விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது.
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்

    Posted in இலங்கை செய்திகள்

    அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று

    அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று

    இன்று முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், வாகனங்களை மட்டுப்படுத்துதல், அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    நாடு தற்சமயம் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்றில் இருந்து பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும்
    இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

      Posted in இலங்கை செய்திகள்

      கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்

      கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்

      மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (06) உத்தரவிட்டார்.

      மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3 ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

      இந்நிலையில் குறித்த நபர் நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.

      இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

      இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.

      அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

      இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

      இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

      அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை
      எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

      ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
      Posted in இலங்கை செய்திகள்

      ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு

      ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு

      ஹட்டனில் சிறுத்தைப்புலி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

      அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை

      தோல்வியடைந்ததாக.நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

      இன்று (07.08.2022) காலையில் சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த

      சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.

      நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

      இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

      ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு

      சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுத்தை ஏறிய மரமும் வெட்டப்பட்டது.

      இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் ,


      இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்

        மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்

        இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதால் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் .

        எம்பி பதவியை ரணில் விக்கிரமசிங்க இழந்து தவித்த நிலையில் இலங்கையின் ஜனாதியாக மாற்றம் பெற்றுள்ள ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயா மற்றும் ராஜபாக்ஸ குடும்பத்தை பாதுகாப்பதில் குறியாக உளளார்.

        இவர்களது சொத்துக்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு ரணில் தொடர்ந்து உதவி வருகிறார்.

        உலக நாடுகளில் எங்கும் தங்க முடியாத நிலையில் கோட்டபாய சிக்கி தவித்து வருகிறார் .

        இவரை போர்க் குற்ற சாட்டில் கைது செய்து விடுவார்கள் என்கின்ற பீதியில் கோட்டபாய இலங்கை திரும்புகிறார்.

        அவ்வாறு இலங்கை வரும் இவர்களை ஒட்டு மொத்தமாக காப்பாற்றுவதில் ரணில் விக்ரமசிங்க உதவி புரிந்து வருவதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

        மகிந்தா குடும்பத்தினை பாதுகாக்க தவறினால் இரண்டு வருடஙக்ளுக்கு உள்ளாகவே ரணில் ஆட்சி கவிழ்க்க பட்டு அவர் ஜனாதிபதி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

        இதனால் ரணில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை

          இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை

          இலங்கையில் கடந்த இறுமாதங்களில் மட்டும் 23 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

          இலங்கையில் சட்டவிரோத ஆயுத பாவனைகள் தடுக்க பட்டுள்ள பொழுதும் இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

          அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த துப்பாககி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவதான குற்ற சட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது.

          மிகவும் துணிகர சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

          எனினும் இதுவரை இந்த ஆயுத தரிகள் கைது செய்யப்படாது உள்ளமை குறிப்பிட தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு

            இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முடிவு

            இலங்கையில் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய கேட்டபாயாவை கைது செய்ய கோரி
            மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

            எதிர் வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாயவுக்கு எதிராக மக்கள் போரட்டம் மீளவும் பெரிதாக இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

            ராஜபாக்ஸ குடும்பம் கைதுசெய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

            ஆனால் அதனை இதுவரை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்திடவில்லை.

            ரணில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் மீளவும் வெடித்து பறக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

              காஸ் சிலிண்டர்
              Posted in இலங்கை செய்திகள்

              சமையல் எரிவாயு விலை குறைப்பு

              சமையல் எரிவாயு விலை குறைப்பு

              சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


              புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை புதிய விலை குறித்து அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

              விலை திருத்தத்தின் போது எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறைவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

              நுகர்வோர் விவகார அதிகாரசபை, திறைசேரி மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, புதிய விலை திருத்தம் செய்யப்படுகிறது.

              சமையல் எரிவாயு விலை குறைப்பு

              அந்த சூத்திரத்தின் அடிப்படையிலேயே நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொள்வோம் என்று முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

              தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “லிட்ரோ நிறுவனத்தை நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது லிட்ரோ நியாயமான இலாபத்தை ஈட்டுகிறது.

              “கடந்த 22 நாட்களில் 2.87 மில்லியன் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ லங்கா வழங்க முடிந்தது” என்றார்.

                முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்
                Posted in இலங்கை செய்திகள்

                முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்

                முல்லைத்தீவில் இளம் பெண்ணை காணவில்லை தேடும் குடும்பம்

                முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

                22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர் கடைசியாக சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.

                யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                தொலைபேசி இலக்கம் – 076 0777615 மற்றும் 074 0961230

                  Posted in இலங்கை செய்திகள்

                  ரணில் சஜித் மீள இணைய முடிவு

                  ரணில் சஜித் மீள இணைய முடிவு

                  இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி இரு அணிகளாக உடைந்து சிதைந்த நிலையில் மீளவும் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளன.

                  பலவீன பட்டுள்ள கட்சியை மீளவும் ஒன்றிணைந்து அதன் ஊடக தனது பலத்தை நிரூபிக்க ரணில் முயன்று வருகிறார்.

                  எம்பிகளுடன் உள்ள சஜித் அணியினரை பலமிழக்க வைக்கும் நகர்வில் தந்திர ஆட்டத்தை ரணில் ஆரம்பித்துள்ளார்.

                  இந்த ஆடுகளத்தில் சஜித்தை தோல்வியடைய வைப்பதே ரணில் நோக்காக உள்ளது.

                  அவ்வாறு சஜித் ரணிலுடன் இணைந்து அமைச்சு பொறுப்புக்களை பெற்று கொண்டால் கட்சி இரண்டாக உடைந்து பலவீன படும் என எதிர்பார்க்க படுகிறது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கணவன் மண்டையை உடைத்த மனைவி

                    கணவன் மண்டையை உடைத்த மனைவி

                    யாழ் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                    குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது..

                    மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார்.

                    இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார்.

                    இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்

                      இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்

                      இலங்கை முன்னால் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடினார் .

                      இவ்வாறான சூழலில் இலங்கைக்கு 11 ஆம் திகதி மீள் திரும்புகிறார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

                      ஊடக நபர் ஒருவர் தொடுத்துள்ள கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

                      எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள் வருவது தொடர்பாக எதுவும் தெரியாது என மகிந்த தெரிவித்துள்ளார்.

                      மேலும் கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் மருத்துவ
                      தேவைக்கு சிங்கப்பூர் சென்றுள்ளதாக மகிந் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                        பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                        இலங்கை ; நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை ,திங்கள் ,செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

                        தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம்

                        வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.

                        வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான

                        கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

                        பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                        ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

                        எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி

                        நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

                        இருப்பினும் இவ்வாறான ,பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                        இதேவேளை வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                        வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் (8)
                        வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

                          சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

                          சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயஅமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

                          இதற்கமைவாக நெல்கொள்வனவுச் சபை விவசாயிகளிடமிருந்து ,ஒரு கிலோ நாடு நெல் 120விற்கும், சம்பா ஒரு கிலோ 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவை 130 ரூபாவிற்கும் கொள்வனவு
                          செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show

                            வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show

                            வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் !

                            ‘சமூகவலைத்தள வழி மக்கள் அரங்கம்’

                            இன்று (07-08-2022 ஞாயிற்றுக்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கவுள்ளார்.

                            Facebook @TGTEMedia / Youube : TGTE Media https://youtu.be/F5U3MNq-n1Yஆகிய சமூகவலைத்தள பக்கங்கள் ஊடாக இணைந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்க முடியும்.

                            நியூ யோர்க் நேரம் காலை 11மணி ஐரோப்பிய நேரம் மாலை 5மணி சிறிலங்கா நேரம் இரவு 8:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

                            இந்நிகழ்வினை tgte.tv வலைக்காட்சியூடாக நேரடியாக காணலாம்.

                            நன்றி

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் ம் துப்பாக்கி கலாச்சாரம்

                              இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

                              இலங்கை கம்பாக பகுதியில் நபர் ஒருவர் அருமை ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

                              இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்ட நபரது சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஐயாவுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

                              இலங்கையில் சமீப காலங்களாக அதிக அளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது

                                அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது

                                இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு
                                மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

                                குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளனர் .தொடராக அவுஸ்ரேலியாவுக்கு
                                படகு மூலம் இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .

                                அவ்வாறு செல்கின்ற அகதிகளை மீளவும் இலங்கைக்கு அவுஸ்ரேலியா நாடு கடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

                                  வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு

                                  இலங்கை வத்தளை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

                                  வத்தளை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

                                  மீட்டக்க பட்ட ஆணின் சடலம் நாற்பது வயது இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர் .

                                  இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                                    மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                                    வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

                                    அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

                                    துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.

                                    10 மாவட்டங்களைச் சேரந்;த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக .
                                    அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

                                      மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல் மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். "Methagu" is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence. தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து "மேதகு" என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021) வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு" திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும் நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது. உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம். The movie METHAGU, which is set to be the starting point of Theera's history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can't hide the history. எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள், செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம். மெல்பேர்ன் காட்சிகள் Dandenong - VIC 20 Aug 2022 Saturday 6.45pm -- Epping - VIC 21 Aug 2022 Sunday 6pm Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107 Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும் Tickets: Adult $20, Kid (under 12) $10 எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும் https://www.tccau.com/2022/08/Methagu-2.html
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

                                      மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

                                      அவுஸ்ரேலியா ; மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் காண்பிக்கப்படும் மேதகு திரைப்படக் காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. இதற்கான

                                      முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
                                      “Methagu” is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of

                                      Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.

                                      தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம்பெற்ற தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத்

                                      தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்து கடந்த வருடம் (OTT) தளத்தில் (25.05.2021)

                                      மெல்பேர்னிலும், ஒஸ்ரேலிய நகரங்களிலும் மேதகு 2 திரைப்படம் ஓகஸ்ட் 19 முதல்

                                      வெளியாகியாகியது. அதே நேரத்தில் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், தமிழ் உணர்வாளர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் ”மேதகு” திரைப்படத்திற்கு தமது வாழ்த்துகளையும்

                                      நல்லத்தரவினையும் வழங்கி சிறப்பித்திருந்தனர். இவ்வேளையில் அத்திரைக்காவியத்தின் பாகம் 2 எதிர்வரும் 19ம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகின்றது.


                                      உங்களுக்கு தெரிந்தவர்களுடன், தெரிந்த குழுமங்களில் பகிர்ந்து பல தடைகளைத் தாண்டி வரும் மேதகு 2 போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.


                                      The movie METHAGU, which is set to be the starting point of Theera’s history, was released on June 25 last year. Methagu-2 will be released on wide screens, worldwide from August 19th onwards. Congratulations and love to the crew. You can hide the story but You can’t hide the history.

                                      எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21ஆம் திகதிகளில் ஒஸ்ரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு

                                      www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். இணையதளம் ஊடாக பதிவு செய்யமுடியாதவர்கள்,

                                      செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு ரிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

                                      மெல்பேர்ன் காட்சிகள்
                                      Dandenong – VIC

                                      20 Aug 2022 Saturday 6.45pm

                                      Epping – VIC
                                      21 Aug 2022 Sunday 6pm
                                      Contact: 0433 002 619, 0414 185 348, 0406 429 107
                                      Sunshine நகர திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்

                                      Tickets: Adult $20, Kid (under 12) $10
                                      எனைய ஒஸ்ரேலிய நகரங்களின் மேதகு 2 திரைக்காட்சிகள் பற்றிய விபரங்கள் கீழே உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ளவும்
                                      https://www.tccau.com/2022/08/Methagu-2.html