Author: நிருபர் காவலன்
5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு
5377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் அழிப்பு
கைப்பற்றப்பட்ட 5,377 கிலோகிராம் சட்ட விரோத லஞ்ச் சீட்டுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அழிக்கப்பட்டுள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் அதிகார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த லஞ்ச் சீட்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டதுடன், புத்தளத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வைத்து குறித்த லஞ்ச் சீட்டுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை நேற்று (19) அழிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
சட்டவிரோத பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடுக்கப்பட்ட 12 வழக்குகளின் வழக்கு
பொருட்களாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பொலித்தீன் லஞ்ச் சீட்டுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் படைகளை ஓட ஓட அடித்த ஹமாஸ்
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
ட்ரக் வாகனமொன்றில் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதன்போது, அவர் மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ட்ரக் வாகனத்தில் மோதுண்டுள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் ட்ரக் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இஸ்ரேல் விமான நிலையம் தாக்குதல் |மூழ்கிய சரக்கு கப்பல் பலரை காணவில்லை
இஸ்ரேல் விமான நிலையம் தாக்குதல் |மூழ்கிய சரக்கு கப்பல் பலரை காணவில்லை
இஸ்ரேல் விமான நிலையம் தாக்குதல் பலத்த சேதம் என அறிவிப்பு ,கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் பலரை காணவில்லை.
குவிக்க பட்ட கடற்படை ,தொடரும் தேடுதல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதி அவுட்
இஸ்ரேலை துறைமுகம் மீது ஹவுதி தாக்குதல் சிக்கிய அமெரிக்கா கப்பல்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரங்கேறிய அராஜகங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று (19) மதியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக இராமநாதன் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், வெடுக்குநாறி எங்கள் சொத்து, மயிலத்தமடு எங்கள் சொத்து, திட்டமிட்ட கைதுகளை நிறுத்து, சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்து, தையிட்டி எங்கள் சொத்து, நீராவியடி எங்கள் சொத்து, குருந்தூர்மலை எங்கள் சொத்து, மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா? உள்ளிட்ட பல கோசங்கலை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்
200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்
எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.
தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காக் கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன். இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை நேற்று (19) செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆவயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள எடுக்கப்பட்ட போது, நேற்று (19) வரை பொலிஸாரின் கோரிக்கைகு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தரப்பில் தொல்பொருள்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றம் அனைவரையும் கடந்த 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கின்ற உத்தரவை வழங்கியிருந்தது.
பொலிசாரையும் விசாரணையை துரிதப்படுத்தி பூரணமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது. கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆட்சேபித்து, எந்தவொரு இடத்திலும் சட்டம் மீறப்படுவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி, தொல்பொருட்கள்கட்டளைச்சட்டம் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கின்ற போது இதற்கு பொருந்தாது என்று சுட்டிக் காட்டப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு வாதிட்டோம்.
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
ஆயினும், பொலிஸ் தரப்பில் குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15 உப பிரிவு சீயினை சுட்டிக்காட்டி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரப்பட்டது. அந்நிலையில் அறிவு சார் நீதவான் அவர்கள் இந்த விசாரணை முடிவுறுத்தப்பட்டு பொலிஸ் தரப்பில் இறுதி அறிக்கை வடிவில் பிராத்து எனப்படும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு பொலிசார் கோரியவாறு ஏற்றுக் கொண்ட ஒருவார கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.
நேற்று வரை சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை வழங்கியிருந்தார். மீண்டும் நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருடைய ஆலோசனையையும், அறுவுறுத்தல்களையும் பெறுவதற்காக வழக்கின் விசாரணை கோவையையும், தங்கள் வசம் இருக்கும் அனைத்து கோவைகளையும் சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக தாங்கள் அனுப்ப வேண்டி இருப்பதால் நேற்று குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மன்றில் தெரியப்படுத்தினர்.
இந்த அடிப்படையில் சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான விண்ணப்பதை முன்வைத்தனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். நீதிமன்ற கட்டளை ஊடாக விளக்கமறியலில் வைப்பதனால் அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது சட்டத்திற்கு அமைவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தோம்.
பொலிஸ் தரப்பின் விண்ணப்பம், குற்றத்ப்பத்திரத்தை தாக்கல் செய்ய தாங்கள் ஒத்துக் கொண்ட நேற்று தாக்கல் செய்யாமல் சட்டா அதிபரின் அறிவுரையை இப்போது நாடியிருப்பது இந்த வழக்கின் சட்ட அடிப்படை தொடர்பிலே அவர்கள் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை முன்வைத்தோம். இருட்டு அறை ஒன்றில் கறுப்பு பூனையை தேடுவது போன்று தான் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வடிவமைக்கும் விதமாக செயற்படுகிறார்கள் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
எங்கள் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்கள் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது சட்டமா அதிபரிடம் தற்போது ஆலோசனை பெறுவது தொடர்பில் பல கேள்விகளை பொலிசாரிடம் கேட்டிருந்தது. இறுதியில் விபரமான தீர்ப்பிளை வழங்கியிருக்கின்றது. சந்தேகநபர்கள் பிணை மறுக்கப்படும் தொல்பொருள் கட்டளைச் சட்டம் 15 சீயின் கீழ் பொலிசார் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய மன்று, பிரஜைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. இது சட்டத்திற்கோ, நீதிக்குகோ ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அதனடிப்படையில் நாங்கள் கோரியவாறு உகந்த கட்டளை ஒன்றை வழங்குமாறு முன்வைத்த கருத்தினை எடுத்து இந்த வழக்கில் இருந்து அனைத்து சந்தேக நபர்களையும் விடுதலை செய்து வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
குறித்த வழக்கில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட பலர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தாமதமாகும் அபாயம்
தேர்தல் தாமதமாகும் அபாயம்
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
“தற்போது, தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையானது பாராளுமன்ற தேர்தல் முறையை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது பற்றியதாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படுவதாயின், அதில் ஒரு அங்கமாக வரும் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் இணக்கம் காணப்பட வேண்டும்.
ஏதோ ஒரு வகையில் எல்லை நிர்ணயம் முடிவுக்கு வரவில்லை என்றால், வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள், தேர்தல் முறையில் திருத்தம் செய்யப்பட்டாலும், தற்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கும் திருத்தத்தை இந்த வரைவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், தேர்தல் முறை திருத்தப்பட்டு, சட்டம் இயற்றப்படும், எல்லை நிர்ணயம் முடிவடையாமல் போகலாம்” என்றார்.
பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது
பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது
குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கைக்கு அமைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பொரளை பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினர் கெசல்வத்த தினுகவின் நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கஞ்சிபானை இம்ரானின் குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கோடா ரிஸ்வான்’ என அழைக்கப்படும் அஹமட் ஜிப்ரி அஹமட் றிஸ்வான் என்ற சந்தேக நபர் 6,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், காஜிமா வத்தை மைதானத்திற்கு அருகில் 6,620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த புகுடு கண்ணாவின் உதவியாளரான முனவீர ஆராச்சிலகே சுசந்த என்ற சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோப் குழுவின் தலைவர் நீக்கப்படாவிடின் உண்ணாவிரத போராட்டம்
கோப் குழுவின் தலைவர் நீக்கப்படாவிடின் உண்ணாவிரத போராட்டம்
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று (20) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்த நியமனம் கோப் குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோப் குழுவில் இருந்து சுமார் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், கோப் குழுவின் தலைவர், அந்த பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், அந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி அமைச்சரவை அனுமதி
குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அமைச்சரவை தீர்மானம் மேலே.
நெல் விவசாயிகளுக்கு உர மானியம்
நெல் விவசாயிகளுக்கு உர மானியம்
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.
குறித்த வைப்புத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் மேலே
ஹாமாஸ் சாதனை ஈரான் அறிவிப்பு அமெரிக்கா விமானம் மீது தாக்குதல்
ஈரான் ஏவுகனை கப்பல்கள் களத்தில் குதிப்பு அலறும் எதிரிகள்
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (17) மாலை கிணற்று மோட்டார் சுவிச்சை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்
பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியபபடுததப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.
மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் துஸ்பிரயோகம் தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறி வருகிறது.
எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், இதன்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை
வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலில் பொலிஸாரினால் 8 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.



























