இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாநாணய நிதியம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு நாம நிதி வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவி ஏற்ற மறுதினம் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்கல் நடத்திய பின்னர் உலக நாடுகள் கண்டனத்திற்கு
உள்ளாக்கியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
தாய்வான் விவகாரம் தொடர்பில் சீனா அதிபர் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சின் மூலமாக தாய்வானை ஆக்கிரமிக்க முனையும் சீனா விட்டு கொடுப்புகளுடன் பதட்டத்தை தணிக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
விசேட தாக்குதல் மூலம் தாய்வானை ஆக்கிரமிக்கும் நகர்வில் சீனா ஈடுபட கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
அதனால் அமெரிக்கா சீனாவுடன் அவசரமாக தொலைபேசி மூலம் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்க படுகிறது.
இந்த சீனா அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்
குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து தாக்கும் துருக்கி இராணுவம்
துருக்கி ; ஈராக்கில் உள்ள குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதியான Dohuk பிரேதசத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ரொக்கட் தாக்குதலை துருக்கிய இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களினால் குருதீஸ் பகுதிகள் பலமான பாதிப்பிற்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது .
துருக்கிய இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் குருதீஸ் மக்கள் பலநூறு பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
துருக்கி இராணுவ தாக்குதல் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு
இலங்கை ,கொழும்பு ; நேற்று (29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள இந்த
வர்த்தமானியில் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதோடு, 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது
கூட்டத்தொடர்
எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
இலங்கை , கொழும்பு ;மக்கள் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நாட்டின் இளைஞர்கள், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், தற்போது மக்கள் போராட்டத்தின் பின்னணியில்
பல்வேறு இருண்ட சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற அவசரகால நிலை பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேம ஜயந்த 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
பொது நிதியில் கட்டப்பட்ட சொத்துக்கள் இவை என சிலர் கூறுகின்றனர். இது உண்மையில் இவை
பாராளுமன்ற உறுப்பினர்களின் மூதாதையரால் கட்டப்பட்ட பரம்பரை சொத்தாகும். போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட சொத்துக்களை மீள கட்டியெழுப்புவதற்கு சில
பாராளுமன்ற உறுப்பினர்களிடம் போதிய பண வசதி இல்லை.எம்.பி கீதா குமாரசிங்க கலைஞராகப் பெற்ற விருதுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது . மாத்திரமன்றி புத்த பெருமானின் சிலைகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.இந்தச் செயல்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும்இ விடுதலைப் புலிகள்இ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்
அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அல்லது சர்வதேச சக்திகளுடன் தொடர்புள்ளவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.
அத்துடன் ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர்
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
ஆகவே இந்தக் காரணங்களால் அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த வலியுறுத்தினார்..
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர எம்.பி
வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .
இளைஞர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். வழக்கு, நீதிமன்றம் என்று சென்றால் ஆர்ப்பாட்டத்துக்கு தூண்டி விடுபவர்கள் எவரும் இளைஞர்களை பாதுகாக்க வரப்போவதில்லை
வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் இல் லை
குழப்பகரமான சூழ்நிலையை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்வதற்கு அவசர தேவைகள் உள்ளன.நோயாளர்களுக்கு மருந்து அவசரமாக தேவைப்படுகிறது. தாய்மாருக்கு பிள்ளைகளுக்கு பால்மா அவசரமாக தேவைப்படுகின்றது.
விவசாயிகளுக்கு உரம் தேவைப் படுகிறது இவ்வாறு நாட்டு மக்களுக்கு பல அவசர தேவைகள் காணப்படுகின்றன. ஆனால் அரசாங்கத்தின் தேவை அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதாகும்.
அலரிமாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையின் இறுதியாக வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனினும் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார் என்றே நாம் நினைத்தோம். ஆனால் அவர் நாட்டை விட்டு செல்வாரென நினைக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
“இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக
பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.
தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை
ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை சிறந்த முறையில்
எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.
கோபம் தவிர்
கோபம் தவிர்
என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?
உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே
எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே
உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா
ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே
கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022
சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா
சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா
சிரியா நாட்டிற்கு ரசியா நவீன் S-300, S-400 to Syria ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்ம் கைச்சாத்திட்டுள்ளது.
எதிர் வரும் ஆறுமாதங்களுக்குள் ஏனைய இந்த ஏவுகணைகள் சிரியாவுக்குள் நிறுத்த படும்.
வான் மறிப்பு ஏவுகணைகளை சிரியா ரசியாவிடம் இருந்து வாங்கி குவிகிறது.
ரசியா வின் இந்த ஏவுகணைகள் சிரியாவின் களத்தில் முறையாக வேலை செய்யவில்லை என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க
பட்ட நிலையில் இந்த வான்மறிப்பு ஏவுகணைகள் விற்பனை இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.
உக்கிரேனுக்கு டாங்கிகள் ஆட்டிலொறிகளை அள்ளி வழங்கும் ஜெர்மனி
உக்கிரேனுக்கு டாங்கிகள் ஆட்டிலொறிகளை அள்ளி வழங்கும் ஜெர்மனி
ஜெர்மன் – உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய மேற்கொண்டு வரும் போரினை அடுத்து அவசர ஆயுத உதவியாக ஜெர்மன் உக்கிரேனுக்கு 1.7 பில்லியனுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது
அவசர உதவி திட்டத்தின் கீழ் ஜெர்மன் தயரிப்பான நூறு டாங்கிகள் மற்றும் அதிநவீன நீண்டதூர அட்டிலொறிகள் என்பன வழங்க பட்டுள்ளன .
தற்போது உக்கிரேனுக்கு இந்த ஆயுத தொகுதிகள் விநியோகிக்க பட்டுள்ளன .
உலக நாடுகளிடம் உக்கிரேன் தொடர்ந்து ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்
கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று முன்தினம் (26) மாலை இந்திய கடலோர காவல்
படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு முடை கடலில் மிதந்து வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் மிதந்து வந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில் அதில் கஞ்சா பொதிகள் இருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 50 கிலோகிராம் என்றும் இது எப்படி கடலில் மிதந்து வந்தது, யாரேனும் கடத்தல் காரர்கள்
ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார்களா என்ற கோணத்தில்,
இந்திய கடலோர காவல் படையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு
எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு
இலங்கை ,கொழும்பு ; பதுளை- பசறை பகுதியில் உள்ள பிரதான எரிபொருள் நிலையம் ஒன்றில் .
எரிபொருளை பெற்று கொள்ள வந்தவருக்கும் எரிபொருள் நிலைய முகாமையாளருக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் பொழுது எரிபொருள் பெற்று கொள்ள வந்த நபர் கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார் .
இதனால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டதுடன் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை
இலங்கையில் விட்டு வெளியேற மகிந்த பசிலுக்கு தடை
இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று பசில் ராஜபக்ச ஆகியோர்நாட்டை விட்டு வெளியேற மீளவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட இவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார்கள் என்ற நிலையில் நீதிமன்றினால் இந்த தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது
- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்
- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது
புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
பதவிப்பிரமாணம் செய்த நாள் இருந்த எதிர்பார்ப்பு, பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது. சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை.
ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட முடியுமான எதிர்பார்ப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால்
நழுவவிடப்பட்டதாகவும், சந்தர்ப்பவாத அரசியல் தம்மிடம் இல்லை எனவும், அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு
எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் கூடிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக சுதந்திரமாக போராடிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது புதிய கதைகளை கூறி வருவதாகவும், உண்மையில்
வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டது மகிந்த ராஜபக்ஸவின் பிரியாவிடை “அலரி மாளிகை நிகழ்வின்” போதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வன்முறைக்கும் தீ வைப்புச் சம்பவங்களுக்கும் தான் முற்றாக எதிரானவன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒன்பதாம் திகதியான அன்றைய நாள் முழுவதும் நடந்தது பயங்கரவாதமே என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்
சந்தர்ப்பவாத அரசியல் தவளைகளுக்கு நிச்சயம் மக்கள் நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டிவரும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதிலிருந்து யாரும் விடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.
புதிய பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, அது குறித்து இன்னும் நேர்மறையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் காலிமுகத்திடல்
போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்த வன்னம் அரசாங்கத்தின் ஆட்சி முறை இயல்பை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அது ஒரு மூர்க்கத்தனமான முட்டாள்தனம் எனவும், இதனால் ஏற்பட்ட அழிவை
எந்த நாகரீகமுள்ள ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது
கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது
இலங்கை ,கொழும்பு ; கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக கூறப்படும் ஐந்து கண்ணீர் புகை
குண்டுகளுடன் ஏத்துல் கோட்டே பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான இவர் ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை முச்சக்கரவண்டியில் கொண்டு வந்திருந்ததாகவும் அச்சந்தர்ப்பத்தில்
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் குண்டுகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
குறித்த சந்தேகநபர் இன்று ஹல்ஸ்டோர்ஃப் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்இச்சம்பவம் குறித்து The Anti-Vice Unit of the Western Province-South
பொலிஸ் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைதீவில் ரவுடி குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு
முல்லைதீவில் ரவுடி குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு
இலங்கை ,முல்லைத்தீவு – முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர்
படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கிராமத்தவர்கள்
தெரியப்படுத்தியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
கும்பஸ்தரின் சடலம், மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பேர் சுட்டு கொலை
நான்கு பேர் சுட்டு கொலை
இலங்கை .கொழும்பு ; நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் டி56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், கம்பஹா மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இரத்மலானை சில்வா மாவத்தையில் உள்ள குடியிருப்பில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 30 வயதுடைய ஆணின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 9 இலங்கையர்கள் தலைமறைவு
அமெரிக்காவில் 9 இலங்கையர்கள் தலைமறைவு
அமெரிக்கா , இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஒன்பது இலங்கையர்கள் தலைமறைவாகியுள்ளனர் .
அமெரிக்காவினால் வழங்க பட்ட கப்பலை இலங்கைக்கு எடுத்து வரும் முயற்சியில் இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் ஒன்பது பணியாளர்களே இவ்விதம் தலைமறைவாகியுள்ளனர்.
இவ்விதம் அமெரிக்காவில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டாவை துரத்தும் சிங்கப்பூர் கண்ணீரில் ஐயா
கோட்டாவை துரத்தும் சிங்கப்பூர் கண்ணீரில் ஐயா
சிங்கப்பூர் ; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என நேற்று(26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அவகாசம் வழங்கியுள்ளது.
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை , கொழும்பு ; அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்
கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான
சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்;
அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக சகல அமைச்சுகளினதும் வரவுசெலவுகள் கடந்த சில தினங்களில் ஆராயப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர்,எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு
அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு ஆலோசனைக் குழுவொன்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படும்.
இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு கியு.ஆர்.குறியீட்டு
முறைப்பிரகாரம் அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
குறியீட்டு முறைமை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. 40 லட்சம் பேர் இதில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச்
சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருளை விநியோகிக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள், தனியார் பஸ்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸகள், பாடசாலை வான், அம்புலன்ஸ் வண்டிகள், விவசாய உபகரணங்கள் உட்பட தொழில் பேட்டைகளுக்கு எரிபொருள்
நிலையங்களுக்குப் புறம்பாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய 107 டிப்போக்கள் ஊடாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.
விவசாய உரத்திற்கான தட்டுப்பாடுக்கு ஒருவாரத்தில் தீர்வு:
இதேவேளை, விவசாய உரத்திற்கான தட்டுப்பாடு ஒருவார காலப்பகுதியில் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று விவசாய அமைச்சர்,
அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்தாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.
நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்
நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்
இலங்கை ,கொழும்பு ; ரயில்வே திணைக்களம் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,ரயில் வே திணைக்களம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதோடு 2021 இல் மொத்த வருமானம் 2.7 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 47 பில்லியன்களாக
பதிவாகியுள்ளதாக சம்பளம் வழங்க 7.8 பில்லியனும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க 2.3 பில்லியன்களும் செலவிடப்பட்டது.
2012 இல் வருமானம் 4.8 பில்லியன்களாக இருந்தது. நஷ்டம் 34 பில்லியன்களாக இருந்தது. 2021 இல் வருமானம் 2.7 பில்லியன்களாவும் நஷ்டம் 47
பில்லியன்களாகவும் பதிவாகியுள்ளது. 2022 இல் வருமானம் குறைந்தது. வருமானம் 2.6 பில்லியன்களாகும். நஷ்டம் பில்லியன் 37 களாகும். 4000 கோடி
ரூபா வருடாந்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சிக்கல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்
எரிபொருள் கடனாக பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டது.10 கோடி ரூபாவுக்கு மேல் நாளாந்த நஷ்டம் உள்ளது. சம்பளத்துக்கு மாத்திரம் 7.8 பில்லியன் ரூபா
வழங்கப்பட்டுள்ளது.மேலதிக நேரக் கொடுப்பனவாக 2021இல் 2.3 பில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்வே திணைக்களத்தை எவ்வாறு நடத்த முடியும்?
நஷ்டத்தில் இயங்கும் ரயில்வே திணைக்களம்
121 ரூபாவாக இருந்த எரிபொருள் விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதால் ரயில் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. பஸ் கட்டணத்தை விட 50 வீதம் குறைவாக ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிகரித்த கட்டணத்தை அறவிட ரயில் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென ரயில்வே திணைக்கள உத்தியோகஸ்தர்களிடம் கோரியுள்ளோம்.ரயில்வே திணைக்கள செலவுகளை குறைப்பது தொடர்பாக அவர்களுடன்
பேசமுடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – கடற்றொழில் அமைச்சர்
எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு – கடற்றொழில் அமைச்சர்
இலங்கை ,யாழ்ப்பாணம் ; இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியுமென்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தென் இலங்கையைச் சேர்ந்த சிறு
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் இன்று (26) கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் , கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாக
நன்றாக அறிந்துள்ளதாகவும் பல வழிகளில் கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான டீசல்,
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை விஷேட ஏற்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.













