Tag: கைக்குண்டு
தேவாலயத்திற்குள் கைக்குண்டு
தேவாலயத்திற்குள் கைக்குண்டு
தேவாலயத்திற்குள் கைக்குண்டு சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு நாடகம் தொடர்பில் புதிய விசாரணைகளை
மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை இன்று வலியுறுத்தியுள்ளது.
ஜனவரி 11, 2022 அன்று தேவாலயத்திற்குள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக தேவாலயத்தின் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தச் செயல்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் திருச்சபை தெரிவிக்கிறது.
தேசிய கத்தோலிக்க தொடர்பு இயக்குனர் அருட்சகோதரர் ஜூட் கிரிசாந்த இந்த சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை திருச்சபை வலியுறுத்தவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின் போது சந்தேக நபர் ஒருவர் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சந்தேக நபர் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க விரும்புகின்றோம்.
அரசாங்கம் இது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலையில் பதிவாகிய சிசிடிவி காணொளிகளை மாத்திரம் ஆராய்ந்தால் போதுமானது என தேசபந்து கூறினார்.
ஆனால் காலையில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கிளிப்பில் தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வைப்பது பதிவாகியது” என Fr. ஜூட் மேலும் கூறினார்.
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.
இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
Featured
கைக்குண்டு ஒன்று மீட்பு
கைக்குண்டு ஒன்று மீட்பு
கைக்குண்டு ஒன்று திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (09) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான விடுதிக்கு முன்னால் உள்ள காணியில் சம்பவதினமான நேற்று காலை விடுதி காவலாளி காணியில் வளர்ந்துள்ள புல்லுகளை வெட்டி துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிலத்தில் புதையுண்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைத்து குண்டை செயலிழக்கச் செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்
உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்
உக்கிரேன் ; உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராணுவ பயிற்சி பாசறையில் கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் .
உக்கிரேனில் இராணுவ பயிற்சி மையத்தில் கைக்குண்டு வீசிய போரிஸ் ஜோன்சன் புகைப்படம் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது.
உக்கிரேனுக்கு பிரிட்டன் அதிக ஆயுதங்களை வழங்கி வருவதுடன் ,நவீன் ஏவுகணையையும் வழங்கி வருகிறது.
உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கைக்குண்டு வீசிய செயல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
உக்கிரேனில் துப்பாக்கி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் சுட்டு பயிற்சி பெற்றுள்ளார் .
ஆமா வெடிச்சு இருந்தா என்ன ஆகி இருக்கும் ..?
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.
கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது
கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது
மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சரின் வீட்டில் கைக்குண்டு
அமைச்சரின் வீட்டில் கைக்குண்டு –
நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே அவை எடுக்கப்பட்டுள்ளன.
கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்தவரினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணப்பணிகளில் பணியாற்றும் மேற்படி சந்தேகநபர், இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திருத்தப் பணிகளுக்காக வந்துள்ளார்.
அங்குள்ள அறையொன்றின் மேசையின் இலாச்சியில் இருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை மீட்டுள்ளார்.
கைக்குண்டை இந்த சந்தேகநபர் வைத்துக்கொண்டதுடன், தோட்டாக்களை அவருடன் இருந்த மற்றுமொருவர் எடுத்துச் சென்றுள்ளார்.
தோட்டாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர் வசிப்பதாகக் கூறப்பட்ட மஹவ மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கு நேற்று (16) சென்றிருந்த விசேட விசாரணைப் பிரிவினர் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட அந்த வீட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார். எனினும், தற்போதைய அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகைதருவதற்கு முன்னரே, கைக்குண்டு மற்றும் தோட்டக்களை தான் எடுத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் மீட்பு
அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இராணுவத்தினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய பொலிசார், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில்-கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில்-கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி டீன் வீதியில் குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பகுதியில் நேற்று மாலை பொலிஸார் சென்று கைவிடப்பட்ட
நிலையிலுள்ள கைக்குண்டை சோதனையிட்ட பின்னர் விசேட அதிரடிப்படையினரின் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டை நீதிமன்ற அனுமதியை பெற்று வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன

























