்த பாதுகாப்புடன்

                      அமெரிக்காவின் 128 இராணுவ வண்டிகள் சென்றுள்ளன

                      குறித்த ஒயில் கடத்தல் மற்றும் திருட்டை முக்கிய நாடொன்றின் உளவுத்துறை மப்பம் பிடித்து வெளியிட்டுள்ளது

                      இது அமெரிக்காவின் சர்வதேச கொள்ளையை அம்பல படுத்தியுள்ளதாக அந்த செய்தி சுட்டி காட்டுகிறது

                        Posted in மருத்துவம்

                        டீ அதிகம் குடிப்பது நல்லதா

                        டீ அதிகம் குடிப்பது நல்லதா?

                        நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன.

                        காபி, டீ அதிகம் குடிப்பது நல்லதா?
                        காபி, டீ அதிகம் குடிப்பது
                        பலருக்கு ஒவ்வொரு நாளும் டீ காபியுடன் தான் விடியும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்துக் காபி அல்லது டீ, வேலை இடைவேளையின்போது பதினோரு மணிவாக்கில் இன்னும் ஒரு டீ. மாலை

                        தேநீர் இடைவேளை என்று சொல்லிக்கொண்டு ஒரு டீ. மாலை ஆறு மணிக்கு லேசாகத் தலைவலிக்கிறது என்ற விளக்கத்துடன் ஒரு டீ அல்லது ஸ்டிராங் காபி. ஒரு நாளில் குறைந்தபட்சம்

                        மூன்று அல்லது நான்கு முறையாவது இந்த பானங்களைப் பருகாதவர்கள் குறைவு. இப்படி அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா?

                        நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி

                        உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காபீன் என்கிற வேதிப்பொருள்

                        இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி டீ குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

                        ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. அப்படி குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர்,

                        பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் அதிகம் டீ குடிப்பதால் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

                        டீ குடிப்பது மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான

                        அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால்

                        குறையலாம் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் அதிகம் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம்.

                        காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும். அளவுக்கு அதிகம் காபி குடிப்பதால் ரத்தத்தில்

                        இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் டீ குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.

                        எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன

                          தவிக்கிறேன்
                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

                          உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

                          என்ன செய் தாயோ
                          என்னை ஏங்க வைத்தாயோ
                          என்னை ஏங்க வைத்தேனோ
                          என் இதயம் பறித்தாயோ

                          முன் பனியாய் பின்னிரவில்
                          முன்னே வாராயோ – நான்
                          முழு நிலவில் குளித்திட
                          முழு உலா வாராயோ

                          எதுகை மோனை எனதாகும் – என்
                          ஏக்கம் வாங்கு உனதாகும்
                          படித்து பாரு புதிராகும்
                          படைக்க முனை விழிப்பாகும்

                          சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
                          சங்கதி இருக்காதே
                          அந்தி சாயும் வேளையிலே
                          ஆள் மனம் தூங்காதே

                          முத்தம் தரவா முன்னே வரவா
                          முழு நிலவே பதில் தர வா
                          நித்தம் வரவா நீளும் இரவா
                          நினைவில் வைத்திட வா

                          உன்னை எண்ணி தவிக்கிறேன்
                          உருகி மெழுகாய் அழுகிறேன்
                          வின் விட்டு வாராயோ
                          விழுந்து உடல் தழுவாயோ ..?

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 03-01-2022

                          காமாஸ் ஏவுகணை
                          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                          இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –

                          இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –

                          ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கிய தளபதிகியுமாக விளங்கிய சுலைமானி அவர்கள் ஈராக்கில் வைத்து அமெரிக்கா ,

                          இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டார் ,ஈரானின் மூளையாக செயல் படுபவர்களை இஸ்ரேல் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது ,

                          இதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த தினம் பாலஸ்தீனம் காசா பகுதியில் வைத்து தாக்குதலில்

                          ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உலங்கு வானூர்திகள் மீது சாம் ஏவுகணைகள் கொன்டு கமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்

                          இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வானூர்தி உயர பறந்து தப்பி என்றுள்ளது

                          இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு தற்போது புது நெருக்கடியை

                          தருவித்துள்ளது ,இந்த ஏவுகணைகள் ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் என்பதும் ,கடந்த முறை வான்

                          படைகள் ஊடக பெரும் தாக்கல் நடத்த பட்டதும் அதற்கு பதிலடியாக இப்போது இங்கே இப்போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                            சுலைமானி
                            Posted in Uncategorized

                            சுலைமானி கொலை-அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க ஈரான் வேண்டுதல்

                            சுலைமானி கொலை-அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க ஈரான் வேண்டுதல்

                            அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கும் ஈரான்
                            அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி உள்ளது.

                            அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கும் ஈரான்
                            காசிம் சுலைமானி

                            ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின்

                            ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

                            ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது

                            . அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

                            இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.

                            இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.

                            இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை

                            ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக,

                            சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.

                            சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

                              பூனைகளுக்கு வளைகாப்பு
                              Posted in Uncategorized

                              பூனைகளுக்கு வளைகாப்பு – கோவையில் நடந்த சுவாரஸ்யம்

                              பூனைகளுக்கு வளைகாப்பு – கோவையில் நடந்த சுவாரஸ்யம்

                              பூனைகளுக்கு பிடித்தமான உணவுகள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன.

                              கருவுற்ற பூனைகளுக்கு வளைகாப்பு – கோவையில் நடந்த சுவாரஸ்யம்
                              பூனைகளுக்கு வளைகாப்பு

                              கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர் வசித்து

                              வருகின்றனர். வீட்டில் அவர்கள் 2 பெண், ஒரு ஆண் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வந்தனர்.

                              இந்நிலையில் அவர்களது 2 பெண் பூனைகளும் கருவுற்றது. பூனைகள் கர்ப்பமானது அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

                              இதையடுத்து உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர்.

                              மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கருவுற்ற பூனைகள்

                              அலங்கரிக்கப்பட்டன. நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு, கைகளில் வளையலுக்கு பதில்

                              கழுத்தில் மணிகள் கட்டப்பட்டன. மேலும் அந்த பூனைகளுக்கு பிடித்த பழங்கள், பிஸ்கட்கள்

                              மற்றும் இனிப்புகள் உள்பட உணவு பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கிருந்த பலர் கலந்து கொண்டனர்.

                                பிட் கொயினில் பணத்தை அள்ள இதோ சந்தர்ப்பம்
                                Posted in பங்கு சந்தை Forex Trade

                                பிட் கொயினில் பணத்தை அள்ள இதோ சந்தர்ப்பம்

                                பிட் கொயினில் பணத்தை அள்ள இதோ சந்தர்ப்பம்

                                உலக நாடுகளில் அதிக பேசு பொருளாக மாற்றம்பெற்றுள்ளது பிட்கொயின் ஆகும், ,இந்த பிட் கொயின் இந்த ஆண்டு முப்பது ஆயிரம் வரை வீழ்ச்சி உற்று பின்னர் அதுவே எழுபத்தாயிரத்திற்கு மேலாக செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

                                அதனால் தற்கால நிலவரப்படி இறங்கு நிலையில் செல்வதான தோற்றம் காண படுகிறது .

                                ,ஆதலால் காத்திருந்து பிட் கொயினில் நாம் கூறிய மேற்படி விலையை அண்மித்ததும் நீங்கள் அச்சம் இன்றி வாங்கி காத்திருந்து அதிக இலாபத்துடன் விற்று பணத்தை அள்ளி கொள்ளுங்கள்.

                                குறித்த விடயமானது பிட் கொயின் சாட்டின் டெக்கினிக்கல் ஊடாக அவதானிக்க முடிகிறது ,ஆதலால் திடீர் செல்வந்தராக அருமையான வாய்ப்பு உங்களை தேடி வருகிறது .

                                பிட் கொயினில் பணத்தை அள்ள இதோ சந்தர்ப்பம்

                                பங்கு சந்தையில் உங்கள் இலக்கு உங்களை தேடி வந்த பின்னர் காத்திருந்து வாங்கி அதிக இலாபத்தை பெற்று திடீர் செல்வந்தராக மாற்றம் பெறுங்கள் .

                                பிட் கொயின் டெக்கினிக்கல் ஆய்வை மைய படுத்தி மேற்படி விடயத்தை நாம் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .

                                பங்கு சந்தையில் உரிய முறையில் பணத்தை பாதுகாப்பாக கையாண்டு trade எடுத்தால் அதில் நீங்கள் அதிக இலாபத்தை பெற்று கொள்ள முடியும் .

                                கிளித்தட்டு ஆடுவது போன்று மீள் ஏறும் போது அழுகையும் இறங்கும் போதும் பதறுவதாகவும் திரிந்தால் பணத்தை இழக்கவே தான் முடியுமே தவிர அதில் இருந்து இலாபத்தை பெற்று கொள்ள முடியாது .

                                பிட் கொயினில் பணத்தை அள்ள இதோ சந்தர்ப்பம்

                                பிட் கொயினில் பணத்தை அள்ள சிறந்த ஆடு களம் ஒன்று திறக்கிறது. இதனை சாதகமாக பயன் படுத்தி பிட் கொயின் பங்கு சந்தையில் வெற்றி கொள்ளுங்கள் .

                                2022 ஆம் ஆண்டு பலத்த வீழ்ச்சி நோக்கி பிட் கொயின் சென்று பின்னர் அதிக உச்சத்தை தொட்டு சாதனை படைக்கும் .

                                ஆதாலால் பிட் கொயினில் கவலை இன்றி பணத்தை அள்ள உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வாசல் தேடி வருகிறது .

                                உலகில் முதல் நிலை வகிக்கும் பங்கு சந்தையில் இழப்பின்றி பணத்தை அள்ளி உங்களை வளப்படுத்தி கொள்ள இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்கிறோம் –

                                செல்வந்தராக மாறி கொள்ளுங்கள் .காத்திருப்பு பலன் இடும் – நன்றி வன்னி –

                                vanni forex video,vanni video,காணொளி உள்ளே
                                மேலதிக தொடர்புகளுக்கு 0044 7536707793

                                  ஓடி போ
                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  ஓடி போ …!

                                  ஓடி போ …!

                                  சிந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
                                  சிகரம் உன்னை அழைக்கும்
                                  மந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
                                  மன்றம் உன்னை இழிக்கும்

                                  விந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
                                  விண்ணும் உன்னை பாடும்
                                  சந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
                                  சகபாடி வந்து வாங்கும்

                                  முந்தைசெயல் விளங்கி நிற்பின்
                                  முழு உலகும் பாடும்
                                  இன்றைசெயல் இயம்பி நிற்பின்
                                  இன்றே ஏறி மிதிக்கும்

                                  கந்தல் உடை ஆனாலுன்னை
                                  கட்டி வந்தே அணைக்கும்
                                  கந்து வட்டி ஆனாலுன்னை
                                  காத் திருந்து வெட்டும்

                                  விந்தை உளார் யாரென்று
                                  வீடு காணி சொல்லும் – இந்த
                                  விந்தை கூர் வாயும்நன்று
                                  விந்தை செயல் கொட்டும்

                                  முந்தை உரை நாவெல்லாம்
                                  முளை இன்றி வாடும் – இந்த
                                  பிந்தை விதை நிலமாளும் -கால்
                                  பிடரி பட ஓடும் …!

                                  வன்னி மைந்தன்
                                  ஆக்கம் 02-01-2022

                                    சீமான் ஆவேசம்
                                    Posted in சீமான் பேச்சு

                                    என் நாட்டில் மட்டும் தான் இப்படி விழுகின்றன” – சீமான் ஆவேசம்

                                    என் நாட்டில் மட்டும் தான் இப்படி விழுகின்றன” – சீமான் ஆவேசம்

                                    இலங்கை தூதரகம் முற்றுகையா நீதிமன்றில் ஆயரான சீமான்

                                    இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                                    சீமான்
                                    Posted in Uncategorized

                                    கோபம் தான் என் இயல்பு அதனால் தான் வீடுகூட இல்லாமல் இருக்கிறேன் – சீமான் ஆவேச பேச்சு

                                    கோபம் தான் என் இயல்பு அதனால் தான் வீடுகூட இல்லாமல் இருக்கிறேன் – சீமான் ஆவேச பேச்சு

                                    இதில் அழுத்தி காணொளி பாருங்கள்