Posted in சினிமா

விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் – அருண்விஜய்

விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் – அருண்விஜய்

நடிகர் அருண் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லாத போதும், தனது விடாமுயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக பாக்ஸர், மாபியா, சினம், அக்கினிச் சிறகுகள் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன். “ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய்.

விஜய், அருண் விஜய்

அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன். அவர் கொடுத்த நம்பிக்கையால் நான் வீட்டுக்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது என்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

Posted in சினிமா

பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்

பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்

பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். எவ்வித காரணங்களும் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது.

நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். என தொண்டர்களுக்கு கமல்ஹாசன் கட்டளையிட்டுள்ளார்.

இட்லி மாவை வைத்து சூப்பரான ஜிலேபி 5 நிமிடத்தில் ரெடி
Posted in இலங்கை செய்திகள்

சிதறிய பயணிகள் பேரூந்து – 30 பேர் காயம்

மொனராகலையில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று றக்குடன் மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் இரண்டு மொட்டை பிக்குகளும் அடங்கும் ,அனைவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,சாரதியின் அலட்சியே போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

திடீர் மண்சரிவு – போக்குவரத்து தடையால் மக்கள் அவதி

இலங்கை – பதுளை பிரதான வீதியில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது ,சீரற்ற கால நிலை காரணமாக மலை பகுதியில் இருந்து ஏற்பட்ட மண்சரிவால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .

மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

Posted in சினிமா

விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை- பொலிசார் குவிப்பு

விளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு….. விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை

ஆன்லைன் வர்த்தகத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் ‘மண்டி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மண்டி’ விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்களும் நாடார் அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் திரண்ட வியாபாரிகள் விஜய் சேதுபதியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்று முழக்கமிட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் பாடி விஜயகுமார், சமத்துவ மக்கள் கட்சி சீதாலட்சுமி, துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ், காளிபாண்டியன், மண்டலத் தலைவர் அருணாசலமூர்த்தி, ஜெயராமன், செந்தில் முருகன், எம்.பி. ரமேஷ், கோயம்பேடு ஜி.டி.ராஜசேகர், சீனிபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர் சங்கத்தினர்

அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

முற்றுகை போராட்டத்தின் போது கொளத்தூர் ரவி கூறியதாவது:- ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பரத்தில் நடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விஜய்சேதுபதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த விளம்பரத்தில் இருந்து விலகும்வரை தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடை பெறும்.

மத்திய-மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 21 லட்சம் வணிக குடும்பங்கள், தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிப்படையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Posted in இலங்கை செய்திகள்

கோத்தபாயவுடன் மேலும் 15 கட்சிகள் இணைவு

இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்சவுடன் கடந்த தினம் மேலும் 15 இனவாத கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர் .

மேற்படி சம்பவங்கள் யானை கட்சியினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பிரான்சில் கவிழ்ந்த பேரூந்து – 33 தமிழர்களும் படுகாயம்

லண்டனில் இருந்து வடக்கு பிரான்ஸ் நோக்கிய பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 33 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,

குறித்த பேரூந்தில் pain, Australia, Mauritius, Japan மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களும் பயணித்துள்ளனர் ,காயமடை ந்தவர்களில் இலங்கையரும் அடங்கும் என தெரிவிக்க படுகிறது ,

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Posted in இலங்கை செய்திகள்

நான் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை – எட்டப்பன் கருணா கூப்பாடு

இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை சிங்கள படைகளுடன் இணைந்து காட்டி கொடுத்த கருணா ,அந்த புலிகள் அமைப்பை முற்றாக அழித்தான் .

தற்போது கோட்டபாயவுடன் இணைந்து போட்டியிடும் இவன் தான் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுக்கவில்லை என கூறியுள்ள செயல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு

வீட்டில் தனிமையாக வாழ்ந்தவர் – சடலமாக மீட்பு

இலங்கை -மித்தெனிய, முருங்கஸ்யாய பகுதியில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீட்டை சோதனை செய்த பொழுதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது கோர தாக்குதல்

கோட்டபாய கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது கோர தாக்குதல் ஆனமடு பகுதியில் இடம்பெற்ற கோத்த பாயாவின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பேரூந்து மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,

இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் , மேற்படி சம்பவம் தேர்தல் வன்முறையாக பதிய பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கை

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்க பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் வேண்டுதல் விடுத்துள்ளார் ,பத்து ஆண்டுகள் யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழர்களுக்கு தீர்வு வழங்கது சிங்கள பவுத்த பேரினவாதம் சென்று கொண்டிருப்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

நான் சிறப்பாக செயல்படுவேன் – அடித்து விடும் சஜித் பிரேமதாசா

நான் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு விட்டால் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் எவரும் செய்திடாத விடயங்களை துணிவுடனும் ,அர்ப்பணிப்புடனும் செயல்படுத்துவேன் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் ,பிரேமதாசா தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது – சந்திரிக்காவிற்கு ஆப்பு ..?

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது – சந்திரிக்காவிற்கு ஆப்பு ..?

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து கட்சிகள் கூடி தமது திட்டம் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள கூடி பேசி வருகின்ற்னர் ,அவ்விதம் சுதந்திர கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது ,இதன் பொழுது கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படலாம் என தெரிவிக்க பட்டதை அடுத்து சந்திரிக்கா கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை தாக்கவுள்ள புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியி தாழமுக்கம் நிலவுதால் இலங்கை கடற்கரை பகுதிகளை புயல் தக்க கூடும் என தெரிவிக்க பட்டுள்ளது ,கடலோர பகுதியில் உள்ள மக்கள் இந்த வேகமான காற்று கடக்கும் பொழுது விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

போலி நாணய தாள்களுடன் ஐவர் மடக்கி பிடிப்பு

தென் இலங்கை ப்குதியில் சட்ட்திற்கு புறம்பாக இலங்கை வந்த போலி நாணய தாள் மாற்றும் கும்பல் ஒன்று காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,கைதானவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இன்னுமொரு மியன்மாரை உருவாக்க வேண்டாம்-முசுலீம்கள் கூவல்

இன்னுமொரு மியன்மாரை உருவாக்கிவிடவேண்டாம் என்று எல்லோரும் கூறி வருகின்றார்கள். நான் கூறுகின்றேன் இன்னுமொரு மியன்மார் அல்ல நாம் மியன்மாரில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதிலிருந்து நாம் விடுபடவும், எமது சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்காகவும் அன்னம் சின்னத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் புதிய ஜனநாயக ஐக்கிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (03) அறுகம்பே தனியார் விடுதியில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட கிழக்கிலுள்ள சிறுபான்மையினரை நன்றாக புரிந்து கொண்டுள்ள வேட்பாளர் என்றால் அது சஜீத் என்கின்றவராவார். நாட்டின் தலைமகனாக வருவதற்கான சகல தகுதியும் அவருக்குண்டு. அவரின் தகப்பனார் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டவர் என்றால் அது மிகையாகாது.

1990 ஆண்டு காலப்பகுதியில் பொத்துவில் பகுதிக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் வருவதற்கு பயந்துகொண்டிருந்த அந்த அசாதாரண காலங்களில் ரணசிங்க பிரேமதாச என்கின்ற எமது நாட்டின் தலைமகன் பொத்துவில் பிரதேச மக்களை சந்தித்து அவர்களுக்கான இலவச மின்சார இணைப்பை வழங்கி பொத்துவில் பிரதேசத்துக்கு ஒரு வெளிச்சத்தை வழங்கிய ஒரு தைரியமானவர் என்பதை எமது பொத்துவில் மக்கள் எவரும் எளிதில் மறந்து விடவில்லை, மறந்து விடவும் மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளராக அவருடைய மகன் சஜித் பிரேமதாச இன்று களமிறங்கியுள்ளார். அவரின் தந்தை விட்டுச் சென்ற சேவைகள் எங்கு நிறுத்தப்பட்டதோ அந்த இடத்திலிருந்து அந்த சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவேதான் அவர் ரணசிங்க பிரேமதாசவின் பாதணிகளை அணிந்து அவரைப் போன்றே ஆடைகளையும் அணிந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான், சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இனவாத கருத்துக்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்ளும் மாபெரும் இனவாத முகவர்களான உதய கம்மன்வில, ரத்ண தேரர், ஞானசார தேரர், கருணா அம்மான், பிள்ளையான் போன்ற அனைத்து இனவாத குழுக்களும் ஒன்றாக இணைந்துள்ள கட்சியாகவே தான் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காணப்படுகின்றது என்பதை எமது சிறுபான்மையான சமூகம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும் என்பதற்காக தனித் தனியாகவும், குழு குழுவாகவும், கட்சி கட்சியாகவும், கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியாகவும் பல முயற்சிகள் இன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு எமது பொத்துவில் பிரதேச மக்கள் நன்றி மறக்காதவர்கள் என்பதை இந்தத் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

மட்டன் பிரியாணி குக்கரில் செய்வது எப்படி வாங்க சப்பிடலாம் பிரியாணி
Posted in கிசு கிசு

அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை

அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகை

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ்

வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்களாம். “நான் இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக இல்லை” என்று நடிக்க

மறுத்து விட்டாராம். அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை (போலீஸ் வேடத்துக்கு) தேடி வருகிறார்களாம்.

“என் கை, கால், இடுப்பு மூன்றையும் அசைத்து ஆடினாலே போதும். ரசிக கண்மணிகள் ஆசையுடன் பார்ப்பார்கள்.

அதற்கு மேல் ‘ரிஸ்க்’ எடுக்க தேவையில்லை” என்கிறாராம், அந்த ஐந்தெழுத்து நடிகை!

Posted in சினிமா

அவர்களுக்கு பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சமீரா தனது இரண்டாவது மகனுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக புகைப்படம் வெளியிட்டார். கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான ‘முல்லையாநாகிரிக்கு’ டிரெக்கிங் சென்ற புகைப்படம் தான் அது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் சமீரா இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டார். விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒருசேர குவிந்தது.

சமீரா ரெட்டியின் பதிவு

இந்நிலையில் சமீரா தனது பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “என்னுடைய கடந்த காலத்தில் இருந்து ஒரு குண்டை தூக்கிப்போடுகிறேன். மீம் மேக்கர்ஸ் உங்களுக்காகத் தான். நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும். கடந்த காலங்களில் நான் மிகவும் சிரமப்பட்டேன். அப்போது எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. இரண்டு குழந்தைகள் கொண்ட என்னை நேசிக்கும் எனது கணவர் இருந்தும், இப்போதும் கூட என் உடலைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்ற கவலை மற்றும் போராட்டத்தின் பல தருணங்கள் எனக்கு உள்ளன” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். உடல் பருமன் குறித்து விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீரா, பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா

சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாள படங்களில் சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர்.

அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஸ்ரியா. மேலும் நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சில படங்களில் மட்டும் நஸ்ரியா நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்.

இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.நஸ்ரியா புகை பிடிக்கும் போஸ்டர்

சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா

தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

இவரது அபார நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டவர் ,நஸ்ரியா நடித்து வெளியான பல திரைப்படங்கள் வெற்றி நடை போட்டன

தற்போது தமது குடும்ப வாழ்வில் சிக்கி சர்ச்சையில் மாட்டி கொண்ட நடிகை நஸ்ரியாவின் இந்த புகைப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது

தமிழ் திரையுலகில் நடிகை நஸ்ரியாவுக்கு என்று தனி இடமுண்டு ,காதல் கன்னியாக வளம் வரும் நஸ்ரியாவின் ஒவ்வொரு அசைவையும் உற்று பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இவர் ஒரு சிறந்த கீரோணி தாங்க

இவரது கண் பலரை கட்டி போடும் அவரது பேச்சு சுண்டி இழுக்கும் ,இவரது நடனம் ஆசைவுகள் மீளவும் பார்க்க தூண்டும்

அப்படி பட்ட நடிகையான நஸ்ரியாவின் இந்த புகைப்படம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொஞ்சம் ஓவர் தான் என்கிறது சில குழுக்கள்

    Posted in இலங்கை செய்திகள்

    கமராக்கள் மூலம் வன்முறைகளை கண்காணிக்கிறோம் – போலீசார் அறிவிப்பு

    இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஏற்படும் வன் முறைகளை தடுப்பதற்கு தாம் கமராக்கள் மூலம் கண்காணித்து வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .வன்முறைகள் அதிகரித்து செல்வதை தடுக்கும் முகமாக இந்த செயல்முறை நகர்வுகள் மேற்கொள்ள படுவதாக அவர் தெரிவித்துள்ளார்