சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அப்படி எந்த நீக்கமும்

செய்யப்படவில்லை. 30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர்.”

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணி நேற்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே திருமதி குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றுதான் என்னால் கூற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு

சந்திரிக்கா இந்தியா தூதர் திடீர் சந்தித்து பேச்சு ,இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது

வீடியோ

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்

சந்திரிக்காவுடன் கூட்டணி வைக்க தயாராகும் ரணில் கொதிக்கும் ராஜபக்சாக்கள்

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தமது ஆட்சியில் அங்கம் வகிக்கும் நிலைக்கு இட்டு செல்கிறார் .

முக்கிய சில பதவி களை வழங்கி அவரை தமது ஆட்சியுடன் இணைத்து செல்லும் நகர்வில் ஈடுபட்டு செல்கிறார் .

இது தமது கட்சியை பல படுத்துவதுடன் .உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்று கொள்ளும் நோக்குடன் ரணில் விக்கிரமசிங்கா பயணிக்கிறார் ..

இந்த ரணிலின் திடீர் நகர்வு ராஜபக்ஸ்சா குடும்பத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ராஜபக்ச குடும்பம் ,வீதிக்கு செல்லும் இடர் நிறைந்த காலமாக மாற்றம் பெறும் என்பதை சமகால நிலவரங்கள் காண்பிக்கின்றன.

.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

இலங்கை திருடப் பட்டுள்ளது – திருடர்களை விரட்டுக சந்திரிக்கா

இலங்கை திருட பட்டுள்ளது ,எனவே இலங்கையில் இருந்து திருடர்களை விரட்டுக என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்

கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ,இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களினால் திருட பட்டுள்ளது .

எனவே அந்த திருடர்களை ,நாட்டில் இருந்து விரட்டியடிக்கும் பணிகளை செய்திட வேண்டும் என, சந்திரிக்கா குமராதூங்க கருத்துரைத்துள்ளார் .

இந்த திருடர்களினாலேயே ,இலங்கை இவ்விதமான சீரழிவை சந்தித்து வருவதாக சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார் .

சந்திரிகா குமராதூங்காவின் இந்த கருதினால், ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா

    தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா

    தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது ,நாட்டை பலவீன படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

    ராஜபக்சாக்கள் ஆட்சியில் ,சீனாவுடன் ஒட்டிஉறவாடிய நிலையே ,இலங்கை சீரழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

    இவ்வேளை இலங்கைக்கு தொடராக உதவி வரும் இந்தியாவுக்கு ,சந்திரிக்கா குமாரதுங்க நன்றி தெறிவித்துள்ளார் .

    சிறுபாண்மை தமிழர்களை அணைத்து செல்வதன் ஊடாகவே ,இலங்கை நாட்டை ஒன்று படுத்தி,
    செல்ல முடியும் என சந்திரிக்கா குமராதூங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

    Posted in Uncategorized

    போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

    போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு

    இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தை குழப்பிட மகிந்த குண்டர்கள் முயன்றதால் , அது புது வேகம் பிடித்து ,அவர் தம் ஆதரவாளர்கள் வீடுகள் வரை எரியூட்டும் நிலைக்கு சென்றுள்ளது.

    இவ்வாறான கால பகுதியில் மிக ஆபத்தான நிலையில் மக்கள் நடத்தி வரும் இந்த தார்மீக போருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நன்றி தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை

      இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை

      இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்


      அதுவே தற்போது வன்முறையாக வெடித்துள்ளது

      இந்த வன்முறை நீடித்தால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என


      முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்

      Posted in Uncategorized

      களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

      களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

      இலங்கையில் சந்திரிக்கா வந்திருக்கா சமாதானம் தந்திருக்க என்ற வாசகங்கள் 1994

      ஆண்டுகளில் எங்கும் ஒலித்தவை ,அதே அம்மணி நவாலி செண்பட்டீஸ் ஆலயம் முதல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்

      எனினும் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டவர் ,இன்று அதே அம்மணி ஜனாதிபதி

      தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி அரசை அமைக்கும் நகர்வில் ஈடுபடுகிறார்

      இவருக்கு மேற்குல நாடுக்ளின் பலத்த ஆதரவு உள்ளது ,அம்மணி தனது விட்ட அதிகாரத்தை பிடித்து நாட்டில் நிரந்த தெரிவை மேற்கொள்ள புது முயற்சிகளை

      மேக்கொள்ள முனைகிறார்
      இது சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

        Posted in இலங்கை செய்திகள்

        மைத்திரியை தமது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் சந்திரிக்கா முழக்கம்

        மைத்திரியை தமது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் சந்திரிக்கா முழக்கம்

        ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

        தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

        தாம் உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

        ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக விடுத்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன

        செவிசாய்க்கவில்லை எனவும் அதனை வலியுறுத்தியதால் கட்சியின் அரசியல் குழு மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டதாகவும் குமாரதுங்க தெரிவித்தார்.

        தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியதையே தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

        யுத்த காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்ததாகத் தெரிவித்த குமாரதுங்க, இன்று நாட்டைப் பார்க்கும் போது அழுவதற்கோ சிரிப்பதற்கோ நினைத்துப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க

          இது எப்படி நடந்தது சந்திரிக்கா சொல்லுறாங்க

          17ஆம் திகதி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் செயற்பட்ட விதமானது சிறப்பாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

          மிகவும் அமைதியான முறையில் இந்த மாணவர்கள் தமது உணர்வுகளை வெளிபடுத்தியிருந்தனர் எனத் தெரிவித்தார்.

          இது தொடர்பில் பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தாலும் அன்று எமது நாட்டின் ஜனநாயகம் வெற்றிகொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

          அந்த இளைஞர், யுவதிகள் சிறந்த ஜனநாயக பண்புடன் அவர்களதும் இந்த நாட்டு மக்களினதும் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க துப்பாக்கியில்லாமல் குண்டு இல்லாமல், தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மிகவும் கௌரவமான முறையில் செயற்பட்டுள்ளார்கள் என்றார்.

          அரசாங்கம், அரசாங்கத்தின் பிரதானிகள் இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது, தம்மிடம் கேட்காமல் தம்மை இணைத்துக் கொள்ளாமல் எவரினதும் ஆலோசனையைப் பெறாமல் தவறான

          தீர்மானத்தை எடுத்து அதனைச் செயற்படுத்தும் போது, விசேடமாக அத்தீர்மானத்தால் பாதிப்பை எதிர்நோக்குபவர்கள் தமது கருத்துகளை வெளியிட சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

          எனவே, இந்த மாணவர்கள் அன்றைய தினம் ஜனநாயகத்தின் உயரிய நிலையை எடுத்துக்காட்டினர். தமது எதிர்ப்பை ஆங்காங்கே சென்று, பைத்தியகாரத்தனமாகக் காட்டாமல்

          மிகவும் அமைதியாக பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். இதையே ஜனநாயகம் என கூறுகிறோம் என்று குறிப்பிட்டார்.

          அந்த மாணவர்கள் யார் என தனக்கு தெரியாது. ஆனால் சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் தனது

          கௌரவத்தை செலுத்துவதாகவும் யார் என்ன சொன்னாலும் அன்று அந்த மாணவர்கள் செயற்பட்ட விதம், 100 சதவீதம் சரியென்றார்.

          இந்த மாணவர்களைப் போன்று, நாட்டை நேசிக்கும் ஏனைய இளைஞர்கள், முதியவர்கள் எந்த அரசாங்கத்தில் இவ்வாறு தவறு ஏற்படும் போதும், மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுங்கள் என்றார்

            Posted in இலங்கை செய்திகள்

            சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை – சந்திரிக்கா குமுறல்

            இலங்கையில் சீனாவின் அத்துமீறல் – சந்திரிக்கா குமுறல் – கொதிக்கும் இந்தியா ஆட்சி மாற்றம் ஏற்படலாம்

            இலங்கையில் சீனா

            இலங்கை தற்பொழுது சீனாவின் ஆதிக்கம் நிறைந்த காலனித்துவ நாடாக மாற்றம் பெற்றுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமார தூங்க தெரிவித்துள்ளார்

            மகிந்த ஆட்சி

            மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் சீனாவின் முழு ஆதிக்கத்தில் இலங்கை சென்றடைந்ததது

            ,புலிகள் அழிப்பின் ஊடாக தன்னை இலங்கையின் கீரோவாக காண்பித்த

            அவர் இப்பொழுது இலங்கையை சீனாவுக்கு அடகுவைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

            பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கட்சியே இலங்கையில்

            இல்லாது அழித்தார் மகிந்தா ராஜபக்சே என்பதும் இவரது கவலையாக உள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் – சந்திரிக்கா தாக்கு

            ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் – சந்திரிக்கா தாக்கு

            இலங்கையில் மகிந்தா ஆட்சியில் ஏறியதும் பல கட்சிகள் உடைக்க பட்டு இழந்து காணமல் அக்கா பட்டது ,அதுபோலவே இலங்கையின் பிரதான கடசிகளாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நலிவடைய செய்து பண்டாரநாயாக்க குடும்ப சொத்து பறிபோகும் நிலையில் அல்லது காணமல் போகும் நிலையை மைத்திரி மகிந்தா அணியினர் உருவாககினார் ,

            இதனால் மனமுடைந்த சந்திரிக்கா இந்த கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் என தாக்குதல் நடத்தியுள்ளார் ,

            அத்துடன் இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் படி சந்திரிக்கா பரப்புரையில் ஈடுபட்டார்

            Posted in இலங்கை செய்திகள்

            சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது – சந்திரிக்காவிற்கு ஆப்பு ..?

            சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது – சந்திரிக்காவிற்கு ஆப்பு ..?

            இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து கட்சிகள் கூடி தமது திட்டம் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள கூடி பேசி வருகின்ற்னர் ,அவ்விதம் சுதந்திர கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது ,இதன் பொழுது கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படலாம் என தெரிவிக்க பட்டதை அடுத்து சந்திரிக்கா கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது