Tag: கைது
பொலிஸ் வேட்டை 75 பேர் கைது
பொலிஸ் வேட்டை 75 பேர் கைது
இலங்கை மேல்மாகாணத்தில் பொலிஸார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையின் பொழுது 75 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட ,75 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
122 மாணவர்களுக்கு இடையில் நடத்த பட்ட தேடுதலின் பொழுதே இந்த ,கைதுகள் இடம்பெற்றுள்ளன என்கிறது காவல்துறை .
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அந்த பிரதேச சபையின் உறுப்பினருக்கும் முறைப்பாட்டாளராக பெண்ணுக்கும் இடையில், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அண்மையில் உள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, தூசன வார்த்தைகளால் ஏசிவிட்டு, சாரத்தை தூக்கி காண்பித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார்,
அந்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது
பிரிட்டனில் தீவிரவாதிகள் கைது
பிரிட்டனில் மிக பெரும் நாசகார தாக்குதலை நடத்தும் முகமாக செயல் பட்ட தீவிரவாதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .
இவர்களில் அதிகமானவர்கள் ஆசிய மற்றும் வெளிநாடடை சேர்ந்தவர்கள் என்கிறது அரசு .
மேலும் 190 பேர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என கணடறிய பட்டுள்ளது .
இந்த தீவிரவாத தாக்குதல்களை தடுத்திட அரசு, ஆண்டு தோறும் பல மில்லியன் பவுண்டுகளை செல்வது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கையின் முக்கிய பகுதிகளில் வசிக்கும் வறுமையியல் வாடும் குடும்பங்களுக்கு ஆசை வார்த்தை காண்பித்து ,சிறுநீரகத்தை பெற்று ,கள்ள சந்தையில் விற்று வந்த முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
150 லட்சம் அவரைக்கு ஒரு சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் யாவரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை ,திருட்டில் ஈடுபட்டமை ,மக்களை அச்சுறுத்தியமை ,வீடுகளை உடைத்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்ட நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர் ,
சுருங்க கூறின் ஆறு ரவுடிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
வீடுகள் முற்றுகை இருவர் கைது
வீடுகள் முற்றுகை இருவர் கைது
மட்டக்களப்பு – புதூர் பகுதியில் இரண்டு வீடுகளில் கசிப்பு விற்பனை இடம்பெற்ற நிலையில் இன்று அதிகாலை குறித்த வீடுகள்
முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகர் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடுப்பதற்கு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர்ப்பகுதியில் இரண்டு இடங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின்
போதையொழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டது.
இதன்போது ஒரு வீட்டிலிருந்து 40,000மில்லி லீற்றர் கசிப்பும் இன்னுமொரு வீட்டிலிருந்து 10,000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2. ஆயுதங்களுடன் சிலர் கைது
இன்று மதியம் 12.46 மணியளவில் ,லண்டன் Heathrow விமான நிலைய Terminal 2, வைத்து இருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப் பட்டுள்ளனர் .
Heathrow விமான நிலைய Terminal 2 இல் சோதனைக்கு நிறுத்தாமல் சென்ற காரினை காவல்துறையினர் துரத்திய பொழுதே மேற்படி நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதான இருவரும் மேற்கு லண்டன் காவல்துறை நிலையத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இது தீவிரவாத தொடர்பு பட்ட சம்பவமா என தெரியவரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26
வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது
வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்தியவர் கைது
இலங்கையில் இருந்து ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை கடத்தி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் தற்பொழுது கைது செய்ய பட்டுள்ளார் .
இவ்வாறு கைதானவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
மேலும் 91 க்கு மேற்பட்ட பெண்கள் வதைகளிற்கு உள்ளான நிலையில் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
பொலிசார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன .
இவர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை ,குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .
கைதானவர்களிடம் இருந்து பணம் ,போதை பொருட்கள் .கத்திகள் ஆயுதங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது என்கிறது விசேட காவல்துறை வேட்டை பிரிவினர் .
மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
மனிதர்களை டுபாய் மற்றும் ஓமானில் இருந்து கடத்தி செயல்பட்ட முகவர் ஒருவர் இலங்கை வந்தடைந்த பொழுது கைது செய்ய பட்டுள்ளார் .
மோனல் 90 க்கு மேற்பட்ட பெண்கள் தடுத்து வைக்க பட்ட கொடுமை படுத்த பட்டு வருகின்றனர் .
இந்த பெண்களை ,இலங்கையில் இருந்து நயமாக பேசி இவர்களே கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக, கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
காவல்துறை சுற்றிவளைப்பு பலர் கைது
காவல்துறை சுற்றிவளைப்பு பலர் கைது
கல்கிஸை, படோவிடவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் ஏனைய 14 சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி
கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் மோதச் செய்ததாக கூறப்படும் கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவவ பிரதேசத்தின் போதிருக்காராம விகாரையின் 29 வயதுடைய தேரர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விகாரையில் இந்த தேரர் மாத்திரமே தங்கியுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது
இவர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றி அதிலிருந்து விலகியதன் பின்னர் பிக்குவாக மாறியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தேரர் மற்றும் குறித்த விகாரையில் உள்ள உதவியாளர் உட்பட நால்வர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இலக்கம் 43/A, டயஸ் வத்த, மல்வான, வாரியபொல என்ற முகவரியில் வசித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.பி. சுனில் (12601) என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிகாரியின் தலையில் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது
ஈராக்கில் ஐ எஸ் தீவிரவாத தலைவர் கைது
ஈராக் கிக்கிருத் பகுதியில் ஈராக்கிய அரச இராணுவத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது ,ஐ எஸ் அமைப்பை சேர்த்த முக்கிய குழு தலைவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற ,இரகசிய தகவலை அடுத்து ,குறித்த தளபதி கைது செய்யப் பட்டுள்ள்ளார் .
ஈராக்கிய இராணுவத்தினர் மீது தொடர்ச்சியான குண்டு தாக்குதல்களை ,ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறன கால பகுதியில் ,அந்த குழுவை தலைமை ஏற்று வழி நடாத்தி தாக்குதலில் ஈடுபட்ட, முக்கிய தளபதியே கைது செய்யப்பட்டுள்ளதாக ,ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
இலங்கை வெல்லாம் பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க பட்ட வாள்கள் ,கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களினால் பதுக்கி வைக்க பட்ட ,கொடிய கூரிய ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,குறித்த வீடு சுற்றிவளைக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .
குறித்த குழுவினர் ,கொள்ளை மற்றும் ,சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுவதால் ,உரிய முறை கவனிப்புடன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கைது
இலங்கை பேராதனை பகுதியில் வாடகைக்கு வீடு அமர்த்தி செல்லும் போர்வையில் சென்ற நபர்கள் ,பெண்ணை கட்டி வைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .
இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ,17 வயது முதல் ஐம்பது வயதானவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
கொள்ளையடிக்க பட்ட நகைகள் அரைவாசி விற்றும் ,அரைவாசி அடகு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது .
கைதானவர்கள் யாவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
நாள்தோறும் தொடரும் கொள்ளைகள் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது
223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது
இலங்கை தம்புதேமாவில் 223 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட பயணித்த வர்த்தகர் ஒருவரை பின்தொடர்ந்த இரு கொள்ளையர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .
அவ்விடத்தில் காணப்பட்ட காவல்துறை சார்யன்ட் ஒருவர் ,கொள்ளையர்களை விரட்டி பிடித்துள்ளார்
இந்த காவல் துறை அதிகாரியின் செயல் மக்களினால் பாராட்ட பெறுவதுடன் ,மூத்த காவல்துறை அதிகாரிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் .
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ,கோத்தபாயாவின் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் என கணடறிய பட்டுள்ளது .
துணிகர கொள்ளையை நடத்திய திருடர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையாகி 10 பேர் பலியாகியும் , 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளனர் .
1995 ஆண்டு இலங்கை இராணுவத்திடம் யாழ்ப்பாணம் வீழ்ந்த பின்னர் ,.யாழ்ப்பாணம் முற்றாக போதையின் தலை நகராக மாற்றம் பெற்றுள்ளது .
சமூக சீர்கேடுகள் மற்றும் போதைக்கு அடிமையான வாலிபர்கள் உருவாக்க பட்டுள்ளனர் .
இதுவே இந்த மரணத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது .
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கைது
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர்கைது
இந்தியா செல்ல முயன்ற எட்டு பேர் கடல் படையல் கைது செய்யப்பட்டு .காவல்துறையிடம் ஒப்படைக்க பட்டுள்ளனர் .
தலை மன்னர் கடல் வழியாக இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்ற பொழுது ,கடல் படையால் கைது செய்ய பட்டனர் .
இவ்வாறு கைதானவர்கள் தற்போது நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக, இலங்கையில் இருந்து ,இந்தியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக போராட்டத்த்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இவ்வாறு காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை ,உடனடியாக விடுதலை செய்திடும் படி ,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுதல் விடுத்துள்ளார் .
சஜித் பிரேமதசா கோரிக்கையை அடுத்து ,கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய ,போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
மக்கள் போராட்டங்களை அடக்கிட ,மக்களை மிரட்டும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .




































