மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி

மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி

மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, ​​அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார்.

பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்,எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டேன் 95 பெற்றோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்

இதேவேளை, மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகிப்பதற்கான அனைத்து சேவைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இத்தாலி போர் கப்பலை தாக்கிய ஹவுதிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இத்தாலி போர் கப்பலை தாக்கிய ஹவுதிகள்


இத்தாலி போர் கப்பலை தாக்கிய ஹவுதிகள்

இத்தாலி போர் கப்பலை ஏவுகணைகள் மூலம் தாக்கிய ஹவுதிகள் .


செங்கடல் வெடித்த புதிய யுத்தம் ,இத்தாலி சரக்கு கப்பல்கள் தாக்க படலம்
என வெளியான புது தகவல் .

கண்ணீரோடு விடை பெற்ற சாந்தன் காணொளி உள்ளே
Posted in இலங்கை செய்திகள்

கண்ணீரோடு விடை பெற்ற சாந்தன் காணொளி உள்ளே

கண்ணீரோடு விடை பெற்ற சாந்தன் காணொளி உள்ளே


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டு விடுதலையாகி நோயால் வீழ்ந்த சாந்தன் வித்துடல் கண்ணீரால் நனைந்தது .

சாந்தனை நீதிமன்றம் விடுதலை புரிந்த பொழுதும் ,தமிழக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் சாந்தனை மீளவும் சிறையில் அடைத்து கொன்ற துயரம் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வணக்கத்தை செலுத்தினார் .

https://www.youtube.com/watch?v=hRUD0CqFzFo
நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்
Posted in இலங்கை செய்திகள்

நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்

நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்குக் காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர், படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இருந்து 59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படும் அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி
Posted in இலங்கை செய்திகள்

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச

வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் அவரது உடல் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (03) காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில்

சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் இருவர் மரணம்

மர்மமான முறையில் இருவர் மரணம்

நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

மர்மமான முறையில் இருவர் மரணம்

அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி

கரந்தெனிய – குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா


காசாவுக்குள் உணவு பொட்டலங்களை வீசிய அமெரிக்கா

காசா மக்களுக்கு 66 கொண்டெனர்களில் உணவு பொட்டலங்களை விமானத்தின் ஊடக வீசியுள்ளது .

38000 மக்களுக்கு இந்த உணவுகள் வீச பட்டுள்ளன .

பட்டினியால் வாடும் மக்களுக்கு இந்த உணவுகள் வழங்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

வரும் நாட்களில் மேலும் உணவுகள் வீச படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது

ஹமாஸ் கண்ணிவெடியில் சிதறிய தளபதிகள்|வெடித்த கட்டடம் 16 இஸ்ரேல் படை காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் கண்ணிவெடியில் சிதறிய தளபதிகள்|வெடித்த கட்டடம் 16 இஸ்ரேல் படை காயம்


ஹமாஸ் கண்ணிவெடியில் சிதறிய தளபதிகள்|வெடித்த கட்டடம் 16 இஸ்ரேல் படை காயம்

ஹமாஸ் கண்ணிவெடியில் சிதறிய இஸ்ரேலிய பெரும் தளபதிகள் ,
கண்ணிவெடியில் வெடித்த கட்டடம் ,சிக்கிய 16 இஸ்ரேல் படை காயம் ,
பலர் உயிர் ஊசல்

வீடியோ

ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் போர் அமைச்சரை சந்திக்கும் கமலா ஹாரிஸ்

இஸ்ரேல் போர் அமைச்சரை சந்திக்கும் கமலா ஹாரிஸ்

இஸ்ரேல் போர் அமைச்சரை சந்தித்து அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முக்கிய பேச்சுக்களில்
ஈடுபடவுள்ளார் .

இந்த சந்திப்பின் பொழுதுமுக்கிய விடயங்கள் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இறுக்கமடையும் செங்கடல் கப்பல் போக்குவர்த்தல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பொருளாதாரத்தில் அடி விழ ஆரம்பித்துள்ளது .

அதனால் போரை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை இஸ்ரேல் மதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

, அமெரிக்கா அதற்க்கு கட்டுப்பாட்டு வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது
அதனால் தான் அம்மணி ஓடி செல்கிறார் என்பதாக தெரிகிறது

வீடியோ

சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் கைதிகளை விடுவிக்குமாம் இஸ்ரேல் சொல்கிறது

ஹமாஸ் கைதிகளை விடுவிக்குமாம் இஸ்ரேல் சொல்கிறது

ஹமாஸ் போர் படைகள் சிறை பிடித்து சென்ற கைதிகளை விடுவிக்குமாம் என இஸ்ரேல் சொல்கிறது .

ஹமாஸ் போர் படைகள் விடுத்த கோரிக்கையை தட்டி கழித்து ,
ஆணவத்தில் ஆடி செல்லும் இஸ்ரேல் அரச தலைமையின் செயல் பாட்டால் காசா படைகள் ,எவ்வாறு கைதிகளை விடுவிப்பார்கள் என்கின்ற விமர்சனம் வலுத்துள்ளது .

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ,
போர் நிறுத்தம் என்றவிடயத்தை கடை ஏற்க மறுத்து வருகிறது .

அதனால் இந்த கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை தோல்வியில் முடியும் என்கின்ற நிலையில் இஸ்ரேல் இப்படி சொல்கிறது .

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து வந்த
17 தற்கொலை விமானங்களில் 14 ஐ தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்போது ,உக்ரைனுக்குள் ரஷ்ய தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது

கடந்த 48 மணித்தியாலத்தில் வீழ்த்த பட்ட அதிக தொகுதியாக இவை .காணப்படுகின்றன.

வீடியோ

ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்


ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்

ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் .


செங்கடல் இரணும் போர் கப்பல்களை இலக்கு வைத்து கப்பல் ஏவுகணை தாக்குதல் ,அலறும் சிவப்பு கடல் ,

வீடியோ

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது


பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கிராண்ட்பாஸ் சேதவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குற்றச் செயலுக்கு சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் 22 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடியோ

அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்
Posted in இலங்கை செய்திகள்

அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்

அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்

இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாப்பாடு ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் இராணுவம் 1000 பேர் மரணம்

உக்ரைன் இராணுவம் 1000 பேர் மரணம்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ரஷ்யா படைகள் 1000 பேர் பலி என தெரிவிப்பு

இந்த மாதத்தில் இரண்டு நாட்களில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த ,நூற்றுக்கு மேற்பட்ட எதிரி படைகள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரச இராணுவம் அறிவித்துள்ளது .

எனினும் இன்றும் தமது தரப்பில் உக்ரைன் படைகள் தெரிவிக்கவில்லை .

வீடியோ

இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் மரணம் 570 இஸ்ரேல் வீடுகள் அழித்த ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் மரணம் 570 இஸ்ரேல் வீடுகள் அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் மரணம் 570 இஸ்ரேல் வீடுகள் அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் கைதிகள் ஏழு பேர் இஸ்ரேல் தாக்குதலில் மரணம் என ஹமாஸ் பேச்சாளர்.


அறிவிப்பு |570 ஸ்ரேல் வீடுகள் ஹிஸ்புல்லா தாக்குதலில் அழிப்பு என தெரிவிப்பு.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in உலக செய்திகள்

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

லண்டனில் கிளாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் பெற்ற வண்ணம் உள்ளனர் .

துப்பாக்கி சூடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டது .

எனினும் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .