Tag: கண்ணீர் புகை
திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று முன்தினம் (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் கண்ணீர் புகைக்குண்டு ஒன்று வெடித்ததாகவும், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு மீண்டும் கொண்டு வரப்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது
by நிருபர் காவலன் - முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்
by நிருபர் காவலன் - ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது
by நிருபர் காவலன் - புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்
by நிருபர் காவலன் - நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்
by நிருபர் காவலன்
கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது
கண்ணீர் புகை குண்டுகளுடன் இளைஞர் கைது
இலங்கை ,கொழும்பு ; கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திருடப்பட்டதாக கூறப்படும் ஐந்து கண்ணீர் புகை
குண்டுகளுடன் ஏத்துல் கோட்டே பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான இவர் ஏத்துல் கோட்டே அழகேஸ்வர வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை முச்சக்கரவண்டியில் கொண்டு வந்திருந்ததாகவும் அச்சந்தர்ப்பத்தில்
ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் குண்டுகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
குறித்த சந்தேகநபர் இன்று ஹல்ஸ்டோர்ஃப் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்இச்சம்பவம் குறித்து The Anti-Vice Unit of the Western Province-South
பொலிஸ் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








