அனுராதபுரத்தில் உள்ள பழங்கால நீர்த்தேக்கங்கள் மற்றும் நெல் நிலங்களை விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரத்தில் உள்ள பழங்கால நீர்த்தேக்கங்கள் மற்றும் நெல் நிலங்களை விற்பனை

அனுராதபுரத்தில் உள்ள பழங்கால நீர்த்தேக்கங்கள் மற்றும் நெல் நிலங்களை விற்பனை

அனுராதபுரத்தில் உள்ள பழங்கால நீர்த்தேக்கங்கள் மற்றும் நெல் நிலங்களை விற்பனை செய்வதற்கான மோசடி: விவசாயிகள் சங்கம்.

நெல் நிலங்களை மீட்டு விற்பனை

புனித நகரமான அனுராதபுரத்தைச் சுற்றியுள்ள பழங்கால நீர்த்தேக்கங்கள் மற்றும் நெல் நிலங்களை மீட்டு விற்பனை செய்வதற்கான ஒரு பெரிய

அளவிலான மோசடி தற்போது நடந்து வருவதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

பசவக்குளம், பஹல கட்டுகெலியாவ மற்றும் திசாவெவ உள்ளிட்ட அட்டமஸ்தானத்திற்குச் சொந்தமான பல வரலாற்று நீர்த்தேக்கங்கள் மற்றும்

நெல் வயல்கள் சட்டவிரோதமாக மீட்டெடுக்கப்பட்டு விற்கப்படும் அபாயத்தில் உள்ளன என்று அவர் கூறினார்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான குளங்களை கூட மீட்டெடுக்க இப்போது திட்டங்கள் வகுக்கப்படுகின்றன,” என்று தென்னகோன் குற்றம் சாட்டினார்.

“விவசாயத் துறை, மாகாண நீர்ப்பாசனத் துறை மற்றும் சில உள்ளூர் விவசாயிகள் அமைப்புத் தலைவர்களின் ஈடுபாட்டுடன், இந்த குளங்களால்

வளர்க்கப்படும் நெல் வயல்களை பயிரிடாமல் விற்கும் ஒரு மோசடி செயல்பட்டு வருகிறது.”

மீட்டெடுக்கப்பட்ட நெல் நிலங்கள் ரூ. ஒரு ஏக்கருக்கு 70 முதல் 80 மில்லியன் வரை, இது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாகும், மேலும்

கொழும்பிலிருந்து வெளிநாட்டவர்கள்

கொழும்பிலிருந்து வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சுற்றுலா மற்றும் பிற மறைக்கப்பட்ட நலன்களுக்காக இந்த நிலங்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தென்னக்கூன் மேலும் குற்றம் சாட்டினார்.

மூத்த அரசு மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் குளங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகில் ஹோட்டல்கள், வீடுகள் மற்றும்

உணவகங்களை நிர்மாணிப்பதால் நீர்த்தேக்கங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடுமையான சுற்றுச்சூழல் சேதம் ஏற்படுகிறது என்று தென்னக்கூன் மேலும் குற்றம் சாட்டினார்.

அட்டமஸ்தானத்திற்கு பொறுப்பான தலைமை பிக்குகள் கூட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் அதிகாரமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுராதபுரம் காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளிடம் பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், மோசடியைத் தடுக்க இதுவரை எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தென்னக்கூன் கூறினார்.

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது
Posted in இலங்கை செய்திகள்

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது ,நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை

அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.

இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சேதமடைந்துள்ள நிலையில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி
Posted in இலங்கை செய்திகள்

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி ,சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

  1. இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை (Pledge loan Facility) 2024/2025 பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தல்

நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன்

முறையொன்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024ஃ25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறிப்பட்டுள்ளது.

அதற்கமைய, திட்டவட்டமான அளவுகோல்களின் பிரகாரம், நாளாந்த நெல் குற்றும் கொள்ளவு உயர்ந்தபட்சம் 25 மெற்றிக்தொன் வரைக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு (கூட்டுறவுச் சங்க

நெல் ஆலைகள் உள்ளடங்கலாக) அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் உயர்ந்தபட்சம் 50 மில்லியன் ரூபாய்கள் வரைக்கும் நெல் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறையை அமுல்படுத்துவதற்காக

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சோறு போடும் விவசாயியின் நெல்
Posted in இலங்கை செய்திகள்

சோறு போடும் விவசாயியின் நெல்

சோறு போடும் விவசாயியின் நெல்

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது.

இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி, விவசாயியை மையமாக வைத்து கிராமம், நகரம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மோசடி மிக்க வியாபாரி

கடன் மீளச்செலுத்த முடியாத மோசடி மிக்க வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மோசடி மிக்க வியாபாரிகள், பணக்காரர்களின் பக்கமல்லாது விவசாயினதும் சாதாரண மக்களினதும் நலன்களின் பக்கம்

இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயி பாதுகாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (02) திருகோணமலை, கந்தளாய் நகரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயிகளின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி,

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலுள்ள விவசாயி நாளுக்கு நாள் ஏழ்மை நிலைக்கு ஆளாகி வருகிறார்.

விவசாய துறைக்கான, திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் இருந்தும் விவசாயத்துக்கு முறையான தேசிய கொள்கை இல்லாததே இத்துறை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து, மாவட்ட மட்டத்திலும், கமநல மத்திய நிலையங்கள், விவசாய அமைப்புகள்

மட்டங்களிலும் விவசாயியை முன்னேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரினதும், நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.

கோட்டாபய ராஜபக்ச எடுத்த ஒருதலைபட்சமான தீர்மானத்தால் விவசாய விளைச்சலும் விவசாய உற்ப்பத்திகளுக்கான விலைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

விவசாய நிலங்களில் இருந்து டொலர்களை ஈட்டும் யுகத்தை உருவாக்குவோம்,

விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் தரத்தை உயர்த்தி, விவசாயப் பொருட்கள் நாட்டில் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுவது போல, ஏற்றுமதி விவசாயத்துக்கு இட்டுச்சென்று,

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்றுமதி மூலம் வருமானம் பெற்று டொலர்களை ஈட்டும் சூழல் உருவாக்கித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் அறுவடை

விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை,

பெரும் விளைச்சலை ஒரே நேரத்தில் சந்தையில் போடாமல், விலையைக் குறைக்காமல் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு நியாயமான விலையும் கிடைக்கும் வகையில் முறையான சேமிப்பு களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இதுதவிர, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களைநாசினி தெளிக்கும் திட்டத்தையும், பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்களை கையடக்கத்

தொலைபேசி வழியாக பெற்று, பயிர்களை விற்பனை செய்யக்கூடிய பொதுவான விவசாயப் பயன்பாட்டு முறையையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்காக பிரத்தியேக வங்கி,

விவசாயிகளுக்கு சரியான மூலதன அணுகலைப் பெறுவதற்கு நிதி வசதிகளுடன் கூடிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு யானை – மனித மோதலை குறைக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

பயிர் சேதத்திற்கு பயிர் இழப்பீட்டு முறைகள் மற்றும் சொத்து சேதத்திற்கு புதிய காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவோம். இதன் ஊடாக விவசாயிகளைப் பலப்படுத்துவோம்.

தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும்,

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு விவசாயத்தை முன்னேற்க இரசாயன உரங்கள் தேவை.

நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்கள் தேவை.

சகல பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது,

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பலர் இவர்களை மறந்துவிட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை மறந்துவிடவில்லை.

இவர்களுக்கு 30 இலட்சம் ரூபா வழங்கி ஓய்வூதியம் இல்லாமல் சேவை நீக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில்

வெளிக்கொணர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

50 மில்லியன் ரூபாய் நெல் கொள்வனவு
Posted in இலங்கை செய்திகள்

நெல் கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீடு

நெல் கொள்வனவிற்காக நிதி ஒதுக்கீடு

பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது.

திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெரும்போக நெல் கொள்வனவிற்காக வேளாண்மை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளன

கடந்த ஐந்து நாட்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 9 லட்சத்து 4 ஆயிரத்து 202 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் 7 வலயங்களிலுள்ள 241 நெல் களஞ்சியசாலைகளை நெற்கொள்வனவிற்காக தாயார் நிலையில் வைத்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது

பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஹெக்ரெயார்களுக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படவுள்ளது.

குறித்த வைப்புத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் மேலே

Posted in இலங்கை செய்திகள்

சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயஅமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக நெல்கொள்வனவுச் சபை விவசாயிகளிடமிருந்து ,ஒரு கிலோ நாடு நெல் 120விற்கும், சம்பா ஒரு கிலோ 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவை 130 ரூபாவிற்கும் கொள்வனவு
செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

    நெல் உற்பத்தி பாதிப்பு: இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

    2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், 2020 பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

    இவ்வாறு நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகளின் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் இழப்பீடு வழங்குவதற்கு நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதற்காக 40 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதி அமைச்சினால் 229 மில்லியன் நிவாரண பொதி ஒன்றும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

    அரச ஊழியர்கள், சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. இதன்கீழ் விவசாயிகளுக்காக இந்த நிவாரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தின் பசுமை விவசாய உற்பத்தியில் ஈடுபட்டதனாலேயே இந்த பாதிப்பு

    ஏற்பட்டதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் அரசாங்கத்கத்திடம் கேட்டுக்கொண்டனர். விவசாய அமைச்சர் என்ற

    ரீதியில் இழப்பீடு தொடர்பிலான வாக்குறுதியை விவசாயிகளுக்கு தாம் அப்பொழுது வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்

      Posted in இலங்கை செய்திகள்

      நெல் சந்தைப்படுத்தும் சபை ,போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு

      நெல் சந்தைப்படுத்தும் சபை ,போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு

      தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

      நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55ரூபாவுக்கு போட்டி விலையில்; நெல்

      சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்..

      அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இதனை

      தெரிவித்தார். அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் மொஹான் சமரநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

      சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

      08.2021 சிறுபோக நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

      2021 சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல் அறுவடையை போட்டி விலையில் கொள்வனவு செய்யும் நோக்கில் நாடு ஒரு கிலோ 55ஃ-

      ரூபாவுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

      Posted in Uncategorized

      இன்று நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்,

      இன்று நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்,

      அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

      பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின்
      ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

      நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை

      முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட

      அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்

      நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக்
      கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

      சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச்

      செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

      சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

      50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் இம்முறை சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

      இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெல் அறுவடையில் 200,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு

      செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு தேவையான 10,400 மில்லியன் ரூபாவை அரச வங்கிகள் ஊடாக நெல் சந்தைப்படுத்தும்

      சபைக்கு வழங்குவதற்கு திறைசேரியினால் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக புதிய

      அரசாங்கத்தினால் கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட 50 ரூபா

      விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன் இம்முறை சிறுபோகத்தில் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை

      கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதிலும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

      முன்னைய வருட சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் சம்பா அரிசி நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

      புதிய அரசாங்கம் நெல்லை கொள்வனவுசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நெல்லுக்காக 50 ரூபா உறுதி

      செய்யப்பட்ட விலையின் கீழ் மொத்த அறுவடையையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.