இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

Spread the love

இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்

ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்

இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை

ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது

ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,

இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
வருகினற்னர் ,

அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்

ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.

Leave a Reply