Posted in Uncategorized

ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

ஆயுதங்களை மக்கள் பார்வைக்கு வைத்த தலிபான்கள் – வீடியோ

ஆப்கனிஸ்தான் நாட்டில் தலிபான் போராளிகள் அந்த நாட்டை முழுமையாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்


அரச இராணுவத்தினர் பாவித்து வந்த விமானங்கள் , உலங்குவானூர்திகள் டாங்கிகள் என முதல்தர ஆயுதங்களை மீட்ட அவர்கள் அதில் சிலவற்றை மக்கள் பாவனைக்கு காட்சி படுத்தினர்

தற்போது அந்த காட்சிகள் உலகளாவிய ரீதியில் வைரலாகி வருவதுடன் பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது

click here video

    Posted in Uncategorized

    நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி

    நியுசுலாந்தில் மக்களை குத்தி கொன்ற இலங்கை பயங்கரவாதி

    நியூலாந்தில் பத்து வருடங்களாக வசித்து வந்த இலங்கையர் ஒருவர் பத்து பேரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்

    இவர் ஐ எஸ் தீவிரவாதிகளின் போதனைகளால் ஈர்க்க பட்டு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளதுடன் ,இவர் தொடர்ந்து போலீஸ்

    கண்காணிப்பில் உள்ளாக்க பட்டு வந்தவர் எனவும் அவ்விதமான நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    இவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,சூப்பர் மரக்கட்டுக்கு வந்த அப்பாவி மக்களையே இந்த கொடூரன் குத்தியுள்ளான்

    ஒரு நபர் புரிந்த செயலினால் ஒட்டு மொத்த இலங்கையருக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      முல்லைத்தீவில் கொரனோ சுடலை – அதிகரிக்கும் மரணம்

      முல்லைத்தீவில் கொரனோ சுடலை – அதிகரிக்கும் மரணம்

      முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

      சடலங்களை தகனம் செய்வதற்கான ஒரு இடம் அமையவேண்டுமென்ற மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் திட்டமிடலின் கீழ் அவரது தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்

      ம.உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர்

      முதற்கட்டமாக கூட்டு கள ஆய்வினை மேற்கொண்டு இடத்தினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

      கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்து காணப்படுவதால்

      முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவட்ட மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

      தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் கயட்டை காட்டிற்கு அருகில் வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் 06 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்வதாகவும் முதற்கட்டமாக

      ஒன்றரை ஏக்கர் வன வளத்திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தருவதாக வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

      குறித்த பகுதிக்கு அருகில் மின்சார வசதி உள்ளமையினால் சடலங்களை தகனம் செய்வதற்கு ஏற்றவகையில் மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

        Posted in Uncategorized

        ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

        ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி

        சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

        ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு

        ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி.

        ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ந் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதையொட்டி இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

        ஜோ பைடன் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தனது முக்கிய நட்பு நாடுகளை அணுகி, அவர்களது ஆதரவை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

        முதலில் ஜோ பைடன் செய்ய வேண்டியது, நமது கூட்டாளிகளுடன், அது தைவானாக இருந்தாலும், உக்ரைனாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும், ஜப்பானாக இருந்தாலும் சரி, அவர்களுடைய முதுகெலும்பாக இருப்போம் என்று மறு உறுதி செய்ய வேண்டும். நமக்கு அவர்களும் தேவை.

        இரண்டாவது, உலகமெங்கும் நாம் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியை மேற்கொள்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்த (ஆப்கானிஸ்தானில்) தார்மீக வெற்றியால் போராளிகள் மிகப்பெரிய அளவில் தங்களுக்கு ஆள் சேர்ப்பார்கள். அதை நாம் பார்க்க முடியும்.

        நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். நமது இணையதள பாதுகாப்பு, பத்திரமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் ரஷியா போன்ற நாடுகள் தொடர்ந்து நம் தளங்களில் ஊடுருவுவார்கள்.

        ஏனென்றால் நாம் மீண்டும் போராட தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

        நாம் சீனாவைப் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள இந்த தருணத்தில் சீனாவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி செய்கிறது. (இந்த விமானப்படை தளம் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.)

        சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது.

        நமக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே ஜோ பைடன் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயம், நமது கூட்டாளிகளை வலுப்படுத்துவதாகும். அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நமது ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டும்.

        சைபர் குற்றங்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

        இவ்வாறு அவர் கூறினார்.

        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

        இலங்கையில் 11,700 பொலிஸாருக்கு கொரனோ

        இலங்கையில் 11,700 பொலிஸாருக்கு கொரனோ

        கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் உள்ளக பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

        அத்துடன், 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீரசேகர கூறியுள்ளார்.

        கொரோனா காலத்தில் கூட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

        Posted in Uncategorized

        லண்டனில் புலிகளுக்கு தொடர்ந்து தடை – மகிழ்ச்சியில் இலங்கை

        லண்டனில் புலிகளுக்கு தொடர்ந்து தடை – மகிழ்ச்சியில் இலங்கை

        தமிழீழ விடுதலை புலிகளிற்கு பிரிட்டனில் தொடர்ந்து தடை விதிக்க பட்டுள்ளதாக
        இலங்கை வெளியுறவு துறை தெரிவித்துள்ளது

        பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சு தமக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாக தெரிவித்து மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

        புலிகள் மீதான தடையை நீக்கும் படி வழக்க தொடரப்பட்டு நீதிமன்றம் தடை தளர்வை அறிவித்திருந்த நிலையிழும் இந்த தடையை பிரிட்டன் தொடர்வது குறிப்பிட தக்கது

        The Government of Sri Lanka has been made aware that the UK Home Secretary has decided to maintain the proscription of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as a terrorist organization under the UK Terrorism Act No. 7 of 2000.

        The Home Secretary’s decision, which has been taken following the judgement of the Proscribed Organizations Appeals Commission (POAC), rejects the application of a LTTE front organization to de-proscribe the LTTE in the UK.

        The LTTE, therefore, remains a proscribed organization in the UK, as in over 30 other countries worldwide, including in the EU region.

        LTTE was initially proscribed in these countries due to the group’s brutality and atrocities targeting civilians and democratically elected leaders, involvement in organized crime and other criminal activities that impacted global and regional security. The continued retention of the LTTE’s proscription worldwide, is a recognition of the continued threat posed by the remnants of the group working through its international network, which continue to finance terrorist activities, radicalize youth towards violent extremism and cause ethnic disharmony and disrupt cohesive living in every country in which they are active.

        The Government of Sri Lanka is appreciative of the partnership with the UK, and all governments, in the global fight against terrorism, and remain committed to working with the UK in all efforts to mitigate terrorism and violent extremism, that threaten the lives of citizens, and endanger global and regional peace and security.

        Posted in Uncategorized

        கடற்பகுதியில் பலமான காற்று – மக்களுக்கு எச்சரிக்கை

        கடற்பகுதியில் பலமான காற்று – மக்களுக்கு எச்சரிக்கை

        இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

        அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
        2021 செப்டம்பர்03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

        மழை நிலைமை:

        நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        காற்று :

        நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

        காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

        கடல் நிலை:

        காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையானகடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும்அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

        இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

        Posted in Uncategorized

        அரிசி, சீனிக்கு நள்ளிரவிலிருந்து நிர்ணய விலை

        அரிசி, சீனிக்கு நள்ளிரவிலிருந்து நிர்ணய விலை

        இதேவேளை, பதுக்கி வைத்திருக்கும் சீனியை கண்டுபிடிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனி இன்றும்

        கண்டுபிடிக்கப்பட்டது. 22 ஆயிரத்து 597 மெற்றிக் தொன் சீனி நேற்று வரை சதொச நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அந்த சீனி

        நாடு தழுவிய ரீதியில் உள்ள சதொச களஞ்சியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும். துறைமுகத்தில் 10 ஆயிரம் மெற்றிக்

        தொன்னுக்கும் அதிகமான சீனி உள்ளது. அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே நாளை மறுதினம் நண்பகலை அடையும் போது சீனிக்கான

        பிரச்சினை முழுமையாக தீருமென சதொச நிறுவனத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

        Posted in Uncategorized

        மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டு


        மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டு

        மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது.

        சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா​ வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

        இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

        சம்பவத்தையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

        மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

        கழுத்து, காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

        மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் தாக்குதலை நடத்தியுள்ளது.

        குறித்த நபர் மீதும் அண்மையில் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில் அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

          கொரனோவுக்கு 215 பேர் மரணம்

          கொரனோவுக்கு 215 பேர் மரணம்


          கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

          115 ஆண்களும் 100 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 167 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

          அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

          நாட்டில் மேலும் 3,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

          கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,060 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 376,216 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 58,729 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

            Posted in Uncategorized

            12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்

            12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்

            ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பி.எப். தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஓக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

            பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம்

            புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019

            *ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

            புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும்.

            மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.

            *உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.

            *புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இது தவிர்த்து வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது. அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும். ஆனால் ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

            Posted in Uncategorized

            பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறிய பயணிகள் பேரூந்து – 29 பேர் மரணம்

            பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறிய பயணிகள் பேரூந்து – 29 பேர் மரணம்

            பேரூ நநாட்டில் Rimac நதியில் பயணிகள் பேரூந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறியது ,இதன்

            பொழுது அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்

            மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

              Posted in Uncategorized

              எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

              எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு

              ஈரானுக்கு விட படும் எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க தமது ஏவுகணைகள்

              எல்லையோரங்களில் தயார் நிலையில் உள்ளதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது

              அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதலை தம்மீது மேற்கொள்ள கூடும் என ஈரான் எதிர் பார்த்துள்ள வேளையிலேயே

              இந்த ஏவுகணைகள் எல்லையோரம் மற்றும் முக்கிய கேந்திர நிலைகளை சுற்றி நிறுத்த பட்டு அதி உச்ச கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு

                கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு

                அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

                குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

                தொடர்ந்து இராணுவத்தினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

                குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய பொலிசார், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

                Posted in Uncategorized

                நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்- முழங்கிய கூலிக்காரன்

                நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்- முழங்கிய கூலிக்காரன்

                நாட்டில் பிரப்பிக்கப்பட்டிருக்கும் அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ​ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான்விரும்பிய படி அவசரகால விதிமுறை​களை வகுக்கமுடியும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவற்றையெல்லாம் சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
                சென்றடையும் என்றார்.

                ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன், நாடு பூராவும் அவசரகால
                நிலைமையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் கருத்துரைக்கும் போதே, தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

                அந்த வீ​டியோ பதிவில் ​மேலும் தெரிவித்துள்ள அவர், உணவு விநியோகத்துக்கும் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் நேற்று முதல் (நேற்று முன்தினம் 30ஆம் திகதி) அவசரகால நிலைமை நாடு முழு​வது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                “நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அல்லது அதனோடிணைந்த சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும்“ என்றார்.
                இதனால்தான், பொதுமக்கள் பொதுபாதுகாப்பு சுகாதார அவசரகால
                நிலைமைகள் சட்டத்தை உருவாக்குமாறு நான் கோரியியிருந்தேன்.

                தனிநபர் பிரேரணையாக அதற்கான யோசனைகளை சமர்ப்பித்துள்ளேன். அதனை
                ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும்,
                அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

                இதனூடாக ஆபத்து உள்ளது. அதாவது ஜனாதிபதி ஆட்சியே நாட்டில் நடைபெறும். அவசரகால விதிமுறைகளை விரும்பியபடி வகுக்க முடியும் சட்டமாக்கவும் முடியும். ஆகையால், இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

                Posted in Uncategorized

                நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்

                நெல் பறிமுதல் என்ற போர்வையில், தமிழர்களை பழிவாங்கும் அரசாங்கம்

                நெல் பறிமுதல் என்ற போர்வையில், அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள்
                வடக்கு,கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கான நடவடிக்கை
                என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
                உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

                மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், நேற்று
                (31) அவரை சந்தித்து, தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.

                இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தாங்கள் விவசாயம் செய்துவரும் நிலையில், நெல்லையும் சேமித்து அதனை உரிய காலத்தில் பயன்படுத்திவரும் நிலையில், இன்று அந்த நெல்லை பறிமுதல் செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துவருவதால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

                அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியாத காரணத்தாலும் அடுத்த விவசாய செய்கைக்குத் தேவையான முளை நெல்லுக்காகவும் நெல் சேமித்துவைக்கப்படுவதாகவும் உரிய காலத்தில் நல்ல விலை கிடைக்கும்போது, அவை விற்பனை செய்யவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

                ஆனால், இன்று அவ்வாறு நெல்லை வைக்கமுடியாது என விவசாயிகளின்
                களஞ்சியங்களை முற்றுகையிடும் நுகர்வோர் அதிகார சபையினரால் அவை சீல்
                வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

                இதனையடுத்து கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, பாரியளவிலான
                நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள்
                சேமித்துவைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம்
                முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்தார்.

                “மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் விவசாயத்தை நம்பி வாழும்
                மக்கள். ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக்குள் அந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் வரும்.

                “தற்போதைய அரசாங்கம் தனது நிர்வாகத்தை சரியான முறையில் செய்யாமல்,
                தனது வேலைத்திட்டங்களை பொறுப்பற்ற வகையில் செய்து, இலங்கை
                பொருளாதாரத்தை முற்றாக அழித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில்,
                மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும்
                அழிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

                “அரசியின் விலையை அரசாங்கம் குறைக்கவேண்டுமானால், இலட்சக்கணக்கான நெல் மூடைகளை பதுக்கிவைத்துள்ள மில் உரிமையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் நெல்லை பறிமுதல் செய்யுங்கள்.

                அதனைவிடுத்து, வருடக்கணக்காக படிப்படியாக முன்னேறிவந்த அப்பாவி
                விவசாயிகளின் நெல்லை பறிக்கின்றீர்கள்.“இந்தச் செயற்பாடு, வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும் ஒரு நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்” என்றா

                ர்.

                  Posted in Uncategorized

                  பறக்கும் படை வேட்டை – 650 பேர் கைது – முடங்கிய நாடு

                  பறக்கும் படை வேட்டை – 650 பேர் கைது – முடங்கிய நாடு

                  இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர்


                  இதனால் பலத்த தடைகள் விதிக்க பட்டுள்ளது ,ஊரடங்கு உத்தரவு மீறி வெளியில் நடமாடிய சுமா

                  650 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                    Posted in Uncategorized

                    ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

                    ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

                    மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

                    ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

                    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

                    இந்த நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

                    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

                    ஓ பன்னீர்செல்வம்- விஜயலட்சுமி

                    அஞ்சலி செலுத்திய பின், மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

                    முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

                    Posted in Uncategorized

                    தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

                    தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

                    சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது

                    ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

                    இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

                    இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

                    புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,

                    • வன்னி மைந்தன்-
                      Posted in Uncategorized

                      பாகிஸ்தானில் 11 ஐஸ் தீவிரவாதிகள் படுகொலை

                      பாகிஸ்தானில் 11 ஐஸ் தீவிரவாதிகள் படுகொலை

                      பாகிஸ்தான் நாட்டில் ஐஸ் எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி 11 தீவிரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                      தொடர்ந்து அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது ,


                      தாலிபான்கள் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது தாமே என ஐ எஸ் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது