Posted in இலங்கை செய்திகள்

உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்

போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பரிசோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன்


குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை

    கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை

    2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

    முதல் நிலையினை இராஜசேகர் விதுசன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நிலையினை செல்வன் G.சனோஜன் பெற்றுக்கொண்டார்.

    மேலும் கலைப்பிரிவில் 3ம் நிலையினை ஜென்சிகா சிவகுமார் பெற்றுள்ளார் 7ம் நிலையை பிறேம்குமார் கயூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      கவிதை நூல் அறிமுக விழா

      கவிதை நூல் அறிமுக விழா

      பைஷல் இஸ்மாயில் –

      வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின்

      சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

      இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம


      அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி


      தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும்,


      இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        நீரில் மூழ்கி மாணவி மரணம்

        நீரில் மூழ்கி மாணவி மரணம்

        இலங்கை மெதகம பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற ,மாணவி ,ஆந்த ஆற்று நீரில் மூழ்கிய பலியாகியுள்ளார் .

        நீரிலே அடித்து செல்ல பட்ட பொழுது ,மக்களினால் காப்பாற்ற பட்டு ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

        சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள், மிதந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

          யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

          யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

          இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

          யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

          வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள்

          மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.

          இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

          சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


          மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            இறந்து போ

            இறந்து போ

            சாக்கடையை தூவி அன்று
            சாதனைகள் படித்தவர்
            பூக் கடைகள் ஏதுமினிறி
            புழுங்கி ஏன் அழுகிறார்

            வேர்க் கடலை இதுவென்று
            வெற்றிகளாய் உரைத்தவர்
            வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
            வேடிக்கையார் கேட்கிறார்

            கை கூப்பி கும்பிட்டு
            கால் வீழ்ந்து அழுதாரை
            மேல் உதைத்து வீழ்த்தி
            மேனியை சுட்டீரே

            துப்பாக்கி இருக்கென்று
            துணிவுடனே சுட்டவரே
            தப்பாகி போனீரே
            தரணி சொல்கிறதே

            இறந்து போ

            பெரும் பான்மை நீர் என்று
            பெருமையாய் சொன்னவரே
            பெரும் பான்மை துரத்தையிலே
            பொடியாகி பறந்ததென்ன

            கோட்டையில இருப்பதாய்
            கொக்கரித்த கோட்டாவே
            நாட்டை விட்டு போனதென்ன
            நாடோடி ஆனதென்ன

            பார்த்தாயா தமிழரது
            பழி உன்னை துரத்திறது
            கேட்டாயா நீ அன்று
            கேடு கெட்டாயே

            பூக்குமா இனி உந்தன்
            பூந்தோப்பு அங்கு
            பார்க்குமா இனி உன்னை
            பலம் கொண்ட அன்பு

            வேற்கிறதா இன்று
            வேதனை தெரிகிறதா
            காத்தவரே உன்னை
            கை விட்ட கேவலமா

            இருந்தென்ன இனி காண்பாய்
            இன்றேனும் இறப்பாய்
            இன்றேனும் உந்தன்
            பிடிவாதம் துறப்பாய் .

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் 29-08-2022

            Posted in உலக செய்திகள்

            உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா

            உக்கிரேனுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணகளை பொருத்தும் அமெரிக்கா

            உக்கிரேன் இராணுவத்திற்கு அமெரிக்கா இராணுவம் , வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பொருத்திய வண்ணம் உள்ளது .

            இந்த வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் ,ரஸ்யாவின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது .

            அதனால் பல மில்லியன் அமெரிக்கா டொலர்கள் செலவில் ,இந்த ஏவுகனை தடுப்பு பாதுகாப்பு வலையத்தை ,அமெரிக்கா நிறுவி வருகிறது .

            அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ரஸ்யாவுக்கு மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

              Posted in உலக செய்திகள்

              உக்கிரேன் ஏவுகணை 28 சுட்டு வீழ்த்திய ரஷ்ய

              உக்கிரேன் ஏவுகணை 28 சுட்டு வீழ்த்திய ரஷ்ய

              ரஷ்ய இராணுவம் உக்கிரேன் நாடு ஏவிய 28 பல்குழல் ஏவுகணைகளை
              ஒரே தடவையில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

              அமெரிக்காவிடம் கொள்வனவு செய்துள்ள ஏவுகணைகளை ,ரஷ்ய மீது உக்கிரேன் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

              உக்கிரேனில் தொடரும் தாக்குதல்களில் ரஷ்ய ,உக்கிரேனுக்கும் பலத்த ,இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                Posted in உலக செய்திகள்

                பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

                பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 1 033 பேர் மரணம்

                பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,033 பேர் பலியாகியுள்ளனர் .

                மேலும் டசின் கணக்கானோர் , காணாமல் போயுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன .

                இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் நடவடிக்கையில் ,மீட்பு பணிகள் இடம்பெற்றுள்ளது .

                ஈரான் நாட்டு மீட்பு படையினர் ,பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர் .

                இந்த வெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

                  இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

                  இலங்கையில் மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் ,இலங்கை மருத்துவ தாதியருக்கு ,லண்டன் பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க பட்டுள்ளது.

                  பிரிட்டனுக்கு மருத்துவ வேலைவாய்ப்பை தேடி வரும் இந்த இலங்கை தாதியர்கள் ,லண்டனில் தங்கி இருந்து தொழில் புரிவார்கள் .

                  இவர்கள் லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ,சான்றிதழ்கள் வழங்க பட்டு பூர்த்தியடைந்த நிலையில்

                  லண்டன் மருத்துவ மனைகளில் வேலை புரியும்சான்றிதழ்களை பெற்று இவர்கள் லண்டனுக்கு வருகை தருகின்றனர் .

                  லண்டன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்திட ஆங்கில முக்கிய மொழியாக உள்ளது .

                  ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மட்டுமே,
                  இந்த வேலை வாய்ப்புக்கு ஏற்றவர்களாக நியமிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .

                    Posted in உலக செய்திகள்

                    முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்

                    முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்

                    இளம் பெண் ஒருவர் வீதியில் முதலையுடன் நடக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

                    குறித்த பெண் முதலையை ,கழுத்தில் கட்டி வீதியால் நடந்து செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.

                    மனிதர்களை வேட்டையாடும் கொடிய விலங்கான , முதலையுடன் பெண்
                    இவ்வாறு வீதியில் நடந்து செல்லும் காட்சிகள் ,தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .

                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

                      அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

                      அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                      இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

                      அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                        Posted in உலக செய்திகள்

                        இஸ்ரேல் விமான நிலையத்துக்குள் நுழைந்த உளவு விமானம்

                        இஸ்ரேல் விமான நிலையத்துக்குள் நுழைந்த உளவு விமானம்

                        இஸ்ரேல் Ben Gurion சர்வதேச விமான நிலையத்துக்குள் ,மர்ம உளவு விமானம் ஒன்று நுழைந்துள்ளது .

                        இந்த மர்ம உளவு விமானத்தின் நுழைவினால், அந்த விமான தளத்தில் தரித்து நின்ற விமானங்கள் , வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.


                        இந்த உளவு விமானம் எந்த பகுதியில் இருந்து யாரால், பறக்கவிடப்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .


                        குறித்த உளவு விமானத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் , இஸ்ரேல் இராணுவத்தினரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

                          Posted in உலக செய்திகள்

                          லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்

                          லிபியாவில் கலவரம் 23 பேர் மரணம் 140 பேர் காயம்

                          லிபியா திரிபோலி பகுதியில் ,இடம்பெற்ற கலவரத்தில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

                          மேலும் கலவர பாதிப்பில் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் டசின் கணக்கானோர் ,ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                          தொடர்ந்து லிபியா அரசுக்கும் ,கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் முறுகல் வெடித்த வண்ணம் உள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

                            காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

                            இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

                            இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

                            காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

                            காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

                            இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

                            காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                            இது தான் உண்மை காதல் என்பது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை

                              இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை

                              இலங்கையில் உள்ள 700 எரிபொருள் நிலையங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை செய்கிறது.

                              இவ்வாறான கோரல்கள் வெளிநாடுகளினால் வேண்ட பட்ட நிலையில் ,இந்த எரிபொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு, விறகும் நிலையில் விண்ணப்பங்கள் கோர பட்டுள்ளன.

                              இந்தியா ,சீனா ,கனடா பிரிட்டன், போன்ற நாடுகள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.

                              சீனாவே இந்த நிறுவனங்களை கட்டு படுத்த தீவிரம் காண்பித்து வருவதால் ,அதிக நிறுவனங்களை, சீனா தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

                              அவ்வாறு சீனா பெற்று கொண்டால் இலங்கை மேலும் பேராபத்தை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

                                வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு

                                வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புடன் இலங்கை அரசு பேச்சில் ஈடுபட்டுள்ளது.

                                பிரான்ஸ் ,கனடா பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ,நான்கு அமைப்புகளுடன் இலங்கையின் சார்பில் இலங்கை நீதியமைச்சர் பேசியுளளார்.

                                இந்த தொலைத்தொடர்பு உரையாடலின் பொழுது கைதிகளின் விடுதலை ,மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தல் , மற்றும் காணி அபகரிப்பு என்பன நீக்க பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளதாம் .

                                மேலும் வெளிநாட்டு அமைப்பினால் முன் வைக்க பட்ட ,நிபந்தனைகளை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழுவொன்றும் ஆரம்பிக்க அப்ட்டுள்ளதாம்,என்கிறது இலங்கையின் முக்கிய தரப்பு .

                                இந்த குழுக்கள் மக்களின் நன்மதிப்பை மீள் பெற்றுக்கொள்ளுமா ..?
                                இவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,

                                Posted in இலங்கை செய்திகள்

                                கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

                                கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

                                இலங்கை கொழும்பு பகுதியில் ,பிரபல செல்வந்தரின் 22 வயது மகன் ,கப்பம் தர கோரி நால்வர் அடங்கிய குழு ஒன்றினால் ,வாகனத்துடன் கடத்த பட்டார் .

                                இவ்வாறு கடத்த பட்ட வாலிபன் , கடத்தல் குழுவினரால் விடுதலை செய்ய பட்டுளளார்.

                                56 லட்சம் ரூபா கோரப்பட்டு ,கடத்த பட்ட நிலையில் ,அந்த பணத்தை நான்கு பேரது வங்கியில் வைப்பில் வைக்க பட்ட நிலையில், வாலிபன் விடுதலை செய்ய பட்டிருந்தார் .

                                இந்த வாலிபன் கடத்தல் விடயம் காவல்துறைக்கு .தெரிய படுத்த பட்ட நிலையில் ,வங்கி தரவுகளை மைய படுத்தி ,நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.

                                செல்வந்தர் மகன் கடத்தல் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்

                                  நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்

                                  இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.

                                  இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                  இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                                  மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

                                    தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

                                    இலங்கை தலைமன்னார் கடல்பரப்பில், அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற ,குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

                                    இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் யாவரும் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

                                    இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில், இந்தியா உதவி புரிந்து வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை
                                    இலங்கை தொடராக கைது செய்து வருகின்றமை தொடர்கின்றமை குறிப்பிட தக்கது .