Posted in Uncategorized

லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி

லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி

லண்டனில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றுள்ளார்

.,அவ்வேளை அவரை குறித்த நபர் அவரது கையில் இரண்டு தடவை கடித்துள்ளார்

இவரது கடி காயத்தினால் பாதிக்க பட்ட சிப்பாய் சிகிச்சை பெற்றுளளர் ,மேற்படி விடயம் பெரும்

பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்

    பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்

    பாகிஸ்தான்,ஆப்கான் எல்லை பகுதியி, இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்

    மேலும் இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலை அடுத்து பாதுகாப்பு

    பலப்படுத்த பட்டுள்ளது

      Posted in Uncategorized

      சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

      சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

      அவுஸ்ரேலியா Coffs Harbour பகுதியில் நபர் ஒருவர் சுறா கடித்து பலியாகியுள்ளார்
      சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுக்கள் விரைந்த பொழுதும் அவரை காப்பற்ற முடியவில்லை

      குறித்த பகுதியில் இது போன்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        எருமையை பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகர் – அதிர்ச்சி சம்பவம்

        எருமையை பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகர் – அதிர்ச்சி சம்பவம்

        எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

        ´நான் ஈ´, ´புலி´ படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார்.

        இந்த நிலையில் அவரின் 50 நாள் பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பிறந்த நாளைக் கொண்டாடினர்.

        இந்த நிலையில் கர்நாடகம் பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான சுதீப் ரசிகர்கள் ஒன்று கூடி கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடினர்.

        அப்போது சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதைப் பலியிட்டு அந்த ரத்தத்தைக் கட் அவுட் மீது தெளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

        அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெல்லாரி நகர் காவல்துறையினர் சுதீப் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in Uncategorized

          நியூயோர்க் தாக்குதல் – ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவு!

          நியூயோர்க் தாக்குதல் – ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவு!

          நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

          இதுகுறித்து அவா் கூறியதாவது: இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினா் நடத்திய விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு நீதித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

          அந்த ஆவணங்கள் அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும்.

          இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்த 2,977 பேரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

          நியூயாா்க் நகரில் இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தினா்.

          பயணிகள் விமானங்களைக் கடத்தி அந்தக் கட்டடத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட அந்த கோரத் தாக்குதலில் 2,977 போ் உயிரிழந்தனா்.

          அந்த பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபியாவுக்குத் தொடா்பிருப்பதாக பலா் சந்தேகம் எழுப்பினா்.

          இதுதொடா்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு, ‘இரட்டை கோபுரத் தாக்குதலில் சவூதி அரேபிய அரசுக்கோ, உயரதிகாரிகளுக்கோ தொடா்பில்லை’ என்று தெரிவித்தது.

          இதன் மூலம், சவூதி அரேபிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் இரட்டை கோபுரத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக சிலா் கூறினா்.

          இதுகுறித்த முழு உண்மைகளை வெளிக் கொண்டுவர, விசாரணை அறிக்கை தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் கோரி வந்தனா்.

          இந்த நிலையில், தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்னும் சில நாள்களில் கடைபிடிக்கப்படவுள்ளதையொட்டி அதிபா் பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

          Posted in Uncategorized

          நியுசுலாந்தில் மக்களை வெட்டிய இலங்கை முசுலீம் தீவிரவாதி

          நியுசுலாந்தில் மக்களை வெட்டிய இலங்கை முசுலீம் தீவிரவாதி

          நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31

          வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

          அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

          இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

          இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

          காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முஹமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு கடைசி மகனான முஹகமது சம்சூதீன் ஆதில் பிறந்துள்ளார்.

          அவருக்கு ஒரு சகோதரியும் 2 சகோதர்கள் உள்ளனர். 4 பேரை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆதில் ஆரம்பகட கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள

          நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998 ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

          இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளான்.

          இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருகிறார். அவருடன் கனடாவிற்கு சென்று தந்தையார் குடியேறி வாழந்துவருகின்றார்.

          அதேவேளை ஒரு சகோதரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருகின்றார். அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு

          கொடுத்துள்ள தாயார்., காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள தனது வீட்டில் தாயார் வசித்துவருகின்றார்

          இந்த நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முஹமது சம்சூதீன் ஆரிப் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல்காரணமாக பொலிஸபரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

          இந்நிலையில் அவர் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை

          நியூசிலாந்து பொலிஸபர் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்துள்ளனர். இந் நிலையிலேயே அந்நாட்டு பொலிஸாரினால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

          ஆதில், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்பில், அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

          Posted in Uncategorized

          நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு

          நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு

          வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம்,

          இன்றைய தினம், நல்லூர் கோவில் உள்வீதியில் இடம்பெற்ற நிலையில், கோவில் சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

          நல்லூர் கோவில் தேர் உற்சவத்தை தரிசிக்க அடியவர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்கும் முகமாக, நல்லூர் கோவில் சூழலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

          கோவில் உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல

          அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு, கோவிலுக்கு முன்பாக பொலிஸாரின் பஸ் ஒன்று, வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு, நல்லூர் கோவில் வளாகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            கிளிநொச்சியில் கொரனோவால் 38 பேர் மரணம்

            கிளிநொச்சியில் கொரனோவால் 38 பேர் மரணம்

            கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் 38 இறந்துள்ளதுடன். 4885 தொற்றாளர்களில் 2374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

            கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,கிளிநொச்சி

            மாவட்டத்தில் 4885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2374 பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

            தொற்றுக்கு உள்ளாகிய 3691 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கோவிட் தொற்றால் 38 பேர் இறந்துள்ளனர்.

            அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.39500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது.

            கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்

              Posted in Uncategorized

              வைரஸ் வேகமாக பரவி வருவதனால் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்

              வைரஸ் வேகமாக பரவி வருவதனால் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்

              தற்போது கொவிட் வேகமாக பரவி வருவதனால், முடிந்தால் பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்.

              அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றை

              அணிவதும் மிக முக்கியம் என்று ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

              இதேவேளை, பொதுமக்கள் தடுப்பூசியின் வகையை பொருட்படுத்தாமல், நாட்டில் கிடைக்கின்ற

              ஏதாவது ஒரு வகையான தடுப்பூசியை, அருகிலுள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றிற்கு சென்று மிகவும் விரைவாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

                Posted in Uncategorized

                ஆதிவாசி தலைவரின் மனைவி மரணம்

                ஆதிவாசி தலைவரின் மனைவி மரணம்

                கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆதிவாசி தலைவரின் மனைவி “கீத் மெனிக்கே” மரணமடைந்தார்.

                  Posted in Uncategorized

                  இந்தியாவில் வருகிறது ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்

                  இந்தியாவில் வருகிறது ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்

                  ஒரு குடும்பம், ஒரு குழந்தை கொள்கையை பின்பற்றினால் மக்கள் தொகையை குறைக்க முடியும் என மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

                  ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்’ அவசியம் தேவை… மசோதாவை பரிந்துரை செய்கிறது இந்திய குடியரசு கட்சி

                  குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

                  ‘எனது தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, ‘ஒரு குழந்தை கொள்கையை’ ஆதரிக்கிறது. இந்த கொள்கையை பின்பற்றினால் மக்கள்தொகையை குறைக்க முடியும்

                  . இதற்காக ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை’ உறுதிசெய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும். பிரதமரை சந்தித்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வர

                  எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும். கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும். சட்டத்தை கொண்டு வர முயற்சிப்போம்’ என்று அத்வாலே தெரிவித்தார்.

                  இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே மக்கள் அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பற்றி பேச முடியும் என்று சமீபத்தில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல்

                  கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அத்வாலே, இந்து மக்கள் தொகை குறைய வாய்ப்பில்லை என்றார்.

                  “இந்து மக்கள் தொகை குறையும் என்ற கேள்வி இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்துக்கள் இந்துவாகவும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு நபர்கள் மதம்

                  மாறுகிறார்கள். அரசியலமைப்பானது மக்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான

                  உரிமையை அளிக்கிறது. ஆனால் யாரும் யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது’ என்று அத்வாலே குறிப்பிட்டார்.

                  Posted in Uncategorized

                  சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு

                  சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு

                  ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம் என தலிபான்கள் தெரிவித்தனர்.

                  சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலிபான்கள் அறிவிப்பு
                  ஜபிபஹுல்லா முஜாஹித்

                  ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர்.

                  இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது:

                  சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஓர் அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.

                  ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என கூறினார்

                  Posted in Uncategorized

                  இங்கிலாந்து ராணி எலிசபெத் இறந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் கசிந்தது

                  இங்கிலாந்து ராணி எலிசபெத் இறந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் கசிந்தது

                  இங்கிலாந்து ராணி இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு திட்ட விவரங்கள் குறித்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                  இங்கிலாந்து ராணி எலிசபெத் இறந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள் விவரம் கசிந்தது

                  இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டு உள்ளது.

                  ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் தற்போது கசிந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

                  ‘ஆபரே‌ஷன் லண்டன் பிரிட்ஜ்’ என்ற குறியீட்டு பெயரில் இங்கிலாந்து ராணி இறந்த பிறகு என்ன நடக்கும் என்ற விவரங்கள் அமெரிக்க செய்தி நிறுவனமான பொலி டிக்கோவுக்கு கசிந்து இருக்கிறது.

                  அதில் ராணி இறக்கும் நாளை அதிகாரிகள் ‘டி டே’ என்று குறிப்பிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணி இறந்த 10 நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்படுவார் என்றும் இறுதிச்சடங்கு ஊர்வலம் அவரது மகனும் வாரிசான இளவரசர் சார்லஸ் தலைமையில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ராணி உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டி பாராளுமன்ற இல்லத்தில் 3 நாட்கள் இருக்கும்.

                  ராணி எலிசபெத்

                  இதில் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு வருவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ராணி இறுதிச்சடங்கில் பங்கேற்க லண்டனுக்கு கணிக்க முடியாத கூட்டம் மற்றும் பயண குழப்பங்களை நிர்வகிக்க ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

                  இங்கிலாந்து ராணி இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு திட்ட விவரங்கள் குறித்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்

                  Posted in Uncategorized

                  கொரானாவுக்கு மருத்துவர் பலி

                  கொரானாவுக்கு மருத்துவர் பலி


                  ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த

                  ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கடவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.

                  நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த ஜெயசூர்ய, பின்னர் ஆனமடு சுகாதார அலுவலர் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார்.

                  மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

                    Posted in Uncategorized

                    போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

                    போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

                    இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாரியளவான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

                    7 மாலுமிகளுடன் பயணித்த மீன்பிடி கப்பலொன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                    இந்த நிலையில், கப்பலில் பயணித்த 7 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in Uncategorized

                      நித்திரையில் சடலங்களாக மீட்க பட்ட அக்கா தம்பி

                      நித்திரையில் சடலங்களாக மீட்க பட்ட அக்கா தம்பி

                      பூகொட – யகம்பே பிரதேசத்தில் நித்திரைக்குச் சென்ற அக்கா மற்றும் தம்பி இருவரும் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

                      43 வயதுடைய திருமணமாகாத சகோதரியும், 38 வயதுடைய சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

                      இந்த நிலையில், அவர்கள் இருவரும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று நித்திரைக்கு சென்றிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

                      பின்னர் நேற்று காலை அவரது உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது அவர்கள் இருவரும் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

                      இதனையடுத்து சுகாதார பிரிவிற்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.

                      பின்னர் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

                        Posted in Uncategorized

                        செக்ஸ் இணையத்தளங்களுக்கு பொலிசார் விசேட அறிவுறுத்தல்

                        செக்ஸ் இணையத்தளங்களுக்கு பொலிசார் விசேட அறிவுறுத்தல்

                        பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை

                        பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை நீக்குமாறு இலங்கை பொலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

                        குறித்த வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு விசாரணைககளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

                        இதுபோன்ற வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றும் ஏனையவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதும் இலங்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.

                          Posted in Uncategorized

                          மாணவர்களுக்கு பைசர் ஊசி -செலுத்த கோட்டா உத்தரவு

                          மாணவர்களுக்கு பைசர் ஊசி -செலுத்த கோட்டா உத்தரவு

                          சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற

                          வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

                            Posted in Uncategorized

                            தலிபான் அரச இராணுவம் கடும் மோதல் – 350 போராளிகள் படுகொலை

                            தலிபான் அரச இராணுவம் கடும் மோதல் – 350 போராளிகள் படுகொலை

                            ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி இடம்பெற்று வருகிறது ,ஆனாலும் இராணுவம் ஒருபகுதியில் முடக்க பட்ட நிலையில் தொடர்ந்து உக்கிரமோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            இவ்வேளை கடந்த இரு நாடுகளில் அரச இராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையில் இடம்பெற்ற

                            மோதல்களில் சிக்கி 350 தலிபான்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 35 பேர் உயிருடன் சிறை பிடிக்க பட்டுள்ளனர் என பிராந்திய வல்லரசின் இராணுவம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

                              காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

                              அரச குடும்பத்தைச் சாராத காதலனை திருமணம் செய்வதற்காக ஜப்பான் இளவரசி மகோ, சுமார் 8.7 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளார்.

                              காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி
                              காதலனுடன் இளவரசி மகோ
                              டோக்கியோ:

                              ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

                              கடந்த 2017-ம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி மகோ இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர். 2018-ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர். ஆனால் கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது.

                              தற்போது இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதையடுத்து இளவரசி மகோவும் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

                              இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல், வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 29 வயதான மகோ திருமணம் செய்தபின்னர் இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார். இந்தாண்டு இறுதிக்குள் அவர்களது திருமணத்தை பாரம்பரிய சடங்குகளின்றி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

                              ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு

                              வழங்கப்படும். அதன்படி இளவரசி மகோவிற்கு 137 மில்லியன் யென்(இந்திய மதிப்பில் சுமார் 8.76 கோடி) இழப்பீடாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும்

                              இழப்பீடு தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன