Tag: ஆண்ட்ரியா
ஆட மறுத்த ஆண்ட்ரியா- ஆட்டி வைத்த ரசிகர்கள்
ஆட மறுத்த ஆண்ட்ரியா- ஆட்டி வைத்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவை ரசிகர்கள் நடனம் ஆட சொன்னதால் அவர் மறுத்து இருக்கிறார்.
ஆட மறுத்த ஆண்ட்ரியா… ரகளை செய்த ரசிகர்கள்
ஆண்ட்ரியா
சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும், பின்னணி
பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். மேடைக்கு அருகில் ஆண்ட்ரியாவை
காண ரசிகர்கள் முந்திக்கண்டு மேலே ஏற முற்பட்டதால் போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்ட்ரியா
பின்னர் பிரபல சினிமா பாடல்களை நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்தியதால் ஆண்ட்ரியா கோபமாகி அமைதியாக நின்றார்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ரியா செய்த காரியம்
ஆண்ட்ரியா செய்த காரியம்
நடிகை, பாடகி என பண்முகம் கொண்ட நடிகை ஆண்டியா செய்த காரியத்தால் அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஆண்ட்ரியா செய்த காரியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
ஆண்ட்ரியா
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா,
விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல்
கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த
தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “இன்று ஒரு நல்ல
செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று
இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர்
, தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா
இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும்
புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா
நிர்வாணமாக நடித்து ஆச்சர்யப்பட வைத்த ஆண்ட்ரியா
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார்
. மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து
முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர்.
ஆண்ட்ரியா
தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.
நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா
நாயை வைத்து செய்யும் ஆண்ட்ரியா.
தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.
அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா,
கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து
உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர்.
நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “
கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி.
தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்
நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
தமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
நடிகை ஆண்ட்ரியா
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா
நிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா
அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: –
நடிகை ஆண்ட்ரியா
‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.
நானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை
நடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்







