Posted in உலக செய்திகள்

ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .

இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .

அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .

இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது

    பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது

    இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .

    எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.

    பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

    இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
    மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

      Posted in இலங்கை செய்திகள்

      பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

      பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

      தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

      சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்

      அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

      குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி

      உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

      சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது
        Posted in இலங்கை செய்திகள்

        பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது

        பெண் எம்பி வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது

        இலங்கையின் MP Kokila Harshani Gunawardena’s எம்பியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .

        இருபத்தி ஐந்து வயதுடைய, வாலிபர் ஒருவர் ,இந்த எம்பியின் வீட்டுக்குள், நுழைய முன்றபோது ,காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்.

        இந்த வாலிபர் ஏன் .இந்த எம்பியின் வீட்டுக்குள். நுழைய முயன்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

        வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றது .

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது

          வெளிநாடு செல்ல முயன்ற10 பேர் கைது

          இலங்கையில் இருந்து காடல் வழியாக வெளிநாடு செல்ல தயராகி கொண்டிருந்த 10 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

          ஆபத்தான கடல் வழியாக , வெளிநாட்டுக்கு இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

          அவ்வாறு , தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து ,படகு மூலம் ,வெளிநாடு ,செல்ல தயாராகி கொண்டிருந்த வேளை இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

          கைதானவர்கள் ,கடற்படை விசாரணைகளின் பின்னர் .,காவல்துறையிடம் பார்ப்படுத்த பட்டுள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி

            கொக்கைனுடன் போலந்து நாட்டவர கைது இதன் பெறுமதி 24.5 கோடி

            சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

            இவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

            அத்துடன், குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

              துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

              இலங்கையில் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுப்பாக்கியுடன் கைது செய்ய பட்டுள்ளார்.

              இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து சிறியரக துப்பாககி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன .


              கைதானவர் பொலிஸ் அதிகாரி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்.

              துப்பாக்கி வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது செய்ய பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

              குறித்த பொலிஸ் அதிகாரி சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன் படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                Posted in இலங்கை செய்திகள்

                மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

                மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

                அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம்

                விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                அத்துடன் ஜுலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

                மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது

                குறித்த சந்தேக நபர் கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் எனவும், அவர் (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                இதேவேளை,இன்னுமொரு நபர் பொதுமக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

                இவர் ஜூலை 09ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்

                மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்
                கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

                  யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

                  யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட

                  குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்று (04) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

                  புங்குடுதீவு 09 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி

                  ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.

                  தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.

                  யாழில் நாயை அடித்து கொன்ற இருவர் கைது

                  இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                  அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                  அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ,


                  அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு

                    யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு

                    இலங்கை .யாழ்ப்பாணம் ; வட்டுக்கோட்டை பகுதியில் வாள்களுடன் நடமாடிய திருடர்கள் மக்களினால் பிடிக்க பட்டனர் .

                    வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது அவர்களை கண்ணுற்ற மக்கள் அவர்களை துரத்தினர்.

                    இதன் பொழுதே ,அவர்கள் தப்பிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது .

                    அவ்வேளை வாள்களை போட்டு இருவர் தப்பித்து ஓடியுள்ளனர் .

                    ஒருவர் மக்களினால் பிடிக்க பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது

                      காவல்துறையால் அப்பாவி மக்கள் 13 பேர் கைது

                      இலங்கை ; இலங்கையில் எரிபொருள் பெற்றிட எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நின்ற 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      இவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      மக்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்படுத்தி அமைதியின்மை விளைவித்தனர் என்கின்ற குற்ற சாட்டில் இந்த அப்பாவி மக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

                        கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது

                        இலங்கை ,யாழ்ப்பாணம், – கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உளவு இயந்திரம் மூலம் மணலை ஏற்றியவர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர் .

                        கொடி காமம் பகுதியியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் மணல்

                        ஏற்றியவர் இருவரை கைது செய்ததுடன் உளவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

                        மேலும் இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

                          கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

                          இலங்கை ,கொழும்பு ; உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமிழினப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவினை சிங்கப்பூர் அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முனைப்பு தற்போது பல முனைகளில் இருந்து வலுப்பெற்றுள்ளது.


                          இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப

                          அழைக்க ஏற்பாடுகளை சிறிலங்கா அரசு செய்ய வேண்டும் என சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா கோரியுள்ளார்.


                          கோத்தபாயாவை இலக்கு வைத்து வெளிநாடுகளில் சட்டரீதியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ள

                          அவர், கோத்தபாயா மீது ஆதரமாற்ற போர்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அவருக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி மனோகர டி.சில்வா தெரிவித்துள்ளார்.


                          கோட்டபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ்

                          பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது.

                          கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

                          தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.


                          இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

                          குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


                          சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த

                          நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு

                          சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது.

                          வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.


                          இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலுவாக முன்வைத்திருந்தது.


                          சிங்கப்பூர் தூதரகங்கள் முன்னால் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நா.தமிழீழ அரசாங்கம், சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி கையெழுத்து போராட்டத்தினையும் தொடங்கியிருந்தது.


                          நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முனைப்பு விரிவாக்கம் பெற்று, தற்போது தென்னாபிரிக்காவினை தளமாக கொண்டு இயங்கும் ஜஸ்மின்

                          சுக்கா அவர்களது தலைமையில் இயங்கும் உண்மை மற்றும் நீதித்திட்டம் அமைப்பு, உரிமைகள் குழு மற்றும் பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின்

                          நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் உட்பட பல

                          தரப்பினரும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.


                          இதுவே சிறிலங்கா ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி.சில்வா அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

                            இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி: இலங்கையர்கள் உட்பட 15 பேர் கைது

                            இந்திய கடவுச்சீட்டு பெறுவதில் மோசடி தொடர்பாக இலங்கையர்கள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            இலங்கை பிரஜைகளை உள்ளடக்கிய கடவுச்சீட்டு மோசடி தொடர்பான விசாரணையில் இந்திய பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு அதிகாரிகள் உட்பட

                            41 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் தமிழக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

                            மேலும் இலங்கை பிரஜைகள் சிலர் வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டுகளை பெற முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தமிழ்நாடு

                            காவல்துறையின் கியூ பிராஞ்ச் மதுரை பிரிவு விசாரணை நடத்தி வந்ததாகவும் இது தொடர்பாக 2019 செப்டம்பரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                            போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவு சீட்டினை வாங்கியது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 போலிஸ் அதிகாரிகள், 14 கடவுசீ‌ட்டு

                            அதிகாரிகள், 2 தபால் துறை ஊழியர்கள் உள்பட 41 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

                            குறித்த வழக்கு தொடர்பாக மொத்தம் 15 பேர் (நான்கு இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள்) இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
                            இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காவல் உதவி ஆணையாளர்

                            (உளவுத்துறை) மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியர் இந்த ஆண்டு மே மாதம் ஒப்புதல் அளித்த நிலையில், அந்தந்த திணைக்கள

                            ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் அஞ்சல் துறைகள் தமது அனுமதியினை வழங்கி உள்ளது.


                            அதனை தொடர்ந்து 2021 டிசம்பரில் 14 கடவுச்சீட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில்,

                            இதுவரையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும், கியூ பிராஞ்ச் விசாரணை முடிந்து 41 பேருக்கு எதிரான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


                            விசாரணையில், 124 கடவுச்சீட்டுகளை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் 51 பேர் இந்திய கடவுச்சீட்டினைபெற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

                            மொத்த 175 கடவுச்சீட்டுக்களில் 28 இலங்கைத் தமிழர்களால் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டினை பெற்றுள்ளதாக இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

                            மேலும் 30 கடவுச்சீட்டுகள் நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு


                            வருகிறது எனவும் மீதமுள்ள 117 பேரில் 116 பேர் இந்திய நாட்டினரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

                              இலங்கை ,நீர்கொழும்பு ;கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

                              இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து ரெலோர் மீன்பிடி படகு மூலம் வெளிநாடு சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர் .

                              இதன் பொழுது அந்த படகில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர் .

                              இவ்வாறு கைதானவர்களில் ஐந்து பெண்கள் ஒன்பது சிறுவர்கள் 19 ஆண்கள் உள்ளடங்களாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

                              கைதான அனைவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

                              இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் கைது

                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

                              இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா நோக்கி தமிழர்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.

                              அவுஸ்ரேலியாவுக்குள் கடல்வழியாக நுழையும் மக்களை அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றது.

                              அவ்வாறு இருந்தும் தொடராக இலங்கைக்கு அகதிகள் இவ்விதமான ஆபத்தான கடல்வழியூடாக பயணித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                              கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
                                Posted in பிரித்தானிய செய்தி

                                லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                                லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                                லண்டன் Elfirda Close பகுதியில் வீட்டுக்குள் வைத்து முப்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் .

                                பலமான கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

                                லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது
                                லண்டனில் இளம் பெண் குற்றி கொலை இருவர் கைது

                                இந்த பெண் கொலை குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் முப்பது வயதான ஆணும் இருபது வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர் .

                                இருபது வயது பெண் இந்த பெண்ணை குற்றி கொலை புரிந்திட உதவினார் என்ற குற்றத்தில் கைது செய்ய பட்டுள்ளார்.

                                கைதானவர்கள் ஆண் பெண் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


                                லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது

                                  அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை

                                  இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

                                  கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .

                                  அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .

                                  அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

                                  இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                                  அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

                                  அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.

                                  இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

                                  தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

                                    இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

                                    இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.

                                    இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                    இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .

                                    கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

                                    இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

                                    இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                                    இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

                                    இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்

                                    ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்

                                    இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை

                                    ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது

                                    ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

                                    இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

                                    இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

                                    இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
                                    வருகினற்னர் ,

                                    அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
                                    உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்

                                    ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.

                                    Posted in உலக செய்திகள்

                                    பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

                                    பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

                                    ஆபிரிக்கா நாட்டில் சுரங்க பணி மற்றும் கணனி தொழில் நுட்பம் தொடர்பான நிறுவனத்தை ஆரம்பித்து

                                    தென் ஆப்பிரிக்காவில் 1,3 மில்லியன் பணத்தை ஆட்டையை போட்ட இரண்டு இந்திய செல்வந்தர்கள் சர்வதேச போலீசாரின்சிவப்பு பிடி விராந்தின் ஊடாக துபாயில் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    ஆப்பிரிக்காவில் பெரும் நிறுவனத்தை நடத்தி வந்த இவர்கள் அங்கு அந்த நாட்டின் அதிபருடன் இணைந்து லஞ்சம் மற்றும் ஊழல் மோசடி புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது

                                    இந்த இரு இந்தியா செல்வந்தர்களும் சகோதரர்கள் ஆவர்கள், குப்தா சகோதரர்கள் என இவர்கள் அழைக்க படுகின்றனர்

                                    மக்களின் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் கைது செய்ய பட்ட இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்

                                    இவர்கள் ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்த பட்டு அங்கு வைத்து விசாரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது ,


                                    இந்தியா தொழில் அதிபர்கள் என்றாலே மோசடிக்காரர்கள் என்ற நிலையில் அகில பரப்பில் அண்மைய காலங்களாக வெளிவரும் செய்திகள் ஊடாக காண முடிகிறது

                                    1993 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நிறுவனம் வைத்து நடத்தி மக்கள் பணம் மோசடி மற்றும் அரச பணத்தை மோசடி செய்துள்ள குற்ற சாட்டு இவர்கள் மீது விதிக்க பட்டுள்ளது

                                    பண மோசடி இரு இந்தியா செல்வந்தர்கள் கைது

                                    பண மோசடி புரிந்த குப்தா சகோதர்கள் நீண்ட நாட்களாக சர்வதேச போலீசார் சிவப்பு தேடுதல் பட்டியலில் இணைக்க பட்டு தேட பட்டு வந்த இவர்கள் டுபாயில் டுபாய் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    இலங்கையில் மகிந்த ராஜக்சே குடும்பமும் அவரது தோழமைகளும் பல மில்லியன் டொலர்களை பணம் கொள்ளையடித்துள்ளனர்

                                    அவர்களும் இவ்விதம் கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது
                                    குப்தா சகோதர்கள் பண மோசடி கைது போராட்ட காரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

                                    இவர்களது நீதிமன்ற பண மோசடி விசாரணைகள் திறந்த வெளி மக்கள் அரங்கின் முன்பாக நிகழ்த்த பட வேண்டும் என்பதும் மக்களின் கருத்தாக பதிய பெறுகிறது

                                    சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி பண மோசடி புரிந்த இரு இந்தியா செல்வந்தர்கள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது