Tag: பிள்ளையான்
கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு
கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு
கருணா பிள்ளையான் இணைவு கிழக்கு கூட்டமைப்பு எனும் கட்சியின் உருவாக்கத்தில் தற்போது பிள்ளையான் கருணா ஆகியோர் இணைந்து புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர் .
இந்த கட்சி கிழக்கு கூட்டமைப்பு என உருவாக்கம் பெற்றுள்ளது .
தமிழ் மக்களுக்கு எதிராக செயல் பட்டு காட்டி கொடுப்புக்களில் ஈடுபட்ட தேசவிரோத கட்சிகளை இணைந்து இப்பொழுது இந்த உள்ளுராட்ச்சி தேர்தலில் களம் குதிக்க உள்ளனராம் .
எனவே தான் அவர்கள் மிக பெரும் வெற்றியினை இந்த தேர்தலில் பெற்று கொள்வார்கள் என அவர்கள் நம்புகின்றனராம் .
தேசியத்தின் உயிர்களை குடித்த சிங்கள கூலிகள் வெல்ல போகிறார்கள் என கூவி வருகின்றனர் .
பாராளுமன்ற தேர்தலில் தோற்று போனவர்கள் இப்பொழுது மீளவும் அரியணை ஏற இதுவாக காண படுகிறது .
விசாரணையில் பிள்ளையான்
விசாரணையில் பிள்ளையான்
விசாரணையில் பிள்ளையான் ,முன்னாள் புலிகள் இயக்கத்தை காட்டி கொடுத்து சிங்க பாதுகாப்பில் வாழ்ந்து வரும் பிள்ளையான் குற்றப்புலானய்வு துறையில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இன்று நடந்த விசாரணையில் வகைக்கு மூலத்தை பெற்று விட்டு பவர் வெளியேறி சென்றுள்ளார் .
பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது குறிப்பிட தக்கது .
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை
பீதியில் பிள்ளையான் தயாராகும் சிறை ,வரும் நாட்களில் முதலாவது விக்கட்டாக பிள்ளையான் சிறையில் அடைக்க பட போகிறார் .
ஜோசப் பரராயசிங்கம் கொலை முதல் பல கொலைகளை பிள்ளையான் நடத்தினார் .அதனால் அவரை தூக்கி உள்ளே அடைப்பதற்கு ஆளும் அனுரா திசநாயக்க அரசு தயாராகி வருகிறது .
மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக செயல் பட்ட ஆயுத குழுவாக பிள்ளையான் விளங்கி வந்தார் .
ஆதாலால் கிழக்கில் பிள்ளையான் ,ஆழ வருபவர்களுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கி வருகிறார் .
ஆதாலால் பிள்ளையான் சிறை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட போகிறார் ,மேலும் அதன் கட்சியின் முக்கிய பங்காளிகளும் கூண்டுக்குள் செல்லும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது .
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிட பட்டாசை கொழுத்த தயாராகி வருகிறது அனுரா திசநாயக்க கட்சி என்பதாக ,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்து உளளார் ,பிள்ளையானை நேரில் சந்தித்த ரணில் மேற்படி ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார் .
தமிழீழ விடுதலை புலிகளின் அணியில் இருந்து பிள்ளையான் கருணா பிரிவதற்கு காரணமாக விளங்கியவர் ரணில் விக்கிரமசிங்கா ஆவர் .
தமிழ் மக்கள் மத்தியில்
அவ்வாறன கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அழவேரோடியுள்ள நிலையில் ,பிள்ளையான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு , இந்தமுறை இடம்பெறவுள்ள தேர்தலில் தாம் ஆதரவு வழங்க உள்ளடகக அறிவித்துள்ளார் .
மகிந்த கட்சிக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த பிள்ளையான் மொட்டு கட்சியை புறம்தள்ளி ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன் வந்துள்ள செயலானது ,இம்முறை மொட்டு கட்சி தோற்கடிக்க போவதாக இவை உணர்த்துகின்றன .
பலத்த போட்டியும் சவால் நிறைந்த ஒரு தேர்தலாக மீளவும் இந்த விடயம் கட்டியம் இடுகின்றன .
மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு
திடீரென மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன்வந்துள்ள செயலானது ,மொட்டு கட்சிக்கு பெரும் இடரை வழங்கியுள்ளது .
வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை
வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை
அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல், தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இந்த
சித்தாந்தக் காரர்களையே நாம் வெறுக்கிறோமே தவிர, நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை வரையறுத்தவர்கள் இவர்களது மூதாதையர்கள் போல் பேசுகின்றனர்.
வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை
தங்களது இருப்புக்காகவும், கட்சிக்காகவும், மட்டுமே பேசினார்களே தவிர எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உண்மையாக நேசிக்கும் மக்கள் நலன் சார்ந்த அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ளாது திட்டமிடப்படாத செயற்பாடுகளே இவர்களின் நடவடிக்கையாகும்.
கிழக்கு மாகாண மக்களின் சவால்களை எதிர்கொள்ள படித்த சமூகத்தின் செயற்பாடு எவ்வளவு முக்கியம் என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களது மக்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் சிந்தனைகளை பாரம்பரிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இந்த மண்ணிலே உற்பத்தி துறையை கட்டி எழுப்ப வேண்டியதே முக முக்கியமான வேலையாகும்.
உற்பத்தி செய்யக்கூடிய ஏற்றுமதி பயிர்களையே நாம் பயிரிட வேண்டிய தேவை உள்ளது பெரிய அளவு பொருளாதாரத்தை சிந்தித்து சிறிய அளவு பொருளாதாரத்தை நாம் இழந்து வருவது உண்மையாகும்.
வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை
அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல், தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இந்த பிழையான வழிப்படுத்தலை தான் நாம் பிழை என சொல்கிறோமே தவிர
இறுமாப்புடன் கூடிய சித்தாந்த பிழை என சொல்வார்கள் இந்த சித்தாந்தக்காரர்களையே நாம் வெறுக்கிறோமே தவிர நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை என்றார்.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
by நிருபர் காவலன் - பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
by நிருபர் காவலன் - தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
by நிருபர் காவலன் - பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்
by நிருபர் காவலன்
மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ
மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ
இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்
இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்
இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
கொலையாளி பிள்ளையான் – போட்டு தாக்கும் சாணக்கியன்
கொலையாளி பிள்ளையான் – போட்டு தாக்கும் சாணக்கியன்
பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியம், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும்.
பாராளுமன்றத்தில் இன்று (22) நடைபெற்ற வாதவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர்,
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது எழுத்தியதற்காக, கடந்த ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஏதாவது நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையானுக்கு பிணை வழங்கியதைப் போல, பிள்ளைகளுக்கும் பிணை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவும் என்றும் கோரிநின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன், பிணையில் விடுக்கப்பட்டார். அத்துடன், அவருக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கூட்டமைப்பே என்னை சிறையில் அடைத்தது – பிள்ளையான் அழுகை
எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு
வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட
அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில்
கேட்டறியும் மக்கள் சந்திப்பு கும்புறுமூலை பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று (26) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள
வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது
யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள் அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம்.
இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும்
என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான
சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற
நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஐயா பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக்
காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது
கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார்.
நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை
அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக
ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.
இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிராம சேவை அதிகாரி ஜெ.லோபன்ராஜ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கும்புறுமூலை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாக சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
பிள்ளையான் விடுதலை – வழக்கு தள்ளுபடி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர்
மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர்
“பிரதீப் மாஸ்டர்” எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, “கஜன் மாமா” எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ வீரரான
மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம் மற்றும் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல்
அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்
நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.
இதன்பிரகாரம், குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில், கடந்தாண்டு நவம்வர்
24ஆம் திகதி, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (11) சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தமுடியாது என
மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு
(பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, சட்டாமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு
சமூகமளிக்காதமையால், இவ்வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதம் 2ஆம், 10ஆம் மற்றும் 16ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான இந்த வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி
டி.சூசைதாசன் முன்னிலையில், இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
அவர் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், அதற்கான நீதிமன்ற அனுமதியை, சட்டத்தரணி கோரினார்.
இவ்விடயத்தை, வெள்ளிக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென மேல் நீதிமன்ற விசேட நீதிபதி சூசைதாசன்
அறிவித்தாரென, சந்திரகாந்தனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு
மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை செய்யப்பட்டார்.
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான
நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது.
இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா
யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்
16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்
கடந்த நலலாட்சி அரசில் சிறை படுத்த பட்ட பிள்ளையான் இன்று ஒன்பதாவது பாராளுமன்ற மார்வில் கலந்து கொண்டார்
நீதிமன்றின் விசேட அனுமதியை பெற்று பாராளுமன்றம் வருகை தந்த இவர் ,நல்லாட்சி அரசு தொடர்பாக கிழித்து தொங்க விட்டார்
இலங்கை தமிழர் வரலாற்றில் சிறையில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழர் இவராகத்தான் இருக்க முடியும்
தன்னை வெல்ல வைத்த மக்களிற்கு தான் நல்லதை செய்ய வேண்டும் எனவும் முழங்கி தள்ளினார்
















