அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

Spread the love

அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த


இலங்கை , கொழும்பு ;மக்கள் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் நாட்டின் இளைஞர்கள், அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், தற்போது மக்கள் போராட்டத்தின் பின்னணியில்

பல்வேறு இருண்ட சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற அவசரகால நிலை பிரகடனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேம ஜயந்த 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

பொது நிதியில் கட்டப்பட்ட சொத்துக்கள் இவை என சிலர் கூறுகின்றனர். இது உண்மையில் இவை

பாராளுமன்ற உறுப்பினர்களின் மூதாதையரால் கட்டப்பட்ட பரம்பரை சொத்தாகும். போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட சொத்துக்களை மீள கட்டியெழுப்புவதற்கு சில

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் போதிய பண வசதி இல்லை.எம்.பி கீதா குமாரசிங்க கலைஞராகப் பெற்ற விருதுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது . மாத்திரமன்றி புத்த பெருமானின் சிலைகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

தெரிவித்துள்ளார்.இந்தச் செயல்களின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும்இ விடுதலைப் புலிகள்இ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்

அவசரகால சட்டம் அவசியம் தேவை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

அல்லது சர்வதேச சக்திகளுடன் தொடர்புள்ளவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

அத்துடன் ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர்

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

ஆகவே இந்தக் காரணங்களால் அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த வலியுறுத்தினார்..

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர எம்.பி

வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். சாதாரண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .

இளைஞர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். வழக்கு, நீதிமன்றம் என்று சென்றால் ஆர்ப்பாட்டத்துக்கு தூண்டி விடுபவர்கள் எவரும் இளைஞர்களை பாதுகாக்க வரப்போவதில்லை

வன்முறைகளில் ஈடுபடுபவர்களே அவசரகால நிலை தொடர்பில் பயப்பட வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அது தொடர்பில் பயப்பட வேண்டிய அவசியம் இல் லை

குழப்பகரமான சூழ்நிலையை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மாணவர்களுக்கு பாடசாலைக்கு செல்வதற்கு அவசர தேவைகள் உள்ளன.நோயாளர்களுக்கு மருந்து அவசரமாக தேவைப்படுகிறது. தாய்மாருக்கு பிள்ளைகளுக்கு பால்மா அவசரமாக தேவைப்படுகின்றது.

விவசாயிகளுக்கு உரம் தேவைப் படுகிறது இவ்வாறு நாட்டு மக்களுக்கு பல அவசர தேவைகள் காணப்படுகின்றன. ஆனால் அரசாங்கத்தின் தேவை அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதாகும்.

அலரிமாளிகையில் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையின் இறுதியாக வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எனினும் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவார் என்றே நாம் நினைத்தோம். ஆனால் அவர் நாட்டை விட்டு செல்வாரென நினைக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

“இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக

பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.

தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை
ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை சிறந்த முறையில்


எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply