Posted in இலங்கை செய்திகள்

வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show

வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் ! Social Mediaş Live Show

வி.உருத்திரகுமாரன் பேசுகின்றார் !

‘சமூகவலைத்தள வழி மக்கள் அரங்கம்’

இன்று (07-08-2022 ஞாயிற்றுக்கிழமை) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கவுள்ளார்.

Facebook @TGTEMedia / Youube : TGTE Media https://youtu.be/F5U3MNq-n1Yஆகிய சமூகவலைத்தள பக்கங்கள் ஊடாக இணைந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளை முன்வைக்க முடியும்.

நியூ யோர்க் நேரம் காலை 11மணி ஐரோப்பிய நேரம் மாலை 5மணி சிறிலங்கா நேரம் இரவு 8:30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வினை tgte.tv வலைக்காட்சியூடாக நேரடியாக காணலாம்.

நன்றி

    Posted in இலங்கை செய்திகள்

    அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

    அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

    தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

    சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

    கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

    பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

    இதில் ஈழத்தில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறையை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

    தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மத்தினை பெறாது எந்தவொரு அந்நிய

    சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

    இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

    வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

    பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

    அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

    அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.


    https://youtu.be/ZL0zrrJIX30
    தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

    சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

    கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

    பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

    இதில் ஈழத்தில் சீனாவின் கால்ப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் விவாதிக்கப்பட்ட இந்த அமர்வில், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

    தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மதத்தினை பெறாது நிலத்தில் மட்டுமல்ல,

    நிலத்தை அண்டிய கடலிலும் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

    இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

    வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

    பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

    அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

    அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம்!

    தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம்!

    தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த

    தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான

    மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார்.

    இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,

    இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.

    நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே

    தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று

    செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.

    தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத்

    தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத்

    தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது.

    2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில்

    முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம்.

    தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ எனும் துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை’ எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது.

    ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும்

    அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.

    இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட

    தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள்

    தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு.


    ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம்.

    தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.

    கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.

    தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
    தமிழரின் தாகம் தமிழீழத் தயாகம்

    இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in Uncategorized

    பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

    பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

    2009ம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லை என பிரித்தானிய அரச தரப்பு முன்வைத்திருந்த கருத்து உண்மைக்கு புறம்பானது

    என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்துவதற்கான அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளார்.

    விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவது தொடர்பில் பிரித்தானிய வாழ் சிங்கள மக்களிடத்திலும் எதிர்ப்பு காணப்படுகின்றது என தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான

    மேன்முறையீட்டு சிறப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, தடையினை நீக்கினால் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் தனது வாதுரையில் முன்வைத்திருந்தது.

    இதனை சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைப்புலிகள் மீதான பற்றும், மதிப்பும் தமிழர்களிடத்தில் ஒருபொழுதும் குறையவில்லை.

    தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு சிறப்பு நீதிமன்றில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முன்வைத்த வாதம் பொய்யானது என்பதனை வெளிப்படுத்த, தடையினை

    நீக்குவதற்கான தமது அரசியல் விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் lifttheban.uk இந்த இணையதளத்தின் மூலம் வெளிபடுத்த வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் பிரித்தானிய தமிழர்களை நோக்கிய அழைப்பு விடுக்கையில்,
    பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய

    உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) தெரிவித்துள்ளது.

    தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், தடையினை நீக்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

    தடையினை நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து அதில் முதல்கள வெற்றினையும் கண்டுள்ள நிலையில், அதனை அரசியல்ரீதியான வெற்றியாக்குவது தற்போது பிரித்தானிய வாழ் மக்களுடைய கைகளிலேயே உள்ளது.

    விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நிலையில் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடையினை

    நீக்க கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களது அழுத்தம் உள்துறை அமைச்சரை நோக்கி செல்லும்.


    https://youtu.be/rMT6QYurLGk

    இதற்காகவே lifttheban.uk எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளத்துக்கு சென்று தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்த வேண்டிய தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்று கடமையாகவுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தினை விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” வந்தடையவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்கியிருந்த இந்த நடைப்பயணம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றது என வலியுறுத்தியிருந்தது.

      Posted in Uncategorized

      ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? video

      ஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன ? video

      எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு,

      தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான

      வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

      சிறிலங்கா அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த ஐ.நா ஆணையாளரது அறிக்கை தொடர்பில் கருத்தினை வெளியிடும் போதே இதனை

      தெரிவித்தள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற

      அவரது பரிந்துரை உற்சாகத்தை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      மேலும் அவர் தெரிவிக்கையில் ஐ.நா ஆணiயாளரு அறிக்கையில் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த

      வேண்டும் என்ற பரிந்துரையே முதன்மையான தெரிவித்திருக்கின்றார். இதற்கு பின்னராகத்தான் பிற பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

      ‘சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தமிழர்கள் பல ஆண்டுகளாக உழைத்து

      வந்துள்ளார்கள், அத்துடன் இலங்கையில் தமிழ் அரசியல் தலைவர்களும் கூட்டாக இதனை கோரியுள்ளதோடு,

      காணாமலாக்கப்பட்ட உறிவினர்கள் பாதிக்கப்பட்ட மக்களும் கோரியியுள்ளனர் ‘ என அறிக்கையில் மனித உரிமைச்சபை ஆணையாளர் அதனை குறிப்பிட்டிருக்கின்றார்.தெரிவித்துள்ளார்.

      இந்த நிலைப்பாட்டுக்காக தமிழர்கள் நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வந்துள்ளோம்.


      2015ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டி

      மில்லியன் கையெழுத்து போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது. அவ்வேளையில் தாயக மக்கள் உட்பட 1.5 மில்லியன் பேர்

      கையொப்பமிட்டிருந்தார்கள். அதுவொரு முக்கியதொரு தொடக்கம். அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு சர்வதேச சட்டவாளர்கள் ஆணையம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்

      நீதிமன்றத்தில சிறிலங்காவை பாரப்படுத்தச் சொல்லியிருந்தது. அடுத்து மனித உரிமைச்சபையின் முன்னாள ஆணையாளர்

      உசேன், தனது அறிக்கையில் சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை

      தமிழர்களில் ஒரு தரப்பிடம் வலுவாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியிருந்தார்.

      இன்று ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரர் தனது பரிந்துரையாக நேரடியாகவே இதனை தெரிவித்துள்ளார். இது எமது இலக்கினை நோக்கி உழைக்கும் போது படிப்படியாக

      ஒவ்வொன்றையும் கடந்து அதனை அடைய முடியும் என்பதற்கு சான்றாக ஐ.நா ஆணையாளருடைய அறிக்கை அமைவதோடு, தாயகமும், புலமும் ஒன்றாக அரசியல் ரீதியாக பயணிக்கும் போது

      அது ஒரு பலமான சக்தியாக திரண்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதனையும் இது காட்டியுள்ளது

      ஐ.நா மனித உரிமைச்சபை நாடுகளை நோக்கிய ஐ.நா ஆணையரது இந்த பரிந்துரையினை அந்நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பது பூகோள அரசியலை சார்ந்து காணப்படுகின்றது.

      ஆணையாளது பரிந்துரையினை அந்நாடுகள் நிராகரிக்க முடியாது என்றே நம்புகின்றேன். அதற்கான நாம் உழைக்க வேண்டும். அந்த

      47 நாடுகளில் முக்கியமான நாடுகளை அடையாளங்கண்டு கடுமையாக தமிழர் தரப்பு உழைக்க வேண்டும்.

      குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது பரிந்தரையினை மையப்படுத்தியே பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும்.

      இதேவேளை ஆணையாளரது அறிக்கையில் நமக்கு முழுயைமான உடன்பாடு இல்லை. குறிப்பாக நடந்தேறிய பாரிய மனித உரிமைமீறல்கள் ‘மீளநிகழாமை’ தொடர்பில் அங்கத்துவ நாடுகள்

      ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் பாதிக்கப்பட்டவர்கள்தான்

      அந்த பொறிமுறையினை தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

      https://youtu.be/u_8E6MxCwmQ
      Posted in இலங்கை செய்திகள்

      மாவீரர் நாளில் தமிழர்தேசம் வகுத்துக் கொள்ள வேண்டியது என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் செய்தி !

      மாவீரர் நாளில் தமிழர்தேசம் வகுத்துக் கொள்ள வேண்டியது என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் செய்தி !

      இறைமை தமிழ்மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன், இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருக்கும் வல்லரசுகளின் ஆட்டத்தை தடுத்து

      நிறுத்தும் வகையில், அனைத்துலக உறவுக் கொள்கை ஒன்றை தமிழர் தேசம் வகுத்துக் கொள்ளவேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

      இதேவளை மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் மறுக்கும் சிங்கள அரசுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி உரிமைகளை வென்றெடுக்க

      முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

      தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு நீக்கத்தின் அவசியம், இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல், சர்வதேசத்தின் நலன்சார் அரசியலை கையாளுதல், தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக் கொள்கை என இம்மாவீரர் நாளில் தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் இராஜதந்திர செயல்வழிப்பாதை குறித்து தெளிவாக முன்வைத்துள்ளார்.

      நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியின் முழுவடிவம் :

      இன்று தேசிய மாவீரர் நாள்.

      இது தமிழீழத் தேச அரசினது உருவாக்கத்துக்காகத் தமது இன்னுயிர்களை விதையாக ஈந்த தேசவித்துக்களின் திருநாள்.

      தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனவழிப்புக்கு உட்படாமல் வாழ்வதற்குச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்று மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்று உறுதியான நம்பிக்கையுடன் வரலாறு படைத்தவர்களின் பெருநாள்.

      நமது தேசத்தின் பிள்ளைகளை நமது நெஞ்சக்கூட்டில் இருத்தி, அவர்களின் திருவுருவங்களை நினைந்துருகி நம் மக்களெல்லாம் அவர்களை வணங்கி நிற்கும் புனித நாள்.

      ஈழத்தமிழ் மக்களின் விடுதலை மூச்சைத் தமது மூச்சாக நிறுத்திச் சுமந்து நின்றவர்கள் நமது மாவீரர்கள்.
      இராணுவப் பெருங்களங்களில் பெரும்வீரம் காட்டி, அறநெறி போற்றி உலகமெங்கும் தமிழர் மாண்பை முரசறைந்தவர்கள் நம் மாவீரர்கள்.

      ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனையைத் தமது ஈகத்தாலும் வீரத்தாலும் அனைத்துலக அரங்கில் நிலைநிறுத்தியவர்கள் மாவீரர்கள்.

      உலக இராணுவ வரலாறு கண்ட மிகப் பெரும் சமர்களுக்கு ஒத்த பல சமர்களை மிகக் குறைந்த படைபலத்துடன் வெற்றி கொண்டு உலக இராணுவங்களையே மலைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது மாவீரர்கள்.

      ஒரு சிறிய தேசத்;தின் அரசியல் பலம் இராணுவபலத்தின் ஊடாக கட்டியெழுப்பப்பட முடியும் என்பதனை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டியவர்கள் நமது மாவீரர்கள்.

      உலகில் தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் மாவீரர்களை வணங்கி நிற்கும் மக்கள் அனைவருடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது சிரம் தாழ்த்தி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிற்கிறது.

      விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்தின் அவசியம்

      அன்பான மக்களே,

      நமது மாவீரர்களை உலக அரசுகள் எதிர் கொண்ட விதம் அறத்தின்பாற்பட்டதல்ல. அநீதியின் பாற்பட்டது. அறத்தின் பாற்பட்டு இந்த உலக அரசியல் ஒழுங்கு இயங்கியிருக்குமானால் நமது மாவீரர்களை இன்று அனைத்துலகமும் கையில் தாங்கிக் கொண்டாடியிருக்கும்.

      இலங்கைத் தீவில் தமிழீழத் தனியரசு அமைவது தமது நலன்களுக்கு ஒத்திசைவானதா இல்லையா என்பதே உலக அரசுகள் போட்ட கணக்கு.
      தமது நலன்களுடன் ஒரு போராட்டம் ஒத்திசைந்தால் உலக அரசுகளின் பார்வையில் அப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராளிகள். தமது நலன்களுக்கு ஏற்றதாக இல்லாது விட்டால் அவர்கள் பயங்கரவாதிகள். இதுதான் அரசுகளின் கணக்கு.

      இந்தக் கணக்கைத்தான் உலக அரசுகள் நமது போராட்டத்திலும் போட்டன. நமது போராளிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் நமது விடுதலை இயக்கமும் இணைக்கப்பட்டது.

      பயங்கரவாதம் எனும் சொல்லுக்கு உண்மையான வரைவிலக்கணமாக இருந்து அரச பயங்கரவாதத்தை மிகக் கொடுமையானவகையில் செய்து வந்த பல அரசுகளும் எமது போராளிகளைப் பயங்கரவாதிகளாக்கி மகிழ்ந்தன.

      இக் குற்றச்சாட்டின் நோக்கம் போராட்டத்தின் அரசியல் இலக்கை நீர்த்துப் போகச் செய்வதே. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் போராட்டத்தின் நியாயங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியே.

      அரசுகளின் காட்டாட்சி நடக்கும் உலக அரசியலில் ஒரு சின்னஞ் சிறிய தேசம் தனது சக்தியனைத்தையும் திரட்டி நீதிக்காகப் போரிட்ட போதும் அத் தேசத்தின் குரல் இந்த அரசுகளின் காதுகளில் விழவில்லை.

      சிங்களப் பேரினவாதம் தனக்கென ஒரு அரசை வைத்திருந்த ஒரேயொரு காரணத்தால், அந்தப் பேரினவாத அரசுடன் இசைந்தவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதில் அனைத்துலக அரசுகள் கொண்டிருந்த பெருவிருப்பால் சிங்களத்தின் தமிழினவழிப்புக்கும் இவ் அரசுகள் உறுதுணையாக இருந்தன.

      இது மாவீரர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உலக அரசுகள் இழைத்த ஓர் அநீதி. அரசுகள் ஆடையணிவதில்லை எனவும் அவை நலன்களைத்தான் ஆடைகளாக அணிந்து கொள்பவை எனவும் கூற்றொண்டுண்டு. இந் நலன்மைய உலக ஒழுங்கில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து மட்டுமல்ல, இந்த அரசுகளிடமும் நாம் நீதி வேண்டிப் போராட வேண்டியவர்களாக உள்ளோம்.

      இதன் அர்த்தம் நாம் இந்த அரசுகளை எதிரிகளாகக் கருதுகின்றோம் என்பதல்ல. இந்தியா மற்றும் மேற்குலக அரசுகளை நட்புச் சக்திகளாக அணுகும் நிலைப்பாட்டைத்தான் நாம் கொண்டிருக்கிறோம். இருந்தும் நமது விடுதலை இயக்கத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் இந்த அரசுகள் சுமத்தியுள்ள பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டை எதிர்த்து நமது சக்திக்கு உட்பட்ட வகையில் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.

      இது மாவீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பது மட்டுமல்ல, போராடும் தமிழீழ தேசத்துக்கும் அத்தியாவசியமானது. இந்த அரசுகளின் பயங்கரவாதப் பட்டியல் அரசியல் சார்ந்தது தான். கிடைக்கும் அரசியல் மற்றும் நீதிப் பொறிமுறைகளுக்குள் அதனை எதிர்த்;து நிற்பதுவும் ஓர் அரசியல் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் இப் போராட்டமும் இணைக்கப்பட வேண்டியது எனவே நாம் கருதுகிறோம்.

      இந்தப் போராட்டத்தைத் தான் நாம் அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்டிருந்தோம். இந்தியாவிலும் மேற்கொள்கிறோம். பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது பயங்கரவாதப் பட்டம் சூட்டித் தடை விதிக்கப்பட்ட முறை பிழையானது எனத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

      இது ஒரு சிறிய வெற்றிதான். ஆனால் அரசொன்றின் முடிவு தவறு என வெளிப்படுத்தப்பட்டது முக்கியமானதொரு வெற்றி. இதன் இறுதி முடிவு அரசு சார்பாகப் போகவும் கூடும். இருப்பினும் அரசுகளின் தமிழர் விரோத முடிவுகளை தொடர்ச்சியாக் கேள்விக்குள்ளாக்கி அரசியல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் உத்தி சார்ந்த செயற்திட்டத்தை நாம் வகுத்துச் செயற்பட்டு வருகிறோம்.

      இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல்

      அன்பானவர்களே,

      நாம் இன்று நெருக்கடியானதொரு அரசியற் காலகட்டத்தை எட்டியிருக்கிறோம். இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதம் தன்னை மேலும் வலுப்படுத்தியிருக்கும் நிலையை கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் அவதானி;க்க முடிகிறது.

      சிங்கள அரசியல் சேனநாயக்கா, பண்டாரநாயக்கா குடும்பங்களைக் கடந்து இப்போது இராஜபக்ச குடும்பத்தை மையம் கொண்டுள்ளது.

      தமிழர் ‘ஆக்கிரமிப்பை’ வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுக்களாக இராஜபக்ச சகோதரர்கள் தம்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தமது யுத்தகள வெற்றியினை அரசியல் முதலீடாக மாற்றியிருக்கிறார்கள்.

      இந் நிலையில் சிங்களப் பேரினவாதத்தை மேலும் சிறிலங்கா அரசில் இறுக்கமாக நிலைநிறுத்தும் வேலைகளை அவர்கள் முன்னெடுப்பார்கள்.

      இலங்கைத்தீவில் என்றும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் வளர்ந்தோங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்வார்கள்.

      இதனை இன்னொரு வகையில் சொன்னால் சிங்களத்தின் தமிழின அழிப்பு இனிவரும் வருடங்களில் இன்னும் தீவிரமடையும்.

      இங்கு தமிழின அழிப்பு என்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் பௌதீகரீதியாகக் கொன்றொழிப்பதைக் குறிக்கவில்லை. மாறாக இலங்கைத்தீவில் தமிழர் தேசம் என்றதொரு அரசியல் அலகை இல்லாது ஒழிப்பதைத்தான் குறிக்கிறது. தமிழ்மக்களின் தேசத் தகைமைகளை அழித்தொழிப்பதைத்தான் குறிக்கிறது.

      இது சிங்கள பௌத்த இனவாத அரசின் நீண்டகால இலக்கு. சிங்கள அரசைத் தலைமை தாங்கும் எந்தத் தவைர்களும் இதனைச் செய்வார்கள். தமிழர்களுடனான யுத்தத்தை வென்;றதாக வெற்றி முரசம் கொட்டும் இராஜபக்சக்களுக்கு இதனை ஒரு படி கூடுதலாகச் செய்யும் விருப்புண்டு. இதன் மூலம் சிங்கள மக்களின் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் ஐதீகக் கனவுகளும் அவர்களுக்கு உண்டு.

      இதனால் சி;ங்களத்தின் ஆக்கிரமிப்பு தமிழ் மண்ணில் மேலும் தீவிரமடையும். கொரோனா உலகப்பெருந்தொற்று அரசுகளுக்குத் தந்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழர் தேசத்தின் அரசியற் குரலை மேலும் நசுக்கவும் தமிழர் தேசத்தின் வளர்ச்சியை மேலும் நறுக்கவும் இவர்கள் முயல்வார்கள்.

      தமிழ் மக்கள் தமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் இவர்கள் மறுப்பார்கள்.
      இவர்களுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும்.

      தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து அரசியல் வழியில் போராடுவது மட்டும்தான் இப்போதுள்ள தவிர்க்க முடியாதவொரு தெரிவாக இருக்கும். இந்தப் போராட்டம் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து சட்ட எல்லைகளைத் தாண்டிக் கிளர்ந்தௌ வேண்டும். சிறிலங்காவின் அடக்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அடையாள எதிர்ப்பை மட்டும் காட்டுவது உரிய பயனை வழங்கப்போதில்லை.

      மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் விடயத்தில் மக்கள் சட்ட எல்லைகளையெல்லாம் தாண்டி தமது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துவார்கள் என்பது எமது நம்பிக்கை.

      சிங்கள அரசு, தமிழர் தேசத்தை அழித்தொழிக்கும் கைங்கரியத்தை அனைத்துலக அரசுகளைத் தமக்குச் சாதகமாகக் கையாள்வதன் மூலம் நடைமுறைப்படுத்தலாம் என எண்ணுகிறது.

      இந்து மகா சமுத்திரம் உலக வர்த்தகத்தில் வகிக்கக்கூடிய பங்கு காரணமாக இதன் முக்கியத்துவம் 21 ஆம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடையக் கூடியதொரு சூழலும், இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடவமைவும், இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கைத் தீவில் காட்டும் அக்கறையும் உலக அரசுகளைக் கையாளும் வாய்ப்பைத் தமக்குத் தரும் என இராஜபக்சக்கள் கருதும் நிலை உண்டு.

      மேலும் அமெரிக்கா தலைமையிலான அரசுகள் மேற்கொண்ட ஆட்சிமாற்ற ஆட்டத்தை சிங்கள பௌத்த தேசியவாதத்தின் துணையுடன் இராஜபச்சக்கள் முறியடித்து பெருவெற்றி கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் தம்முடன் பேரம் பேசி நலன்களை உறுதி செய்து கொள்வதை விட வேறுவழியேதும் உடனடியாக இல்லை என்பதனை அனைத்துலக அரசுகளும் புரிந்து கொண்டிருப்பார்கள் எனவும் இராஜபக்சக்கள் எண்ணுவதற்கு இடமுண்டு.

      தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய மூலோபாயம்

      இலங்கைத்தீவில் வல்லரசுகளின் ஆட்டம் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருப்பதனைத் தடுத்து நிறுத்துவது என்பதைத் தமிழர் தேசம் தனது உத்தியாக வகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழர் தேசத்துக்கான அனைத்துலக உறவுக் கொள்கை வகுக்கப்படுவதோடு தமிழர் தேசத்தின் இறைமை தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன் தாயகத் தமிழ் அரசியற் தலைவர்கள் செயற்பட வேண்டும்.

      தமிழர் தாயகத்தின் நில கடல் வளங்கள் தமிழர் தேசத்துக்குரியவை என்ற அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். தமிழர் தாயகத்தின் எந்தப் பகுதிகளையும் அனைத்துலக அரசுகள் பயன்;படுத்துவதானால் தமிழ்த் தலைவர்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அதனை மீறி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்த்துத் தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப் போராட்;டங்கள் நாடாளுமன்ற பகிஸ்கரிப்பு போன்ற வடிவங்களை எடுக்கும்போது அவற்றின் மீது அனைத்துலகக் கவனம் குவியும்.

      இவற்றையெல்லாம் தாயகத்தில் செய்வதற்குரிய அரசியல் விருப்பு தாயகத் தலைவர்கள் பலரிடம் இருக்கிறதா என்பது இங்கே முக்கியமானதொரு கேள்வியாக எழுகிறது.

      மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதில்; அரசியல் தலைவர்கள் காட்டும் அக்கறை உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் தமிழர் தேசத்தை அனைத்துலக அரசுகள் மத்தியில் தனித்துவமான தரப்பாக நிலைநிறுத்துவதில் தமிழ்த் தலைவர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

      இலங்கைத்தீவில் தமது நலன்களை அடைந்து கொள்வதில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற அரசுகளுக்கிiடேய ஏற்படக்கூடிய போட்டி, புவிசார் அரசியல் சார்ந்து தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய வாய்ப்புக்களை இனங்கண்டு உரிய வியூகங்களை வகுக்க வேண்டிய கடமை தமிழர் தேசத்துக்கு உண்டு.

      இவ் விடயத்தில் ஈழத் தமிழ்த் தாயகத்தையும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும், உலகத் தமிழ் மக்களையும் இணைத்து ஒரே தரப்;பாக நாம் நிலைநிறுத்த வேண்டும்.

      இதற்கான முன்னெடுப்பினைத் தாயக மக்களிடையே தேசிய நிலைப்பாட்டுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக நின்று மேற்கொண்;டால் அது கூடுதல் மட்ட அனைத்துலக அக்கறையினைப் பெறும். தாயகத்தில் எடுக்கப்படும் இம் முயற்சிகளுக்கு உரிய ஆதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.

      இந்திய பெருங்கடல் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பாகுதல்

      அன்பான மக்களே,

      நாம் ஒரு தேசமாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அரசில்லாத ஒரு தேசமாகவே இன்று இருக்கிறோம். ஏறத்தாழ 90 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டத்துக்கென உலகில் ஒரு நாடு இன்றில்லை. ஓர் அரசு இல்லை.

      உலகில் தமிழ் மக்களுக்கெனவொரு அரசு வலுவாக இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடப்பதற்கான நிலைமைகள் உருவாகியிருக்காது.

      நாம் அரசற்ற தேசமாக இருப்பதனால் சிறிலங்கா அரசுக்குள் கட்டுண்டு போயிருக்கிறோம். இதனால் எம்மிடையே ஈழத் தமிழர் தேசம் குறித்த சுதந்திரமான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிலைமைகளே உள்ளன. இந் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

      மேலும்; உலகநோக்கில் இருந்து பார்க்கும் போது அரசுகள் என்ற முறைமைக்குள்ளும் நாம் சிக்குண்டு போயிருக்கிறோம். இதனாற் தான் வல்லரசுகள் இலங்கைத்தீவில் அடைந்து கொள்ள முயலும் நன்மைகள் உள்நாடு சார்ந்தவையாக மட்டும் அமைவதில்லை.

      அரசுகளின் இந்து-பசுபிக் சமுத்திரப் பிராந்திய வர்த்தக, பொருளாதாரப் போட்டியில் இலங்கைத்தீவும் முக்கியமான கேந்திர முக்கியத்துவத்தைப் பிடித்துக் கொள்கிறது. வர்த்தக, பொருளாதார நன்மைகளை நிலைநிறுத்த இராணுவ நடவடிக்கைகளையும் இவ் அரசுகள் மேற் கொள்வதுண்டு.

      இருப்பினும் அவ்வாறு நடக்கும்போது தமது இராணுவ நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு சார்ந்;தும்;, ஜனநாயகம் சார்ந்தும், அறம் சார்ந்தும் காரணங்களை அரசுகள் கூறிக் கொள்வதுண்டு;. அரசுகள் இவ் விடயத்தில் நேர்மையற்றதொரு இரட்டைநிலையில் தான் இருந்து வருகின்றன.

      இருந்தபோதும் நாம் அனைத்துலக அரசுகளின் ஆதரவுகளை எமக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டிய அவசியம் உண்டு.

      பல தலைவர்களும் அதிகாரிகளும் தம் அரச பொறுப்பில் இருக்கும் போது பின்பற்றாத, பேசாத உண்மைகளைப் பின்னர் பேசுவார்கள். காலம் தாழ்ந்தென்றாலும் உண்மைகள் வெளிவர இவை உதவுவதுண்டு.

      உதாரணமாக, முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்ற போது அமெரிக்க அதிபாராக இருந்த ஒபாமா அவர்கள் அண்மையில் வெளியிட்ட தனது நூலில் அங்கு நடைபெற்றது இனவேட்டை (ethnic slaughter) எனக் குறிப்பிட்டுள்ளார்.

      முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினவழிப்புத் தொடர்பான அனைத்துலக விசாரணைக் கோரிக்கைகள் நலிவடைந்து போகவில்லை.

      சிங்களத்தின் தமிழினவழிப்பு என்றோவொரு நாள் உலகின் மனச்சாட்சியைத் தட்டி தமிழர் தேசத்துக்கான வாய்ப்;புகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயலாற்றுவோம்.

      மாவீரர்களின் நினைவு நாளில் அறம் வெல்லும் என்ற தார்மீக நிலைப்பாட்டை, நீதியை மதிக்கும் மானுட சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையாக நாம் வரித்துக் கொள்வோம்.

      நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். நம் மாவீரர் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் அணி திரள்வோம்.

      நம்மால் இயலக்கூடிய அனைத்து வழிகளிலும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

      தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

      இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      தேச துரோகி சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் video

      தேச துரோகி சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் video

      எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

      சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

      முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அடிக்கடி கூறுவதாக குறிப்பிட்டி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஒரு இனச்சுத்திகரப்பு என்று சொன்னால், ஒரு இனத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகச் செல்வது

      இனச்சுத்திரகரிப்பு அல்ல. அந்த இனத்தை demonization of ethnics groups எனச்செய்வதுதான் இனச்சுத்திகரிப்பு. பொஸ்னியாவை எடுத்துப்பார்தால், முஸ்லீமக்களை விரட்டுப் போது, பள்ளிவாசல்களை தாக்கினாhர்கள், அந்த சமூகத்துக்கு எதிரான எதிர்ப்பினை காட்டினார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை முஸ்லீம்மக்களுக்கு எதிரான அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை எனக் குறிப்பிட்டார்.

      மேலும் பாதுகாப்பு கருத்தியே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் எனச்சுட்டிக்காட்டிய அந்த சம்பவம் இடம்பெற்றது எனக் குறிப்பிட்டதோடு, அந்தநேரத்தில் பல முஸ்லீம் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார்கள். பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் முஸ்லீம் பெயர்களை கொண்டவர்களாக இருந்தார்கள் எனத் தெரிவித்தார்.

      எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டார்கள் என்ற கருத்துக்கு எந்தவிதமான சட்டத்தின்படியோ, தார்மீககோட்பாட்டின் படியோ பொருந்தாது. இவ்வாறான கருத்துக்களை எம்.ஏ.சுமந்திரன் கூறுவது தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது. இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

      மேலும் இந்த ஊடக சந்திப்பில் சிறிலங்காவின் நடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 

      சர்வதேச தளத்தில் தமிழ்தேசியத்திற்காக போராடகூடியவர்களை தெரிவு செய்யுங்கள் !!” சிறிலங்கா பராளுமன்றத்திலோ, அத ன் அரச கட்டமைப்பினுள்ளோ தமிழ தேசிய பிரச்னைக்கு தீர்வு காண இயலாது”
      1. சிறிலங்காவின் நாடாளுமன்றம் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீகரீதியாகவோ தமிழர் தேசத்தை ஆளுகை செய்வதற்கு அருகதையோ தகுதியோ அற்றது.

      2. 1972ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டங்கள் எவையும் தமிழர் தேசத்தின்; பங்குபற்றலுடனும் சம்மதத்துடனும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த அரசியலமைப்பு சட்டங்கள் சிங்கள தேசத்தால் தமிழர் தேசத்தின் மீது

      திணிக்கப்பட்டவை. தமிழர் தேசம் தனது இறைமையினை என்றும் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்ததில்லை.

      3. சிறிலங்கா உண்மையில் ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. சிங்கள இனத்தின் மேலாண்மையினை தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நிலைநிறுத்தும் இயந்திரமாகவே சிறிலங்கா அரசு இயங்குகிறது. சிறிலங்கா அரசின் அங்கங்களான

      நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் போன்ற அனைத்து அலகுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக

      சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. இனி மேல் இருக்கப் போவதும் இல்லை.

      4. தற்போதய சிறிலங்கா அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இதில் தமிழர் பிரதேசங்களுக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மொத்தம் 23.

      இதன்படி தமிழர்களின் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் தொகையில் பத்தில் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சக்களின் கட்சி

      நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெறமுடியாது போனாலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்கள கட்சிகளுக்குடையதாகவே இருக்கும்.

      5. குடியுரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள், தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த நிலையிலேயே தான் சிங்கள ஆட்சியாளர்களால்

      நிறைவேற்றப்பட்டன. அந்;நேரத்தில் தமிழர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை

      எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன் சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.

      6. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்காவின்

      அரசகட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனை உய்த்தறிவது என்பது ஒன்றும் கடினமான விடயமல்ல.

      7. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு

      இல்லாமை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      8. இப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, தமிழர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றத்; தேர்தலில் ஏன் போட்டியிட

      வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ் வினா எழுவது நியாயம்

      எனினும் இரண்டு தந்திரோபாயக் காரணங்களுக்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

      9. முதலாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை

      வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல்

      பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும்.

      10. இரண்டாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் போட்டியிடத் தவறின் சிறிலங்காவின் சிங்களக் கட்சிகளும், இக்

      கட்சிகளது அடிவருடிகளும் தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாகும். இந் நிலை உருவாகுவதனைத் தவிர்த்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற நோக்குநி;லையில் நன்மையானதே.

      11. இந்தத் தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பானது சாதி, மத பேதங்களுடன் பிளவுபட்டுவிடுமோ என்ற

      அச்சத்தினையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப் பேதங்களையெல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல் என்ற தெளிவுடன் நமது மக்கள் செயலாற்றுவார்கள் என்பது எமது நம்பிக்கை.


      12. 1985ல் இருந்து எமது தேசிய இனப் பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும், மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய

      அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி என்று அனைத்துலக அரசியல் வெளியினை நோக்கி சென்றுள்ளது.

      13. இன்று சிறிலங்கா அரசின் திட்டமி;டப்பட்ட தமிழின அழிப்பு அனைத்துலகப் பேசுபொருளாகியுள்ள இந் நிலையில் தேர்வு

      செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும், செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு.

      இதனால் தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இனம் கண்டு மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிவு

      செய்யப்படும் பிரதிநிதிகள் பின்வரும் நிலைப்பாடுகளைக் கொண்டியங்குவோராக இருத்தல் வேண்டும்.

      அ – ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் –  தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு

      பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர்

      சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

      ஆ – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

      இ – நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட

      இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால்

      இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

      ஈ – சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

      உ. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

      தேர்தலுக்குப் பின்னர் உருவாகக் கூடிய நிலைமைகள்:
      தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து, தமிழ் மக்களை ‘சிறிலங்கன்’ என்ற அடையாளத்துடன் சிங்களத்துடன் கரைக்கும் முயற்சிகளில்

      தீவிரமாக ஈடுபடக் கூடிய நிலைமைகள் உள்ளன. இம் முயற்சியினை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தந்திரமான யதார்த்தத்தினைக்

      கடைப்பிடித்து பலம் மிக்க அனைத்துலக அரசுகளுடன், அவர்களின் நலன்களுடன் அனுசரித்துப் போகும் ‘சமரசமான’ நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதனை விடத் தமது

      நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரச நிலைiயில் உறவாடுவதனையே விரும்புவார்கள்.

      இத்தகையதொரு நிலை உருவாகாமல் தடுப்பதில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பிரதிநிதிகளுக்குப்

      பெரும் பொறுப்பு உண்டு. அரசுகளுடன் நமது உரிமைகளுக்காகச் செயற்படுவது என்பது நித்திரை கொள்பவனை எழுப்பும் வேலை

      அல்ல, மாறாக நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்பும் வேலை என்ற புரிதலுடன் இவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

      சிறிலங்கா அரசுடன் தமது நலன்களை அடைந்து கொள்ளும் இலக்குடன் அனைத்துலக அரசுகள் தமிழர்; தேசத்தின் நலன்களைப் பலிகொடுக்க முயலும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை

      எதிர்த்து உறுதியாகச் செயலாற்றக் கூடியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுவது அவசியம்.

      அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு, அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி

      கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும்  இணைக்கக் கூடிய

      அரசதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.

      தமிழீழத் தேசியத் தலைவர் கூறியவாறு எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியமானது. எனவே சர்வதேச

      தளத்தில் அரசியலை மேற்கொள்வதற்கு அரசதந்திரத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

      தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாரிய அரசியல் செயற்பாட்டுக்கான பொறுப்பும் தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல்

      மாயைகளுக்குள் தலையைப் புதைக்காமல், நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று

      கட்டியெழுப்பப் படவேண்டும். அதனை நோக்கிய முன்னெடுப்பைத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்

      https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be
      Posted in இலங்கை செய்திகள்

      சிறிலங்காவின் தேர்தலில் யாரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும் ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !

      சிறிலங்காவின் தேர்தலில் யாரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும் ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !

      PM V.Rudrakumaran I Sri Lanka Elections I Tamil Leaders I Tamil Diaspora
      சிறிலங்காவின் தேர்தல்கள் தொடர்பிலும், தமிழ் அரசியல்

      தலைவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமா…
      youtu.be

      சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள

      நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச்

      செல்கின்றவர்களாக, மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

      சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இக்கருத்தினை அவர்

      தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்,


      சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் கொள்கை முடிவுகளே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் எடுத்து வருகின்றது.
      எம்மைப் பொறுத்தவரை சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. சிறிலங்காவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பத்து வீதத்துக்கு

      குறைவானவர்களே தமிழர்கள் உள்ளனர். இதனால் சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்கு சென்று எதனையும் சாதித்துவிடமுடியாது.

      கடந்த காலங்களை எடுத்துப்பார்த்தால் 1972ம் ஆண்டு அரசியலைமைப்பு சட்டம் கூட தமிழ்மக்களின் எதிர்ப்புக்கு

      மத்தியில் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது. 1978ம ஆண்டிலும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது.

      https://youtu.be/Un_eEmcZ9Gw

      சிறிலங்காவின் அரசியல்வெளியில் என்பது தமிழர்களுக்கான பங்கெடுப்பு இடமில்லை. ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த வல்லுனர் குழுவின் அறிக்கையும் கூட ‘ தமிழ்

      மக்கள் தமது இன அடையாளத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகப் புறந்தள்ளப் பட்டு வந்தமையே இனப்பிரச்சனையின் அடிப்படையாக இருந்துவந்த

      காரணத்தினால், இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் புறந்தள்ளல் வகையிலான கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை

      என சிறிலங்காவின் அரசியல் நீரோடையில் தமிழர்களின் பங்களிப்புக்கான காத்திரமான இடம்இல்லை தெரிவித்துள்ளது.

      காரணம் சிறிலங்கா ஒரு பௌத்த இனவாத இறுகிய இனவாத கட்டமைப்பாகும். அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் வெளியே

      இல்லை. இதன் காரணமாகத்தான் ஆயுதப் போராட்டமே தொடங்கியது. அதனால்தான் நிகழ்வுபூர்வமான ஒர் அரசினை நிறுவினோம்.

      அதேசமயம் சிறிலங்காவின் தேர்தல்களை நாம் பயன்படுத்த வேண்டும். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதனை ஒரு கருவியாக கையாளவேண்டும். இந்த தேர்தல்களில்

      பங்கெடுக்கின்ற தமிழர்கள் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக இருக்க வேண்டும்.


      மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமையினைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

      புலம்பெயர் தேசங்களில் நாம் பல இராஜதந்திரிகளைச் சந்திக்கும் போது, தாயக இருந்து வருகின்ற தலைவர்கள் ஒன்றைச்

      சொல்கின்றார்கள், நீங்கள் இன்னொன்றைச் சொல்கின்றீர்கள் என இராஜதந்திரிகள் கூறுகின்றார்கள். தமிழர்களுடைய அடிப்படைக் கோரிக்கைகள் பலவீனப்படுகின்றது.

      தாயகத்தில் இருக்கின்ற தலைவர்கள் இனப்படுகொலை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு சிறிலங்காவை கொண்டு செல்வதற்கு வெளிப்படையாக

      ஈடுபாடுகாட்டவேண்டும். இதனைச் சொல்வதற்கும் சிறிலங்காவின் ஆறாவது திருத்தசட்டமோ, பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தடையாக இல்லை. அதனை ஒரு சாட்டாக சொல்லமுடியாது.

      தமிழர்களுடைய அடிப்படை விடயங்களை சொல்லக்கூடிய தமிழ் தேசியத்தை முன்னெடுக்க கூடியவர்கள் தாயக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

      1986ம் ஆண்டு திம்புவில் பேச்சுவர்த்ததை தொடங்கியத்தில் இருந்தே எங்களுடைய தேசிய இனப்பிரச்சனை கொழும்பு

      எல்லையைத் தாண்டிவிட்டது. கொழும்புடன் கதைத்து நாங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. இந்த யதார்த்த்தினை தாயக தமிழ்அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

      கொழும்புடன் பேசத் தொடங்கினால், இன்று சர்வதேசமயப்பட்டுள்ள எமது பிரச்சனைக்கும் சர்வதேச ஆதரவுக்கு பின்னடைவாகும். பௌத்த இனவாத கட்டமைப்பான

      சிறிலங்காவின் நாம் கதைத்து ஒன்றினையும் பெறமுடியாது. திம்பு முதல் தாய்லாந்து ஜெனீவா என்று எமது பிரச்சனைகளை

      சர்வதேமயப்படுத்திவிட்டுள்ள நிலையில், மீண்டும் கொழும்புக்குள் தமிழர் பிரச்சனையைக் தாயக தலைவர் கொண்டு செல்லக்கூடாது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்தார்.

      மேலும் தமிழர் தாயகத்தின் தென்முனை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள தொல்பொருள் செயலணி குறித்து

      கருத்தினை தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழர் தேசத்தை கூறுபோடுகின்ற ஒரு அரசியல் யுத்தி இதுவெனத் சுட்டிக்காட்டியுள்ளார்.


      1948ம் ஆண்டு தென்தமிழீழத்தில் 1 வீதமாக இருந்த சிங்கள பரம்பல், இன்று 30 வீதமாகியுள்ளது. 1949ம் ஆண்டே

      டி.எஸ்.செனநாயக்கா சிங்கள மயமாக்கலைத் தொடங்கிவிட்டார். அதன் ஒரு தொடர்சியாகவே இன்றும் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் செயலணியை சிறிலங்கா அமைத்துள்ளது.

      தமிழர் தேசத்தை கூறு போட்டு, தமிழர் தாயக அரசியலை பலவீனப்படுத்த முனைகின்ற சிறிலங்காவின் இந்த

      செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் நேரடி போராட்த்தில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்..

          Posted in இலங்கை செய்திகள்

          சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: பிரதமர் உருத்திரகுமாரன் எச்சரிக்கை !

          சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: பிரதமர் உருத்திரகுமாரன் எச்சரிக்கை !

          எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச்

          செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருவதோடு, இந்நேரத்தில் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது என நாடுகடந்த தமிழீழ

          அரசாங்கத்தின் பிரதமரும், விடுதலைப்புலிகளின் சர்வதேச சட்ட ஆலோகராகவும் இருந்த வி.உருத்திரகுமாரன் அவர்கள் எச்சிரித்துள்ளார்;.

          இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கருத்துப்பதிவில்,
          சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

          அவர்கள் அண்மையில் வழங்கிய செவ்வி தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக இயங்கியவன்

          என்ற வகையிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையிலும் எதிர்வினையாற்றுவது அவசியம் என உணர்கிறேன்.

          திரு சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச்

          செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருகின்றதொரு பின்னணியிலேயே இவர் வழங்கிய செவ்வியினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக

          உள்ளோம். மேலும் இச் செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் உட்பட பல்வேறு குளறுபடியான தகவல்கள்

          உள்ளதனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இது வரலாற்றினைத் திருத்தியெழுதும் ( Revisionism) ஓர் ஆபத்து மிக்க முயற்சியாகவே எமக்குத் தென்படுகிறது.

          இச் செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை சுமந்திரன் நிராகரித்திருக்கிறார். தமிழ் மக்களின் தேசிய அரசியலைப் பிரிதிநிதித்துவப் படுத்துவதாகச்

          சொல்லும் எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் தமிழீழ விடுதலைப்;புலிகள் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற தமிழ் மக்களது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டமானது

          சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக தமிழ் மக்கள் சர்வதேச சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்கிய எதிர்வினை

          என்பதனைப் புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டும் செயற்படுவதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். இங்கு தனிப்பட்ட கருத்து என்பதற்கு இடமேதுமில்லை. இதனை ஏற்றுக்

          கொள்ள முடியாவிடின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே சிறந்தது.

          மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை நிராகரித்ததை அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல

          என்றும், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறியுள்ளதுடன் சுமந்திரனின் கூற்றுப்பற்றிக் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர். கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக

          உறுப்பினர் எவரும் செயற்படும்போது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு அதன் விளைவுகளை அவ் உறுப்பினர் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வாறு செய்யாது ‘கட்சிக்கும்

          அதற்கும் தொடர்பில்லை’ என மட்டும் கூறுவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் இவ்வாறான சறுக்கல்களை

          ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், இவற்றுக்கும் அப்பாற்பட்ட அரசியல் நாகரீகம் ஒன்றினை எம்மிடையே

          வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம் என்பதனையும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்.

          நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சுமந்திரன் இப் பேட்டியில்

          தெரிவித்துள்ளார். 2017 ஆண்டில் தாயகத் தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதனை ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை

          அடித்தளமாகக் கொண்டு தாயகத்தில் இயங்கும் கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் அழைப்பொன்றினை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம்.

          அவ் அழைப்பு சுமந்திரன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்து இரண்டொரு நாட்களில் மீளத் தொடர்பு கொள்வதாகக் கூறி நாடுகடந்த தமிழீழ

          அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடர்பான ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர்களது கருத்துக்கள்

          உள்வாங்கப்பட்டு செய்தி ஒன்று அனுப்பவுள்ளதாக ஒருங்கிணைப்பாளருக்கு அறிவித்திருந்தார்கள். அப்படியே செய்தி கிடைக்கப்பெற்று அதனை அமர்வின்போது அவையில் நாம்

          வாசித்திருந்தோம். மேற்கூறிய அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால்

          அனுப்பியிருந்தார்களே தவிர அவ் அழைப்பு சுமந்திரனுக்கு மட்டும் தனித்து அனுப்பப்பட்ட அழைப்பல்ல என்பதையும் இவ் விடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

          இன்று தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளாததிற்கான காரணம் சர்வதேச சட்டங்களுக்கோ அன்றி தார்மீகக் கோட்பாடுகளுக்கோ அது முரணானது என்பதால்

          அல்ல. மாறாக இன்றைய உலக ஒழுங்கில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் பூகோள ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும், சர்வதேச சட்டங்களை

          உரியவகையில் கையாளுதல் மூலமாகவும், உலகத் தமிழ் மக்கள் பலத்தின் ஊடாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

          இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தினை நிராகரிப்போர் எவரதும் அரசியல்

          குறித்து தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள

          விரும்புகிறேன் என வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்தினை பதிவு செய்துள்ளார்.