கடுங்கன்னாவ பகுதியில் மேலும் பாறைச்சரிவுகள் ஏற்படும் அபாயம்

கடுங்கன்னாவ பகுதியில் மேலும் பாறைச்சரிவுகள் ஏற்படும் அபாயம்
Spread the love

கடுங்கன்னாவ பகுதியில் மேலும் பாறைச்சரிவுகள் ஏற்படும் அபாயம்

கடுங்கன்னாவ பகுதியில் மேலும் பாறைச்சரிவுகள் ஏற்படும் அபாயம் நீடிப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRI) சிரேஷ்ட புவியியலாளர் டாக்டர் வசந்த சேனதீர எச்சரித்துள்ளார்.

நேற்று (10) கடுங்கன்னாவவில் பாறைச்சரிவு பதிவான இடத்திற்கு மேலே பல பாறைகள் இன்னும் சிக்கியுள்ளதாகவும், அவை எந்த நேரத்திலும் பெயர்ந்து விழக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடிகமுவவில் உள்ள ரயில் பாதையைப் பாதிக்கக்கூடிய அபாயகரமான சூழ்நிலை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளால் போதுமான அளவு பதிவு செய்யப்படாத சில

பகுதிகளில் பெய்யும் தனித்த மழைப்பொழிவு, நிலச்சரிவுகள் மற்றும் பாறைச்சரிவுகள் போன்ற அபாயங்களைக் கணிப்பதை மேலும் கடினமாக்கியுள்ளது என்று டாக்டர் சேனதீர விளக்கினார்.

மழைமானிகள் ஆறு முதல் பத்து கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கக்கூடும் என்றும், இது கண்காணிப்பு நிலையங்களுக்கு

இடையில் அமைந்துள்ள பகுதிகளுக்கான மழைப்பொழிவுத் தரவுகளில் இடைவெளிகளை உருவாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, கடுங்கன்னாவ பாறைச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குருகுத்தல பள்ளியில் உள்ள மழைமானியில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், பாறைச்சரிவு ஏற்பட்ட உண்மையான இடத்தில் பெய்த மழையே இந்த சம்பவத்திற்குக் காரணமாக அமைந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அபாயங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மாறிவரும் சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் டாக்டர் சேனதீரா வலியுறுத்தினார்.