Tag: தேர்தலில்
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
சீமான் அதிரடி பேட்டி
நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
அளித்துள்ளார் .
இந்த தேர்தல் மிக முக்கியமானது ,முக்கிய மாநாடு ஒன்றை செய்கின்றனர் .
மக்களை கூட்டி அங்கு மக்களுக்கு முன்பு பேச்சை நடத்துகிறார் .
மக்களுக்கு அரசியல்
தமது கொள்கை வரைபை காணொளியாக காண்பித்து மக்களுக்கு அரசியல் தெளிவூட்டுதலை நாம் மேற்கொள்கிறோம் என் அவர் தெரிவிக்கிறார் .
அந்த காணொளியை ஈதோ பாருங்கள்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- மாவீரம் காட்டிய சீமானின் இன எழுச்சி பேருரை

- பேராசிரியராக மாறி பாடம் எடுத்த சீமான்

- நான் உன்னையே தூக்குவேன் பாஜகவுக்கு சீமான் சவால்
- சீமான் பேச கும்பிட்ட மக்கள் VIDEO

- தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்

- தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

- சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 176

- தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும்
மற்றும் மாபெரும் பொதுக் கூட்டமும் நேற்றய தினம் (19) மாலை 5.30 மணியளவில் சாகாம வீதி, அக்கரைப்பற்று – 08 அர்ச்சனா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது….
அதன் காட்சி படங்கள் கீழே இணைக்க படுகிறது .வாரீர் வீட்டுக்கு ஒட்டு தாரீர்






.


தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
பிரதேச சபைத் தேர்தலில் சமல் ராஜபக்ஷ
பிரதேச சபைத் தேர்தலில் சமல் ராஜபக்ஷ
பிரதேச சபைத் தேர்தலில் சமல் ராஜபக் ,எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைவரின் வேண்டுகோளின்படி தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், மாவட்டத்தில் எந்த இடத்திலிருந்தும் போட்டியிட முடியும் என்றும் சமல் ராஜபக்ஷ கூறினார்.
மேலும், அனைவரும் மீண்டும் மாற்றத்தை விரும்புவதாக கூறிய அவர், அரசியலில் மேலிருந்து கீழே செல்வது சகஜம் என்று தெரிவித்தார்.
அத்துடன், தான் மீண்டும் கீழிருந்து தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி
தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டி ,தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே
போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம்
ஆலையடிவேம்பு பகுதியில் சனிக்கிழமை(08) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.கோடீஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன் கல்முனைத் தொகுதி தலைவர் அ.நிதான்சன் சம்மாந்துறை
தொகுதியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இதன்போது இக்கூட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் கைப்பற்றப்படல் வேண்டும் பெண்கள் பிரதிநிதித்துவம்
இளைஞர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது
தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .
இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.
ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு

- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து

- எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் திணறல்

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்
தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்
தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் ,பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து
உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன அறிவித்துள்ளன.
அதற்கமைய, பயணிகளின் வசதி கருதி இன்றைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளாந்தம் பயணிக்கும் ரயில்களை விடவும் தேர்தல் காலத்தைக் கருத்திற் கொண்டு மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத்
ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ,இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது உடல் அனுமதிக்காத காரணத்தினால் தாம் போட்டியிடவில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசியப் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் லொகுகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, லொகுகே, அமர்ந்திருந்தும் தன்னால் பணியாற்ற முடியும் என பதிலளித்தார்.
நாமல் ராஜபக்சவை தேசியப்பட்டியலில் சேர்ப்பதும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதும் கட்சியின் தீர்மானம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
224 தொகுதிகளிலும் பணிகளை ஒழுங்கமைக்க ராஜபக்ச பொறுப்பு என்று லொகுகே குறிப்பிட்டார், மேலும் தான் போட்டியிடுவதற்குப் பதிலாக அந்தப் பொறுப்புகளில் கவனம் செலுத்துமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர் என அவர் மேலும் கூறினார்.
விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை
விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை
விமல் வீரவன்ச பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ,முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
“ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற
வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு
ஆதரவாக நிற்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என வீரவன்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை
இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள்
தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை “இரண்டாம் கோட்டாபய” ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும்,
அவ்வாறான முயற்சிகளுக்கு தேசிய சுதந்திர முன்னணி அதில் ஒரு கட்சியாக இருக்காது எனவும் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா

- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம்
தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம்
தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம் ,எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவருடன் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது.
அதன் விளைவு தான் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானார். அதைப்போலவே வடகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது.
அதற்கு வழி விட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
என்னுடையதும் ஏனைய சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.
வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள ஆளுமை மிக்க இளம் தலைவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின்,
இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டி யிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் எடுத்து காண்பிக்கின்றன .
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளித்து தாம் வெற்றியை பெற்றுக்கொள்வோம் என கருதிய சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மிக பெரும் நெருக்கடியை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் காண்பிக்கின்றன .
சஜித் ஆட்சியில் அமர்ந்து விட்டால் அதன் ஊடக போனஸ் ஆசனம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வலம் வரலாம் என கருதிய சுமந்திரனுக்கு, இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆப்பு வைக்க பட்டுள்ளது .
அதேவேளையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று கொள்ள முடியா நிலை ஏற்படும் .
இதுவரை மக்களை ஏமாற்றி பிழைத்த சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு பெரும் ஆப்பாக மாறியுள்ளது , வரும் காலங்களில் இதன் எதிரொலியை வெள்ளை வேட்டிகளும் சந்திக்க போகின்றார்கள் என்பதை காலம் இடித்துரைக்கவுள்ளது .
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு

- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து

- எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் திணறல்

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்,இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புங்கள் மிக சூடாக சூடு பிடித்துள்ளது ,அடுத்து இந்த தேர்தல் காலப் பகுதியில் அங்கு பெரும் குண்டு வெடிப்புகள் கலவரங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.
தமது கட்சிகள் வென்றெடுப்பதற்காக வேகமான பரப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இவ்வாறான காலப்பகுதியிலேயே இந்த கூண்டுகள் வெடிப்பதன் ஊடாக சிங்களம் தமிழ் மக்களை மிரட்டி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச பதவி இழந்ததன் பின்னர் அங்கு மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றிருந்தன அது போன்ற ஒரு நிகழ்வு இப்போ இடம் பெறக் கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
தமது அரசியல் நலம் கருதி அவர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதற்கான ஒரு விடயமாக இதை பார்க்க முடிகின்றது.
கூண்டு வெடிப்பின் ஊடாக மக்களை அச்சுறுத்துவதன் ஊடாகவே இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி கொடி கட்டலாமென அடக்கி ஆண்ட பேரினவாத பூதம் கருதுகிறது.
இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு அவர்களுக்கு செல்கின்ற பொழுது ,
அவரது பொது இடங்களில் கூறுகின்ற பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வெடித்து பறக்கின்றன.
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி ,இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபத்தி தேர்தலில் பாரியளவு வன்முறையை ஏற்படுத்த பெரும் சதி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதக விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார் .
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக இந்த சதி நடவடிக்கையில் இவர்கள் களம் இறங்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தேர்தலில் தோற்றுவிடுவோம் என் அஞ்சும் மகிந்த குடும்பம் மிக பெரும் வன்முறை ஒன்றை நடத்திட தயாராகி வருகின்றனர் .
இதன் ஊடக மிக பெரும் உயிரிழப்புக்கள் சொத்து சேதங்கள் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதை இந்த விடயம் கோடிட்டு காட்டுகின்றன.
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா

- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார் .
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் சஜித்துக்கு தனது ஆதரவு இருக்குமென , அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் சிறுபான்மை தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க ,நேரிய நிகழ்ச்சி நிரலை அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்துளளார் .
விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்த 1987 ஆம் ஆண்டு முதல் மிக பெரும் நெருக்கடி புலிகளுக்கு ஏற்பட்டது .
அவ்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வந்த அதே விடுதலை புலிகளை சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா காப்பற்றினார் .
இந்தியா இராணுவத்தை இலங்கையை , விட்டு ஓட ஓட விரட்டியடித்தார் ,அதனை அடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு இரண்டு லாரிகளில் ஆயுதம் வழங்கினார் .
அத்துடன் பாதிக்க பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார் ,அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ,மற்றும் இலவசமாக சீருடைகளை வழங்கினார் .
அதனை கருத்தில் கொண்டு தற்போது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவக மக்கள் நாயகன் ,வீர புதல்வன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது களத்தில் குதித்துள்ளார் .
அந்த வரலாற்றை சிறப்பு முடிவினை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்று களமாட தயராகி வருகின்றனர் .
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு

- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து

- எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் திணறல்

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலில் சையத் பிரேமதாசாவே அதிகம் வெற்றி வாய்ப்பினை தட்டிச் செல்வர் என நுரைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மழையை மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இடம் பெற்ற கூட்டம் அதில் பேசுகின்ற பொழுது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் ,விஜயசாந்தரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ,மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா
விஸ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகிர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்
ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்ப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்பினை எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய சஜித் பிரேமதாச மகத்தான வெற்றியை பெறுவார் எனவும் ,அவரே மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தந்து புதிய வழியினை காண்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் இந்த தேர்தலில் காணாமல் போகும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது நம்பப்படுகிறது.
இவ்வாறு சூடு பிடித்துள்ள இந்த தேர்தல் காரணமாக பல கட்சிகள் தமது அரசியல் வியாபாரத்தில் அறிவித்துள்ளன .
அதேபோல இப்பொழுது வெள்ளை வேட்டிகளை மடிச்சு கட்டி மக்களை சந்திக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை, கண்கூடாக காண முடிகின்றது இதுவே தேர்தல் நாடகம் என புலப்படுகிறது.
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்து உளளார் ,பிள்ளையானை நேரில் சந்தித்த ரணில் மேற்படி ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார் .
தமிழீழ விடுதலை புலிகளின் அணியில் இருந்து பிள்ளையான் கருணா பிரிவதற்கு காரணமாக விளங்கியவர் ரணில் விக்கிரமசிங்கா ஆவர் .
தமிழ் மக்கள் மத்தியில்
அவ்வாறன கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அழவேரோடியுள்ள நிலையில் ,பிள்ளையான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு , இந்தமுறை இடம்பெறவுள்ள தேர்தலில் தாம் ஆதரவு வழங்க உள்ளடகக அறிவித்துள்ளார் .
மகிந்த கட்சிக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த பிள்ளையான் மொட்டு கட்சியை புறம்தள்ளி ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன் வந்துள்ள செயலானது ,இம்முறை மொட்டு கட்சி தோற்கடிக்க போவதாக இவை உணர்த்துகின்றன .
பலத்த போட்டியும் சவால் நிறைந்த ஒரு தேர்தலாக மீளவும் இந்த விடயம் கட்டியம் இடுகின்றன .
மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு
திடீரென மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன்வந்துள்ள செயலானது ,மொட்டு கட்சிக்கு பெரும் இடரை வழங்கியுள்ளது .
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன் ,அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க
நினைக்க வேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சியின் தலைவர்களே அன்றி தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு ஆதரவளிப்பதே தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் தெரிவித்தார்.
தாம் ரணிலின் தேவைக்காக கடைக்குப் போகவில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்காகத் தான் கடைக்குப் போவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இடதுசாரி அரசியல்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“71 இடதுசாரி அரசியல் கட்சியான திருமதி சிறிமாவோ அரசாங்கத்தைப் பெற்ற பிறகு, மக்கள் விடுதலை முன்னணி கலவரங்கள் செய்து அன்றைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது.
அன்று அவர்கள் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டுவர உழைத்தார்கள். ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய
இராணுவம் கொண்டுவரப்பட்டபோது ஜே.ஆரை எதிர்த்து அதை சுதந்திரப் பிரச்சினையாக்கி பிரேமதாசவை வெற்றிபெற உதவினார்கள். பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
பின்னர். 88/89 தேர்தல் நேரத்தில் இந்த நாட்டில் நடந்த பயங்கரம் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற திருமதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு உழைத்தார்கள். அவர்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வகித்தனர். அதன் பின்னர் மகிந்த வெற்றிக்காக உழைத்தார்கள்.
அதைச் செய்தவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது, நாட்டில் 71 கிளர்ச்சி, 83 கறுப்பு ஜூலை, 88/89 பயங்கரவாதம் போன்ற காலங்களில் அரச சொத்துக்களை அழித்து மக்களைக் கொன்றனர், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தன.
அதன் பிறகு, சுனாமி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நம் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் சென்றது. கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசி போடப் போகும் போது என்ன சொன்னார்கள்? ஆண்களுக்கு தடுப்பூசி போட்டால் ஆண்மை குறையும் என்றும் குழந்தை பிறக்காது என்றும் வெறும் வதந்தியைக் கதைத்தார்கள் .
மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்.
உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி நாடு மீண்டும் திறக்கப்பட்டபோது, சில தொழிற்சங்கங்கள் நாடு இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும், நாட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறின.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய ஒருவர் வந்து இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றோம். அப்போது, வெறும் வாய்ப் பேச்சு பேசும் அனைவரும் இதை ஏற்க அஞ்சினார்கள்.
அதற்குள், கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையையும், பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து மக்களைக் கொன்று இந்த நாட்டைக் கைப்பற்ற ஒரு குழு முயற்சித்தது.
மொட்டுக் கட்சியின் ஆதரவு
அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டும் தான் இந்த நாட்டை நான் பொறுப்பேற்பேன், மொட்டுக் கட்சியின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார். நான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை, நாட்டுக்கு உதவும் முடிவுகளை மட்டுமே எடுப்பேன் என்றார்.
அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஒன்றரை வருட காலப்பகுதியில் நாம் எடுத்த முடிவுகள் மக்கள் தீர்மானங்கள் அல்ல. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை சிலர் விமர்சித்தாலும் எவராலும் மாற்று வழிகளை முன்வைக்க முடியாது.
இதைச் செய்ய முடியாவிட்டால், இதைச் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்களுக்கு அனுபவம் இல்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன். அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் உதவி செய்தோம்.
ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தது எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் நாங்கள் அல்ல. அவருக்கு உதவ நாங்கள் குழுவாக வழிநடத்துகிறோம்.
2022 மே மாதத்தின் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க
நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சனம் மட்டும் செய்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனி ஒருவராகவே இருந்தார்.
எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக நான் கடைக்கு போகமாட்டேன்.
இந்த நாட்டு மக்களுக்காகத் தான் நான் போகிறேன். ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்களில் என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.
நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம்.
மக்கள் வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம். மகிந்த போரில் வெற்றி பெற்றார். இன்று மகிந்தவை கிழவன், கிழட்டு மைனா என்று அழைக்கிறார்கள்.
பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது
அடுத்ததாக, இந்தப் பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்று திருமதி சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் போட்டு அடிக்கிறார்கள்.
கிழவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்கவும் என்று கூறுகிறார்கள். அனுபவமற்ற இளைஞர்கள் 88/89 காலப் பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
கிழவர்கள் என்று சொல்லும் போது இந்த நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் உரித்தாகிறார்கள். புத்தாண்டு தினத்தில் கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அழிக்க முயல்கிறார்கள்” என்றார்.
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
நியூசிலாந்து நாட்டின் தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர் தேசியப் பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர். நியுசிலாந்து நாட்டில் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் சனிக்கிழமை ( 14 ) நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் முன்னாள் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆயினும் சிறு கட்சிகள் துணை கொண்டு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளாநந்தம் உள்ளார். அவர் இங்கிலாந்து சிங்கப்பூர் அவுஸ்திரேலியா, மற்றும்
நியுசிலாந்தில் பெரும் கட்டுமாணப் திட்டங்களில் அலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் யாழ் புனித ஜோன் கல்லூரி , மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்
- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்
- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு
- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை
- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து
- எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் திணறல்
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்
- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை
- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்
ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்by நிருபர் காவலன்
- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்by நிருபர் காவலன்
- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வுby நிருபர் காவலன்
- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடைby நிருபர் காவலன்
- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்துby நிருபர் காவலன்
இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்
இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்by நிருபர் காவலன்
- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியதுby நிருபர் காவலன்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலிby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்காby நிருபர் காவலன்
- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்by நிருபர் காவலன்









































