Author: நிருபர் காவலன்
ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்
ஹவுதி தாக்குதல் கப்பல் சேதம் ரஷ்யவில் தாக்குதல் 100 மக்கள் காயம்
ஹவுதிகள் நடத்திய கப்பல் ஏவுகணை தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ,
ரஷ்யாவில் நடத்த பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி
அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 400 கோடி ரூபா செலவில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளைச் சென்று பார்வையிட்டனர்.
சுதந்திர தினத்திற்கு செலவழிப்பதை விட விவசாயத்துக்கு ஒதுக்குங்கள்
சுதந்திர தினத்திற்கு செலவழிப்பதை விட விவசாயத்துக்கு ஒதுக்குங்கள்
நேற்று (22) பாராளுமன்றத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரேரணையின் போது, சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திறகு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் விவசாயம் சம்பந்தமான பிரச்சனைகளான சந்தைப்படுத்தல், பரிந்துக்கப்பட்ட நெல்வகை தொடர்பான பிரச்சனைகள், உர விநியோகம், யானைத் தாக்கம், மானியம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் நஷ்டத்துக்கான இழப்பு.
விவசாயிகளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய பிரேரணை இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கில் வாழும் எமது மக்கள் விவசாயம், கால்நடை, மீன்பிடியினை நம்பி தமது வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தினை உதாரணமாக வைத்து நான் சில விடயங்களை கூறுகின்றேன். இது வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் ஒரு பிரச்சனை ஆகும். அந்த வகையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்பன ஒன்றாக பயணிக்கும் துறைகளாக காணப்படுகின்றன. ஆகவே விவசாயிகளுக்கு கடந்த போகத்திலே மிக முக்கிய பிரச்சனையாக காணப்பட்டது மேய்ச்சல் தரை நிலப் பிரச்சனை. மயிலத்தமடுவிலிருந்து 150 நாட்களுக்கும் மேலதிகமாக போராட்டங்கள் நடை பெறுகின்றன.
ஆனால் அரசாங்கத்தினுடைய இனவாத செயற்பாட்டின் காரணமாக எங்களது மேய்ச்சல் தரையை வர்த்தமானி ஊடாக அறிவிக்காமல் பெரும்பான்மை இனத்தினை குடியேற்றி விவசாயம் மேற்கொள்ள முன்வந்தமையினால் இன்று கால்நடை வைத்திருக்கும் எமது தமிழ் மக்கள் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் விவசாயத்தை ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வெருகல், திருகோணமலை, அம்பாறை ஆகிய இடங்களிலும் இப் பிரச்சனைகள் நிலவுகின்றன. ஆகவே இப் பிரச்சனைகளுக்கு விவசாய அமைச்சரும் சரியான தீர்மானத்தை பெற்றுத் தர வேண்டும்.
“2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களை அமைப்போர் மகாவலி கங்கை B வலயத்தினுள் உள்ளடக்கப்படமாட்டார்கள்” எனக் கூறியும் அத்துமீறிய குடியேற்றங்களை அமைத்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். இதற்கான தீர்வினை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், மாகவலிக்குரிய அமைச்சர் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி பெற்றுத் தர வேண்டும்.
நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் முதலாவது போகத்தினை முதலில் ஆரம்பிப்பது கிழக்கு மாகாணத்தில் ஆகும். கிழக்கில் விவசாயிகள் தமது நிலத்தை தயார்படுத்தி; விதைப்பை ஆரம்பிக்கும் போது பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் ஆரம்பிக்க மாட்டார்கள். விவசாய ஆரம்ப திகதியை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி நான் அமைச்சராகிய 4 வருடங்களாக கோரிக்கை முன்வைத்துள்ளேன்.
கடந்த போகத்திலும் அறுவடையின் பின்னரே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் பொலன்நறுவை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நெற்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கும் திகதியிலேயே திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது. விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கியே விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்தப் போகத்திலாவது உரிய நேரத்தில் மானியங்கள் வழங்காவிட்டால் எமது விவசாயிகள் கடனாளிகளாகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படும். இதற்குரிய தீர்வினை விவசாய அமைச்சர் பெற்றுத் தராவிட்டால் அமைச்சராக இருந்தும் தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என என்றும் பழி சுமத்துவோம்.
எமது மக்கள் கஷ்டத்தின் மத்தியில் தமது தங்க நகைகளை அடகு வைத்து உரத்தினை கொள்வனவு செய்தாலும் விவசாயிகள் அறுவடை செய்யும் காலப்பகுதி காணப்படுகின்ற போது யானைகளின் தொல்லை காணப்படுகின்றது. உயிரிழப்பும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கௌரவ அதாவுல்லா அவர்களும் இருக்கும் போது இவ் யானைப் பிரச்சனைகளைப் பற்றி கூறினேன். யானை வேலிகளை அமைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வரை 10 Km யானை வேலியை கூட அமைக்கவில்லை. இராப்பகலாக கண்விழித்து யானைகளிலிருந்து நிலத்தினைப் பாதுகாத்தால் இயற்கை அனர்த்தங்களின் பிரச்சனை காணப்படுகின்றது.
இதற்கு மக்களும், அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாது. கடந்த போகத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இப் பிரச்சனை தொடர்பில் தரவுகளை மேற்கொள்ள வந்த Insurance Co-operation ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை பார்த்துவிட்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் எனக் கூறி சென்றுவிட்டனர்.
2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படும் மாவட்டத்தில் ஒரு நாளினுள் எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியும்? மட்டக்களப்பில் வெல்லாவெளி, போரதீவுப்பற்றினை நோக்கினால் அங்குள்ள ஒரு சில நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு Insurance Co-operation நஷ்டஈடு வழங்கவில்லை.
இது விவசாயிகளை தொடர்ந்து கடனாளிகளாக்கும் செயன்முறையாகும். இவ்வாறு கஷ்டத்துக்கு மத்தியிலும் எமது விவசாயிகள் நெல்லைப் பெற்றாலும் அதனை உரிய விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த அரசாங்கம் ஒரு வக்கில்லாத அரசாங்கமாக உள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை எமது மக்களுக்கு நீங்கள் தெரிவித்தால் அந்த இன நெல்லை எமது மக்கள் உற்பத்தி செய்வர்.
நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் பணமில்லை என்றால் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கியுள்ள ஆடம்பர செலவுகளை குறைத்தால் நெல்லினை கொள்வனவு செய்ய வேண்டிய பகுதியளவு பணத்தினை பெற முடியும்.
சுதந்திரமற்ற இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாட செலவழிக்கப்பட்ட பணத்தினை வைத்து நெல் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்க முடியும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நெல் கொள்வனவிற்காக சில உத்திகள் கையாளப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் எமது மாவட்டத்தில் எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி
புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி
புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக குறித்த தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் வருகை தந்த பின், ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி
இந்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த இரண்டு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்தின் போது வீதியில் கவிழ்ந்ததில் அந்த லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
எனினும், மோட்டார் சைக்கிளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், மோட்டார் சைக்கிளில் வருகை தந்த , தான் புத்தளத்திலிருந்து ஆனமடுவைக்கு பஸ்ஸில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அபாயகரமான கட்டுமானங்கள்
கொழும்பில் அபாயகரமான கட்டுமானங்கள்
கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மர்மநபர்கள் தாக்குதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்
மர்மநபர்கள் தாக்குதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோவில் ‘பிக்னிக்’ என்ற இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மர்மநபர்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெல் கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீடு
நெல் கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீடு
பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது.
திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பெரும்போக நெல் கொள்வனவிற்காக வேளாண்மை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளன
கடந்த ஐந்து நாட்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 9 லட்சத்து 4 ஆயிரத்து 202 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் 7 வலயங்களிலுள்ள 241 நெல் களஞ்சியசாலைகளை நெற்கொள்வனவிற்காக தாயார் நிலையில் வைத்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது
களு கங்கையில் மூழ்கி இருவர் பலி
களு கங்கையில் மூழ்கி இருவர் பலி
இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
எல்லகாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும், ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
இரவல் வாங்கி ஓடிய காலம்
இரவு பகலா இதே மோகம். அதில்
இடையால நுழைந்து ஓடிய யோகம்
இனிக்கிடைக்காது இந்தப் போகம்.
கிரவல் வீதிகளாய் கிடந்த நேரம்
கிபிர்போல் பறந்துபோன வேகம்.
பரவல் மண்ணும் உரஞ்சிய காலம்
பட்டுமாறியதே எத்தனை காயம்.
இருமல் தடிமன் வந்தபோதும்
இருந்து ஆறாமல் குதித்த காலம்.
குருமன் குஞ்சுகள் ஓடுவதைப் பார்த்து
குடும்பமே ரசித்த அழகிய காலம்.
பிளசர்கள் பல்சர்கள் பிறக்காத காலம்
பெரிதா வசதிகள் சிறக்காத காலம்.
இளசுகள் பெரிசுகள் இருந்துகதைக்க
எடுத்துக்கொண்டு மெதுவா ஓடியகாலம்.
கைப்பேசி கணனி காணாத காலம்.
கண்முன் தெரியாப் போகாத காலம்.
அப்பாச்சி அக்ரிவா அறியாத காலம்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்.
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

இஸ்ரேல் ஆமி வாகன அணிகளை தாக்கிய போர் படைகள்
இஸ்ரேல் ஆமி வாகன அணிகளை தாக்கிய போர் படைகள்
இஸ்ரேல் இராணுவ வாகன அணியை வழிமறித்து.
தாக்கிய பாலஸ்தீன போர் படைகள் ,இழப்பு அதிகம் என அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேல் மின் உற்பத்தி நிலையம் அழிப்பு ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்து
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு
பொலிஸாருக்கு தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பணம் பரிசு
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு
ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ரி56 துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கும் எவருக்கும், 5 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசாக வழங்குவதுடன் மேலும் பல பரிசுகளையும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாளிகாவத்தை துப்பாக்கி சூடு இருவர் கைது
மாளிகாவத்தை துப்பாக்கி சூடு இருவர் கைது
01.09.2023 அன்று மாளிகாவத்தை அபேசிங்கராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த
போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தல், நடைபெறவுள்ள ஏனைய தேர்தல்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னரே இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாததால், எதிர்காலத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மத்தியில் இருதரப்பு கருத்துக்கள் நிலவுவதால் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஜனாதிபதியுடன் மீண்டும் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் அனைவரும் ஒரே கருத்தை முன்வைக்க முடியும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
குடும்பத் தகராறு முற்றியதை அடுத்து 40 வயது கணவன் தனது 33 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணேமுல்லை துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
கணேமுல்லை துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) கணேமுல்ல சுமேத மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, சந்தேக நபர் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கசூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபர் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கடந்த 9ஆம் திகதி ஜா-எல, தன்டுகம பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் 28 வயதான எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் இராணுவ சேவையிலிருந்து தப்பி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்
வெல்லவாய பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்து பலர் காயம்
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்ஷ மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்ஷ மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (21) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம்
நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம்.
மேலும், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் திறைசேரி என்பன இணைந்து மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளன.
அதன் கீழ், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்வாங்கி, கிராம சேவகர் பிரிவொன்றுக்கு 07 பேர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, NAITA (National Apprentice and Industrial Training Authority) மற்றும் தொழிற்பயிற்சி
அதிகாரசபை (Vocational Training Authority) என்பன இணைந்து வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்தவுள்ளன. அங்கு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர்-நன்னீர் மீனவக் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடித் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும்.
மேலும், பனை, கித்துல், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட “கள்ளு அனுமதி” வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், சீனாவின் சோங்சிங் பிராந்தியத்தில் உள்ள 33 தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திடவும் அமைச்சு
தீர்மானித்துள்ளது. அதனூடாக ஒரு இலட்சம் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாகவும், இத்திட்டங்களின் மூலம் 03 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை வலுவூட்ட எதிர்பார்த்திருக்கிறோம்.” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

























