Posted in Uncategorized

கமாஸ் தாக்குத்தல் எதிரொலி – இஸ்ரேல் ஆட்சி கவிழ்ப்பு

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.

இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் – அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க முடிவு

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. 4 முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி பெற்ற போதிலும் ஆட்சி

அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில்

புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது.

வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாததால் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர

வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. இப்படிப் பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில் 2-வது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. எனவே அவரை பிரதமராக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் அங்கு கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பில் அதிக கொரனோ நோயாளிகள்

இலங்கையில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 608 ஆகும்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திலிருந்து 547 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 447 பேரும், காலி மாவட்டத்திலிருந்து 143 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 136 பேரும், கண்டி

மாவட்டத்திலிருந்து 108 பேரும், குருநாகல் மாவட்டத்திலிருந்து 99 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 82 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 76 பேரும், இரத்தினபுரி

மாவட்டத்திலிருந்து 78 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 57 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 56 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 50 பேரும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 46 பேரும் நேற்றையதினம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பதுளை மாவட்டத்திலிருந்து 43 பேரும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 40 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 42 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 39 பேரும், முல்லைத்தீவு

மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தலா 31 பேர் வீதமும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 29 பேரும், நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து 22 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 17 பேரும், மாத்தளை மாவட்டத்திலிருந்து 14 பேரும், மன்னார் மாவட்டத்திலிருந்து 8 பேரும் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 10 பேரும் நேற்றையதினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

பொலிசாரின் விடுமுறை இரத்து

பொலிசாரின் விடுமுறை இரத்து

பொலிசாரின் விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி (ஜூன் 15) வரை இரத்துச் செய்வதற்கு

தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசு தொற்று பரவல் நிலைமையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையை கடந்த 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை ரத்து செய்ய நடவடிக்கை

எடுக்கப்பட்டது. தொடர்ந்தும் பயண கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதால் பொலிசாரின்

விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Posted in Uncategorized

14 துப்பாக்கிகள்-2,400 தோட்டாக்கள் காணவில்லை – விசாரணை ஆரம்பம்


14 துப்பாக்கிகள்-2,400 தோட்டாக்கள் காணவில்லை – விசாரணை ஆரம்பம்

இலங்கை காலி கடல்பகுதியில் இந்தோனேசிய கப்பல் ஒன்றுக்கு ஏற்றி செல்ல எடுத்த செல்ல பட்ட

ஆயுதங்களில் 14 துப்பாக்கிகள் மற்றும் 2,400 தோட்டாக்கள் என்பன கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாம்

அதனால் ,அது தொடர்பான விசாணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

இந்த ஆயுத விற்பனையில் ஈடுபடுவது வேறு யாருமில்லை ,இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டா தான்

    Posted in Uncategorized

    பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

    பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

    இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

    இவர் படுகொலை செய்ய பட்டு அந்த பாலத்தின் வாய்களுக்குள் வீச பட்டுள்ளார்

    இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in Uncategorized

      அமெரிக்காவில் பார்ட்டியில் துப்பாக்கி சூடு -3 பேர் மரணம் -20 பேர் காயம்

      அமெரிக்காவில் பார்ட்டியில் துப்பாக்கி சூடு -3 பேர் மரணம் -20 பேர் காயம்

      அமெரிக்கா மியாமி பகுதியில், பாட்டி நிகழ்வு ஒன்றுக்குள், காரில் வந்த ஆயுததாரிகள்


      நடத்தி திடீர் துப்பாக்கி சூட்டில் சம்பவ இதில் மூவர் பலியாகினர் ,மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

      இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய காரணம் ஏன் என தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

        Posted in Uncategorized

        ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்

        ஆப்கானில் குண்டு வெடிப்பு – 28 பேர் காயம்

        ஆப்கான் பகுதியில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதல் சிக்கி இருபத்தி எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்

        தாலிபான்களுக்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        இதேவேளை தாலிபான்களின் உளவுத்துறை தளபதி அரச இராணுவத்தின் விமான தாக்குதல்

        மூலம் படுகொலை செய்யப்பட்டுளள்ளார் ,இவருடன் மேலும் முக்கிய 11 பேர் பலியாகியுள்ளதாக அரச இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

          Posted in Uncategorized

          பயணிகளுடன் வீழ்ந்து சிதறிய விமானம் – அனைவரும் மரணம்

          பயணிகளுடன் வீழ்ந்து சிதறிய விமானம் – அனைவரும் மரணம்

          அமெரிக்காவில் பயணிகளை காவியபடி பயணித்த இலகுரக ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி சிதறியது ,இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்

          இந்த விமான விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

          அமெரிக்காவில் இவ்விதமான விமான விபத்துக்கள் அதிகமாக இடம் பெற்று வருகிறது ,இது சதி செயலா என்றே சந்தேகத்தை அதிகமாகியுள்ளது

          தனியார் முதலாளிகளே இவ்விதமான விமானங்களை அதிகம் பயன் படுத்தி வருகின்றனை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            கனடாவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்

            கனடாவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – நால்வர் காயம்

            கனடா Toronto பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ,சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் ,மேலும் நல்லவர் படு காயமடைந்துள்ளனர்

            ஆயுத தாரி தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

            இந்த தாக்குதலுக்குரிய காரணம் இதுவரை தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்

              சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்

              சமூக வலைதளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, பாடகி சின்மயி சொல்வது பொய் என்று பதிவிட்டுள்ளார்.

              சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்
              மதன் கார்க்கி, சின்மயி


              கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயி, சமீபத்தில் அவருக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

              இதனிடையே நெட்டிசன் ஒருவர் சின்மயியிடம், ஏன் வைரமுத்துவை உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள் என புகைப்படத்தை வெளியிட்டு கேள்வி

              எழுப்பினார். இதற்கு பதிலளித்த சின்மயி, கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணுனதே அவர் மகன் தான் என பதிலளித்தார்.

              சின்மயி அளித்த பதில் குறித்து வைரமுத்துவின் மகனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மதன் கார்க்கி கூறியதாவது: “இது மேலும் ஒரு பொய். அவர் என் தந்தையை தன்

              திருமணத்திற்கு அழைக்க விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால், அபாயின்ட்மென்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.

              அதனால் அவரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நானும் வாங்கிக் கொடுத்தேன். அவரின் வீட்டிற்கு சின்மயி தனியாக சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசி வாங்கி, திருமணத்திற்கு வரவேற்றதாக” மதன் கார்க்கி கூறினார்.

                Posted in Uncategorized

                காற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டு பிடிப்பு

                காற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டு பிடிப்பு

                பரவி வரும் கொரனோ நோயின் குடும்பத்தை சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று வியட்நாமில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                இவை ,இந்தியா பிரித்தானியாவில் பரவி வரும் நோயினுடையது என தெரிவிக்க பட்டுள்ளது

                காற்றில் கலந்து உயிரினங்களுக்கு வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது

                முகக் கவசம் இன்றி மக்கள் நடமாட முடியாத சூழலை இந்த நோய்களின் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது கவலை தருகிறது

                  Posted in Uncategorized

                  கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்

                  கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்

                  இன்று காலை இரத்தினபுரி பகுதியில் இருந்து தேயிலை தோட்ட பணியாளர்களை ஏற்றிய

                  வண்ணம் புறப்பட்ட பேருந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து விபத்தில் சிக்கியததில் அந்த பேரூந்து கவிழ்ந்தது

                  இதன் பொழுது அதில் பயணித்த சுமார் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                  காயமடைந்தவர்கள் அனைவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                  மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                    Posted in Uncategorized

                    இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி

                    இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி

                    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
                    கடந்த தினம் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர்

                    இலங்கையில் இடம் பெற்ற மரணங்களில் இதுவே அதிக எண்ணிகையிலாக பதிவாகியுள்ளது

                    இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,405 ஆக பதிவாகியுள்ளது

                      Posted in Uncategorized

                      குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி video

                      குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி video

                      தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்

                      ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

                      சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

                      தினமும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

                      ஷிவானி

                      அந்தவகையில் தற்போது, நடிகை ஷிவானி, ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரீல்ஸ் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘லாக்டவுன்ல ரொம்ப போர்

                      அடிக்குது, சரி நம்மளும் ஒரு ரீல்ஸ போடுவோம்’ என அந்த பதிவில் ஷிவானி குறிப்பிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த ரீல்ஸ் வீடியோவை, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக ஷிவானி தெரிவித்துள்ளார்

                      https://www.instagram.com/p/CPc-vXinmtC/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
                        Posted in Uncategorized

                        200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்

                        200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்

                        அமெரிக்கா கலிபோனியா பகுதியில் போக்குவரத்து சேவை புரியும் நபர் ஒருவர் கொரனோ உயிர்

                        காக்கும் கருவியான ventilators களை திருடி சர்வதேச நாடுகளுக்கு விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

                        இவரினால் இதுவரை 200 கருவிகள் திருட பட்டு மூன்று மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளது

                        அமெரிக்கா, எப் பீ ஐ ,உளவுத்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர் சிக்கியுள்ளார்

                        மேற்படி விடயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                        Posted in Uncategorized

                        சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை

                        சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை

                        சோமாலிய அரச இராணுவத்தினர் நடத்தியா திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் சிக்கி al-Shabaab அமைப்பே சேர்ந்த 38 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                        மேற்படி தீவிரவாத குழுவினரால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வரும் நிலையில் ,இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

                        எனினும் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்த கூடு என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in Uncategorized

                          ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

                          ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

                          எமன் நட்டு இராணுவத்தினர் நடத்தி வரும் கடும் போரில் சவுதியை இராணுவம் ,மற்றும் , ஆதரவு படைகள் வசம் இருந்த மிக முக்கிய பத்து பகுதிகள் மீட்க பட்டுள்ளன

                          இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலையும் அடங்கும் என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                          தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகிறது ,இதில் 80 சவுதியை படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்

                            கார் குண்டு தாக்குதல் -சிதறிய மினிபஸ்- 13 பேர் மரணம்

                            ஆப்கானிஸ்தான் Parwan மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 13 பேர் பலியாகியுள்ளனர்

                            பொலிசாரை இலக்கு வைக்க பட்ட தாக்குதலில் இந்த மினிபஸ் சிக்கி சிதறியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                            எனினும் முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                              Posted in Uncategorized

                              அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                              உலக

                              அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                              அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஒன்றாக வேலை பார்த்த நபர் ஒருவர் தனது சக

                              தொழிலாளிகளை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்
                              இதில் 11 பேர் மரணமாகியுள்ளனர்

                              இவ்வாறு பலியானவர்களில் இந்திய சீக்கியர் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உள்ளடக்க படுகின்றனர்

                              துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ,தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் ,இந்த

                              படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in Uncategorized

                                நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா VIDEO

                                நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா

                                பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

                                சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

                                இந்நிலையில் தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

                                செல்லமாக தான் வளர்த்து வரும் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, அதை நாய்க்கு ஊட்டு

                                ம் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

                                https://www.instagram.com/p/CPalGusDuEJ/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again